Friday 31 May 2019

11. சோஷலிச வினியோகக் கோட்பாடு


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

கம்யூனிச வினியோகக் கோட்பாட்டை அமல் நடத்தவும் சமுதாயக் கஜானாவிற்கு மக்களின் தனிப்பட்ட பங்கைப் பொருட்படுத்தாது இல வசமாக அவர்களது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வும் போதுமான அளவிற்கு உற்பத்திச் சக்திகள் இன்னமும் வளர்ச்சியுறவில்லை. தற்போது சோஷலிசத்தில் எந்த அடிப் படையில் பொரு ளா யத நலன்கள் பகிர்ந்தளிக்கப்படு கின்றன?

இந்தப் பிரச்சினையைத் தன்னிச்சையாக நம்மால் தீர்க்க முடிந்திருந்தது என்று வைத்துக் கொள்வோம். உதாரண மாய், எல்லோருக்கும், முதல் வகுப்புள்ள டர்னருக்கும் ஆறாம் வகுப்புள்ள டர்னருக்கும், உயர் கல்வித் தகுதியுள்ள தேர்ச்சி பெற்ற நிபுணனுக்கும் தொழிற்சாலையின் பயிற்சி யாளனுக்கும் ஒரேயளவு ஊதியம் அளிக்கப்படும்.

இத்தகைய வினியோக முறை சமப்படுத்தும் முறை எனப்படும்; இது சோஷலிசத்தைப் பற்றிய குட்டி முத லாளித்து லட்சியமாகும். சமப்படுத்தலின் விளைவுகள் எம் மாதிரியானவையாக இருக்கும் என்று புரிந்து கொள்வது எளிது. தமது திறமையை அதிகரித்துக் கொள்வதிலும் தமது உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதிலும் மக்களுக்கு உள்ள அக்கறை மறைந்து போயிருக்கும், ஏனெனில் எல் லோரும் தான் ஒரே அளவு ஊதியத்தைப் பெறுகின்றனர் அல்லவா? இத்தகைய ஊதியமே அற்பமான தாயிருக்கும், மேன்மேலும் அதிகரிக்காமல் குறையும், ஏனெனில் மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக வேலை செய்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு சமுதாயம் ஏழ்மையான தாயிருக்கும்.

இவ்வாறாக சமப்படுத்தல் சமத்துவத்தை ஏற்படுத்தி யிருக்காது , மாறாகப் பரிதாபகரமான கேலிச் சித்திரத் திற்கு இட்டுச் சென்றிருக்கும்: ஏழைச ளிடம் அவர்கள் அனைவரும் “ 'சமமான வர்கள்' ', ஏனெனில் ஒரு வரும் மற்ற வரைவிட அதிகமாக வைத்திருக்கவில்லை என்ற உணர்வு அதிக மகிழ்ச்சி யைத் தர முடியுமா என்ன?

சோஷலிசத்தில் வினியோகம் என்பது சமுதாயச் செல் வத்தின் இடையறாத வளர்ச்சிக்கு வழிகோலி அதே நேரத்தில் எல்லா உழைப்பாளிகளின் நிரந்தர வாழ்க்கைத் தர உயர்வுக்கு வகை செய்ய வேண்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறமைக்கேற்ப, ஒவ்வொருவருக்கும் அவரவர் உழைப் பிற்கேற்ப எனும் சோஷலிசக் கோட்பாடு அதாவது உழைப் பின் அளவிற்கும் தரத்திற்கும் ஏற்ப ஊதியம் வழங்கும் முறை மேலே கூறிய கோரிக்கைகளுக்கு முற்றிலும் உகந்த தாய் உள்ளது.

யார் வேலை செய்யவில்லையோ அவருக்கு உணவு கிடையாது என்பது இதே கோட்பாட்டின் இன்னொரு (எதிர்மறை) வெளியீடாகும். நிச்சயமாக இது குழந்தைகள், மாணவர் கள், பயனுள்ள, சமுதாயத்திற்கு அவசியமான காரியமாகிய குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள இல்லத்தரசிகள், முதி யோர் மற்றும் நோயாளிகளைப் பற்றி குறிப்பிடவில்லை. இது வேலை செய்ய விருப்பமில்லாதவர்களுக்கு, சோம்பேறித் தனத்திற்கு எதிரானது.

