உற்பத்தியின் செலவீட்டோடு அதன் விளைவுகளைக் கணக் கிட்டு, ஒப்பிட்டுப் பார்ப்பதைத் திட்டமிடப்பட்ட பொருளாதார மேலாண்மை அவசியமாக்குகிறது. உற்பத்தியின் மீதுள்ள செலவீடு, முதலாவதாக, உயிருள்ள உழைப்புச் செலவீடாவும், இரண்டாவதாக, உற்பத்தி சாதனங்களில் உள்ளடங்கியுள்ள உழைப்புச் செலவீடாகவும் கச்சாப் பொருட்கள், எரிபொருள், இயந்திரங் கள், கருவிகள் முதலியன இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் உச்சகட்ட விளைவுகளைக் குறைந்தபட்ச செலவீட்டில் தரும்போது தான் சமூக உற்பத்தியின் பயனுறுதி மிக உச்ச கட்டமாக இருக் கிறது. உற்பத்தியின் செலவீட்டின் மொத்தம், அதன் விளைவோடு ஒப்பிடப்படுவது என்ற சோஷலிசப் பொருளாதார மேலாண்மை யின் மாற்ற முடியாத விதி ஒரு நிறுவனத்தால் எவ்வாறு பின் பற்றப் பெறுகிறது என்பதை மதிப்பீடு செய்ய முடியும்.
மேலும்,
எந்த ஒரு சமூக அமைப்பிலும், உற்பத்தி வெளி யீடு பலவிதத் தேவைகளுக்கேற்ப ஒரு திட்டமான அளவு சமூக உழைப்பைச் செலவிடுவது அவசியமாகிறது. ஒவ்வொரு சமு தாயத்திலும், எல்லாச் சமுதாயங்களிலும், சமுதாயத்திடம் உள்ள உழைப்பு நேரம், உற்பத்தியின் பல்வேறு கிளைகளுக்கிடையே ஒரு வழியில் அல்லது மற்றொரு வழியில் பங்கீடு செய்யப் பட்டுள்ளது.
சமூக உழைப்பு திட்டமிடப்பட்ட பங்கீட்டுக்குள்ளாவதும், உற்பத்தி சாதனங்களும், தனித்தனி கிளைகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே பங்கிடப் பெறுவதும், உழைப்புச் செல் வீடு, பொருள் மூலங்கள் அவைகளின் விளைவுகளோடு துல்லியமாக கணக்கிடப்படுவதும் தேவையாகிறது. ஒரு குறிப்பிட்ட காலத் தில் ஒரு நிறுவனத்தின் செலவிட்டை அந்தக் காலத்திற்குள்ளாக உற்பத்தி செய்த வெளியீட்டோடு ஒப்பிட்டுப்பார்க்க,
உற்பத்திச் செலவீடும், உற்பத்தியின் விளைவும் ஒரு பொதுக் காரணியாக மாற்றப்பட வேண்டும், அதன் மீது சார்ந்துள்ள மதிப்பு, பொருளாதார இனங்கள் ஆகியவை மட்டுமே இவ்வாறான பொது மடங்குகளாகப் பயன்படுத்தப்பட முடியும்.
இத் தொடர்பில் கீழ்வரும் வினா எழும்பக் கூடும். உற்பத்தி யின் செலவுகளும் விளைவுகளும் நேரடியாக உழைப்பு அலகுகளில் ஒப்பிடமுடியாதா? உதாரணமாக, உழைக்கும் மணி நேரம், நாட்கள் ஆகியவற்றின் மூலமாக ஒப்பிட்டுப் பார்க்க முடியாதா? விலை, உற்பத்திச் செலவு முதலியன போன்ற மதிப்பு இனங்களை எடுத்துக் கொள்ளாமல் ஒப்பிட முடியாதா?
