- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின்,
யூ.கிராஸின், வி.சுகதேயெவ்
மனிதனுக்குப் படைப்பாற்றல் மகிழ்ச்சியைத் தரவல்ல நல் வாழ்வின் மூல ஊற்றாகிய உழைப்பு, சுரண்டல் அமைப்பு நிலவி வந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடும் சுமையாகக் கருதப் பட்டு வந்தது. நல்ல பயிர் வளர்த்து அரைப்பட்டினி கிடந்த வர்களுக்கு, ஆடைகளை நெய்து ஆனால் கந்தல் உடுத்தி யிருந்த வர்களுக்கு, மாடமாளிகைகளைக் கட்டி மண் குடிசை க ளில் வாழ்ந்தவர்களுக்கு இது வேறு விதமாயிருந்திருக்க இயலாது.
சோஷலிசத்தில் உழைப்பாளிகள் நாட்டுச் செல்வம் முழு வதற்கும் முழு உரிமையுள்ள எஜமானர்களாக ஆயினர். இவர்கள் ஏதோ சில ஒட்டுண்ணிகள் செல்வந்தர்களா வ தற் காக இல்லாமல் தமக்காக, தன து சமுதாயத்திற்காக உழைக் கின்றனர். கட்டாய உழைப்பைச் சுதந்திர உழைப்பாக மாற்றி யது தான் சோஷலிசத்தின் மகத்தான சாதனையாகும்.
உழைப்பின்
நிலைமைகளின் அடிப்படை மாற்றங்கள் இதனுடன் தொடர்புடையன.
சோஷலிசத்தில் உழைப்பின் நிலைமைகளில் ஏற்பட்ட மிக முக்கிய மாற்றங்களில் ஒன்று, உழைக்கும் திறமையுள்ள மக்கள் அனை வருக்கும் முழு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருப் பதாகும். 1930ம் ஆண்டில் சோவியத் யூனியனில் வேலை யில்லாத் திண்டாட்டத்திற்கு இறுதி முடிவு காணப்பட்டது. அது முதல் இளம் சோவியத் தலைமுறையினருக்குப் புத்தகங் கள் மூலமாகவும் முதலாளித்துவ நாடுகளிலிருந்து வரும் பத்திரிகைச் செய்திகள் மூலமாகவும் மட்டுமே வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் பற்றித் தெரியும்.
சோவியத்
யூனியனில் வேலையில்லாத் திண்டாட்டம் அறவே கிடையாது. உழைப்பிற்கான உரிமை அரசியல் அமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளது, நடைமுறை ரீதியாக நிறைவேற்றப்படுகிறது.
ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இன்னுமொரு அம்சமும் குறிப்பிடப்பட்டுள்ளது: சமுதாய ரீதியாகப் பயனுள்ள உழைப்பிலிருந்து விலகு வ து சோஷலிசக் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகாதது , அதாவது சோம்பேறித்தனம், லஞ்சம் வாங்குதல், கள்ள வியாபாரம், உழைக்காது பணம் பெறுதல், சோஷலிச உடை மையைத் தாக்குவது ஆகியவற்றிற்கான சகலவித வாய்ப்பு களையும் உறுதியாகத் தடுக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
சோஷலிச நாடுகளில் மக்களுக்குத் தமது விருப்பத்திற் கும் திறமைகளுக்கும் ஏற்ப, சமுதாயத் தேவைகளைக் கணக் கில் கொண்டு வேலையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உண்டு. தேவையான தொழில் பயிற்சியையும் கல்வியையும் பெற ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்திரவாதம் அளிக்கப்படு கிறது. இளைஞர்கள் எளிதாகவும் விரைவாகவும் வேலைகளைப் பெறுவதற்கான சூழ்நிலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
உற்பத்தி
வளர்ச்சிப் போக்கில் சோஷலிச நாடுகளால் வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தவிர்க்க இயலாது என்று பூர்ஷ்வாச் சித்தாந்த வாதிகள் ஆரூடம் கூறினார்கள். இது எவ்வளவு அபத்தமானது என்பது இப்போது தெளிவு. உற்பத்தி வேகமாக வளர்ந்து வருகிறது, இயந்திரமயமாக்கலும் தானியங்கி மயமாக்கலும் விரைவாக இடையறாது அதிகரித்து வருகின்றன. ஆனால் வேலை வாய்ப்பு அனைவருக்கும் உள்ளது. தேசியப் பொருளாதாரத்தில் உள்ள தொழிலாளர்கள், உத்தி யோகஸ்தர்களின் எண்ணிக்கை இடையறாது அதிகரித்து வருகிறது.
