Monday 27 May 2019

12. உயர் உற்பத்தித் திறனை நோக்கி


-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986

உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதுதான் மிக முக்கிய, அடிப்படைக் கடமையாகும். பொருளாதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதும் இதைப் பொறுத்தது. ஒவ்வொரு அலகு பொருளையும் உற்பத்தி செய்ய எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக உழைப்பும் சாதனங்களும் செலவிடப்படு கின்றனவோ சமுதாயத்திற்கு தன் வளர்ந்து வரும் தேவை களைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு அவ்வளவுக்கவ்வளவு அதிகமாயிருக்கும். இது எல்லோருக்கும் புரியக் கூடியதே, ஆனால் உழைப்பின் உற்பத்தித் திறனை உண்மையில் எப்படி உயர்த்துவது என்பதை நிர்ணயிப்பது பெரிதும் சிக்கலானது.

இந்த விஷயத்திலும் முதலாளித்துவத்தை விட சோஷ லிசம் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. எல்லா வற்றிற்கும் மேலாக இது உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதில் உள்ள வெகுஜன அக்கறையாகும். இது சோஷலிசப் போட்டியிலும் உழைப்பாளிகளின் முன்முயற்சிகளின் வெகுஜன வளர்ச்சியிலும் வெளிப் படுகிறது. உழைப்பாளிகள் தத்தம் வேலையிடங் களில் உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்தும் வழிகளையும், தொழில் நுட்ப முறைகள் மற்றும் உழைப்பு ஒழுங்கமைப்பை மேம்படுத்தும் வழிகளையும் இடையறாது தேடுகின்றனர். கோடானுகோடி மக்களின் இயக்கமாகிய இது சோஷலிச வாழ்க்கை முறையின் சிறப்பு அம்சங் களில் ஒன்றாகியுள்ளது.

உழைப்பாளிகளின் முன்முயற்சியின் அடிப்படையில், இவர்களின் ஞானம், திறமையின் உதவியோடு உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்தும் எல்லா காரணிகளும் தட்டியெழுப்பப்படுகின்றன. பெருவீத தொழிற்துறைக் கான பொருளாயத அடிப்படைக்கு வகை செய்வது, விஞ்ஞான, தொழில்நுட்பச் சாதனைகளை உற்பத்தியில் புகுத்துவது, உழைப்பாளிகளின் கல்வி, கலாசார மட்டத் தையும் விசேஷ தொழில்நுட்ப பயிற்சி மட்டத்தையும் உயர்த்துவது, உழைப்புக் கட்டுப்பாட்டையும் ஒழுங்கமைப் பையும் மேம்படுத்துவது, வேலைத் திறமைகளை மேம் படுத்துவது ஆகியவை சோஷலிச சமுதாயத்தில் உழைப் பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கான முக்கிய நிபந்தனைகளாகும்.

விஞ்ஞான- தொழில்நுட்ப முன்னேற்றம்தான் உற்பத்தி வளர்ச்சியின் தீர்மானகரமான காரணி, பொருளாயத அடிப்படை ஆகும். இயந்திரங்களின் திறன்களை அதிகப் படுத்துவது, இவற்றின் வேலை வேகங்களைக் கூட்டுவது, பெரும் உடலுழைப்பைக் கோரும் சாதாரண இயந்திரங் களிலிருந்து அரைத் தானியங்கி, முழுத் தானியங்கி இயந்திரங்களுக்கு மாறுவது ஆகியவற்றின் மூலம் தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுவது நடைபெறுகிறது. இவ்வாறாக சோஷலிசத்தில் விஞ்ஞான- தொழில்நுட்ப முன்னேற்றத் தின் பொருளாதாரப் பயன் தன்மை பெரும் சமூக பயன்தன்மையோடு நேரடியாகத் தொடர்புடையது.

புது தொழில் நுட்பத்தில் உழைப்பின் தன்மையே மாறு கிறது, இதில் பல்வேறு நடவடிக்கைகளைச் செய்ய உட லுழைப்பு அல்ல மூளையுழைப்பு மேன்மேலும் அதிகமாகத் தேவைப்படுகிறது. இது தவிர, உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதால், வேலை நேரத்தைப் படிப்படி யாகக் குறைக்கவும் இதற்கேற்றபடி ஓய்வு நேரத்தைக் கூட்டவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் விளையாட்டு நேரத்தைக் கூட்டவும் வாய்ப்பு கிட்டுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டால் இந்த உற்பத்தித் திறன் அதிகரிப்பானது, உழைப்பாளியின் சீரிசைவான, பன்முக வளர்ச்சிக்கான கண்டிப்பான நிபந்தனையாகும் என்பது தெளிவாகும்.

உழைப்பாளிகளின் கல்வித் தரம், தேர்ச்சி, கலாசார மட்டம் முதலியவை அதிகரிப்பதானது, உழைப்பின் உற் பத்தித் திறனை உயர்த்த தன் பங்கிற்கு உதவுகிறது. அதுவும் விஞ்ஞான-தொழில்நுட்ப முன்னேற்றச் சூழ்நிலை களில் தொழில்நுட்பத்தின் பால் மட்டுமின்றி இந்த நவீன இயந்திரங்களைத் தோற்றுவிப்பவர்கள், இவற் றைப் பயன்படுத்துபவர்கள் பாலான கோரிக்கைகளும் அதிகரித்து வருவதால் இது முக்கியமாகும். இன்று ஒவ்வொரு உழைப்பாளியும் மேன்மேலும் அதிக அளவு கருவிகளையும் உற்பத்திச் சாதனங்களையும் பயன்படுத்து கிறான். அவன் இவற்றை எவ்வளவு சிறப்பாகப் பயன் படுத்துகிறான் என்பது இறுதியில் இவனுடைய ஞானம், தேர்ச்சி, வேலையின் பாலான ஆக்கபூர்வமான நல்ல அணுகுமுறை ஆகியவற்றைப் பொறுத்தது.

உழைப்பின் உற்பத்தித் திறன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமோ, அவ்வளவுக்கவ்வளவு நாட்டின் பொருளா தாரம் பலமானது, அவ்வளவுக்கவ்வளவு அதன் சமூக உற்பத்திப் பொருள் அதிகமானதாயிருக்கும்.

No comments:

Post a Comment