Friday 18 January 2019

18) நெருக்கடிகளினால் ஏற்படும் தீமை என்ன? – எல்.லியான்டியாவ்


நெருக்கடியின் போது தொழிலாளர் தமது மிக அத்தியாவசியத் தேவைகளைத் திருப்தி செய்ய முடியாது போகிறது, அதே சமயத்தில் முதலாளிகள் உற்பத்தியான பண்டங்களின் பெரும்பகுதியை அழிப்பதன் மூலம், உயர்ந்த விலைகளை நிலைக்கச் செய்ய முற்படு கிறார்கள். பயனுள்ள பண்டங்கள் மக்களின் குறைந்த வாங்கும் சக்தியால் விற்கப்பட முடியாது போகும்போது எரிக்கப்படுகின்றன; கடலில் எறியப்படுகின்றன, பண்டகசாலைகளில் உளுத்துப் போகின்றன அல்லது குப்பையாக மாறுகிறது.

1929-1933ஆம் ஆண்டின் நெருக்கடி கால அமெரிக்காவில் கோதுமையும், சோளமும் நிலக்கரிக்குப் பதிலாக எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன, பல இலட்சம் பன்றிகள் கொல்லப்பட்டன. பருத்தியின் பெரும்பகுதி பொறுக்கப்படாமலே வயலில் விடப் பட்டது. பிரேசில் நாட்டில் பல இலட்சம் சாக்கு காப்பிக்கொட்டை, கடலில் எறியப்பட்டன. டென்மார்க்கில் ஏராளமான மாடுகள் கொல்லப்பட்டன. பிரான்சிலும், இத்தாலியிலும் ஆயிரக்கணக்கான டன் நிறையுள்ள பழங்கள் அழிக்கப்பட்டன. நெருக்கடிகள் பொருளாதாரத்தில் பெரும் நாசத்தை விளைவிக்கின்றன. பல இலட்சம் மக்களின் ஆர்வமிக்க உழைப்பினால் விளைந்தவற்றை ஒன்றுமற்ற தாகச் செய்கிறது.
|சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் நெருக்கடி காலங்களில் அறிவில்லாமல் அழிக்கப்படு கின்றன. இயந்திரங்கள் ஓடாமல் துருப்பிடிக்கின்றன. தொழிற்சாலைக் கட்டிடங்கள் பழுதடைகின்றன. பல இலட்சம் மக்கள் நீண்ட நாட்க ளுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். 1929லிருந்து 1933 வரையிலுள்ள நான்கு நெருக்கடி ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு 1914லிருந்து 1918 வரை நடந்த உலகயுத்த நாசத்துக்கு ஒப்பானதாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஓர் அமெரிக்கப் பத்திரிகை கீழ்க்காணும் கணக்கீட்டை வெளி யிட்டது. "1929-33 ஆண்டின் மோசமான நெருக்கடிக் காலத்திற்குப் பின்புள்ள 1934ஆம் ஆண்டில் மாத்திரம் முதலாளித்துவ நாடுகளில் 2 கோடி 40 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள். அதே ஆண்டில் 10 லட்சம் காரில் ஏற்றிச் செல்லும் பாரம் அளவு தானியமும், 2,67,000 “கார் ப்பார அளவு காப்பியும், 2, 58,000 டன் சர்க்கரையும் 25,000 டன் அரிசியும், 25,000 டன் இறைச்சியும், இன்னும் ஏராளமான அளவில் பல பொருள்களும் அழிக்கப்பட்டன."

பூர்ஷ வாப் பொருளாதார அறிஞர்கள் நெருக்கடிகளின் உண்மை யான தன்மையையும், காரணங்களையும் ஒளித்து வைக்க முயல் கிறார்கள். முதலாளித்து வத்தின் கீழ் நெருக்கடிகள் தவிர்க்க முடியாதவை என்பதை மறைக்கும் முயற்சியில், அவர்கள் இந்த நெருக்கடிகள் ஏதோ ஒரு காரணத்தால் விளைந்தது என்றும் முதலாளித்துவ அமைப்பில் அவை நீக்கப்பட முடியும் என்றும் கூறுகிறார்கள். பொருளாதாரத்தின் பிரிவுகளுக்கிடையே ஏற்படும் விகிதாச்சார மாற்றங்களால் ஏற்படுவதே நெருக்கடி என்றும், "குறை நுகர்ச்சியே" இதன் அடிப்படைக் காரணமென்றும் கூறுகிறார்கள். இவ்வித நெருக்கடிகளுக்கு எதிரான நிவாரணிகளாக யுத்தத்தளவாடப் பெருக்கம், யுத்தம் போன்றவற்றை அவர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் உற்பத்தியின் விகிதாச்சார மாற்றங்களும் “குறை நுகர்ச்சியும் எப்படியோ திடீர் என்று ஏற்படுபவையல்ல. முதலாளித்துவ அமைப்பில் காணப்படும் அடிப்படையான தீமைகளின் விளைவாகத் தவிர்க்க முடியாதபடி நிகழும் நிகழ்ச்சிகளே யாகும்.

