Friday 31 May 2019

16. கம்யூனிச சமூகத்தில் அரசு உதிருதல்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

மார்க்சிய-லெனினிய விஞ்ஞானத் தத்துவத்தின் முக்கிய ஆரூடங்களில் ஒன்று, கம்யூனிசத்தில் அரசு என்பது கம்யூனிச சமுதாய சுய நிர்வாகத்திற்கு இடமளித்து உதிர்ந்து மறையும் என்ப தில் அடங்கியுள்ளது. அரசு தவிர்க்க இயலாதவாறு குறிப் பிட்ட வரலாற்று நிலைமைகளில் தோன்றியது. இதே மாதிரி தவிர்க்க இயலாத வகையில் இது சமுதாய வாழ்க்கையின் அரங்கிலிருந்து மறைய வேண்டும்.

அரசு உதிர்ந்து மறைவது என்பது ஏதோ ஒரே நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியல்ல, இது படிப்படியான நீண்ட ஒரு நிகழ்ச்சிப் போக்காகும். * ' அரசு முழுமையாக உதிர்ந்து மறைய முழுக் கம்யூனிசம் தேவை'' என வி. இ. லெனின் சுட்டிக் காட்டினார்.

அரசு உதிர்ந்து மறைவதற்கான நிபந்தனை கள், முன் தேவைகள் கம்யூனிசக் கட்டுமானத்தின் நிகழ்ச்சிப் போக்கில் தோற்றுவிக்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக இவை பொருளாதார முன்தேவைகளாகும். மக்களின் வளர்ந்து வரும் பொருளாயத மற்றும் ஆன்மீகத் தேவைகளை முற்றிலும் பூர்த்தி செய்ய உதவும் உற்பத்திச் சக்திகளின் உயர்வான வளர்ச்சித் தரத்தை அடைவது இவற்றில் அடங் கும்; எனவே உழைப்பு மற்றும் வினியோகத்தின் வரையளவு களின் பாலான கண்காணிப்பு தேவையற்றதாய் இருக்கும்.

அரசு உதிர்ந்து மறைவதற்குச் சமூக முன் தேவைகளும் அவசியம். வர்க்கப் பிரிவுகள் மற்றும் வேறுபாடுகளின் சகல வித சுவடுகளையும் துடைக்க வேண்டும். இதற்குப் பின் தான் சமுதாயத்தில் மக்களுக்கிடையேயான உறவுகள் அரசியல் தன்மையை இழக்கும். 2. இறுதியாக, அரசு உதிர்ந்து மறைவதற்கு சித்தாந்த முன்தேவைகளும் அவசியம்: சமுதாய உறுப்பினர்களின் உயர் வான உணர்வு மற்றும் கலாச்சாரத் தரம், மக்களின் உணர் விலும் அன்றாட வாழ்விலும் முதலாளித்துவத்தின் மிச்ச சொச்சங்களை ஒழித்தல், கம்யூனிச ஒழுக்கத்தின் முழு வெற்றி ஆகியவை இந்த முன்தேவைகளாகும்.

இவை தான் அரசு உதிர்ந்து மறைவதற்கான முக்கிய உள் முன்தேவைகளாகும். இது தவிர சில குறிப்பிட்ட வெ ளி நிபந்தனைகளும் அவசியம்; இவையின்றி அரசால் உதிர்ந்து உலர இயலாது. சர்வதேச அரங்கில் சோஷலிசத்தின் முழு முடிவான வெற்றி, ஏகாதிபத்தியத் தரப்பில் இருந்து இரா ணுவத் தாக்குதலுக்கான எந்தவித அபாயமும் இல்லாமை ஆகியன இவற்றில் அடங்கும்.

