Monday 16 April 2018

03.மனித உழைப்பு


--எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்

சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை சகாப்தங்கள் உழைப்பு என்றாலே ஒரு கடும் சுமை எனும் கருத்தை ஏற்படுத்தி யுள்ளன. உண்மையில் உழைப்பு என்பது மனித வாழ்க்கைக்கான மிக முக்கிய நிபந்தனையாகும், உழைப்பு என்பது மனிதர்களுடைய உணர்வு பூர்வமான, செயல்நோக்கமுள்ள நடவடிக்கை. இந்நடவடிக்கையின் உதவியால் இயற்கைப் பொருட்கள் மாற்றப்படுகின்றன. நீர்நாய்கள், தேனீக்கள், எறும்புகள், சிலந்திகள் ஆகியவற்றின் “உழைப்பை சித்தரிக்கவும் இவற்றிடம் ""உழைப்புப் பிரிவினை?', 'உழைப்பு நடத்தை , சமூக உற்பத்திக்கு உரித்தான மற்ற புலப்பாடுகளைக் கண்டுபிடிக்கவும் பூர்ஷ்வா விஞ்ஞானிகள் செய்யும் முயற்சிகள் ஆதாரமற்றவை. மிருகங்கள் மிகச் சிக்கலான செயல்களைச் செய்த போதிலும் இவற்றை உள்ளுணர்வு பூர்வமாகவே செய்கின்றன. மனிதனோ உழைப்பில் நேரடியாக இறங்கும். முன் தெட்டத் தெளிவான லட்சியத்தை தன் முன் வைக்கிறான். உழைப்பின் குறிப்பிட்ட விளைவுகளை மனக் கண்ணில் பார்க் கிறான். மிக மோசமான கட்டிடக் கலைஞனுக்கும் மிகச் சிறந்த தேனீக்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனில், முன்னவன் எதையும் கட்டும் முன் முதலில் தன் மூளையில் அதை உருவாக்குகிறான் என்பதேயாகும் என்றார் கா. மார்க்ஸ்.

மனிதர்கள் இயற்கைச் சக்திகளை அடக்கி அதன் செல்வங்களைத் தம் நலன்களுக்காகப் பயன்படுத்து கின்றனர். இவர்கள் இயந்திரங்களைத் தயாரிக்கின்றனர், தானியம் விளைவிக்கின்றனர். காய்கறிச் செடிகளைப் பயிரிடுகின்றனர். இயற்கைத் தாதுப் பொருட்களை, நிலக்கரி, எண்ணெய் போன்றவற்றை தோண்டியெடுத்துப் பதப்படுத்துகின்றனர். தம் உடைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மனிதர்கள் பருத்தி விளைவிக்கின்றனர், நூல் நூற்கின்றனர், ஆடை நெய்கின்றனர், துணி தைக்கின் றனர்; தம் இருப்பிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மரங்களை வெட்டுகின்றனர். செங்கற்களைத் தயாரிக்கின்றனர், இவற்றைக் கொண்டு வீடுகளைக் கட்டுகின்றனர், உழைப்பு என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை, நிரந்தரமான, இயற்கையான நிபந்தனை.

எல்லா விதமான உழைப்பும் நேரடியாக பொரு ளாயத உற்பத்தியில் அடங்கியிருக்கவில்லை என்பதைக் கூற வேண்டும். மருத்துவர்கள், ஆசிரியர்கள், கலைஞர் கள் போன்றவர்களின் உழைப்பில் (இவர்கள் சமுதாயத்திற்கு அவசியமானவர்கள்) நேரடியாக பொருளாயத நலன்கள் தோற்றுவிக்கப்படுவதில்லை.

உழைப்பு நிகழ்ச்சிப் போக்கில் மனிதர்கள் மூளைச் சக்தி, நரம்புச் சக்தி மற்றும் தசைச் சக்தியைச் செலவழிக்கின்றனர். அதாவது மனிதர்கள் தம் உழைப்புச் சக்தியைச் செலவிடுகின்றனர். இந்த உழைப்புச் சக்தி என்பது - உழைப்பதற்காக மனிதர்களுக்கு உள்ள | உடற்கூறு ரீதியான, மனநிலை ரீதியான, இன்ன பிற திறமைகளின் ஒட்டுமொத்தமாகும். இவ்வாறாக, உழைப்பு என்பது உழைப்புச் சக்தியைச் செலவிடும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்.

உழைப்பு எனும் நிகழ்ச்சிப் போக்கை நிறைவேற்ற மனிதர்களுடைய உழைப்புச் சக்தி உரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். இது எந்த அளவிற்கு வளர்ச்சி யடைந்துள்ளது என்பதை வைத்துதான் பொருளாயத உற்பத்தியின் வளர்ச்சி மட்டத்தை நிர்ணயிக்கின்றனர். தன் பங்கிற்கு உற்பத்தியின் தொழில் நுட்ப மட்டம் உழைப்பாளிகள், இவர்களுடைய உழைப்புச் சக்தி மீது தாக்கம் செலுத்துகிறது. பொருளாயத நலன்களை உற்பத்தி செய்யும் மனிதர்கள் அதே சமயம் தம் உழைப்பையும் ஞானத்தையும் மேம்படுத்திக் கொள் கின்றனர், தாமே வளருகின்றனர். மனித வாழ்க்கை முழுவதன் முதல், முக்கிய நிபந்தனையாகத் திகழும் உழைப்பு, குறிப்பிட்ட பொருளில், பனிதனையே தோற்றுவித்தது எனலாம்.

No comments:

Post a Comment