 உழைப்பிற்கேற்ற வினியோகக் கோட்பாடு சுரண்டல் சமுதாயத்தின் மிகப் பெரும் நியாயமின்மைக்கு - இதில் ஆட்சியில் இருந்தவர்கள் உற்பத்தி செய்யப்பட்ட பொரு ளா யதச் செல்வங்களில் பெரும்பான்மையானவற்றை அப் கரிக்கின்றனர்-முடிவு கட்டுகிறது. ஏற்கெனவே கூறப் பட்டபடி, சோஷலிசத் தில் உழைப்பு மட்டுமே வாழ்க்கைச் சாதனங்களுக்கான ஒரே சட்ட ரீதியான மூலாதாரமாக இருக்க வேண்டும்; இது தான் சமுதாயத்தில் மனிதனின் நிலையை நிர்ணயிக்கிறது.

ஆனால் சமுதாய நடைமுறையில் இன்னமும் உழைப்பிற் கேற்ற வினியோகம் என்ற கோட்பாட்டின் மீறல்கள் ஒழிக்கப் படவில்லை. சகலவிதமான சமப்படுத்தல்கள், வேலைக்கு வந்ததற்காக மட்டுமே வேலையின் உண்மைப் பலன்களைப் பார்க்காது-அளிக்கப்படும் தியங்கள், தகுதியற்றப் பரிசு கள், இவை அனைத்தும் உற்பத்திக் குறியீடுகளின் மீதும் மனிதர்களின் மன நிலை மீதும் மோசமான தாக்கத்தை ஏற் படுத்துகின்றன. எனவே தான் வினியோக முறை இடையறாது மேம்படுத்தப்பட்டு வருகிறது, இத்தோடு தொடர்புடைய நடைமுறைப் பிரச்சினைகளின் தீர்வு அரசு உறுப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஸ்தாபனங்களுடைய கண்டிப்பான கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும்.

உழைப்பிற்கேற்ற ஊதியம் எனும் கோட்பாடு, உழைப்பின் பயன்களில் மக்களுக்கு உள்ள பொருளாயத அக்கறை எனும் சோஷலிசத்தின் இன்னொரு பொருளாதாரக் கோட்பாட்டை யும் தொடர்ச்சியாக நிறைவேற்ற உதவுகிறது.

மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சிறப்பாக உழைத்து, எவ் வளவுக்கெவ்வளவு அதிகமாகச் சமுதாயத்திற்குத் தரு கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அதிக ஊதியம் அவனுக்குக் கிடைக்கும். இது தம் மாலியன்ற வரை உழைக்கவும் திற மையை வளர்த்துக் கொள்ளவும் மக்களை ஊக்குவிக்கிறது.

 சோவியத் யூனியனில் உழைப்பின் அளவிற்கும் தரத் திற்கும் ஏற்ற வினியோகக் கோட்பாடு எப்படி நிறைவேற்றப் படுகிறது? சோவியத் நாட்டில் இரு வித ஊதிய முறை கள்-நிரந்தரச் சம்பளம் மற்றும் செய்த வேலைக்குத் தக்க சம்பளம் நிலவுகின்றன. மேலும் சிறந்த உழைப்பிற்கான பல்வேறு பரிசளிக்கும் முறைகள், குறிப்பாக ஆண்டு முடிவில் வேலைக்கான கூடுதல் ஊதியம் (இது பதின் மூன்றாவது மாத ஊதியம் என்று அழைக்கப்படுகிறது) வழக்கத்தில் உள்ளன.

எங்கே உழைப்பு வரையளக்கப்பட்டு ஒவ்வொரு தொழி லாளியின் உழைப்பையும் கணக்கெடுக்க இயலுமோ அங்கே செய்த வேலைக்குத் தக்க சம்பள முறை உள்ளது. நிரந்தரச் சம்பள முறையில், உதாரண மாய் தானியங்கி மயமாக்கப்பட்ட கன்வேயர் உற்பத்தியிலும் மற்ற வகையான நவீன உற்பத்தி ளிலும் தொழிலாளி நடைமுறையில் தான் வேலை செய்த குறிப்பிட்ட நேரத்திற்கான ஊதியத்தைத் தான் பெறுகிறான். தலைமை பீடத்தில் உள்ளவர்கள், பொறியியல் - தொழில் நுட்ப வேலையாட்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் அனை வரும் நிரந்தரச் சம்பள முறையில் தான் உள்ளனர்.