அரசு உதிர்ந்து உலர் வதையும் கம்யூனிச சமுதாய சுய நிர்வாகம் உருவாவதையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற. தனியான இரு நிகழ்ச்சிப் போக்குகளாகக் கற்பனை செய்யக்கூடாது. சோஷலிச அரசால் சேர்க்கப்பட்டுள்ள பெரும் அனுபவத்தை மறுப்பதோ அல்லது காலத்தின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட, கம்யூனிசத்தில் வெற்றிகரமாகப் பயன் படுத்தக் கூடிய சமுதாய நிர்வாக வடிவங்கள், முறைகளை மறுப்பதோ முற்றிலும் விவேகமற்றதாயிருக்கும். இங்குள்ள பிரச்சினை விவேகமான அணுகுமுறை மட்டுமல்ல; முதலில் அரசு உதிர்ந்து உலர்ந்து விட்டு பின் ''தூய்மைப்படுத்தப் பட்ட'' இடத்தில் சமுதாய சுய நிர்வாக முறையைக் கட்ட ஆரம்பிப்பது என்ற இத் தகைய நிகழ்ச்சிகளின் வளர்ச்சி இயலாதது. இது சோஷலிச அரசு முறையானது கம்யூனிச சமுதாய சுயநிர்வாகமாக வளர்ச்சியுறும் ஒரே நிகழ்ச்சிப் போக்காகும்.

இதற்கான பாதை, ஜனநாயகத்தை மேற்கொண்டு விரிவு படுத்தி மேம்படுத்தல், மேன்மேலும் அதிக மக்களை அரசு நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்தல், அரசு இயந்திர நட வடிக்கையின் மீதான மக்கள் கண்காணிப்பை அதிகப்படுத்தல் ஆகியவற்றின் வழியாகச் செல்கிறது.

நிர்வாக உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தல், மாற்றுதல், வாக்காளர்களின் முன் இவை அறிக்கை சமர்ப்பித்தல், பொது மக்களின் கருத்தைக் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ளுதல், தனி நபரின் பரவலான உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் சமுதாயத்தின் விஷயத்தில் தனி நபரின் கடமைகளைப் பின்பற்றுதல் முதலிய ஜன நா யக உறவு முறைகளும் பாரம் பரியங்களும் கம்யூனிசச் சமுதாயத்தில் பன்முக வளர்ச்சி யைப் பெறும் என்று முழு நம்பிக்கையோடு கூறலாம்.

கம்யூனிசச் சமுதாயத்தில் ஏதாவதொரு ஆட்சி நிலவுமா?

நிர்பந்தத்தை (நீதி மன்றம், சிறைகள், போலீஸ் முத லியவை) ஆதாரமாகக் கொண்டு இயங்கும் அரசியல் ஆட்சி கம்யூனிசத்தில் இருக்காது என்பதை மார்க்சிய-லெனினியத் தத்துவம் அடிப்படையாகக் கொள்கிறது. ஆனால் சமுதாய அமைப்பு எப்படியிருந்தாலும் எப்போதும் ஒரு புறத்தில் குறிப்பிட்ட செல்வாக்கும் மறு புறம் குறிப்பிட்ட கீழ்ப்படி தலும் இருக்கும். கம்யூனிச உற்பத்தி போன்ற சிக்கலான, முழுமை பெற்ற பொருளாதார அமைப்பு விவேகமான மையப்படுத்த லோ, தலைமையோ இன்றி இயங்க முடியாது. எனவே கம்யூனிசத்திலும் ஆட்சி (இதைச் செல்வாக்கு என்றழைப்பது நல்லது) இருக்கும்; ஆனால் இதற்கு அரசியல் தன்மை இருக்காது, இது தன்னிச்சையான உழைப்பு மற்றும் அன்றாட வாழ்க்கைக் கட்டுப்பாட்டை ஆதாரமாகக் கொண் டிருக்கும்.

