Saturday 21 April 2018

11.இயற்கை விதிகளும் சமுதாய விதிகளும்


--எஸ்.இல்யீன், .மொத்திலோவ்

மனிதனால் இயற்கை விதிகளை மட்டுமே அறிய முடியும் என்று மேற்போக்காகப் பார்க்கும் போது தெரியலாம், உண்மையில் இயற்கையில் கறாரான நியதி காணப்படுகிறது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எப்போதும் ஒரே மாதிரியான முடிவுகள் கிட்டுகின்றன. சமுதாய வளர்ச்சியிலோ மனிதர்களின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அடங்கியுள்ளன; இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயல் படுவது போலத் தோன்றலாம். எனவே சமுதாய வளர்ச்சியில் எல்லாமே தன்னிச்சையாக, தற்செயலாக நடைபெறுகின்றன, எதையுமே முன்கூட்டியே கணித் துரைக்க முடியாது என்ற முடிவு பிறக்கிறது.


ஆனால் இக்கருத்து பெரிதும் தவறானது. உண்மையில் மனிதர்கள்தான் வரலாற்றைப் படைக்கின்றனர். ஆனால் இதனால் இவர்களுடைய நடவடிக்கைகளின் உண்மையான லட்சியங்களையும் காரணங்களையும் கண்டுபிடித்துக் கூற முடியாது என்று அர்த்தமில்லை. தற்செயலான வரலாற்றுப் புலப்பாடுகளாகத் தோன்றும் நிகழ்வுகள், சம்பவங்களின் குவியலில் குறிப்பிட்ட நியதிகளைக் கண்டுபிடிக்கலாம். சமுதாயத்தின் பொருளாதார வாழ்க்கையில் மனிதர் களுடைய நடவடிக்கையின் நோக்கங்களைப் புரிந்து கொள்ள பொருளாதாரப் புலப்பாடுகளின் சாராம்சத்தை ஆராய வேண்டும். பொருளாதார வாழ்க்கையின் புலப்பாடுகளின் மேல்மட்டத்தில் நேரடியாகத் தோன்று வதை அடிப்படையாக எடுத்துக் கொண்டால் இதைச் செய்ய முடியாது. ஏனெனில் ஏதாவதொரு விஷயத்தைப் பற்றி மேற்போக்காகச் சித்தரிப்பதும் இதன் உண்மை யான சாரத்தைப் புரிந்து கொள்வதும் வெவ் வேறானவை என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். மேற்போக்கான சித்தரிப்பு உண்மையைப் போல் தோன்றக் கூடும், ஏனெனில் முதல் பார்வைக்குப் படுவது பல சமயங்களில் பெரிதும் மாயையானதாக இருக்க ஷாம், அதுவும் கறாரான விஞ்ஞான பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டிய சிக்கலான பொருளாதாரப் புலப்பாடுகளுக்கு இது பெரிதும் பொருந்தி வரும். விஞ்ஞான ஆராய்ச்சிப் பாதை பெரிதும் சிக்கலானது, இதற்கு பெரும் உறுதியும் விடாமுயற்சியும் தேவை.

மார்க்சிய அரசியல், பொருளாதாரம், பொருளாதார சிந்தனையின் முந்தைய வளர்ச்சி முழுவதிலுமிருந்தும், நவீன பூர்ஷ்வா பொருளாதாரத் தத்துவங்களிலுமிருந்தும் வேறுபடுகிறது. இது பொருளாதார வாழ்வின் சாராம்சத்தினுள் விஞ்ஞான பூர்வமாகப் புக உதவுகிறது, இதனால் பொருளாதார வாழ்க்கையின் ஆழ் நியதிகளை வெளிப்படுத்த முடியும், பூமார்க்சிய அரசியல் பொருளா தாரம் சமுதாய வளர்ச்சியை புறவயப் பொருளாதார விதிகளால் நிர்வகிக்கப்படும் இயற்கையான வரலாற்று நிகழ்ச்சிப் போக்காகப் பார்க்கிறது. பொருளாதார விதிகள் என்பவை யாவை, இவை எப்படி செயல்படும் கின்றன?

