Thursday 30 May 2019

1. சோஷலிசத்தின் பொருளாதார அடிப்படை


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

உண்மையான சோஷலிசம் நிலவும் நாடுகளில் உற்பத்திச் சாதனங்கள் சமுதாயத்திற்குச் சொந்தமா யிருக்கின்றன. உற்பத்தி உறவுகளின் தன் மையும் சோஷலிசத்தின் பொருளாதார அமைப்பும் இதனால் தான் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் உற்பத்திச் சாதனங்கள் மறுக்கப்பட்ட வர்க்கங்களோ, தனியுடைமை யாளர் வர்க்கங்களோ கிடையாது. உற்பத்திச் சாதனங் களின் மீதான உடைமையைப் பொறுத்தமட்டில் ஒரு வரும் தனி சலுகை நிலையையோ அல்லது மற்றவரோடு ஒப்பிடு கையில் ஆதாயமற்ற நிலையையோ வகிக்கவில்லை. இதன் பயனுய் உற்பத்திச் சாதனங்களை மூலதன மாயும் உழைப்புச் சக்தியைப் பண்டமாயும் மாற்றும் வாய்ப்பு மறைந்தது. சமூக உடைமை மனிதனை மனிதன் சுரண்டுவதை அகற்றுகிறது.

எங்கே சுரண்டல் இல்லையோ, எங்கே ஒரு சில மக்களால் மற்றவருடைய உழைப்பின் பலன் ளை அபகரிக்க இயலாதோ அங்கே வாழ்க்கைச் சாதனங்களுக்கான ஒரே சட்ட பூர்வ மான மூலா தாரமாகத் தனிப்பட்ட உழைப்பு விளங்குகிறது. சமூக உடைமையானது புல்லுருவித்தனத்திற்கும் சோம் பேறித்தனத்திற்கும் முட்டுக்கட்டையிடுகிறது , எல்லோருக் கும் சமமான உழைக்கும் கடமையை உறுதிப்படுத்துகிறது.

உழைப்பின் பலன்கள் சமுதாயத்தின் பொறுப்பில் வந்து பின் மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படுவதால், உழைப்பிற்கான ஊ தியத்தின் அளவும் முற்றிலுமாக சமூகச் செல்வத்தைப் பொறுத்துள்ள து: சமுதாயம் எவ்வளவுக்கெவ்வளவு செல்வ மானதோ, அவ்வளவுக்கவ்வளவு சிறப்பாக அதன் உறுப் பினர்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் சோஷலிச உற்பத்தியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளனர். பொது வான பொருளாதார அக்கறை மக்களை ஒன்றுபடுத்தி அணி திரட்டுகிறது. சோஷலிசத்தின் உற்பத்தி உறவுகள், சுரண்டலிலிருந்து விடுவிக்கப்பட்ட உழைப்பாளிகளின் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவியின் உறவுகளாகும்.

சோஷலிச தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தனிப் பட்ட நபர்கள் அல்லது குழுக்களின் தொடர்பற்ற, முரண் பாடான நடவடிக்கைகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை, மாறாக உற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரனாகிய சமுதாயம் முழுவதன் ஒரே சித்தத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. சமூக உடைமை உற்பத்தியின் அராஜகத் தன்மையையும் நெருக் கடிகளை யும் வேலையின்மையையும் அகற்றுகிறது, இதன் வளர்ச்சியை உணர்வு பூர்வமாக, செயல் முனைப்போடு திட்ட மிடும் வாய்ப்பை (அவசியத்தை ) ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வ தெனில் உற்பத்தியின் மேல் கண் மூடித்தனமான , தன்னிச்சையான முத லாளித்துவ வளர்ச்சி யின் விதிகள் ஆட்சி செலுத்துவது நின்று விட்டது, சமுதாயத் தால் ஆராயப்பட்டு பயன் படுத்தப்பட்ட சோஷலிசத்தின் பொருளாதார விதிகள் செயல்படத் துவங்கியுள்ளன என் பதைத்தான் சமூக உடைமையின் ஆதிக்கம் குறிக்கிறது.