நிர்வாக-ஒழுங்கமைப்பு மற்றும் சமூக-கலாச்சாரப் பணி போன்ற சோஷலிச அரசின் பணிகள் கம்யூனிசத்தில் மறை யாது, மாறாக இன்னமும் வளர்ச்சியுறும். ஆனால் இவை அரசு உறுப்புக்களால் அல்ல, சமுதாய சுய நிர்வாக முறையால் நிறைவேற்றப்படும். இந்த இயந்திரத்திற்கு அரசியல் தன்மை இருக்காது என்றாலும், தனது பெரும் தார்மீக செல்வாக்கின் காரண மாய் இது எந்த ஒரு அரசைவிடவும் வலிமை மிக்கதாயிருக்கும்.

இதிலிருந்து இன்னுமொரு முக்கியக் கருத்து பிறக்கிறது. அளவில் பெரிய, சிக்கலான கம்யூனிசப் பொருளாதாரத் திற்குக் கண்டிப்பாகத் தேர்ச்சியுள்ள மையப்படுத்தப்பட்ட நிர்வாகமும் எனவே இதற்குரிய தேர்ச்சி பெற்ற நிபுணர் களும் தேவை. ஆனால் சமுதாய வாழ்க்கைக்கு வகை செய்யும் உற்பத்தி, மற்ற நிகழ்ச்சிப் போக்குகளை நிர்வகிப்பது என் பது எந்தவித சலுகைகளுடனும் தொடர்பு கொண்டதாக இருக்காது; மற்ற எல்லா வேலைகளையும் போன்றே இதுவும் சாதாரண வேலையாக இருக்கும்.

அரசு உதிர்ந்து மறைவது என்பது சிக்கலான சமூக நிகழ்ச்சிப் போக்கு . கம்யூனிசச் சமுதாய சுய நிர்வாக முறை உருவான பின்னரும் கூட உடனடியாகத் தேவையான ஸ்தாபன மேம்பாட்டை அடையாது என்பது தெட்டத் தெ ளிவு. எனவே அரசு உதிர்ந்து மறைந்த பின்னரும் கம்யூ னி ஸ்டுக் கட்சி ஒரு சில காலத்திற்கு இருக்கும் என்று கூற எல்லா ஆதாரங்களும் உண்டு. சமுதாய சுய நிர்வாகத்தின் எல்லாப் பிரிவுகளின் இடையறாத, ஒத்திசைவான இயக்கத் திற்கு வகை செய்வதன் மூலம் கட்சி தன து வரலாற்றுப் பணியை நிறைவேற்றி சமுதாயத்துடன் ஒன்று கலக்கும்.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

15. விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டம்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

உலகக் கண்ணோட்டம் இல்லாத மனிதனால் சுற்றியுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் தனது இடத்தை நிர்ணயிக்க முடியாது. அவனுக்குத் தெளிவான லட்சியங்களும் நோக்கங் களும் இருக்காது, அவன் சந்தர்ப்ப சூழ் நிலைகளின் அடிமை யாக இருப்பான்.

சரியாகக் கூறினால் உலகைப் பற்றியும் வாழ்க்கையின் உட்பொருளைப் பற்றியும் முற்றிலும் கருத்து இல்லாத மக்களே கிடையாது எனலாம். ஆனால் இந்தக் கண்ணோட்டங் கள் விஞ்ஞான பூர்வமற்றவையாக, தவறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தால் இவை மனி தனுக்குச் சரியான வாழ்க்கை நிலையைத் தேர்ந்தெடுக்க உதவாததோடு கூட, மாறாக இவனைத் தவறான, சில சமயங் களில் திருத்த முடியாத நடவடிக்கைகளுக்குத் தள்ளும். மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தின் அடிப்படையி லான விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டம் சமுதாய மற்றும் தனி வாழ்வின் சிக்கலான நிகழ்ச்சிகளை எளிதாக அறிந்துணரவும் புலப்பாடுகளின் வெளிப்படையான, பல நேரங்களில் ஏமாற்றத் தக்க தோற்றத்தை வைத்து இவற்றின் உட்பொருளைப் பற்றி முடிவெடுக்காது சாரத்தினுள் புகவும் உதவுகிறது.