சமுதாய வாழ்வின் எல்லா புலப்பாடுகளும் தனித் தனியே தொடர்பற்று நிலவவில்லை, இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன, பரஸ்பரம் ஒன்றிற்கு ஒன்று வழிகோலுகின்றன. சமூகப் புனருற்பத்தியின் கட்டங்கள் என்ற முறையில் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றை ஆராய்ந்த போதே நாம் இதைப் பார்த்தோம். உழைப்பு நிகழ்ச்சிப் போக்கில் இதன் எளிய அங்கங்களை (உழைப்புப் பொருள், உழைப்புக் கருவி, மனித உழைப்புச் சக்தியைச் (செலவிடுதல், ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கக் கூடாது.

ஆனால் மேற்கூறிய பரஸ்பரச் செயலாக்கம் எப் போதுமே தெட்டத் தெளிவாக, முதல் பார்வைக்குத் தெரிகிறது என்று கூற முடியாது. அதுவும் குறிப்பாக மனிதர்களுக்கு இடையிலான உறவுகளை ஏதாவது ஒரு பொருளாயத உறை மூடியிருக்கும் போது இது தெரியாமல் இருக்கலாம். தென்னாப்பிரிக்காவில் தங்கம் எடுக்கப்படுவதற்கும் பிரிட்டிஷ் தொழிலாளியின் ஊதியத் திற்கும் இடையில் ஏதாவது தொடர்பு உள்ளதா? ஒரு குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தில் தொழில் நுட்ப புதினங்களைப் புகுத்துவதற்கும் வேறு துறைகளின் பொருட்களின் விலைகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? இல்லையென்று தோன்றும். ஆனால் உண்மையில் இத்தகையத் தொடர்பு உள்ளது, பல நேரங்களில் இது கணிசமானது.

ஏராளமான பொருளாதாரப் புலப்பாடுகளின் முடிவற்ற சிக்கலில் கணிசமான தொடர்புகளைக் கண்டுப்பிடிப்பது என்றால் இவற்றின் சாரத்தினுள் புகுவது, எந்த ஆழ் சக்திகள் பொருளாதாரத்தை இயக்குகின்றன என்பதைக் கண்டுப்பிடிப்பது என்று பொருள்படும். பொருளாதார விதிகள் இதைத்தான் பிரதிபலிக்கின்றன. இவை உற்பத்தி உறவுகளின் முறையில் நிலையாக இருக்கும் உள் காரண புறவயத் தொடர்புகளையும் பரஸ்பரச் சார்பு நிலைகளையும் வெளிப்படுத்துகின்றன. பொரு ளாதார விதிகள் உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி விதிகளாகும், இவை பொருளாயத நலன்களின் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை மற்றும் நுகர்வை நிர்ணயிக் கின்றன. உற்பத்தி உறவுகளின் சாரம் பொருளாதார விதிகளின் முறையால், இவற்றின் ஒட்டுமொத்தத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. பொருளாதார விதிகளைக் கண்டுபிடித்ததுதான் வரலாற்றைப் பற்றிய பொருள் முதல்வாதக் கருத்திற்கு உறுதியான விஞ்ஞான அடிப் படைகளை வழங்கியது.

பொருளாதார விதிகளை தெளிவுபடுத்தியதானது அந்தந்த சமூக-பொருளாதார அமைப்பை உற்பத்தி உறவுகளின் அமைப்பாகப் பார்க்க உதவுகிறது. பொருளா தாரப் புலப்பாடுகளின் சாரத்தை வெளிப்படுத்துவதன் மூலம் விதிகள் மிகவும் நிலையான, மீண்டும் மீண்டும் நடைபெறக் கூடிய, கணிசமான தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன.
பொருளாதார விதிகள் தம் சாராம்சத்தில் தனிப்பட்ட பொருளாதாரப் புலப்பாடுகளை விட ஆழமாக, துல் லியமாக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. உதாரண மாக, ஏதாவது ஒரு பண்டத்தின் விலையானது விலை களின் பொது முறையைப் பற்றிய கருத்தை அளிப் பதில்லை. விலைகள் உருவாவது பற்றிய விதிகளை ஆராய்ந்தால் இது தெளிவாகும். இவ்விதிகள் பண்டங்கள் மற்றும் பண இயக்கத்தை நிர்வகிக்கும் விதிகளின் செயற்பாடு உட்பட பல சமூக-பொருளாதாரச் சூழ்நிலை களைப் பொறுத்துள்ளன.