நெருக்கடிகளுக்கு இடையேயுள்ள காலத்தில் பூர்ஷ வாக்களின் ஆதரவாளர்கள் மிகவும் பிரச்சார முக்கியம் வாய்ந்த அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். நெருக்கடிக்கு முடிவைக் கண்டுவிட்டதாக அவர்கள் கூறுவது வழக்கம். மேலும் முதலாளித்துவம் நெருக்கடி இல்லாத வளர்ச்சிப் பாதைக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுவதுண்டு. ஆனால் இவ்வாறான அறிக்கைகளை வாழ்க்கை பொய்ப்பித்து விடுகின்றது. முதலாளித்துவத்தின் நெருக்கடிகளை நீக்க சொல்லப் படும் அரை வேக்காட்டு வைத்தியங்களையும் வாழ்க்கை சுக்கலாக்கிப் போடுகிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)



17) மிகை உற்பத்தியின் காரணங்களென்ன? – எல்.லியான்டியாவ்


பிரிட்டனில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையை வருணிக்கும் ஒரு புத்தகத்தில் கீழ் வரும் பேச்சு கொடுக்கப்பட்டுள்ளது.

“கணப்பை ஏன் நீ மூட்டவில்லை ? மிகவும் குளிராயிருக்கிறதே"

"நம்மிடம் நிலக்கரி இல்லையே, அதனால்தான்” என்று தாய் கூறுகிறாள்." "உன் அப்பாவிற்கு வேலை போய்விட்டது. நிலக்கரி வாங்குவதற்கு நம்மிடம் காசு இல்லை”

"அப்பா என் வேலையில் இல்லை?” "ஏனா, மிகவும் அதிகமான அளவு நிலக்கரி இருப்பதால் தான்."

சுரங்கத் தொழிலாளியின் குடும்பம் குளிரில் விறைக்கிறது ஏனெனில் 'நிறைய நிலக்கரி உற்பத்தி ஆகிவிட்டது. நெருக்கடி சமயத்தில் பல இலட்சம் தொழிலாளர்கள், உழவர்கள் பட்டினி டெக்கிறார்கள். ஏனெனில் "அதிக அளவு” தானியம் உற்பத்தியாகி விட்டது. போதுமான அளவிற்கும் மேலாக உற்பத்திச் சாதனங்கள், நுகர்ச்சிப் பண்டங்கள், உழைப்பு ஆகியவை இருந்தும் ஒரு நாட்டில் அதன் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், ரயில் என்ஜின்கள் ஓடாமலும், வயலில் தானியம் மக்கிக் கொண்டும், பண்டக சாலை களில் பொருள்கள் நிரம்பி வழிந்து கொண்டும் இருக்கும்போது தொழிலாளருக்கு வேலையில்லாமலும் அவர்கள் குடும்பங்கள் பட்டினியால் வாடுவதும் நெருக்கடியில் காணப்படும் அம்சங்களாகும், முதலாளித்துவ நெருக்கடியின் வருணனை இது.

முதலாளித்துவத்தின் கீழ் மிகை உற்பத்தி நெருக்கடிகள் தவிர்க்கப்பட முடியாதவையாகும். தங்களது இலாப வேட்டையில் முதலாளிகள் பல்வேறு பண்டங்கள் உற்பத்தி அளவை விரிவுபடுத்து கிறார்கள். ஆனால் வரம்பிலாத உற்பத்தி அளவு விஸ்தரிப்பு, திட்டமில்லாத முறையிலும் அங்காடியின் தேவை அளவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலும் ஏற்பட்ட இவ்விஸ்தரிப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது போகிறது. ஒரு தருணம் கட்டாயம் தோன்றும். அத்தருணத்தில் பண்டங்களை விற்பது சாத்தியமே இல்லாது போகும். ஏனெனில் அவைகளில் மிக அதிகமான அளவு உற்பத்தி ஆகிவிட்டது.

ஆனால் உண்மையிலேயே அதிகமான அளவு நிலக்கரியும், தானியமும், துணிமணியும், உற்பத்தி செய்யப்பட்டு விட்டனவா? உண்மையிலேயே அதிகமான' வீடுகள் கட்டப்பட்டு விட்டனவா? இல்லவே இல்லை. நெருக்கடி சமயத்தில் ரொட்டி, நிலக்கரி, துணிமணிகள் ஆகியவற்றின் தேவை மிக அதிகமாக உள்ளது. ஒரு வேளை நெருக்கடி நிலைமைக்கு முந்திய காலத்தைவிட மிக அதிகமான தேவை உள்ளது. ஆனால் பயனுறுதியான (வாங்கும் சக்தி கொண்ட) தேவை இருப்பதில்லை. மக்களின் வருமானம் குறைந்து விட்டதினால் பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது. அவர்களது பைகளில் பணம் இல்லாத காரணத்தால் உணவைப் புறக்கணிக்க வேண்டி ஏற்படுகிறது, அவர்களுக்கு விறகு வேண்டும். ஆனால் வாங்க முடிவதில்லை. ஏனெனில் அவர்களிடம் பணம் இல்லை. அவர்கள் அணிந்து கொள்வதற்கு ஆடைகள் இல்லை, ஆனால் உடைகள் வாங்கப் பணம் கிடையாது.

அப்படியானால் பெரும்பான்மை மக்களின் தேவையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக அதிகமான அளவு பொருள்கள் உற்பத்தி யாகிவிட்டன என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் வாங்கும் சக்தி யோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகையான உற்பத்தி ஆகிவிட்டது என்றாகிறது. முதலாளித்துவம் மக்களின் தேவைகளைத் திருப்தி செய் வதில் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை முதலாளிகள் வேறொன்றில் அதிக அக்கறை காட்டுகின்றனர். தாங்கள் உற்பத்திக்குச் செய்த செலவைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்று அதிக இலாபம் பெறும் அக்கறையுடையவர்கள் அவர்கள். ஆனால் இது நெருக்கடி சமயத்தில் சாத்தியமற்றதாகப் போகிறது. உற்பத்தியாகி யுள்ள ஏராளமான பொருள்களுக்கும், மக்களின் வாங்கும் சக்தி கொண்ட தேவைக்கும் இடையே ஏற்படும் பிளவுதான் முதலாளித்து வத்தின் பொருளாதார நெருக்கடிகளின் நேரடியான காரணமாகும்.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


