Tuesday, 17 April 2018

10 உற்பத்தி முறையும் வர்க்கங்களும்


--எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்

மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் குறிப்பிட்ட உற்பத்திச் சக்திகளும் இவற்றிற்கேற்ற உற்பத்தி உறவுகளும் உள்ளன. வரலாற்று வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் ஆராயப்படும் சமூக உற்பத்தி, குறிப்பிட்ட உற்பத்தி முறையில் நிலவுகிறது. அந்தந்த உற்பத்தி முறையை நிர்ணயிக்கும் அம்சங்கள் யாவை?

உற்பத்திச் சாதனங்களின் மீதான சொத்துடைமைதான் ஒவ்வொரு உற்பத்தி முறையின் அடிப்படையிலும் உள்ளது. இதுதான் உற்பத்தி வளர்ச்சியின் எல்லா (முக்கிய நியதிகளையும் நிர்ணயிக்கிறது. சொத்துடைமை. வடிவம்தான் மனிதர்களின் உற்பத்தி உறவுகளை ஒரே (முறையாக ஒன்றிணைக்கிறது. உழைப்பவர்கள் உற்பத்திச் சாதனங்களுடன் உரிய முறையில் இணைய வழிகோலு கிறது.

வரலாற்றிற்கு ஐந்து முக்கிய உற்பத்தி முறைகள் தெரியும். இவற்றைத்தான் அரசியல் பொருளாதாரம் ஆராய்கிறது. புராதன கூட்டுச் சமூக உற்பத்தி முறை, அடிமையுடைமை உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் கம்யூனிச உற்பத்தி முறை என்பவைதான் அந்த ஐந்து உற்பத்தி முறைகளாகும். இவை சமூக முன்னேற்றப் (போக்கில் படிப்படியாக ஒன்றையொன்று மாற்றின.

உற்பத்திச் சாதனங்களையும் நேரடியாக உழைப்ப வனையும் தொடர்புபடுத்துவது ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் ஒவ்வொரு விதத்தில் நடந்தது. முதலாளித் துவ சமுதாயத்தில், முதலாளித்துவத் தனியுடைமை ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையில் உற்பத்திச் சாதனங் கள் அன்னியமான, ஒடுக்கும் சக்தியாக உழைப்பவனுடன் இணைக்கப்படுகின்றன. முதலாளித்துவ உற்பத்தி, குலலியுழைப்பைச் சுரண்டுவதன் அடிப்படையிலானது, லாபம் சம்பாதிப்பதுதான் இதன் நோக்கம், உற்பத்திச் சாதனங்களின் மீதான பொதுச் சொத்துடைமை நிலவும் சமுதாயத்தில் உழைப்பவனையும் உற்பத்திச் சாதனங்களையும் இணைக்கும் முறை கோட்பாட்டு ரீதியாக வேறு விதமானது. தனிச் சொத்துடைமையை ஒழித்துக் கட்டிய சோஷலிசம், உழைப்பவனையும் உற்பத்திச் சாதனங்களையும் புதிய, உயர்வான அடிப் படையில் -உற்பத்திச் சாதனங்களின் மீதான பொதுச் சொத்துடைமையின் அடிப்படையில் - இணைத்தது; இது மனிதனை மனிதன் சுரண்டுவதை அகற்றியது.

உழைப்பவனையும் உற்பத்திச் சாதனங்களையும் இணைக்கும் முறைதான் சமுதாயத்தின் வர்க்க உள்ளடக் கத்தை நிர்ணயிக்கிறது. வர்க்கங்கள் என்பவை சமூக உற்பத்தியில் தாம் வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங்களின் பால் தமக்குள்ள உறவாலும், உழைப்பின் சமூக ஒழுங்கமைப்பில் தாம் வகிக்கும் பாத்திரத்தாலும், எனவே சமூக செல்வத்தில் தாம் பெறும் பங்கின் அளவுகளாலும், இதை சுவீகரித்துக் கொள்ளும் முறை யினாலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் பெரும் மக்கள் பகுதிகளாகும். பகை முரண்பாட்டு சமுதாயங்களில் சுரண்டல் வர்க்கங்கள் எனப்படுபவை, உற்பத்திச் சாதனங்களின் மீதான தனிச் சொத்துடைமை ஆதிக்கம் செலுத்துவதாலும் சமுதாயத்தின் பொருளாதாரத்தில் வர்க்கங்கள் வகிக்கும் இடங்களின் வேறுபாட்டாலும் பிற வர்க்கங்களின் உழைப்பை சுவீகரிக்கும் மக்கள் பகுதிகளாகும். உதாரணமாக, முதலாளித்துவ சமு தாயத்தில் உற்பத்திச் சாதனங்கள் முதலாளி வர்க்கத்தின் கரங்களில் குவிந்துள்ளன. எனவே முதலாளி வர்க்கம் கூலித் தொழிலாளர்களின் உழைப்பின் விளைபயன்களை சுவீகரிக்கிறது. சோஷலிச சமுதாயத்தில் உற்பத்திச் சாதனங்கள் உழைப்பாளிகள் அனைவருக்கும் சொந்த மானவை, இவர்கள் கூட்டாக உழைக்கின்றனர். எனவே இங்கு பிறர் உழைப்பை சுவீகரிக்க, மனிதனை மனிதன் சுரண்ட இடமேயில்லை.



No comments:

Post a Comment