முதலாளித்துவ நாடுகளில் எந்த ஒரு வேலையாளும் எத் தருணத்தில் வேண்டுமானாலும் கம்பெனிக்கு ''அவனது சேவை இனித் தேவையில்லை'' என்ற அறிவிப்புடன் நடுத் தெருவில் விடப்படலாம். சோஷலிச நாடுகளில் உழைப்பிற் கான உரிமை கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது.
சோவியத் சட்ட முறை வேலையிலிருந்து சட்டவிரோதமாக நீக்கப்படுவ திலிருந்து தொழிலாளர்களையும் உத்தியோகஸ்தர்களையும் பாதுகாக்கிறது. சட்டத்தால் விசேஷமாகக் குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டும், கண்டிப்பாகத் தொழிற்சங்கக் கமிட்டியின் ஒப்புதலுடன் மட்டுமே நிர்வாகம், வேலையாளை வேலை நீக்கம் செய்ய முடியும். வேலை நீக்கம் செய்யப்பட்ட வேலையாளுக்கு நீதி மன்றத்தில் முறையீடு செய்ய உரிமை உண்டு. அது சட்டவிரோதமான வேலை நீக்கமாக இருந்தால் நீதிமன்றம் அவனை மறுபடியும் வேலையில் அமர்த்துவதோடு கூட, வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்திற்கான ஊதியத்தையும் அளிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது.
உற்பத்திச்
சக்திகள் வளர்ச்சியடைகையில் வேலை நேரக் குறைப்பு நடைபெறுகிறது. வேலையாளுக்கு ஓய்வு, கல்வி, சொந்த வாழ்க்கைக்காக மேலும் மேலும் அதிக நேரம் கிடைக்கிறது.
சோவியத்
யூனியனில் மிகப் பெரும்பான்மையான தொழி லாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு இரண்டு ஓய்வு நாட்களோடு கூடிய ஐந்து நாள் வேலை வாரம் உள்ளது. எந்த நிறுவனங்கள், அலுவலகங்கள், ஸ்தாபனங்களில் உற் பத்தியின் தன்மையின் காரண மாக அல்லது வேலை நிலைமை களின் காரண மாய் ஐந்து நாள் வேலை வாரத்தை அமல் படுத்துவது பிரயோசனமில்லையோ அங்கேயெல்லாம் ஓர் ஓய்வு நாளுடன் கூடிய ஆறு நாள் வேலை வாரம் அமல்படுத்தப்பட் டுள்ளது; இந்தச் சந்தர்ப்பங்களில் வேலை நேரம் 7 மணிக்கு அதிகமாயில்லை. சோவியத் யூனியனின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ஒரு வாரத்தில் வேலை நேரம் 41 மணி நேரத் திற்கு அதிகமாக இருக்கக் கூடாது.
மருத்துவர்கள், தீய உழைப்பு நிலைமைகள் நிலவும் உற்பத்தியில் ஈடுபட்டுள் ளோர், 18 வயதடையாத இளைஞர்கள் ஆகியோருக்குக் குறைக்கப்பட்ட வேலை வாரம் நிலை நாட்டப்பட்டுள்ளது. வயது வந்த தொழிலாளி மற்றும் உத்தியோக ஸ் தருக்கு முழு வேலை நாளுக்கு வழங்கப்படும் அதே ஊ தி யம் குறைக் கப்பட்ட வேலை நாளையுடைய 18 வயது வராதோருக்கும் அளிக்கப்படுகிறது. சோவியத் யூனியனில் உபரி நேர உழைப்பு கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அசாதாரணமான சந்தர்ப்பங்களில் மட்டுமே, தொழிற்சங்கத்தின் அனுமதி யுடன் நிர்வாகம் இதைப் பயன்படுத்த முடியும்.