இயற்கை விதிகளைப் போன்றே பொருளாதார விதிகளும் மனிதர்களின் சுய உணர்வையும் சித்தத்தையும் சாராமல் செயல்படுகின்றன, அதாவது இவற்றிற்கு புறவயத் தன்மை உண்டு. ஆனால் மனிதர்களால் இவற்றை அறிய முடியும், தம்: நடவடிக்கையில் இவற்றைப் பயன்படுத்தி தம் லட்சியங்களை அடைய முடியும், நம்மைப் பொறுத்திராமலேயே இயங்கும் புறவய விதிகள் இருக்கின்றன என்றால், இவை வெளிப்படும் வரை அப்படியே வாழ வேண்டியதுதானே என்று மார்க்சிய விமரிசகர்கள் கூறுகின்றனர். ஆனால் இயற்கை விதிகள் வெளிப்படும் விதத்திற்கும் சமுதாய வளர்ச்சியின் விதிகள் வெளிப்படுவதற்கும் இடையில் வேறுபாடு உண்டு.

ஆம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய கிரகணம் நடைபெறும் என்று விஞ்ஞானம் கணித்துக் கூறிய பின், இதை உரிய வகையில் சிறப்பாகக் கவனிப்பதற் கான ஏற்பாடுகளைச் செய்து காத்திருந்தால் போதும், சூரிய கிரகணத்தைத் தடுத்து நிறுத்தவோ, மாற்றவோ யாராலும் முடியாது. சமுதாய வளர்ச்சி விதிகள் முற்றிலும் வேறுவிதமாகச் செயல்படுகின்றன. முதலாளித் துவத்தைப் புரட்சிகரமான முறையில் அகற்றி விட்டு சோஷலிசம் வரும் என்பது வரலாற்று ரீதியாகத் தவிர்க்க இயலாததுதான், ஆனால் இதற்குக் குறிப்பிட்ட பொருளாயத முன்நிபந்தனைகள் மட்டும் இருந்தால் போதாது, இந்த மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வல்ல பலம் மிக்க சமூகச் சக்தியும் இதற்காக அணி திரட்டப்பட வேண்டும்.

அந்தந்தப் பொருளாதார அமைப்பில் நிலவும் குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளின் அடிப்படையில்தான் பொருளாதார விதிகள் தோன்றுகின்றன, செயல்படு கின்றன. உதாரணமாக, முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்திப் போட்டி மற்றும் அராஜக விதிகள், மூலதனத் திரட்சி விதிகள், உழைப்பாளிகளின் நிலை மோச மடையும் விதிகள் முதலியன புறவய ரீதியாக நிலவு கின்றன, இங்கு பொருளாதார நெருக்கடிகளும் வேலை யில்லாத் திண்டாட்டமும் மக்கள் திரளினரின் ஏழ்மையும் தவிர்க்க இயலாதவை, பொருளாதார வாழ்வில் பூர்ஷ்வா அரசு தலையிடுவதன் மூலம் இந்த விதிகளின் செயற்பாட்டை மாற்றவோ, அகற்றவோ முடியாது.

மனிதர்களால் தம் விருப்பப்படி பொருளாதார விதிகளை ஆக்கவோ, அழிக்கவோ, மாற்றவோ முடியாது. ஆனால் இதனால், மனிதர்களால் பொருளாதா) விதிகளை எதுவுமே செய்ய முடியாது என்று பொருளாகாது. குறிப்பிட்ட பொருளாதாரச் சூழ்நிலைகள் நிலவும் போது குறிப்பிட்ட பொருளாதார விதிகள் தோன்றும், இச்சூழ்நிலைகள் மறைந்ததும் இவ்விதிகளும், மறையும், பொருளாதார விதிகளை அறிவதன் மூலம் மனிதர்கள் இவற்றை உற்பத்தி உறவுகளை மாற்றுவதற் காகப் பயன்படுத்தலாம். மனிதர்களின் தீவிர உற்பத்தி மற்றும் சமூக-அரசியல் நடவடிக்கையின் பயனாய் புதிய உற்பத்தி உறவுகளும் இவற்றிற்கு உரித்தான பொருளாதார விதிகளும் தோன்றுகின்றன. ஆகவே (பொருளாதார விதிகள் நிரந்தரமானவையோ, மாற்றப்பட முடியாதவையோ அல்ல, இயற்கை விதிகளுக்கு மாறாக இவை, எந்த உற்பத்தி உறவுகளின் அடிப் படையில் செயல்படுகின்றனவோ அவற்றைப் போன்றே வரலாற்று ரீதியாக மாறும் தன்மையுடையவை. உதா ரணமாக, புதிய, சோஷலிச உறவுகள் பழைய, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளைப் புரட்சிகரமாக மாற்றியதன் மூலம் சோவியத் யூனியனிலும் மற்ற சோஷலிச நாடுகளிலும் முதலாளித்துவ பொருளாதார விதிகள் செயல்படுவது நின்று, சோஷலிசப் பொருளாதார விதிகள் தோன்றின. எனவே பொருளாதார விதிகள் சமுதாயத்துடன் சேர்ந்தே தோன்றி. சேர்ந்தே வளரு கின்றன. இதுதான் இயற்கை விதிகளுக்கும் பொருளாதார விதிகளுக்கும் உள்ள வேறுபாடாகும். இயற்கை விதிகளின் செயற்பாடு சமுதாய வளர்ச்சியோடு தொடர்புடைய தல்ல.