16) முதலாளித்துவத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏன் தவிர்க்க முடியாதவை? – எல்.லியான்டியாவ்


முதலாளித்துவம் என்பது திட்டமில்லாத அதனால் அராஜக உற்பத்தி முறையை உடைய ஒரு சமூக அமைப்பாகும். ஒவ்வொரு தொழிலிலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளரை முதலாளித்துவம் வேலைக்கமர்த்துகிறது. ஆனால் தனியார் உடைமை என்னும் தான்தோன்றித் தனமான விதி சமூக உற்பத்தியில் நிலவுகிறது. திட்டமற்ற தன்மையும், குழப்பமும் வளர்ந்து வலிமை பெறுகிறது. எல்லா முதலாளிகளும் பெரிய இலாபமடைவதில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்குள் தீவிரமான போட்டி ஏற்படுகிறது. இவ்விதப் போட்டியில் ஒவ்வொரு வரும் அகப்பட்ட அளவு கைப்படுத்தப் பார்க்கின்றனர். தனது போட்டியாளர்களை நசுக்கிப்பிழிய முடியுமானால் நசுக்கிப் போட அவர் முயலுகிறார். ஓநாய்க் கூட்டத்தில் வலியற்றதை வீழ்த்திப் போகும் வலிமையுள்ள ஓநாய்தான் பிழைத்திருக்க முடியும். இதே போன்று வலிமையற்றவர்களை வீழ்த்தி அதன் மீது தமது ஆதிக்கத்தை சிறுவக்கூடிய வலிமைமிக்கவர்கள்தான் பிழைத்திருக்க முடிகிறது. கடற்பத்தியில் அராஜகம் முதலாளித்துவத்தின் விதியாகும்.

உற்பத்தியின் இரு அடிப்படைக் காரணங்களுக்கு இடையே ஏற்படும் பிளவும் முதலாளித்துவத்தின் ஓர் அம்சமாகும்; சில முதலாளி களின் கைகளில் குவிந்து இருக்கும் உற்பத்திச் சாதனங்களுக்கும், தங்களது உழைப்பு சக்தியைத் தவிர ஏனையவற்றையெல்லாம் பிடுங்கக் கொடுத்து நிற்கும் உழைப்பாளருக்கும் இடையேயுள்ள பிளவுதான் இது. மிகை உற்பத்தி நெருக்கடி சமயத்தில் ஒரு நச்சுச்சுழல் தோன்றும்போது இப்பிளவு மிகவும் துல்லியமாகத் தெரிகிறது. ஒரு புறத்தில் உற்பத்திச் சாதனங்களும், பண்டங்களும் இருக்கின்றன. இன்னொரு புறத்தில் உபரியான உழைப்புச் சக்தியும், பண்டங்களை வாங்கும் சக்தியற்ற ஏராளமான வேலையற்றோரும் இருக்கின்றனர்.

முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகமும், முதலாளிகள் தொழிலாளரைச் சுரண்டுதலும் மிகை உற்பத்தி நெருக்கடியைத் தவிர்க்க முடியாது ஆக்குகிறது. இந்த நெருக்கடிகள் முதலாளித்துவ காடுகளை அடிக்கடி தாக்குகின்றன.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


15) உபரி மதிப்புக் கோட்பாட்டின் முக்கியத்துவம் என்ன? – எல்.லியான்டியாவ்


முதலாளியினால் உழைப்பு சுரண்டப்படுவதின் சாரத்தை மார்க்சியம் வெளிப்படுத்தியது. மார்க்ஸால் ஆக்கப்பட்ட உபரி மதிப்புக் கோட்பாடு முதலாளித்துவ சுரண்டலின் ரகசியத்தை வெளிப் படுத்தியது.

உபரி மதிப்புக் கோட்பாட்டுக் கண்டுபிடிப்பானது தொடர்ச்சி கக் குறைந்து வரும் முக்கியமற்ற சிறுபான்மையினால் மிகப் பெரும்பான்மை மக்கள் சுரண்டப்படுவதற்கு வசதி செய்யும் பெரியதொரு நிறுவனமாக பூர்ஷுவா சமுதாயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. இது முதலாளித்துவத்தின் கீழ் நலன்களின் ஒருமைப் பாடு பற்றிய பசப்பு வார்த்தைகளையும், ஏய்க்கும் உருவெளித் தோற்றங்களையும் அழித்துப் போட்டது - சுரண்டும் வர்க்கங்களின் கைக்கூலிகள் இக்காலத்தில் பரப்பி வருகிற இவற்றிற்கு மரண அடி கொடுத்தது உபரி மதிப்புக் கோட்பாடு. பூர்ஷ்வா அமைப்பு முறை கூலி அடிமை முறை என்று மார்க்ஸ் நிரூபித்துக் காட்டினார். நபர் சார்ந்த முந்தைய அடிமைத் தளைகளுக்குப் பதிலாக, அதாவது அடிமைமுறை நிலப்பிரபுவின் வேலை யாள் ஆகியவற்றிற்குப் பதிலாகப் பொருளாதார அடிமைத்தளையை பூர்ஷ வா முறை ஏற்படுத்துகிறதென்று மார்க்ஸ் நிரூபித்துக் காட்டினார்.