இவைதான் சமூக உடைமையால் நிர்ணயிக்கப்படும் சோஷலிசத்தினுடைய பொருளாதார அமைப்பின் மிக முக்கிய அம்சங்களாகும்.

உடைமை என்பது பொருளாயத நலன்களின் உற்பத்தி, வினியோகம், நுகர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தக் கூடிய சமுதாய உறவு முறையாகும். அன்றாட வாழ்வில் உடைமை உறவுகள் சட்டத்தால் நிலைப்படுத்தப்பட்ட முறையாக, சொத்துரிமையாகச் செயல் படுகின்றன. இதன்படி தனிப் பட்ட நபர்களோ, மக்கள் குழுக்களோ அல்ல து அரசோ குறிப்பிட்ட ஒரு சொத்தை உடைமையாக வைத்திருக்கின் றன, பயன்படுத்துகின்றன, நிர்வகிக்கின்றன. சொத்துரிமை யின் முக்கிய அறிகுறி சொத்தை உடைமையாகக் கொண் டிருப்பதாகும். சொத்துடைமையாளன் மற்ற நபர்களுக்கோ ஸ்தாபனங்களுக்கோ தனது சொத்தைப் பயன் படுத்தும் உரிமையை, ஓரளவு அதை நிர்வகிக்கும் உரிமையை அளித்து அதே நேரத்தில் சொத்துடைமையாளனாகவும் இருக்கலாம். தன து சொத்துடைமையை மறுப்பதன் மூலமாக மட்டுமே (தனது சொத்தை விற்பதாலோ அல்லது பரிசளிப்பதாலோ) அவன் தனது சகலவித சொத்துரிமையையும் இழக்கிறான்.

சோஷலிச நாடுகளில் உற்பத்திச் சாதனங்கள், மற்ற பொருளாயதச் செல்வங்களில் மிகப் பெரும்பான்மை சோஷ லிச அரசின் உடைமையாக, அதாவது அரசு (பொதுமக்கள்) சொத்தாக இருக்கின்றது. மக்களின் கட்டளைக்கேற்பவும் அவர் கள் சார்பாகவும் அரசு, சொத்துக்களின் உரிமை மாற்றம் (உதாரண மாக, இயந்திரங்கள், மற்ற சில பண்டங்களை வெளிநாட்டு அரசுகளுக்கு விற்பது) உட்பட சொத்துடைமையாளனின் சகல உரிமைகளையும் கொண்டிருக்கிறது,

உழைப்பாளிகள் அனை வரும் அரசுச் சொத்துக்களை நேரடி யாகப் பயன்படுத்துகின்றனர். தொழிலாளர்கள் உழைப்பின் நிகழ்ச்சிப் போக்கில் இயந்திரங்களைப் பயன்படுத்து கின்றனர்; விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் சோதனைக் கூடங்களின் உபகரணங்களைப் பயன் படுத்துகின்ற னர்; மாணவர்களுக்குப் பள்ளிக் கட்டிடங்களும் பட்டறை களில் உள்ள கருவிகளும் சோதனைக் கூடங்களின் உபகரணங் களும் அளிக்கப்படுகின்றன.

அரசுச் சொத்தை எல்லா மக்களும் நிர்வகிப்பதில்லை; அரசு என்ற முழுமையின் பகுதிகளாகிய அரசு அலுவலகங் களும் நிறுவனங்களும் தான் இதை நிர்வகிக்கின்றன.
குறிப்பிட்ட பொருளாயதச் செல்வங்களை நிர்வகிக்கும் அதிகாரங்களை நிறுவனங்கள், அலுவலகங்களின் தலைவர் களுக்கும் தலைவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் உரிமையைக் கூட்டுக்களுக்கும் அரசு அளிக்கின்றது.

சொத்தை நிர்வகிக்கும் அதிகாரங்களை யும் உரிமைகளை யும் அரசு ஏதோ ஒரு தனி நபருக்கு அளிப்பதில்லை, மாறாக இயக்குநருக்கு , மற்ற தலைவர்களுக்கு, கூட்டிற்கு அளிக் கிறது. எனவே கூட்டுதான் தனது நிறுவனத்தின் அல்லது அலு வலகத்தின் எஜமானன் என்று முழு ஆதாரத்தோடு கூறலாம்.

உற்பத்திக் கூட்டு, அதற்கென அளிக்கப்பட்டுள்ள சொத்தை, அரசால் நிலை நாட்டப்பட்டு மொத்தத்தில் சமுதாயம் முழுவதன் நலன்களுக்கும் ஏற்றதாயிருக்கக் கூடிய வரையளவுகளின் வரம்புகளுக்குள் நிர்வகிக்கின்றது . உதாரணமாக, ஒரு நிறுவனம் தேவைக்கதிகமான, பயன்படுத்தப்படாத உற்பத்திச் சாதனங்களைத் தனக்கு ஆதாயத்தோடு விற்கலாம். ஆனால் சமுதாய நலன்களுக்கேற்ப தேவைக்கதிக மானதை மையப்படுத்தப்பட்ட முறையில் மறு பங்கீடு செய்து எந்த நிறுவனங்களுக்கு இது அதிகம் தேவைப்படுகிறதோ அவற்றிற்கு அளிப்பது சிறந்தது. எனவே நிறுவனங்களுக்கு மேலேயுள்ள அரசு உறுப்புக்கள் தேவைக்கதிகமானதை மறு பங்கீடு செய்ய எப்போது மறுக்கின்றனவோ அப்போதுதான் இதை விற்கும் உரிமை நிறுவனங்களுக்கு உண்டு.

சமுதாயம் முழுவதற்கும் சொந்தமான சொத்தை அரசு தன து ஸ்தாபனங்க ளின் மூலமாக மட்டுமின்றி (தொழிற் சாலைகள், ஆராய்ச்சி நிலையங்கள், பள்ளிகள்) நேரடியாகவும் குடிமக்களுக்குப் பயன்படுத்துவதற்காகத் தரலாம். உதாரணமாக, நகரங்களிலும் தொழிலாளர் குடியிருப்புக் களிலும் இருக்கக் கூடிய அரசிற்கு சொந்தமான வீடுகள் சோவியத் மக்களுக்குப் பயன் படுத்துவதற்காகத் தரப்படு கின்றன. ஆனால் எல்லாச் சூழ்நிலைகளிலும் அரசுச் சொத்தின் சொந்தக்காரனாகவும் அதன் உயர்மட்ட நிர்வாகியாகவும் அரசுதான் இருக்கிறது. மக்கள் அனைவரின் நலன்களையும் சித்தத்தையும் பிரதிபலிக்கக் கூடிய இது அரசு ஸ்தாபனங் களின் சொத்து உறவுகளை ஒழுங்குபடுத்துகிறது: சொத்தைப் பயன்படுத்தும் உரிமையை ஒரு சில ஸ்தாபனங்க ளிட் மிருந்து மற்றவற்றிற்கு அளிக்கிறது, புதிய ஸ்தாபனங்களைத் தோற்றுவிக்கிறது அல்லது பழையவற்றை அழிக்கிறது, அவற்றின் தலைவர்களை நியமிக்கிறது அல்லது அகற்றுகிறது. தீய நோக்கோடு அல்லது கவனமின்மையால் சமூக உடை மையை வாரியிறைப்பவர்களைத் தண்டிக்கிறது.

சோவியத் யூனியனின் அரசியல் அமைப்புச் சட்டத்திற் கேற்ப அரசு சோஷலிசச் சொத்துடைமையைப் பாதுகாத்து இதை பெருக்குவதற்குத் தேவையான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கிறது. தனிப்பட்ட ஆதாயக் குறிக்கோளுடனோ அல்லது தன்னல நோக்கங்களுக்கோ இந்தச் சொத்தைப் பயன் படுத்த யாருக்கும் உரிமையில்லை.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”


No comments:

Post a Comment