Friday, 31 May 2019

12. சோஷலிச உழைப்பாளிகளின் சமுதாயம்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

சோஷலிச நிர்மாணம் சமுதாயத்தின் வர்க்கக் கட்டமை வை அடியோடு மாற்றுகிறது: தனிச்சொத்துடைமை, மனி தனை மனிதன் சுரண்டுவது ஆகியவற்றோடு கூட சுரண்டும் வர்க்கங்களும் மறைந்து போகின்றன, உழைக்கும் வர்க்கங் களும் மக்கள் பிரிவுகளும் அடிப்படை ரீதியான மாற்ற மடைகின்றன, சமூக உறவுகளின் முறை முழுவதும் புது வடிவத்தைப் பெறுகிறது.

சோவியத் யூனியனில் தொழிலாளி வர்க்கம் தான் எண்ணிக்கை ரீதியாக மிகப் பெரிய வர்க்கமாக விளங்குகிறது. தற்போது நாட்டில் கிட்டத் தட்ட 80 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். தொழி லா ளி வர்க்கம் பெரும்பாலும் தொழில் துறையில், அதாவது தேசியப் பொருளாதாரத்தின் முக்கியத் துறையில் ஈடு பட்டுள்ளது. இவ் வர்க்கத்தின் உழைப்பால் தான் உற்பத்திச் சாதனங்களும் தொழில் துறை நுகர்வுப் பொருட்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் அரசு விவசாய நிறு வனங்களிலும் (அரசுப் பண்ணைகள்) போக்குவரத்திலும் பொருளாதாரத்தின் மற்ற துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

சோவியத் யூனியனை உலகின் முன்னணி தொழில் துறை நாடாக மாற்றியதும் நவீன தொழில் துறைகளைத் தோற்று வித்ததும் தொழிலாளி வர்க்கத்தின் உள்ளமைப்பில் கணிச மான மாற்றங்களை ஏற்படுத்தின. 1917ம் ஆண்டு அக்டோப ருக்கு முன் சிற்றியந்திர தொழில் துறை மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் துறையின் தொழி லாளர்கள் எண்ணிக்கை ரீதியாக முதலிடத்தை வகித்தார் கள் என்றால், தற்போது இயந்திரக் கட்டுமானம், உலோகத் தைப் பதப்படுத்தும் தொழில் துறை, இரும்பு கலந்த உலோகத் தொழில் துறை, உபகரணக் கட்டுமானம், இர சாயன மற்றும் எண்ணெய் தொழில் துறை, நவீன உற்பத்தியின் மற்ற முக்கியத் துறைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தான் விஞ்சி நிற்கின்றனர். தொழிலாளி வர்க்கம் தான் சோஷலிசச் சமுதாயத்தின் தீர்மானகரமான உற்பத்திச் சக்தியாக விளங்குகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் கலாச்சார, பொதுக் கல்வித் தரம் பெரிதும் உயர்ந்துள்ளது. 1917 ம் ஆண்டு அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்கு முன் ஆலை, தொழிற்சாலைத் தொழி லா ளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்டோர் எழுத் தறிவற்றவர்களாயிருந்தனர். இன்று தொழில் துறைத் தொழி லா ளர்களில் நான்கில் மூன்று பகுதியினர் முழுமை பெற்ற மற்றும் முழுமையடையாத செகண்டரி மற்றும் உயர் நிலைக் கல்வியை உடையவர்கள். பலர் வேலை செய்து கொண்டே மாலை நேரப் பள்ளிகளிலும் தொழில் நுட்பப் பள்ளிக்கூடங் களிலும் உயர் கல்வி நிலையங்களிலும் பயிலுகின்றனர். முன்னணி உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டுள்ள உயர் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களின் நடவடிக்கையில் (பிட் டர்கள், பழுது பார்ப்போர், ஆப்பரேட்டர்கள்) மூளை யுழைப்பு உடலுழைப்பை விஞ்ச ஆரம்பித்துள்ளது. கல்வித் தரத்திலும் உழைப்பின் படைப்பாற்றல் தன்மையிலும் முன்னணித் தொழிலாளர்கள், உற்பத்தியின் புதுமையாளர் கள் பொறியியல் - தொழில் நுட்ப நிபுணர்களை நெருங்கி வருகின்றனர்.