உபரி மதிப்புக் கோட்பாடு முதலாளித்துவ நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கம், இதர உழைக்கும் மக்கள் ஆகியோரைத் தங்களது அடிமைத்தனம், வறுமை, சிரமமான வாழ்க்கை ஆகியவற்றில் ஆழ்த்தியிருக்கும் உண்மையான காரணங்களைக் காணும்படி செய்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் ஏழ்மையும் அடக்குமுறையும் தி டீ ரென்று நேர்ந்தவைகளாக அல்லாமல் அல்லது தனி முதலாளிகளின் எதேச்சதிகாரமான நடவடிக்கைகளால் அல்லாமலும், முதலாளித்துவ அமைப்பினாலும், முதலாளித்து வ உற்பத்தி உறவுகளாலும் ஏற்பட்டவை என்பதைக் காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்திற்கும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும் இடை யி வான வர்க்க விரோதத்தின் ஆழ்ந்த தன்மை யும் சமரசம்) காணமுடியாத நிலையையும் உபரி மதிப்புக் கோட்பாடு வெளிப் படுத்துகிறது. மேலும் இவ்விரோதம் அதிகரிக்கும் தவிர்க்க முடியாத தன்மையையும் நிரூபிக்கிறது. ஏனெனில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் அனைத்தும் இதற்குரிய காரணங்களாகும், இயற்கையின் மீது மனிதனின் ஆதிக்கம் அதிகப்படும் அதே நிலையில் பாட்டாளி மக்களின் இருப்பே பாதுகாப்பற்றதாகவும் மேலும் வறுமையுற்றதாகவும் ஆவது, முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத முரண்பாடாகும். வரலாற்று வளர்ச்சிப் போக்கு முதலாளித்துவத் திற்குப் பதிலாக சோஷலிசத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த முரண்பாட்டைத் தீர்க்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


14) முதலாளித்துவச் சுரண்டல் எவ்வாறு மூடிமறைக்கப்பட்டுள்ளது? – எல்.லியான்டியாவ்


முதலாளித்து வச் சமுதாயத்தில், கூலி பெறும் தொழிலாளர் உண்மையில் கூலி அடிமைகளேயாவர். ரோமாபுரியின் அடிமை அவன் வேலை செய்யவேண்டிய இடத்தில் சங்கிலியால் கட்டப்பட்டி ருந்தான். பட்டினியால் மரணம், வறுமை ஆகிய கயிறுகளால் உற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரரிடம் கட்டுப்பட்டிருக்கிறான், இன்றுள்ள கூலித் தொழிலாளி. மேற்பார்வையாளரின் சவுக்கடிக்குப் பதிலாக இன்று வேலை நீக்கம் எனும் பயமுறுத்தல் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை யின் கொடூரமான விதிகள் தொழிலாளியை முதல் என்னும் ரதத்தின் சக்கரங்களில் இறுக்கமாகப் பிணைத்து இருக்கிறது.

ஆனால் முதலாளித்துவச் சுரண்டல் அதன் அடிப்படை அம்சங்களாலும், அதற்கு முந்தைய சுரண்டல் முறைகளின்றும் உள்ள வேற்றுமைகளாலும் ஏற்பட்டுள்ள ஒரு வெளித் தோற்றத்தால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. பூர்ஷ வாக்கள் இவ்வுருவெளித் தோற்றத்தை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தி அடிமை முறை, நிலப்பிரபுத்துவ முறையின் கீழ் இருந்ததைவிட அதிக ஆர்வத்தோடு, தொழிலாளி தனது உடல், உள்ளம் ஆகிய எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தி உழைக்குமாறு செய்து விடுகிறார்கள். பல தந்திரமான வழிகளையும் முறைகளையும் முதலாளித்துவம் கண்டு பிடித்துள்ளது. "இலாபப் பங்கீடு" "சமூகப் பங்கு போன்ற பல கண்டு பிடிப்புகள் கூலித் தொழிலாளரின் அடிமைத் தனத்தை மூடி மறைக்க உதவுகின்றன. முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள், முதலாளித்துவம் தனது தன்மையை யும், சாரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டதாகக் கூறுகிறார்கள்.

"ஜனநாயகமாக்கப்பட்ட முதல்” ஏற்பட்டு விட்டதாகவும், "பொது நல அரசு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்கள்,

உண்மையில் உழைப்பு முதலினால் சுரண்டப்படுவதில் அடிப்படையான மாற்றம் ஏதும் இல்லாமலே தான் இருக்கிறது. லகத்தில் பல விஷயங்களில் மாறுதல்கள் தோன்று விட்டன. முதலாளித்துவ நாடுகளிலும் கூட இவ்வித மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. எனினும் உழைப்பு சுரண்டப்படுவது அப்படியே தான் இருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் இன்றியமையாத நலன்களுக்காக நடந்த இடையறாத தன்னலமற்ற போராட்டம் வீணாகப் போய் விட வில்லை. இங்கொன்றும் அங் கொன்றுமாக முதலாளிகள் தொழிலாளருக்குச் சலுகைகள் சிலவற்றைக் காட்ட வேண்டி நேரிட்டுள்ளது. மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள முதலாளித்துவ /ATடுகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று வேலை நாள் 12 மணி நேரமாக இராமல், பெரும்பாலானவற்றில் 8 மணி நேரமாக உள்ளது.

