Friday, 24 May 2019

சோஷலிசத்தில் திட்டமிட்ட பொருளாதார நிர்வாகத்துக்குரிய சாத்தியக் கூறும் தேவையும்

 – லெவ் லியோன்டியெவ்

“முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சமூகப் பொருளுற்பத்தியின் உட்கூறுகளுக்கிடையில் இருக்க வேண்டிய வீதாசாரங்கள் எண்ணற்ற அலைவுகள், திரிபுகளின் மூலம் தன்னியல் பாய் நிலை நாட்டப்படுகின்றன. இதனால் போட்டா போட்டி, நெருக்கடிகள், வேலையின்மை ஆகிய வற்றின் மூலம் உற்பத்தி சக்திகள் பேரழிவுக்கு உள்ளாக வேண்டியதாகிறது. முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாததாய் இருக்கும் உற்பத்தி அராஜகம் இதில் தான் அடங்கியிருக்கிறது.

உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் சுவிகரிப் பின் தனியார் முதலாளித்து  வடிவத்துக்கும் இடையிலுள்ள முரண்பாட்டிலிருந்தே, முதலாளித்துவத்தின் இந்த அடிப்படை முரண்பாட்டிலிருந்தே உற்பத்தி அராஜகம் எழுகிறது. இந்த முரண்பாடு சோஷலிசத்தால் ஒழிக்கப்படுகிறது. சோஷலிச சமுதாயத்தில் உற்பத்திச் சாதனங்களிலும், இவற்றின் மூலம் உற்பத்தியின் பலன்களிலும் நிலவும் பொதுவுடைமையானது உற்பத்தியின் சமூகத் தன்மைக்குப் பொருத்தமான தாய் இருக்கின்றது.

சோஷலிச சமுதாயத்தின் பொதுவான உருவரைகளை விவரித்துக் காட்டுகையில் மார்க்சும் எங்கெல்சும் சோஷலிசத்தில் உற்பத்தி அராஜகம் ஒழிக்கப்பட்டு அதனிடத்தில் திட்டப்படி ஒழுங்கமைக்கப்பட்டதும், சமுதாயம் முழுமையின் தேவைகளையும் அதன் ஒவ்வோர் உறுப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யத் தக்கதாய்த் திட்டமிடப்பட்டதுமாகிய சமூகப்பொருளுற்பத்தி நிறுவப்படும் என்று முன்னறிந்து கூறினர். தனியொரு திட்டத்துக்கு ஏற்ப கோடிக் கணக்கான மக்களது வேலைகளுக்கு வழிகாட்டக் கூடியதாய் வினை திறன் மிக்கதாகிய பொறியமைவாய் அரசின் பொருளாதாரக் கட்டமைவு அனைத்தையும் மாற்று வதெனும் பிரம்மாண்ட பணியினை சோஷலிசப் புரட்சி நிறைவேற்றி முடித்தாக வேண்டுமென்று லெனின் குறிப்பிட்டார். - முதலாளித்துவம் எப்படி உற்பத்தி அராஜக மின்றி இருக்க முடியாதோ, அதோ போல சோஷலிசம் பொருளாதாரம் அனைத்தின் திட்டமிட்ட வழியிலான வளர்ச்சியின்றி இருக்க முடியாது.

திட்டமிட்ட பொருளாதார நிர்வாகம் சோஷலிசப் பொருளாதாரத்துக்குரிய அடிப்படை இயல்பாகும். சோஷலிசத்தில் சமூகச் செல்வத்தைப் பெருகச் செய்து உழைப்பாளி மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் கலாசார நிலையையும் இடையறாது உயர்த்திச் செல்லத்தக்க ஒருமித்த பொருளாதாரத் திட்டத்தின்படி பொருளாதாரச் செயற்பாடு நடந்தேறுகிறது. சோஷலிச நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பும் திட்டத்தின் அடிப்படையில் தான் நடந்தேறுகிறது.

திட்டமிட்ட அடிப்படையில் தான் எல்லா அரசு நிலையங்களும் கூட்டுறவு நிலையங்களும் செயல்படுகின்றன. அரசின் பொருளாதாரத் திட்டமானது உற்பத்தியையும் உற்பத்திப் பொருள்களின் வினியோகத்தையும் சமுதாய அளவில் ஒரு மித்த முழுமையாய் ஒருசேர இணைக்கிறது. தொழில் துறையையும் விவசாயத்தையும் போக்கு வரத்தையும் கட்டுமானத்தையும் வாணிபத்தையும் சேர்ந்த நிலையங்கள் மட்டுமின்றி விஞ்ஞான நிலை யங்களும் கலாசார, கல்வி, மருத்துவ நிலையங் களுங்கூட திட்டமிட்ட முறையிலே தான் செயல் படுகின்றன.

சோஷலிச சமுதாயத்தில் திட்டமானது பொருளாதார, கலாசார வளர்ச்சி அனைத் திலும், சோஷலிச, கம்யூனிசக் கட்டுமானத்தின் பிரம்மாண்டச் செயல் முறை முழுவதிலும் குறிக் கோள் ஒற்றுமைக்கும் சித்த ஒற்றுமைக்கும் வகை செய்யும்படியாய் அமைந்திருக்கிறது. - ஆகவே சோஷலிசத்தில் திட்டமிட்ட பொரு ளாதார நிர்வாகம் சாத்தியமாவதோடு, அவ சியமும் ஆகிறது என்பது தெளிவாகிறது. சோஷலிசப் பொருளாதாரம் பொது வுடைமைச் சொத்தின் அடிப்படையில் அமைந்தது; மனிதனை மனி தன் சுரண்டுவதிலிருந்து விடுதலை பெற்றது; சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய் வதை அன்றி வேறு எக்குறிக்கோளுக்கும் இடந்தராதது; சமுதாயத்தால் புரிந்து கொள்ளப்பட்டு சோஷலிச, கம்யூனிசக் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் எதார்த்தப் புற நிலைப் பொருளாதார விதிகளுக்கு ஏற்பவளர்ந்து ஒங்குவது. பொருளாதாரத் திட்டமிடுவது இத் தகையதாகிய சோஷலிசப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த பண்பாகும்.
(அரசியல் பொருளாதாரம் – முன்னேற்றப் பதிப்பகம்- மாஸ்கோ- 1975-
பக்கம் 284 - 287)

No comments:

Post a Comment