தொழில் நுட்ப முன்னேற்றம் தொழிலா ளர் களின் உற் பத்தித் தேர்ச்சியை உயர்த்தியுள்ளது, பல புதிய வேலைகள் தோன்றியுள்ளன.

உற்பத்தியில் உள்ள மையப் பாத்திரம், நல்ல அரசியல் அனுபவம், உயர்ந்த உணர்வு மற்றும் ஒழுங்கமைப்பு ஆகிய வை தொழிலாளி வர்க்கத்திற்குச் சமுதாயத்தில் முன்னணிப் பாத்திரத்தை அளிக்கின்றன. தொழிலாளி வர்க்கத்தின் கட்சியாகிய கம்யூனிஸ்டுக் கட்சி சோவியத் மக்கள் அனை வரின் அரசியல் முன்னணிப் படையாக மாறி சமுதாய வளர்ச்சியை ஒழுங்குபடுத்தி வழி நடத்துகிறது.

சோவியத் சோஷலிசச் சமுதாயத்தின் இன்னொரு முக்கிய வர்க்கம் விவசாயிகள். தற்போது நாட்டின் மக்கள் தொகை யில் இவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 சதவிகித மாகும். விவசாயிகள் 30ம் ஆண்டுகளில் சோஷலிச வளர்ச்சிப் பாதைக்கு வந்தனர் (பால்டிக் குடியரசுகள், மேற்கு உக்ரேனியா, மேற்கு பைலோ ருஷ்யா, மல்டாவியா ஆகிய இடங் களில் கூட்டுமயமாக்கல் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிந்தைய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது.)

விவசாயத்தைக் கூட்டுமயமாக்குதல் நடந்து கொண் டிருந்த ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கம் தலைசிறந்த பத்தாயிரக்கணக்கான தன து பிரதிநிதிகளைக் கிராமங்களுக்கு அனுப்பியது. இவர்கள் முதல் கூட்டுறவுகளை ஏற்படுத்தவும் கூட்டுப்பண்ணை உற்பத்தியை ஒழுங்கமைக்கவும் கிராமத் தின் கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையை மாற்றவும் உதவினர்.

அந்தக் காலத்தின் வீரத்தை மி.அ.ஷோலகவின் பண்பட்ட கன்னி நிலம் என்ற பிரபல நாவல் நன்கு விவரிக்கிறது . இதில் கூட்டுமயமாக்குதலுக்குப் பொறுப்பு வகித்த தொழி லாளியும் கம்யூனிஸ்டுமாகிய செமியோன் தாவி தவின் நட வடிக்கை நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிந்தைய காலங்களில், விவசாய உற்பத்தியை உயர்த்துவதற்கான போராட்டத்தின் ஒவ்வொரு தீர்மானகரமான காலகட்டத் திலும் தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகள் விவசாயி களுக்கு உதவிக் கரம் நீட்டினர். 1954ம் ஆண்டு வசந்த காலத்தில் கட்சியின் கட்டளைக்கேற்ப கிட்டத்தட்ட 25,000 தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் கூட்டுப்பண்ணைகளின் தலைமைப் பணிகளுக்கு மாறினார்கள்.

உழைப்பு நிலைமைகளிலும் கலாச்சாரத்திலும் கூட்டுப் பண்ணை விவசாயிகள் மேன் மேலும் தொழிலாளி வர்க்கத்தை நெருங்கி வருகின்றனர். கூட்டுப்பண்ணை உறுப்பினர்கள், கூட்டு உழைப்பையும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை யும் அடிப்படையாகக் கொண்ட பெரும் சோஷலிச நிறுவனங் களில் பணி புரிகின்றனர். விவசாய உற்பத்தியில் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பரவலாகப் புகுத்தப்பட்டு வருவதால் புதிய வேலைகள் தோன்றி வருகின்றன. இன்று கிராமத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான இயந்திர ஓட்டிகள் டிராக்டர் ஓட்டிகள், அறுவடை இயந்திர இயக்குநர்கள், டிரைவர்கள்) உள்ளனர். கூட்டுப்பண்ணை உறுப்பினர்களில் 70 சதவிகிதத் திற்கும் மேலானோர் முழுமை பெற்ற, முழுமையடையாத செகண்டரி, மற்றும் உயர் நிலைக் கல்வி பயின்றவர்கள்.