பாட்டாளி வர்க்கம் பூர்ஷ வாக்கள் அல்லது பலவந்தமாகப் பெற்ற இச்சலுகைகள் இருந்த போதிலும் முதலாளித்துவ முறையின் சாரம் மாறிவிடவில்லை. உழைப்பை முதல் சுரண்டுவதை அடிப்படை பாகக் கொண்டது இந்த முறை. முதலாளியையும் தொழிலாளியையும் 1 Wரிக்கும் பிளவு மறைவதற்குப் பதிலாக அதிக ஆழமாகவே வளர்ந்திருக்கிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி பூர்ஷ்வாக்கள் W/டங்கிய சிறு தொகுதி செல்வந்தர்கள் ஆவதற்கு வழி வகுத்துள்ளது. அதே சமயத்தில் மக்கள் தொகையின் பெருபான்மையினர் சிரமப்பட்டு தழைக்க வேண்டிய கூலிகளாக்கப்பட்டுள்ளனர். அதாவது தங்களது 11ழைப்புச் சக்தியை விற்றுப் பிழைக்க வேண்டிய உடைமையில்லா மக்களாக்கப்பட்டுள்ளனர்.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


13) உபரி மதிப்பு என்றால் என்ன? – எல்.லியான்டியாவ்

முதலாளித்துவத் தொழில் நிறுவனத்தில் பாட்டாளி ஒருவன் செலவிடும் உழைப்பு இரு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. 12. பிழைக்கும் நாளின் ஒரு பகுதியில் அவனது உழைப்புச் சக்திக்குச் சமமான மதிப்பை உற்பத்தி செய்கிறான். இது சமூக அவசியமான உழைப்பாகும். உழைக்கும் நாளின் மற்றொரு பகுதியில், உபரி மதிப்பைத் தொழிலாளி உண்டு பண்ணுகிறான். முதலாளிகள் இதை இலவசமாக எடுத்துக் கொள்கிறார்கள். இது உபரி உழைப்பாகும்.

உழைப்பாளரின் உபரி உழைப்பால் விளைந்த மதிப்பு உபரி மதிப்பாகும். உழைப்பாளரின் கூலி இல்லாத உழைப்பின் விளைவே உபரி மதிப்பாகும். கூலி பெறாது உண்டாக்கிய உபரி மதிப்பு சமுதாயத்தின் உழைப்பில்லா வருவாய்களுக்கு ஆதாரமாகிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


12) உழைப்புச் சக்தி பண்டமாகும்போது அதன் மதிப்பு என்ன? – எல்.லியான்டியாவ்


முதலாளித்துவத் தொழில் நிறுவனத்தால் ஒரு தொழிலாளி வேலைக்கு அமர்த்தப்படும் பொழுது, தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை எல்லாக் காலங்களுக்கும் விற்று விடாது. குறிப்பிட்ட திட்டமான காலத்தவணையாகிய, ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என்று விற்கிறார். இதற்கு அவர் நாட்கூலியோ, வாரக் கூலியோ, மாதக் கூலியோ பெறுகிறார்.
எல்லாப் பண்டங்களையும் போலவே உழைப்புச் சக்திக்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு பண்டத்தின் மதிப்பு, அதன் உற்பத்திக்கு சமூக அவசியமான உழைப்பின் அளவினால் நிர்ணயிக்கப்படுகிறது என்று நரற்கனவே பார்த்தோம். தொழிலாளர் விற்கும் உழைப்புச் சக்தியின் மதிப்பு என்ன?

மனிதன் உயிரோடிருந்தால்தான் அவனால் உழைக்க முடியும், அவன் உண்டு, உடையுடுத்தி, வீட்டில் தங்கி அதாவது இது போன்ற அவனது அத்தியாவசியத் தேவைகளைத் திருப்தி செய்தால்தான் அவனால் உழைக்க முடியும். உழைப்பாளரின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் அவனது உழைப்புச்சக்தி அளிக்கப்படக் கூடியதாக இருக்கும்.

ஆனால் மனிதத் தேவைகளைத் திருப்தி செய்யும் எல்லாப் பொருள்களும் - ரொட்டி, இறைச்சி, துணிமணிகள், உறைவிடம் முதலியன- முதலாளித்துவத்தில் பண்டங்களாகும். இவைகளின் உற்பத்தியில் திட்டவட்டமான உழைப்புச் செலவிடப்பட்டுள்ளது. இப்பண்டங்களின் மதிப்பில் அது உள்ளடங்கி இருக்கிறது.

எனவே, உழைப்புச் சக்தி என்ற பண்டத்தின் மதிப்பு, உழைப்பாளர்கள் தம் மைக் காப்பாற்றி உயிரோடிருப்பதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பண்டங்களின் மதிப்பிற்குச் சமானமாகும். அதாவது, உழைப்புச் சக்தியின் மதிப்பு, உயிர்வாழ்வுச் சாதனங்களின் மதிப்பாகும். இது அவனது உயிரைக் காப்பாற்ற அவசியமானதாகும்.

முதல் வளர்வதற்குத் தொடர்ச்சியாக உழைப்புச் சக்தி தேவைப்படுகிறது. சிக்கலான எந்திரங்களை இயக்குவதற்கு திறமைமிக்க உழைப்பாளரும், திறன் குறைவான உழைப்பாளர்களும் அதற்குத் தேவைப்படும். அதனால் தான் உழைப்புச் சக்தியின் மதிப்பு, பாட்டாளி வர்க்கத்தின் இளைஞர்களைப் பயிற்றுவிப்பதற்கான செலவீடுகள் சிலவற்றையும் உள்ளடக்கியதாகும்.

முதலாளித்துவம் தராதரமாக, உயர்ந்த உழைப்பின் உற்பத்தித் திறனை உடையதாகும். இந்த மட்டத்தில் தொழிலாளியின் அன்றாட உழைப்பு, அவனது உயிர் வாழ்விற்குத் தேவையான அளவிற்கும் மேலாகவே பண்டங்களை அவ்வுற்பத்தி தருகிறது. அதனால்தான் தொழிலாளியின் உழைப்பு உண்டாக்கிய மதிப்பும், உழைப்புச் சக்தியின் மதிப்பும், இருவேறு அளவுகளில் காணப்படுகின்றன. முதலாவதாகச் சொல்லப்பட்டது இரண்டாவதை விட அதிகமாக இருக்கிறது.

