--எஸ்.இல்யீன்,
அ.மொத்திலோவ்
மனிதர்கள்
வாழுவதற்கு உணவு, உடை, இருப்பிடம், மற்ற பொருளாயத நலன்கள் தேவை. ஆனால் தம்
வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் தயாரான வடிவத்தில் மனிதர்களுக்குக்
கிட்டுவதில்லை. இவற்றைப் பெற மனிதர்கள் இவற்றை உற்பத்தி செய்ய வேண்டும், உழைக்க
வேண்டும்.
சமுதாய
வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களிலேயே மனிதன் பொருட்களை உற்பத்தி செய்தான்: காட்டு
விலங்குகளை வேட்டையாடினான், இவற்றின் இறைச்சி யை நெருப்பில் சுட்டுச்
சாப்பிட்டான், மீன் பிடித்தான், எளிய உழைப்புக் கருவிகளைத் தயாரித்தான், இருப்பிடங்
களைக் கட்டினான். ஆனால் தேவைகளால் உந்தித் தள்ளப்பட்ட மனிதர்கள் தம் உழைப்பு
நடவடிக்கையை விரிவுபடுத்தினார்கள், உழைப்புக் கருவிகளையும் உற் பத்தி முறையையும்
மேம்படுத்தினார்கள், வேட்டையாடு தலிலிருந்து கால்நடை வளர்ப்பிற்கும் பின் பயிர்த்
தொழிலுக்கும் மாறினார்கள். பின்னால் மனிதர்கள் கைத்தொழிலில்,
உதாரணமாக ஆடை நெய்வதிலும், மண்பாண்டம் செய்வதிலும் உலோகத் தயாரிப்பிலும்
ஈடுபடலாயினர். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கைத் தொழில் முறை மற்றும் கை உழைப்பின்
அடிப்படை யிலான பட்டறை உற்பத்தி தோன்றியது; இது பின் னால் நவீன, பெரும் இயந்திர
உற்பத்தியாக மாறியது.
இன்றும்
மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலும் பொருளாயத உற்பத்தியினால்தான்
கிடைக் கின்றன. மனிதர்களின் உணவு, உடை, இருப்பிடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்
நுகர்வுப் பொருட்களும் இந்த பொருளாயத நலன்களை உற்பத்தி செய்ய அவசியமான கருவிகளும்
இந்தப் பொருளாயத உற்பத்திப் போக்கில்தான் தயாரிக்கப்படுகின்றன. உற்பத்தி என்பதை
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒரு நிகழ்ச்சிப் போக்காக வரையறுக்கலாம்;
இந்நிகழ்ச்சிப் போக்கின் போது மனிதன் இயற்கைப் பொருளை வாழ்க்கைக்குத் தேவையான
பொருளாக மாற்றியமைக் கிறான். உற்பத்தி இல்லாமல் மனித வாழ்க்கையோ, மனித சமுதாய
வளர்ச்சியோ சாத்தியமில்லை. வரலாற்றுப் போக்கில் பொருளாதார, அரசியல் சூழ்நிலைகள்
மாறுகின்றன, ஒரு சமூக அமைப்பிற்குப் பதில் இன்னொன்று வருகிறது, ஆனால் சமுதாய
வாழ்க்கையின் அடிப்படையாக உற்பத்தி தொடர்ந்து இருக்கிறது.
மனிதர்கள்
தனியாக அல்ல, கூட்டாக, ஒன்று சேர்ந்து, சமுதாயம் முழுவதுமாகத்தான் வாழ்க்கைச்
சாதனங்களை உற்பத்தி செய்கின்றனர். எப்போதும், எல்லா சூழ்நிலைகளிலும் உற்பத்தி
என்பது சமூக உற்பத்தியாகும், உழைப்போ சமுதாய மனிதனின் நடவடிக்கையாகும். வாழ்க்கைச்
சாதனங்களின் உற்பத்தியில் மனித உழைப்பு, உழைப்புப் பொருட்கள் மற்றும் உழைப்புச்
சாதனங்கள் எனும் மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன.
No comments:
Post a Comment