உற்பத்தி அமைப்புகளும் பள்ளிகள், கலாச்சார மா ளி கைகள், திரைப்பட அரங்குகள், மருத்துவ விடுதிகள், விளை யாட்டு அரங்குகள் உட்பட வீடுகளும் பெருமளவு கட்டப்படு வதாலும் தொலைகாட்சி, மற்ற தகவல் பிரச்சார சாதனங்கள் விரிவாகப் பரவி வருவதாலும் சோவியத் கிராம வாழ்க்கை மாறியுள்ள து, நவீன கலாச்சார்ச் செல்வங்கள் கிராமப்புற மக்களுக்கு எட்டும்படி செய்யப்பட்டுள்ளன.

தொழில் துறை வளர்ச்சி, நகரங்களின் வளர்ச்சி, விவசாய உழைப்பு இயந்திரமயமாக்கப்பட்ட உழைப்பா கப் படிப்படியாக மாறி வருதல் ஆகியவை நாட்டின் மக்கள் தொகையில் விவசாயிகளின் எண்ணிக்கையைப் படிப்படி யாகக் குறைக்கின்றன. ஆனால் முதலா ளித்துவத்தில் விவ சாயிகள் சிதறித் திவாலடைவதற்கு முற்றிலும் நேர் மாறான நிகழ்ச்சிப் போக்காகும் இது.

சோவியத் சமுதாயத்தில் விரைவாக வளர்ந்து வரும் பிரிவு அறிவுஜீவிகள். இவர்களில் பெரும்பான்மையோர் பொரு ளாயத உற்பத்தி, விஞ்ஞானம், தொழில் நுட்பம், கலாச்சாரம், மருத்துவம், கல்வி, அரசு மற்றும் சமூக நிர் வாகம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தேர்ச்சி பெற்ற நிபுணர்கள்.

பெரும்பாலும், மூளை யுழைப்பில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 19 26ம் ஆண்டில் 3 மில்லியனுக்குக் குறைவா யும் 1939ல் கிட்டத்தட்ட 13 மில்லியனாயும் இருந்தது என் றால், இப்போது இது 40 மில்லியனுக்கும் அதிகம். சோவியத் யூனியனில் ஒவ்வொரு நான்கு பணியாளர்களில் ஒருவர் பெரும்பாலும் மூளையுழைப்புடன் தொடர்புடையவர்.

குறிப்பாக உற்பத்தி தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான அறிவுஜீவிகளின் எண்ணிக்கை விரைவாக வளர்ந்து வருகிறது. விஞ்ஞான- தொழில் நுட்பப் புரட்சி ஆழமாகி வருகையில், ஆன் மீக உற்பத்தித் துறை விரிவடைந்து வருகையில் அறிவு ஜீவிகளின் எண்ணிக்கை மேற்கொண்டு உயரும். இது சோவியத் தேசியப் பொருளாதார, விஞ்ஞான மற்றும் கலாச் சார வளர்ச்சியின் கோரிக்கைகளுக்கும் மக்கள் அனைவரின் கல்விக்கும் ஏற்றதாய் உள்ளது.

சோஷலிசச் சூழ்நிலைகளில் எல்லா வர்க்கங்கள், சமூகப் பிரிவுகளிலிருந்தும் வரக் கூடிய மக்கள் அறிவு ஜீவிகளா கின்றனர். அறிவு ஜீவிகள் எல்லா மக்களுடனும் தொடர்பு கொண்டுள்ளனர், அவர்களது நலன்களுக்குச் சேவை செய்கின்றனர்.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”


No comments:

Post a Comment