இவ்விரண்டு மதிப்புகளின் வேறுபாடு முதலாளியால் தொழிலாளி சுரண்டப்படுவதற்குரிய அவசியமான நிபந்தனை ஆகும். ஏனெனில், உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் தொழிலாளரின் உழைப்பு உண்டாக்கிய மதிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை முதலாளி முழுவதாகத் தனதாக்கிக் கொள்கிறான்.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


11) உழைப்புச் சக்தி ஏன் ஒரு பண்டமாகிறது? – எல்.லியான்டியாவ்


உழைப்பாளரிடம் இருக்கக் கூடியதும், விற்கக் கூடியதுமாகிய ஒரே பொருள் அவரது உழைப்புச் சக்தியே யாகும் இதைத்தான் முதலாளி தொழிலாளியை வேலைக்கு அமர்த்தும் போது வாங்குகிறார், எனவேதான் அவர் ஒரு திட்டமான பொருளை வாங்குகிறார் என்று சொல்லுகிறோம். இப்பண்டம் உழைப்பாளரின் உழைப்புச் சக்தியாகும்.

எவ்விதச் சமூக அமைப்பிலும் மனிதன் உழைப்புச் சக்தி உடையவனாக இருக்கிறான். ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் மட்டுமே உழைப்புச் சக்தி விற்கப்படும், வாங்கப்படும் ஒரு பண்டமாகிறது, முதலாளித்துவம் என்பது பண்ட உற்பத்தியின் உச்சகட்ட வளர்ச்சி நிலையானதால், உழைப்புச் சக்தியும் ஒரு பண்டமாகிறது.

உழைப்புச் சக்தி பண்டமாவதற்குச் சில நிச்சயமான நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். உற்பத்திச் சாதனங்கள் பிடுங்கப் பெற்ற ஒரு வர்க்கமும், இவற்றை உடைமையாக்கிக் கொண்ட ஒரு வர்க்கமும் இருக்கவேண்டும். முதலாளித்துவப் பிறப்போடு இந்த நிபந்தனை களும் நிறைவேறுகின்றன. அதன் அழிவோடு இந்த நிபந்தனைகளும் அழிக்கப்படுகின்றன.

முதலாளித்துவத்தில் உழைப்பாளரின் ஒரே உடைமை அவர்களது உழைப்புச் சக்தியாகும். ஆனால் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் முதலாளிகள் கைகளில் இருக்குமானால், உழைப்புச் சக்தியை எங்குப் பயன்படுத்துவது? முதலாளிகளுக்குத் தங்கள் உழைப்புச் சக்தியை விற்பது ஒன்றுதான் அவர்களுக்குரிய ஒரே வழியாக இருக்கிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


10) முதல் (capital) என்றால் என்ன? – எல்.லியான்டியாவ்


பூர்ஷுவாப் பொருளாதார அறிஞன் ஒருவன் இக்கேள்விக்குக் கீழ்க்காணும் விடையை அளித்துள்ளான்.

"தான் விரட்டிச் செல்லும் மிருகத்தின் மீது காட்டுமிராண்டி ஒருவன் எறியும் முதல் கல்லிலும், அவன் கைகளால் பறிக்க முடியாத பழத்தை அடைவதற்கு அவன் எடுக்கும் முதல் குச்சியிலும் இன்னொரு பொருளை அடையும் நோக்கத்திற்காக ஒரு பொருளைத் தனதாக்கும் ஒரு நிலையைக் காண்கிறோம். அதுதான் மூலதனம் தோன்றிய விதமாகும்."
முதல் பற்றிய இவ் விளக்கம் முதலாளிகளுக்கு மிக்க நலம் பயப்பதாகும். முதல் எப் பொழுதும் இருந்திருக்கிறது. இனி எப்பொழுதும் இருக்கும் என்று மக்களை நினைக்கச் செய்வதற்காக அது ஏற்பட்டதாகும்.

உண்மையில் ஒவ்வொரு உழைப்பு மூலமும் முதலானால் மக்கள் முதல் இல்லாமல் வாழமுடியாது என்பது தெளிவு. உழைப்புக் கருவிகள் எப்பொழுதும் தேவைப்பட்டிருக்கின்றன. இனியும் தேவைப்படும். இந்த அடிப்படையில் பார்த்தால் தேங்காயைக் கல்லால் பிளக்கும் குரங்குகூட ஒரு முதலாளிதான்.

ஆனால் இந்த விளக்கம் அப்பட்டமான பொய் விளக்கமாகும். கல்லும் குச்சியும் உழைப்பு மூலங்களாகப் பயன்படுகின்றன. ஆனால் அவைகள் மனிதனை மனிதன் சுரண்டுவதற்குரிய சாதனங்களாகத் தாமே பயன்படுவதில்லை .