இத்தகையதொரு உலகக் கண்ணோட்டத்திற்கு வர்க்கத் தன்மை உண்டு, ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தின் சித் தாந்தம் இதன் அடித்தளமாகத் திகழ்கிறது . ''என்றென் றைக்கு மான' ' தத்துவஞானப் பிரச்சினைகளின் (பருப்பொருள் என்பது என்ன, உலகை அறிய இயலுமா, வாழ்க்கையின் உட் பொருள் என்ன முதலியவை) தீர்விற்கு மட்டுமின்றி சமு தாயம் மற்றும் அரசின் காரியங்களிலும் அரசியலிலும் உணர்வு பூர்வமாகப் பங்கேற்பதற்கும் இது சரியான வழிகாட்டுதலைத் தருகிறது.

''அரசியல்'' எனும் சொல்லுக்கு நவீன விஞ்ஞானம் விரிவான பொருளைத் தருகிறது. சமுதாய வர்க்கங்களின் நோக்கங்கள் மற்றும் போராட்டத்துடனும் இவற்றால் தோற்று விக்கப்படும் கட்சிகள், அரசுகளின் நடவடிக்கைகளுடனும் சர்வதேச அரங்கில் இவற்றிற்கு இடையேயான உறவு களுடனும் தொடர்புடைய அனைத்தும் தான் அரசியல் ஆகும். அரசியல் உறவுமுறைகளின் தன்மையையும் இவற்றின் நட வடிக்கையின் போக்குகளையும் (பொருளாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, மொத்தமாக உள் நாட்டுக் கொள்கை, வெளி நாட்டுக் கொள்கை முதலியவை) புரிந்து கொள்வதற்கு இவை எந்த வர்க்கத்திற்குச் சேவை புரிகின்றன, எந்த வர்க் கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கின்றன என்பதை நிர்ணயிப் பது அவசியம். மேலும் அரசியல் அணுகுமுறை இல்லாமல் கலை அல்லது குடும்பம் போன்ற வேறு சமுதாயப் புலப்பாடுகளின் தன்மையையும் புரிந்து கொள்ள இயலாது: நேரடி யாக அரசியல் உறவுகளின் முறையைச் சார்ந்திராவிட்டா லும் சமுதாய வாழ் நிலை மற்றும் உணர்வின் சகல துறைகளும் ஏதோ ஒரு விதத்தில் அரசியலோடு தொடர்புடையவை. மார்க்சிய-லெனினிய உலகக் கண்ணோட்டமும் அரசியல் அணுகுமுறையைக் கொண்டுதான் - தொழிலாளி வர்க்கம், உழைப்பாளிகளின் நிலையிலிருந்து-ஆயுதந் தரித்துள்ளது .

இன்று சர்வதேச அரங்கில் கடும் சித்தாந்தப் போராட் டம் நடைபெறும் இத்தருணத்தில் திட்டவட்டமான வர்க்கத் திசை யமைவு மிக அவசியம். துரோக நோக்கோடு நுட்ப மாக இயங்கும் பூர்ஷ்வாப் பிரச்சாரம் சோஷலிச நாடுகளில் உள்ள மக்களின் உணர்வை எப்படியாவது சிதறடிக்கவும் கொச்சையான வாழ்க்கை வரையளவுகளையும் சுவைகளையும் இவர்கள் மீது திணிக்கவும் பாடுபடுகிறது. சித்தாந்த உறுதி யுள்ள மனிதனின் வர்க்க உணர்வை ஒருபோதும் மழுங் கடிக்கச் செய்ய முடியாது, இவனை அரசியல் அக்கறை யின்மை எனும் பள்ளத்தில் தள்ள முடியாது. - விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டம் மூட நம்பிக் கைகளை மறுத்தல், இயற்கை மற்றும் சமுதாய வாழ்வின் புலப்பாடுகளைப் பொருள்முதல்வாத நிலையில் அணுகுதல் ஆகிய அம்சங்களை அங்கக ரீதியாக உள்ளடக்கியுள்ளது . விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டத்திற்கு முதலாவதாக ஞானம் தேவையென்றாலும், இது மட்டும் போதாது. தொழிலாளர்கள், விவசாயிகளுடனான கூட்டு உழைப்பில் மட்டுமே உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற முடியும்; ஒவ்வொரு மனிதனின் நடத்தையிலும் கருத்துக்கள் சோஷ லிசத்தின் வெற்றிற்குத் துணை புரியும் செயல் களுடனும், சிந்தனை நடவடிக்கையுடனும், தத்துவம் நடைமுறையுடனும் அங்கக ரீதியாக இணைந்திருப்பது அவசியம்.

விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டம் உருவாகு தல் என்பது தீவிர நிகழ்ச்சிப் போக்காகும்; இதற்குப் பெரும் உழைப்புத் தேவை. பள்ளிப் படிப்பின் முடிவிற்குப் பின் கிடைக்கும் சான்றிதழ் அல்லது உயர் கல்வியை அடுத்து கிடைக்கும் பட்டத்தை வைத்து அடையப்பட்ட ஞானத் தைக் கொண்டு திருப்தி அடையக் கூடாது. விஞ்ஞானத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்குகளை இடையறாது கவனிக்க வேண்டும், புதிய கண்டுபிடிப்புக்களின் உட்பொருளைக் கிரகிக்க முயல வேண்டும், விஞ்ஞானத்தின் பல்வேறு துறை க ளில் எந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றார்களோ அவற்றைப் பற்றி (பொது வாகவாவது) அறிந்திருக்க வேண்டும். தொழில் நுட்பத்திலும் தொழில் நுணுக்கத்திலும் மிக முக்கியக் கண்டுபிடிப்புக் கள், புதினங்களைப் பற்றியாவது தெரிந்து கொள்ள இதே ஆர்வம் நமக்கு உதவ வேண்டும் என்பது தெளிவு.

சுய கல்வியைப் பற்றிய பிரச்சினை இத்தோடு தொடர் புடையது. இது தான் மார்க்சிய-லெனினியத் தத்துவத்தையும் அரசியல் ஞானங்களையும் கிரகிப்பதற்கான மிகப் பயனுள்ள முறையாகும், ஏனெனில் இது சுய சிந்தனைக்கு உதவுகிறது. அரசு என்ற விரிவுரையில் வி.இ.லெனின் பின்வருமாறு கூறினார்: “இந்தப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் சுயமாக ஆராயக் கற்றுக் கொண்டால் தான் உங்கள் கருத்துக்களில் போ துமான அளவு உறுதியுள்ளவர்களாக உங்களை நீங்கள் கருதலாம், யார் முன் வேண்டுமானாலும் எப்போது வேண்டு மானாலும் போதுமான அளவு வெற்றிகரமாக இவற்றை நிரூபிக்கலாம்''.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

14. சோஷலிச சமூகத்தில் மூளையுழைப்பும் உடலுழைப்பும்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

வர்க்க சமுதாயத்தின் மிகப் பெரும் நியாயமின்மைகளில் ஒன்றிற்கு, அதாவது மக்களை மூளை யுழைப்பினராயும் உடலுழைப்பினராயும் பிரிப்ப தற்கு முடிவு கட்டுவதைப் பற்றி கற்பனாவாத சோஷலிஸ்டு களே கனவு கண்டனர்.