உழைப்பை வரையளவு செய்கையில் நேர வரையளவு என்றும் உற்பத்தி வரை யளவு என்றும் பிரிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது பகுதியை உற்பத்தி செய்யத் தொழிலாளி எவ்வளவு மணி, நிமிடம் அல்லது நொடி செலவழிக்கிறான் என்பதை நிலைநாட்ட நேர வரை யளவு உதவுகிறது. ஒரு வேலை நேரத்தில், ஒரு மணியில், நிமிடத்தில் அல்லது நொடியில் தொழிலாளி எவ்வளவு பொருட்களை, பகுதிகளைச் செய்கிறான் என்பதை நிலை நாட்ட உற்பத்தி வரையளவு உதவுகிறது. எனவே வரை ளவுகள் தொழிலாளிக்கு ஒருவிதக் கட்டளைகளாக விளங்குகின்றன என்றாகிறது.

ஊதியத்தைக் கணக்கிடுவதற்குச் செலவிடப்பட்ட உழைப்பின் அளவை மட்டும் தெரிந்திருந்தால் போதாது. இதன் தரத்தையும் சரியானபடி மதிப்பிடுவது முக்கியம். இதைச் செய்யக் கட்டண விகித முறை உதவுகிறது. இது வேலை யாளின் தேர்ச்சி, திறமை மற்றும் ஞானம், வேலையின் தன்மை, அது எவ்வளவு சிக்கலான து, ஆபத்தான து (உழைப்பின் நிலை மைகள்), அத்துறையின் தேசியப் பொருளாதார முக்கியத் துவம் ஆகியவற்றைப் பொறுத்து தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாகுபாடு செய்கிறது. தேர்ச்சியுள்ள மற்றும் தேர்ச்சியில்லாத உழைப்பிற்கு இடையிலுள்ள வேறுபாடு, கடின உழைப்பிற்கும் எளிய உழைப்பிற்கும் இடையிலுள்ள வித்தி யாசம், நிறைவேற்றப்படும் வேலைகளின் சிக்கல் மற்றும் பொறுப்பு ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஒவ் வொரு தொழிலாளிக்கும் அவனது வேலைக்கும் தேர்ச்சிற்கும் ஏற்ப கட்டண விகித வகுப்பு அளிக்கப்படுகிறது. இவ் வகுப்பு தேர்ச்சிக் கமிஷனால் நிர்ணயிக்கப்பட்டு நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கக் கமிட்டியின் தீர்மானத்தால் அளிக்கப்படுகிறது. தொழிலாளிக்கு அளிக்கப்பட்ட வகுப்பு எவ்வளவுக்கெவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக ஊதியம் கிடைக்கும்.

பல்வேறு வகுப்புக்களுக்கு இடையேயான ஊதிய விகி தத்தைக் கட்டண விகிதப் பட்டியல்கள் நிர்ணயிக்கின்றன. கட்டண விகிதச் சம்பளங்கள் ஒரு மணி அல்லது ஒரு நாளுக்கான தொழிலாளியின் ஊதியத்தை முடிவு செய்கின்றன. தேசியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் ஒரே விதத் தொழில்களுக்கும் பதவிகளுக்கும் ஒரே கட்டண விகி தப் பட்டியல்களும் சம்பளங்களும் உள்ளன.

தேசியப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்குமென உருவாக்கப்பட்ட கட்டண-தேர்ச்சி குறிப்பு நூல்களில் ஒவ் வொரு வேலைத் துறைக்குமான உழைப்பின் விரிவான விளக் கங்கள் தரப்பட்டுள்ளன. எந்த விஞ்ஞான பூர்வ மான தன்மை ளின் அடிப்படையில் கட்டண விகித வகுப்பு நிலை நாட்டப் பட்டதோ அவை இக்குறிப்பு நூல்களில் அடங்கியுள்ளன. இதற்கு ஏற்றபடிதான் செய்த வேலைக்கு ஊதியம் வழங்கப் பட வேண்டும். இக்குறிப்பு நூல்கள் ஒவ்வொரு வகுப்புத் தொழிலா ளிக்கும் எது தெரிந்திருக்க வேண்டும், அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment