- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின்,
யூ.கிராஸின், வி.சுகதேயெவ்
சோஷலிசப் பண்ட உற்பத்தியில் பணமும் அதற்குரிய பணிகளை
நிறை வேற்றுகிறது. மற்ற எல்லாப் பண் டங்களின் மதிப்பு பணம் எனும் பண்டத்திற்குச் சமமாக்கப்
படுகிறது. இது அவற்றின் மதிப்பின் அளவுகோலாக இயங்குகிறது. சோஷலிசத்திலும் தங்கம் இத்தகைய
பணம் எனும் பண்ட மாக விளங்குகிறது.
பணம் என்பது வர்த்தகத்திற்கு அவசியமான அம்சம், இது
புழக்கச் சாதனமாக விளங்குகிறது, ஏனெனில் இது இல்லாமல் கொள்வினை கொடுப்பினை இயலாதது.
சோவியத் யூனியனில் பணம் அரசு வங்கியின் மூலம் புழக்கத்திற்கு
வருகிறது. நிறுவனங்கள், அலுவலகங்கள், ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான கணக்கு வழக்கு
கள் ஏட்டுப் பதிவை மாற்றும் முறையின் மூலம் (அதாவது ரொக்கமாகக் கொடுப்பது கிடையாது)
நிறைவேற்றப்படு கின்றன. பணத் தொகை ஒரு நிறுவனம் அல்லது அலுவலகத் தின் கணக்கிலிருந்து
மற்றதன் கணக்கிற்கு வங்கியால் மாற்றப் படுகிறது. அரசு வங்கியால் கொடுக்கப்படும் ரொக்கப்
பணத்தில் பெரும் பகுதி ஊதியம், ஓய்வு ஊதியம், உதவித் தொகை, உதவிப் பணம், விவசாயப் பொருட்களைக்
கொள் முதல் செய்யும் பணம் ஆகியவற்றை வழங்கப் பயன்படுத்தப் படுகிறது. வர்த்தக முறையின்
மூலம் ரொக்கப் பணம் வங்கிக்குத் திரும்பி வருகிறது.
தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களுக்கான ஊதியம் வழங்கும்
போது, சோஷலிச நிறுவனங்கள் வங்கிக் கடன்களைப் பெறும் போது அல்லது திருப்பியளிக்கும்
போது, வரி செலுத் துகையில், இன்ஷூரன்ஸ் தொகைகளைச் செலுத்தும் போது, கூட்டுப்பண்ணை உறுப்பினர்களிடையே
பணம் பகிர்ந்தளிக் கப்படும் போது, அதாவது கொள்வினை கொடுப்பினை இன்றி ஒருவர் கையிலிருந்து
மற்றொருவர் கைக்குப் பணம் மாறும் போது பணம் கொடுக்கும் சாதனமாக விளங்குகிறது.
பணம் சேகரிப்புச் சாதனமாகவும் விளங்குகிறது. தொழிற்
சாலைகள், ஆலைகள், அரசுப் பண்ணைகள், கூட்டுப்பண்ணைகள் ஆகியவை ரொக்க வருமானத்தையும் தற்காலிகமாகப்
பயன் படுத்தப்படாத பணத்தையும் வங்கிகளில் சேமித்து வைக் கின்றன. இந்தச் சேமிப்புக்களும்
சேகரிப்புக்களும் உற்பத் தியை விரிவுபடுத்தவும் சேம கையிருப்புக்களைத் தோற்று விக்கவும்
மற்ற நிறுவனங்கள், ஸ் தாபனங்களுக்குக் கடன் வழங்கவும் அரசால் பயன்படுத்தப்படுகின்றன.