இவ் வினாவிற்கு விடை முடியாது என்பதுதான். சோஷலிச உழைப்பு நேரடியாகச் சமூகத் தன்மையுடையதாக இருந்தாலும், அதன் தன்மையைப் பொறுத்த மட்டில் ஒரே தன்மையுடையதாக அது இல்லை, இந்த அம்சத்தில், முழுக் கம்யூனிசத்தின் கீழ் உள்ள உழைப்பில் இருந்து அது வேறுபடுகின்றது. சரீர உழைப்பு, மூளை உழைப்பு ஆகியவற்றிற்கு இடையேயும், தொழிலாளர், கூட்டுப் பண்ணை உழவர்கள் ஆகியவர்களின் உழைப்புக்கிடையே யும் வேறுபாடு இன்னும் இருக்கிறது , பல்வேறு தொழிலாளர்களின் திறன்கள் ஒரே மாதிரியானவை அல்ல, பொருளாதாரத்தின் பல்வேறு கிளைகளும் தனித்தனி நிறுவனங்களும் அவைகளில் உள்ள உழைப்பு இயந்திரமயமாக்கப் பட்டிருப்பதில் வேறுபடு கின்றன.
இவ்வாறான
சூழ்நிலைகளில் உற்பத்தி, அதன் விளைவுகள் ஆகியவற்றின் மீதான செலவீடுகள் பற்றிய ஒப்பிடுதல் மதிப்பு விதியின் மீது மட்டுமே சார்ந்து இருக்க முடியும். முதலாளித்து வத்தின் கீழ் மதிப்பு விதி குருட்டுத் தனமாய் தானாகவே இயங்கு கிறது. சோஷலிசப் பொருளாதாரத்தின் கீழ் சோஷலிசச் சமுதாயத்தினால், பொருளாதாரத்தின் திட்டமிடப்பட்ட அமைப் புக்காக இது உணர்ச்சி பூர்வமாகப் பிரயோகிக்கப்படுகிறது.
எனவே, சோஷலிச உற்பத்தி முறையின் பாரபட்சமற்ற பொருளாதார விதியே மதிப்பு விதியாகும். திட்டமிடப்பட்ட பொருளாதார மேலாண்மையின் பொருளாதார வழிமுறைகளும், உற்பத்தியின் பொருளாதாரத் தூண்டுகோல்களும் இந்தப் பார் பட்சமற்ற விதியின் மீது சார்ந்துள்ளன.
கம்யூனிசக்
கட்டுமானக் காலத்தில், மதிப்பு விதியை முழுவ தாக ஆட்சிக்குட்படுத்துவது உற்பத்தியின் பொருளாதாரத்தூண்டு கோல்கள், சிக்கனமான மேலாண்மை, சமூகச் செல்வப் பெருக்கம், மக்கள் நல்வாழ்வு, மேம்பாடு ஆகியவற்றிற்கு ஒரு முன் நிபந்தனை யாகும். மதிப்பு இனங்களைச் சோஷலிச சமுதாயத்திற்கு ஒரு பாரபட்சமற்ற அளவுகோலாகப் பயன்படுத்தி, எந்த ஒரு பொருளா தார நடவடிக்கையின் பயன்பாடு, அவசியம், பகுத்தறிவுக்கேற்ற பண்பு ஆகியவற்றை அளக்க முடியும். நிறுவனங்கள், கிளைகள் ஆகியவற்றின் செலவீட்டைச் சரியான முறையில் ஈடு செய்வதை அவை ஊர்ஜிதப் படுத்துகின்றன. மதிப்பு இனங்கள் மிக உயர்ந்த கம்யூனிசக் கட்டத்திற்கு மாற்றமுறுவதற்குரிய சூழ்நிலை களைத் தயார் செய்கின்றன.
கம்யூனிச
சமுதாயமானது தனது பொருளாதார வளர்ச்சி யில் மதிப்பு வகையின் படி உழைப்புச் செலவீடு என்ற சொல்லுக்கு இடமளிக்காமல் நேரடியாக உழைப்புச் சிக்கனத்தினால் வழி நடத்தப் படுகிறது. ஒரே பொது கம்யூனிசச் சொத்து வடிவ மாக மாற்றமுறும்போதும், கம்யூனிசப் பங்கீட்டு முறைக்கு மாற்றமுறும்போதும் பண்டம் - பணம் ஆகியவற்றின் உறவுகள் அவசியமற்றவையாகி, அவை தேய்ந்து மறைந்து போகும்.
(அரசியல் பொருளாதாரச் சுருக்கம்-
எல்.லியோன்டியெவ்- என்சிபிஎச் 1075 – தமிழாக்கம்:தா.செல்லப்பா- பக்கம் 366-368)
No comments:
Post a Comment