உண்மையில் முதல் என்பது பொருள் அல்ல. ஆனால் திட்டவட்டமான உற்பத்தியின் சமூக உறவாகும். உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டுள்ள வர்க்கத்திற்கும், இவற்றை இழந்த வர்க்கத்திற்கும் இடையேயுள்ள சமூக உறவுதான் இது. அதனால்தான் சுரண்டுவதற்குப் பயன்படக் காட்டாயப்படுத்தப் படுகிறது. பொருள்களோடு தொடர்புடைய வர்க்கங்களுக்கிடையேயுள்ள உறவே இதுதான். முதலாளி உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் உடைமையாகக் கொள்கிறான். பாட்டாளி வர்க்கத்திடமிருந்து அவைகள் எடுக்கப்பட்டுப் போகின்றன. கட்டடங்கள், இயந்திரங்கள், கச்சாப் பொருள்கள், செய்து முடிக்கப் பட்ட பொருள்கள் ஆகியவை தம்மில் தாமே முதலாவதில்லை. ஆனால் தெளிவானதொரு சமூக அமைப்பு முறையாகும். அம்முறையில் இவையனைத்தும் முதலாளி களின் ஏகபோகத்திற்குட் படுகிறது. அவர்கள் இம்முதலாகிய உற்பத்திச் சாதனங்களை சுரண்டும் சாதனங்களாக உபயோகிக்கிறார்கள்.

முதலாளித்துவ சமுதாயங்களில் பண்டங்கள் உற்பத்தி மூலங்களாகும். பண்டங்களாக இருக்கும் போது அவற்றிற்கு மதிப்பு உண்டு. அவைகள் பணத்திற்குக் கொள்ளவும், கொடுக்கவும் படுகின்றன. எனவே, முதலை மதிப்பு என்று விளக்கலாம். இது உழைப்பாளரின் கூலியைச் சுரண்டுவதன் மூலம் உபரி மதிப்பைப் பெறுகின்றன.

முதலாளித்துவமானது, முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகிய சிலரின் தனியார் உடைமையாக உற்பத்திச் சாதனங்கள் இருப்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். இதற்கு மாறாக பெரும்பான்மை யான மக்கள், தங்களது உற்பத்திச் சாதனங்களை இழந்து இருக்கின்றனர். எனவே, தொழிற்சாலைகள், சுரங்கங்கள், நிலம் ஆகியவற்றின் சொந்தக்காரர்களிடம் தங்களை வேலைக்கமர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

முதலாளித்துவ நாடுகளில் சிறு உடைமையாளர்க ளு ம் இருக்கிறார்கள். உழைப்பின் சிறு உபகரணங்களின் உதவியால் வேலை செய்யும் சிறு விவசாயிகளும் கைத்தொழிலாளரும் ஆவர், ஆனால் இந்தச் சிறு உற்பத்தியாளர்கள் பெரிய உடைமையாளர்களோடு போட்டியிட முடிவதில்லை. கூலி பெறும் உழைப்பாளர்களைப் போலவே இவர்களும் பெரிய முதலாளிகளிடமும், நிலச் சொந்தக் காரரிடமும் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.

முதலாளித்துவ சமுதாயத்தில், மனிதன் தொட்டில் தொடங்கி சுடுகாடு மட்டும் உள்ள அவனது வாழ்க்கை நெடுகிலும் தனியார் சொத்தின் ஆதிக்கத்தை உணர வேண்டி நேரிடுகிறது.

தனியார் உடைமையான ஒரு வீட்டில்தான் அலுவலகப் பணியாளரோ அல்லது தொழிற்சாலைத் தொழிலாளரோ குடியிருக்க வேண்டியிருக்கிறது. அவன் வேலை செய்யும் தொழிற்சாலையோ அல்லது அலுவலகமோ, ஒரு முதலாளியுடையதாகவோ அல்லது முதலாளிகளின் கூட்டு நிறுவனமாகவோ இருக்கிறது. உணவு, உடை, இன்னும் இது போன்ற நுகர்ச்சிப் பண்டங்களை அவன் கடைக்காரர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் வாங்குகிறான். முதலாளித்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான டிராமிலோ, ரெயிலிலோ, பஸ்ஸிலோதான் அவன் பயணம் செய்கிறான்.

சினிமாக் கொட்டகைகள், நாடக சாலைகள், நடன அரங்குகள், விளையாட்டரங்கங்கள் ஆகியவைகள் தனியாரின் உடைமைகள் தான். பெரும்பாலான செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், நூல்கள், அத்தோடு வானொலி, டெலிவிஷன் ஆகியவைகள் அனைத்தும் தனியார் கைகளின் உடைமையாகக் குவிந்திருக்கிறது. ஆஸ்பத்திரி மருந்துகள் போன்றவையும், வைத்தியரின் பணிகளும் தனியார் வியாபாரப் பொருள்களாக இருக்கின்றன.

அலுவலகப் பணியாளர் அல்லது தொழிற்சாலைத் தொழிலாளர் ஒருவர் சிறு சேமிப்புகள் வைத்திருந்தால், அதை முதலாளிகள் அல்லது அவர்கள் ஏஜண்டுகள் மேற்பார்க்கும் இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும், சேமிப்பு வங்கிகளிலும் தான் போட வேண்டி யிருக்கிறது. முடிவாக, அவனது சாவு நேரும் போது அவனைப் புதைப்பதும் தனியார் கல்லறைப் பெட்டி முதலியன செய்வோர் ஆகும்.

