-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986
சோஷலிச உற்பத்தியின் முக்கிய அம்சம் இதன் திட் டமிட்ட
வளர்ச்சியாகும். உழைப்பாளிகளின் ஆட்சி நிலை நாட்டப்பட்டு, பொருளாதாரத்தின் எல்லா துறைகளிலும்
உற்பத்திச் சாதனங்களின் மீதான பொதுச் சொத்துடைமை நிலைபெற்ற பின், மக்கள் அனைவரின் நலன்களுக்
காகவும் சமுதாயம் முழுவதன் முற்போக்கான வளர்ச்சிக் காகவும் பொருளாதாரத்தை உணர்வுபூர்வமாக,
விஞ் ஞான ரீதியாக வழிநடத்த அத்தியாவசியமான சூழ்நிலை கள் வரலாற்றிலேயே முதன்முதலாகத்
தோற்றுவிக்கப் படுகின்றன. முதலாளித்துவத்திற்கே உரித்தான போட்டி மற்றும் உற்பத்தி அராஜக
விதிக்குப் பதிலாக திட்டமிட்ட, சீரிசைவான பொருளாதார வளர்ச்சி விதி வருகிறது. திட்டமிடுதல்
என்பது சோஷலிச தேசியப் பொருளாதாரம் இயங்குவதன் முக்கிய அம்சமாகிறது.
அத்தியாவசிய சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திர சாம்
ராஜ்யத்தை நோக்கிய இந்த வரலாற்றுப் பாய்ச்சல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. திட்டமிடுதல்
கோடிக் கணக்கானவர்களின் கூட்டு உழைப்பை ஒழுங்கமைத்து வழிநடத்தவும், சமுதாயம் முழுவதன்
நலன் கருதி விஞ்ஞான, தொழில்நுட்பச் சாதனைகளைப் பயன்படுத்தவும், நாடு தழுவிய ஒரே பொருளாதாரத்தை
விவேகமாக நிர்வகிக்கவும் உதவுகிறது. உணர்வுபூர்வமாகத் தீட்டப் பட்டு, நிறைவேற்றப்படும்
திட்டத்தின் அடிப்படையில் சமுதாயத்தின் நவீன உற்பத்திச் சாதனங்களையும் ஆள் பலத்தையும்
பயன்படுத்தவும், சமுதாயத்தின் உற்பத்தித் தேவைகளையும் தனிப்பட்ட தேவைகளையும் முழுமையாகப்
பூர்த்தி செய்வதற்காகத் தேசியப் பொரு ளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு இடையே அவசி யமான
சீரிசைவைக் கடைப்பிடிக்கவும் தேவையான வாய்ப்பு கிட்டுகிறது. சமூக உற்பத்தியின் பயன்
தன்மையை உயர்த்தவும், சமுதாயம் தழுவிய அளவில் வேலை நேரத்தை அதிகபட்சம் சிக்கனப்படுத்தவும்
உதவக் கூடிய சீரிசைவுகளைப் பொருளாதாரத்தில் நிலை நாட்டவும் திட்டமிடுதல் வழிகோலுகிறது.
தேசியப் பொருளாதார விகிதாச்சாரங்களை மேம் படுத்துவது
சம்பந்தமான முக்கியப் போக்குகள் நாட்டுப் பொருளாதார வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும்
நிர்ணயிக்கப்படுகின்றன. இதில், ஏற்கெனவே அடையப் பட்ட வளர்ச்சி மட்டம் கணக்கில் கொள்ளப்படுகிறது.
சோவியத் நாட்டுப் பொருளாதார வளர்ச்சியின் இன் றைய கட்டத்தில் இவை, மக்களின் வாழ்க்கைத்
தரத் தை உயர்த்துவது சம்பந்தமான பெரும் கடமைகளின் நிறைவேற்றம், சமூக உற்பத்தியின் பயன்தன்மையை
உயர்த்துவதன் முக்கிய நிபந்தனை என்ற வகையில் விஞ்ஞான-தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவது
ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட நீண்ட காலத் திசையமைவைக் கணக்கில் கொண்டு தீட்டப் படுகின்றன.
உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தி வளர்ச்சிக்கும் நுகர்வு சாதனங்களின் உற்பத்தி வளர்ச்சிக்கும்
இடையிலான விகிதம், தொழிற்துறை வளர்ச்சிக்கும் விவசாயத் துறை வளர்ச்சிக்கும் இடையிலான
விகிதம், உற்பத்தியின் எல்லா துறைகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையிலான விகிதம் போன்றவை
உட்பட எல்லா தேசியப் பொருளாதார விகிதாச்சாரங்களும் மேற்கூறிய கடமைகளின் நிறைவேற்றத்தை
நோக்கமாகக் கொண்ட வையாகும்.
சோஷலிச நாடுகளின் அனுபவத்தைப் பயன்படுத்தி சோஷலிசத்
திசையமைவு நாடுகளும் திட்டமிடும் துறை யில் முதலடிகளை எடுத்து வைக்கின்றன. காங்கோ மக்கள்
குடியரசு, மடகாஸ்கர் ஜனநாயகக் குடியரசு, சேய்ஷெல் தீவுகள் ஆகிய நாடுகள் ஐந்தாண்டுத்
திட்டங் களைத் தீட்டியுள்ளன. சோஷலிச எத்தியோப்பியா பத்தாண்டு வளர்ச்சித் திட்டத்தை
நடைமுறைப்படுத்தி வருகிறது.
நாடு தழுவிய ஒரே திட்டத்தின் படியான வளர்ச்சி, சமுதாயத்தின்
வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப பொருளாதாரம் மேம்பாடடைய உதவுகிறது. இத்திட்டம் உற்பத்தியின்
எல்லா துறைகள், வகைகளுக்கு இடை யிலான விகிதங்களையும் தொடர்புகளையும் நிர்ணயிக் கிறது,
நாடு தழுவிய ஒரே சோஷலிசப் பொருளாதாரத் தின் உட்பகுதிகள் என்ற முறையில் இவற்றின் வளர்ச்சிப்
போக்குகளையும் வேகங்களையும் முடிவு செய்கிறது, உற்பத்திச் சக்திகளை ஆங்காங்கே நிறுவுவதைப்
பற்றி தீர்மானிக்கிறது.
திட்டம் என்பது ஒழுங்கமைக்க வல்ல, மாபெரும் சக்தியாகும்.
திட்டவட்டமான மைல் கற்களால் அள விடப்பட்ட திட்டம், சமுதாயம் கடக்க வேண்டிய பாதையைத்
துல்லியமாக வரையறுக்கிறது. இது சமூக பொருளாதார வளர்ச்சியின் திசையமைவையும், குறிப்பிட்ட
கட்டத்திலும் எதிர்காலத்திலும் அடைய வேண் டிய எல்லைகளையும் சுட்டிக் காட்டும் திட்டவட்டமான
செயல்திட்டமாகும்.
No comments:
Post a Comment