இத்துறையில் முன்பு நிலவிய எதிர்மறைக்கு சோஷலிசம் முடிவு கட்டிய து. மூளை யுழைப்பை வம்ச ரீதியாக அளிக்கும் சலுகை மாற்றப்பட்டது, அனை வருக்கும் கல்விக்கான வாயில் திறக்கப்பட்டது. சோவியத் அறிவுத் துறையினர் முழுக்க முழுக்க தொழிலாளி வர்க்கத்தையும் கூட்டுப்பண்ணை விவ சாயிகளையும் சேர்ந்த வர்கள், இவர்களின் நலன்களும் எதிர் காலமும் சமுதாயத்தில் உள்ள அடிப்படை வர்க்கங்களோடு ஒத்துப் போகின்றன. மறு புறம் விஞ்ஞானம், தொழில் நுட் பம், கலையில் ஈடுபட கலாச்சாரப் புரட்சி பரவலான மக்கள் திர ளினருக்கு வாய்ப்பளித்தது. லட்சக்கணக்கானோர் புதிது புனைகின்றனர், சிக்கன யோசனை களை முன் வைக்கின்றனர், அமெச்சூர் கலைக் குழுக்க ளில் பங்கேற்கின்றனர்; லட்சக் கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் ஓய்வு நேரத் தில் கல்வி பயிலுகின்றனர், படைப்பாற்றலில் ஈடுபடு கின்றனர் - இவர்கள் தான் மிக உயர்வான பொருளில் கூறும்படி அறிவுஜீவிகள்.

ஆனால் இவையனைத்தும், மக்களை மூளை யுழைப்புத் துறை யினராயும் உடலுழைப்புத் துறையினராயும் பிரிப்பது இன்ன மும் சமுதாயத்தில் உள்ள து என்பதை மாற்றுவதில்லை. இந்தப் பிரிவை இறுதியாக அகற்ற முடியுமா? இதை எப்படிச் செய்வது? இதற்கான தீர்வுகளில் ஒன்று- இதை கற்பனாவாத சோஷலிஸ்டுகளே கூறியுள்ளனர்- மூளை யுழைப் பையும் உடலுழைப்பையும் மாற்றி மாற்றி செய்வது.

இது இப்போதே பல மனிதர்களின் நடவடிக்கைகளில் உள்ளது. உதாரணமாய், தனது உழைப்புக் கடமையை முடித்த தொழிலாளி படிக்க அமருகிறான் அல்லது தொழில் நுட்ப மேம்பாட்டை வகுக்கிறான்; நாள் முழுவதையும் தத்துவச்சிக்கல்களில் செலவிட்ட கணித நிபுணன் ஓய்வு நேரத் தில் தோட்ட வேலை செய்கிறான். இங்கே வேலை மாற்றம் ஓய்வு நேரத்தில் நடைபெறுகிறது, மனிதனுடைய முக்கிய வேலை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது, அதில் முன் போன்று மூளையுழைப்போ அல்லது உடலுழைப்போ தான் மேலோங்கி யுள்ளது .
வேலை நேரம் குறைந்து வருகையில் உழைப்பை மாற்றி மாற்றி செய்வது மேலும் வளர்ச்சியுறும். இது சமுதாயத்திற் கும் மனிதனுக்கும் நல்லது. ஆனால் நவீன உற்பத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் மக்களின் தனித்துறைப்பாடு தேவைப் படுகிறது. நாம் எந்த வேலையை மேற்கொண்டாலும்-அட் ஜஸ்டர், விவசாய நிபுணன், ஆசிரியன் யாராயிருந்தாலும் ஞானம், அனு பவம், தேர்ச்சி ஆகியவை தேவை. திறமை யைப் பெற மனி தன் பெரும்பாலும் ஏதாவது ஒரு துறைக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும், தேர்ந்தெடுத்த விஷயத்தை நன் கு பயில வேண்டும்.

பிரச்சினைக்கான தீர்வுகளை எங்கே தேடுவது?

உடலுழைப்பின் உள்ளடக்கத்தின் எந்த மாற்றம் அதை மூளை யுழைப்புடன் நெருங்கி வரச் செய்யுமோ அத்தகைய மாற்றத்தில் தான் அநேகமாக இவற்றைக் காணலாம். வேறு விதமாகச் சொல்வதெனில் உற்பத்தியே அதன் வேலையாட்களுக்கு உயர்வான மூளையுழைப்பை அவசியமாக்க வேண்டும், படைப்பாற்றலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

விஞ்ஞான - தொழில் நுட்பப் புரட்சி இதற்குத்தான் இட்டுச் செல்கிறது. முதலாவதாக கடினமான உடலுழைப்பு மறைந்து வருகிறது. எல்லா இடங்களிலும் இயந்திரங்கள் மனிதர்களின் உதவிக்கு வருகின்றன; கடந்த 20-30 ஆண்டு களில் மட்டும், மிகக் கடுமையான உடலுழைப்பு தேவைப் பட்ட, மக்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவித்த, இவர் களின் வாழ் நாளைக் குறைத்த நூற்றுக்கணக்கான வேலைகள் என்றென்றைக்கு மாக மறைந்தன.

இயந்திரங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சிக்கலானவையாக உள்ளனவோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக இவற்றை இயக்கும் தொழிலாளி பல்வேறு விஞ்ஞானங்களின் அடிப் படைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், உற்பத்தியின் தொழில் நுணுக்கத்தை ஆழமாகப் புரிந்திருக்க வேண்டும். ஒரு முறை கற்றதை இயந்திரகதியாக திரும்பத் திரும்பச் செய்வதோடு அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, இடையறாது அவன் தன் ஞானத்தைப் பயன் படுத்த வேண்டும், இதை தன் உழைப்பில் ஈடுபடுத்த வேண் டும். மக்களின் உற்பத்தி நடவடிக்கையில் மூளையுழைப்பையும் உடலுழைப்பையும் அங்கக ரீதியாக இணைப்பதற்கான நிலைமை கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் புறவய ரீதியான நிலைமைகளோடு கூட சமுதாய உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பன்முக வளர்ச்சிக்கும் துணை புரியத் தக்க வகையில் பொதுக் கல்வி முறையும் ஒழுங்க மைக்கப்படுகிறது. ஒவ்வொரு வனும் தேர்ந்தெடுத்த துறையை ஆழப் பயிலு வான், நவீன விஞ்ஞானத்தின் அடிப் படைகளை அறிவான், உற்பத்தி உழைப்பில் நேரடியாகப் பங்கேற்பதற்கான பயிற்சியைப் பெறுவான்.

கடுமையான உடலுழைப்பை ஒழிப்பது கண்ணுக்கு எட்டிய எதிர் காலத்தில் நிறைவேற்றப்படும் என்றால் மூளை யுழைப்பையும் உடலுழைப்பையும் அங்கக ரீதியாக இணைப் பது பன் மடங்கு சிக்கலான கடமையாகும்: தானியங்கி மயப் படுத்தப்பட்ட கம்யூனிச உற்பத்தியில் தான் இது முற்றிலு மாகத் தீர்க்கப்படும்.

தானியங்கி மயமாக்கப்பட்ட உற்பத்தியில் மனிதனின் பங்கு என்ன என்ற இயற்கையான வினா எழுகிறது. படம்

தானியங்கி இயந்திரங்களை வடிவமைப்பதும் தயாரிப்ப தும் மட்டுமின்றி--இது மிகவும் கவர்ச்சிகரமான து-தானி யங்கி அமைப்புகளுக்குத் தேவையான கட்டளைகளை உரு வாக்குவதும் மனிதனின் பங்காக இருக்கும். மிக ' 'மூளை யுள் '' இயந்திரம் கூட மனிதனால் மிகச் சிக்கலான கட்டளை மூலம் ''இயக்கி வைக்கப்பட்டால் தான் ' ' ஒரு குறிப்பிட்ட வரையளவிற்குள் மட்டுமே சிந்திக்க வல்லது.

எதிர்காலத்தில் உற்பத்தி உழைப்பு மிகக் கடினமான தாகவோ அல்லது ஒரே மாதிரியான தாகவோ இருக்காது . திரும்பத் திரும்பச் செய்யப்படும் ஒரே மாதிரியான வேலை களை மனிதன் இயந்திரங்களுக்கு அளித்து விட்டு தான் இவற் றின் இயக்கத்தைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துபவனாக இருப்பான். இது பொறியியல் - தொழில் நுட்ப நடவடிக்கை யின் ஒரு வகையாக இருக்கும்.

எனவே கம்யூனிசம் கட்டப்பட்டதும் பெரும்பான்மை மக்களைக் கடின மான , ஊக்கமற்ற வேலையைச் செய்யும் படி நிர்பந்தித்த பழைய உழைப்புப் பிரிவினை இறுதியாக உதிர்ந்து மறைகிறது. ஒவ்வொரு வேலையும் படைப்பாற்றல் தன்மையை உடையதாக இருக்கும், இதற்குத் தனித்துறைப்பாட்டின் உயர்ந்த தரத்தோடு கூட பரவலான விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப அறிவும் தேவை. மூளை யுழைப்பையும் உடலுழைப்பையும் சீரிசைவாக இணைத்தால் இது எந்தவித உழைப்பையும் மகிழ்ச்சிகரமான தாகவும் உற்சாகமான தாகவும் மாற்றும். உழைப்பு சோம்பேறித்தனமான பொழுது போக்காக மாறும் என்று நிச்சயமாக இதற்குப் பொருள் இல்லை. எப்போதும் உழைப்பிற்கு மனிதனின் ஆன்மீக மற்றும் உடல் சக்தியும் பெரும் ஆற்றலும் தேவை.

 சரியாகக் கூறின், இப்போது அறுவை சிகிச்சை மருத்து வர் ஒரே நேரத்தில் கைகளால் வேலை செய்து கொண்டே மூளையாலும் சிந்திப்பதைப் போன்றே எதிர்காலத்தில் மக்கள் தமது நடவடிக்கையில் எது-உடலுழைப்பா அல்லது மூளை யுழைப்பா - மேலோங்கியுள்ளது என்று சிந்திப்பதையே நிறுத்துவார்கள்.

அதே நேரத்தில் எல்லா மக்களின் நடவடிக்கையிலும் மூளை யுழைப்பும் உடலுழைப்பும் முற்றிலும் ஒரே மாதிரியாக “அளவிடப்படும்'' என்று கருதக் கூடாது. வெவ்வேறு வேலை களுக்கு எப்போதுமே வெவ்வேறு அளவுகளில் மூளையுழைப்பும் உடலுழைப்பும் தேவைப்படும். உதாரணமாக, புவியி யல் நிபுணரை எடுத்துக் கொண்டால் சில உடலுழைப்புத் துறையினரைவிட இவரது உழைப்பிற்கு அதிகத் தசைச் சக்தி தேவைப்படும்.

இவ்வாறாக, காலப் போக்கில் மக்களை உடலுழைப்புத் துறையின ராயும் மூளை யுழைப்புத் துறையினராயும் பிரிப்பது மறையும்; அறிவு ஜீவிகள் விசேஷப் பிரிவினராய் இருப்பதும் மறையும்.

உற்பத்திச் சாதனங்களின் மீதான ஒரே கம்யூனிசச் சொத்துடைமையை உருவாக்குதல், நகரத்திற்கும் கிராமத் திற்கும் இடையிலுள்ள சமூக வேறுபாடுகளை அகற்றுதல், மக்களின் உற்பத்தி நடவடிக்கையில் உடலுழைப்பையும் மூளை யுழைப்பையும் அங்கக ரீதியாக இணைத்தல்- இவை யனைத்தும் இறுதியில் கம்யூனிச சமுதாய உறவுகளை நிலை நாட்டு வதற்கு இட்டுச் செல்லும் புறவய ரீதியான சமுதாய நிகழ்ச்சிப் போக்குகளாகும்.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”