புறவயத் தன்மையை உடைய பொருளாதார விதி களை அரசு ஏற்கும் சட்டங்களுடன் கலந்து குழப்பக் கூடாது. சட்டங்கள், ஒரு நாட்டின் குடிமகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எதைச் செய்யலாம், எதை செய்யக் கூடாது என்று திட்டவட்டமாக, வரையறுத்து கூறுகின்றன. அரசு இச்சட்டங்களை ரத்து செய்யலாம்), மாற்றலாம், ஆனால் பொருளாதார விதிகளை நிலை நாட்ட வோ, மாற்றவோ அரசால்) முடியாது. உதாரணமாக, பண்டங்களின் மீதான விலைகளின் போக்கை அரசு ஒழுங்குபடுத்தலாம், ஆனால் இவற்றின் அடிப்படையை - பண்டங்கள், பணத் தின் புறளய ரீதியான ஒப்புமையை - ஒருவராலும் மாற்ற இயலாது. பணத்தின் பெயாளவு மதிப்பை மாற்றலாம். புதிய நாண (யங்களை அல்லது வேறு மதிப்புள்ள பணத்தை வெளியிடலாம். ஆனால் பணத் தையே மாற்ற முடியாது.

இயற்கை விதிகளுக்கு மாறாக, பொருளாதார விதிகள் மனிதர்களின் குறிப்பிட்ட உற்பத்தி உறவுகளைப் பிரதிபலிக்கின்றன. இந்த உறவுகளுக்கு வெளியே இவற்றால் செயல்பட முடியாது. இவற்றைக் கண்டு பிடிப்பதும் பயன்படுத்துவதும் மனிதர்களின் ஜீவாதார நலன் களை. எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார வர்க்க நலன்கமைத் தொடுகின்றன,

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் சமுதாயத்தின் முன்னோக்கிய வளர்ச்சியின் நியதிகளை விஞ்ஞான பூர்வமாக வெளிப்படுத்தியது, முதலாளித்துவம் அழிந்து, சோஷலிசம் வெற்றி பெறுவது தவிர்க்க இயலாதது. என்டதை பெட்ட்டத்துக் காட்டியது', எனவேதான் முதலாளித்துவ நாடுகளின் ஆதிக்க வர்க்கங்களும் இவற்றின் நலன்களை வெளிப்படுத்துவோரும் தம்! நலன்களைப் பாதுகாக்கும் விஞ்ஞானம் வேண்டுமென குரல் எழுப்புகின்றனர், புறவயப் பொருளாதார விதிகளை மறுக்கின்றனர். இவை சித்தம், பகுத்தறிவு, LEனித மனநிலையின் விளைபொருட்கள் என்று கூறுகின்றனர். நவீன சமுதாயத்தின் முன்னணி வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கம் பொருளாதார விதிகளை விஞ்ஞான பூர்வமாக அறிந்து, பயன்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளது. இந்த வர்க்கத்தின் அரசியல், பொருளாதார நலன்கள் சமுதாயத்தின் முன்னோக்கிய வளர்ச்சியோடு ஒத்துப் போகின்றன.