ஓய்வு நேரம் அதிகமாகியுள்ளதால், இதைச் சரிவரப் பயன்படுத்தும் பிரச்சினை எழுகிறது. ஆடம்பரக் கேளிக் கைகளில் நேரத்தைக் கழிப்பது தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ செழுமையாக்காது என்பது தெளிவு. குடித்துத் திரிவதும் சூதாட்டமும் நேரடியான இழப்பை ஏற்படுத்துகின்றன. ஓய்வு நேரத்தை விவேகமாக, பயனுள்ள முறையில் பயன்படுத்த பெரும் கலாச்சார- வளர்ப்புப் பணி தேவைப்படுகிறது, இது கம்யூனிஸ்டு இளைஞர் சங்கத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.
சோஷலிசத்தில் உழைப்புப் பாதுகாப்பிற்கு விசேஷக் கவனம் செலுத்தப்படுகிறது. நவீன உற்பத்தியின் பல துறை களில் உற்பத்தி விபத்துக்களோ ஏன் மனித உயிரிழப்போ கூட ஏற்படலாம் என்பது அனைவரும் அறிந்ததே. உற்பத்தி யின் தொழில் முறையை மேம்படுத்துவதன் மூலமாகவும் கடின மான, உழைப்பு அதிகமாகத் தேவைப்படும் வேலைகளை இயந்திரமயமாக்குவதன் மூலமும் சாத்தியமான அசம்பா வித நிகழ்ச்சிகள் மற்றும் தொழில் துறை நோய்களின் கார ணங்களை அகற்றுவதன் மூலமாகவும் நிறுவனங்களில் பாது காப்பான, ஆரோக்கியமான உழைப்புச் நிலைமைகளை ஏற் படுத்தலாம். இரசாயனப் பொருட்கள், அசாதாரண வெப்ப நிலை, ஈர நிலை ஆகியவை மனித உடலின் மீது ஏற்படுத்தும் தீயத் தாக்கங்களை எச்சரிக்கை செய்யவும் குறைக்கவும் விசேஷ உடையும் பாதுகாப்புக் கருவிகளும் (முகக் கண்ணாடி, சுவாசச் சாதனம், முகமூடி முதலியவை) தொழிலாளர் களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஒரு சில உற்பத்தியிடங்களில்,
உதாரணமாய் இரசாயனத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு இலவசமாக நோய் தடுப்பு உணவு அளிக்கப்படுகிறது . தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளோருக்குக் குறைவான வேலை நேரமும் கூடுதல் விடுமுறையும் வழங்கப் படுகின்றன.
தொழிற் பாதுகாப்பு விதிகளை ஒவ்வொரு தொழிலாளி யும் தெரிந்திருக்க வேண்டும், ஒரு சிலர் இதற்கான விசேஷத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
உழைப்புப்
பாதுகாப்பை இடையறாது மேம்படுத்தி வரும் சோஷலிசச் சமுதாயம் அசம்பாவிதச் சம்பவங்களை இயன்ற வரை குறைக்க முயலுகிறது. பாதுகாப்பு விதிகள் பின்பற்றப் படுவதை அரசும் தொழிற்சங்கங்களும் உஷாராகக் கண் காணிக்கின்றன. இவை மீறப்பட்டால் எந்த உற்பத்தியிடத் தில் வேண்டுமானாலும் வேலைகள் நிறுத்தப்படலாம். உழைப்புப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
சோஷலிச உற்பத்தியும் இதன் அளவுகளும் லயமும் கண்டிப்பான உழைப்புக் கட்டுப்பாட்டை அவசியமாக்கு கின்றன. உரிய நேரத்தில் வேலைக்கு வருதல், வேலை நேர இறுதி வரை இருத்தல், வேலை நேரம் முழுவதையும் வேலைக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக முழுக்க செலவிடுதல், உபகரணங்கள், இயந்திரங்களைப் பத்திரமாகப் பயன்படுத்துதல், வேலை செய்யும் இடத்தையும் தொழிற்சாலையையும் சுத்தமாக வைப்பது, தனக்குப் பின் வேலைக்கு வருபவனுக்கு வேலையிடத்தைச் சரியான நிலையில் தருவது போன்ற அடிப்படை விதிமுறைகளை நிபந்தனையின்றி கடைபிடிப்பதை உழைப்புக் கட்டுப்பாடு முன்னனுமானிக்கிறது.