முதலாளித்துவச் சமுதாயத்திலும் சோஷலிசச் சமுதாயத்திலும்
பணத்தின் சமுதாயப் பாத்திரம் முற்றிலும் வெவ்வேறானது. முதலாளித்துவத்தில் பணம் மூலதன
மாக மாறுகிறது, தொழிலாளர்களைச் சுரண்டும் கருவியாக, மற்ற வர் உழைப்பை அபகரிக்கும் சாதனமாக
மாறுகிறது. சோஷ லிசத்தில் பணம் மூலதனமாக மாற முடியாது, இதைக் கொண்டு ஆலை, தொழிற்சாலை,
உழைப்புச் சக்தி, நிலம், மின்சார நிலையம் முதலியவற்றை வாங்க இயலாது. முத லாளித்துவச்
சூழ்நிலைகளில் பணம் தன்னிச்சையான சந்தை விதிகளின் கருவி. சோஷலிச அரசு, பண்டங்களை உற்பத்தி
செய் து வினி யோகிப்பதையும் உழைப்பின் அளவு மற்றும் நுகர்வு அளவையும் சர்வ பொது கணக்கெடுத்து
கண் காணிக்கும் சாதன மாகப் பணத்தை உணர்வு பூர்வமாக பயன்படுத்துகிறது.
சோஷலிசத்தில் பணம் என்பது உழைப்பிற்கு ஏற்ற படி
வினியோகிப்பதற்கான ஒரு அவசியக் கருவி. பணத்தைக் கொண்டு சொந்த உபயோகத்திற்கான பண்டங்களை
வாங் கும் உழைப்பாளிகள், அவர்கள் செலவழித்த உழைப்பின் அளவிற்கும் தரத்திற்கும் ஏற்ற
சமுதாய விளை பொரு ளில் ஒரு பகுதியைப் பெறுகின்றனர்.
பணத்தின் துணை கொண்டு அரசு நிறுவனங்களின் பொருளாதார
நடவடிக்கையை எடை போடும் வாய்ப்பைப் பெறுகின்றது. இந்நிறுவனங்களின் பணச் செலவினங்களில்,
குறிப்பிட்ட ஒரு பண்டத்தை உற்பத்தி செய்வதற்கான உழைப்புச் செலவுகள், மூலப்பொருள், மற்ற
பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றிற்கான செலவுகள், உபகரணத் தேய்மானம், நிர்வாகச் செலவுகள்,
பண்டங்களை எடுத்துச் செல்லவும் உபயோகத்திற்காக இவற்றை வர்த்தக நிலையங் களுக்கு கொண்டு
செல்லவும் ஆகும் செலவுகள் ஆகியவை பிரதிபலிக்கின்றன. சோஷலிச நிறுவனங்களின் மீதான நிதிக்
கண்காணிப்பு பொருளாதாரத்தைப் பயனுள்ள வகையில் நிர்வகிக்கும் முறையாகத் திகழ்கிறது.
சோஷலிச நாடுகள் தங்களுக்கு இடையேயும் முத லா ளித்
துவ நாடுகளுடனும் வர்த்தகம் புரிகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கான
விலை கள் தேசியப் பண அலகில் உள்ளதால் இவற்றின் இடையே அந்நியச் செலவாணி பரிமாற்ற விகிதம்,
அதாவது ஒரு நாட்டின் பண அலகிற்கும் மற்ற நாட்டின் பண அலகிற்கும் இடையேயான விகிதம் பற்றிய
பிரச்சினை கண்டிப்பாகத் தோன்றுகிறது.
சோஷலிச நாடுகளுக்கு இடையேயான கணக்கு வழக்கு க ளில்
கூட்டு சோஷலிச செலவாணி யாகிய மாற்றக் கூடிய ரூபிள் முக்கியப் பங்காற்றுகிறது. இது தான்
செலவாணி முறையின் அடிப்படையாகவும் பர ஸ் பர பொருளாதார உதவிக் கவுன்சில் நாடுகளுக்கு
இடையிலுள்ள நிதி உறவுகளை மேம்படுத்தும் சாதன மா க வும் திகழ்கிறது.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்-
1985”
No comments:
Post a Comment