பரவலான பொருளில் இது நேர்மையாக, மனமுவந்து அளிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதையும் இதை இயன்ற வரை சிறப் பாகச் செய்வதையும் குறிக்கிறது. உற்பத்தியைத் திறமை யாக ஒழுங்கமைப்பதன் மூல மாயும் தனிப்பட்ட வேலையாட் கள் மற்றும் முழு உழைப்புக் கூட்டுகளையும் நன்கு சிந்திக்கப் பட்ட பரிசளிப்பு முறையாலும் சோஷலிசம் உழைப்புக் கட்டுப்பாட்டை நிலை நாட்டுகிறது.
சோவியத்
யூனியனில் நன்றியறிவிப்பு, கெளரவச் சான்றிதழ் வழங்குதல், கெளரவ நூலிலும் கெளரவ அறிக்கைப் பலகையிலும் பெயரைச் சேர்த்தல், குறிப்பிட்ட தொழிலில் சிறந்த தொழிலாளி எனும் பட்டமளித்தல், பண முடிப்பு, வேறு பரிசுகள் அளித்தல் ஆகிய முறைகள் வழக்கத்தில் உள்ளன. மிகச் சிறப்பாக வேலை செய்தவர் களுக்கு சோவியத் யூனியனின் விருதுகளும் பதக்கங்களும் அளிக்கப்படுகின்றன, சோஷலிச உழைப்பு வீரர் எனும் பட்டமளிக்கப்படுகிறது,
லெனினிய மற்றும் அரசுப் பரிசுகள் வழங்கப்படுகின் றன.
உழைப்புக்
கட்டுப்பாடு மீறப்படுவது தண்டிக்கப்படும். தக்க காரணமின்றி வேலைக்கு வராதிருத்தல், தாமதமாக வேலைக்கு வருதல், வேலையிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்ன தாகவே போய்விடுதல், பொருட்கள் மற்றும் உப் கரணங்களுக்கு இழைக்கப்படும் சேதங்கள், மற்ற அத்து மீறல்களுக்காக மூன்று மாதங்கள் வரை குறைவான ஊதி யத்தை உடைய வேலைக்கு மாற்றுதல் அல்லது பதவிக் குறைப்பு ஆகிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பயன் படுத்தப்படலாம். அதிக பட்ச நடவடிக்கையாக வேலை நீக்கம் செய்யப்படலாம்.
நேர்மையான
வேலையாட்களை எல்லா வழிகளிலும் பரி சளித்து ஊக்குவிக்க வேண்டும், சோம்பேறிகளுக்கும் மோசமாக வேலை செய்பவர்களுக்கும் உருப்படியில்லாத வேலை செய்து நன்றாக வாழ இடமளிக்கக் கூடாதென சோவியத் யூனியன் கம்யூனிஸ்டுக் கட்சியின் 2 6 வது காங்கிரசில் கூறப் பட்டது. யாருக்கு நன்றாக வாழ வேண்டுமென்று ஆசை யுள்ளதோ அவர் அதிகமாகவும் சிறப்பாயும் வேலை செய்ய வேண்டும்.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்-
1985”
No comments:
Post a Comment