முதலாளிகளுக்குக் காற்றைத் தங்களது சொத்தாக மாற்றிக் கொள்ள முடிந்து, அதை விற்கவும், வாங்கவும் முடியுமானால், அதை வெகு காலத்துக்கு முன்பே செய்திருப்பார்கள். மனிதனுக்குக் காற்று தேவைப்படுவது போலவே நிலமும் தேவைப்படுகிறது. வீடுகள், தொழிற்சாலைகள், ரெயில்வேக்கள் முதலியன நிலத்தின்மீது தான் கட்டப் பெற்றுள்ளன. நிலத்தை உழுது பயிரிடுவதன் மூலம் உணவுப் பொருள்களும், வாழ்க்கைக்கு இன்றியமையாத இதர பொருட்களும், கிடைக்கின்றன. ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் நிலம் தனியார் உடைமையாக இருக்கிறது. பெரும்பகுதி நிலம் சிறு எண்ணிக்கை யுள்ள முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் கைகளில் உள்ளது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


9) கூலி பெறும் உழைப்பாளர் வர்க்கம் எவ்வாறு தோன்றியது? – எல்.லியான்டியாவ்


முதலாளித்துவம் வளர்ச்சியடைவதற்கு முந்திய நிலப்பிரபுத்துவ சப்தத்தில் உழவர்களும், கைத்தொழில் புரிபவர்களும் உற்பத்தியைக் தானித்துக்கொண்டார்கள். விவசாயம்தான் பிரதான தொழிலாக பிருந்தது. நிலமே பிரதான உற்பத்திச்சாதனமாக இருந்தது. உழவர்கள் தியமத்தை ஒட்டி வாழ்ந்தார்கள். அவர்கள் நிலச் சொந்தக்காரர்களால் சுரண்டப்பட்டனர், கலப்பை , அரிவாள், சில கால்நடைகள்- இவை களே உழவர்களின் சொத்தாக இருந்தது. சிறு உற்பத்தியாளர்களைச் சுரண்டுவதாகக் கொண்டதே நிலப்பிரபுத்துவமாகும். இவர்கள் சார்புடையவர்கள் எனினும் இவர்களுக்கு உற்பத்திச்சாதனங்கள் பெருந்தன. நிலத்தின் மீது பரம்பரை வாரிசாக உழவர்களுக்கு ரிமையிருந்தது. கூலிபெறும் உழைப்பாளராக இந்த உற்பத்தியாளர் மாறுவதற்கு முதலில் அவரது நேரடியான நபர்ச் சார்பிலிருந்து விடுவிக்கப் பெறவேண்டும். முதலாளித்துவத் தளையில் சிக்குவதற்கு அவர்கள் முதலில் நிலப்பிரபுத்துவத் தளையிலிருந்து விடுதலை பெற்றாக வேண்டும்.

சில பொருளாதார அறிஞர்கள் பொதுவாக இந்த ஒரு அம்சத்தைப் பற்றி மாத்திரம் குறிப்பிடுகிறார்கள். நிலப்பிரபுத்துவ அடிமைத் 45 4னத்தை முதலாளித்து வம் அழித்து விட்டதால் அதை அவர்கள் புகழ்கிறார்கள். மேலும் பூர்ஷுவா அமைப்பை விடுதலையின் பாஜ்ஜியமென்றும், நீதியின் ராஜ்ஜியமென்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே இன்னொரு அம்சத்தைப் பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறார்கள், உற்பத்தியாளர் ஒருவர் உற்பத்திக்கு வேண்டிய எல்லா தேவைகளிலிருந்தும் விடுதலை பெறும் போதுதான் கூலிபெறும் உழைப்பாளராகிறார். சுதந்திரமாக உழைப்பதற்குரிய வாய்ப்பு ஏதும் நிராகரிக்கப்படும்போது அவர் கூலி பெறும் உழைப்பாளராகிறார். நிலப்பிரபுத்துவத்தின் கீழ் உற்பத்தியாளருக்கிருந்த உற்பத்திச் சாதனங்களை அகற்றிப்போடுவதை அடிப்படையாகக் கொண்டது முதலாளித்துவம்.

உற்பத்திச் சாதனங்களை நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து அகற்றிப் போடுவதும், உழவர்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளுவதும் புராதனச் சேர்க்கைக்கு அடிப்படையாக இருந்தன, நிலப்பிரபுத்துவம் சீர்குலைவுற்றபோது, நில அடிமைமுறை நாடு நாடாக நீக்கப்பட்டு வந்தது. நிலப்பிரபுத்துவ சார்பிலிருந்து மாத்திரம் அவர்கள் விடுதலையடையவில்லை. அதைவிட முக்கியத்துவம் குன்றாத வேறொரு விடுதலையும் கிடைத்தது. அவர்கள் வாழ்ந்து, உழுது பயிரிட்டு வந்த நிலத்திலிருந்து "விடுதலை" பெற்றனர். அவர்கள் உயிர்வாழ்வதற்கு வேண்டிய நிலத்தை மாத்திரம் அவர்கள் பெற்ற மீட்சிக்கு ஈடாக விட்டு வைத்தார்கள், "உபரியாகப் போன உழவர்கள் கிராமப் புறங்களை விட்டு வெளியேறினார்கள். இவர்கள் தான் முதலாளிகளுக்கு வேண்டிய கூலிபெறும் உழைப்பாளர்களாக ஏராளமாகக் கிடைத்தனர்.

இந்த விதமான பொதுவானதொரு வளர்ச்சி முறை தான் ஆரம்ப நிலையில் இருந்த முதலாளித்துவத்திற்கு, இலவசமான உழைப்பாளர் களைத் தந்தது, பல்வேறு நாடுகளில் இது வெவ்வேறு வழிகளில் நடைபெற்றது. ஆனால் அதன் போக்கும் தன்மையும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. - பலவந்தமாகப் பிடுங்குவது, கொள்ளையடிப்பது ஆகிய முறைகள் தான் உழவர்களை நிலம் இழந்தவர்களாகவும், வீடிழந்தவர்களாகவும் ஆக்கி, கூலிக்காரர்களாக ஆக்கியது மட்டுமல்லாமல் ஒரு சிறு மக்கள் கூட்டத்திடம் ஏராளமான  நிலங்களைக் குவியச் செய்தது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


8) முதலாளித்துவம் எவ்வாறு தோன்றியது? – எல்.லியான்டியாவ்


இக்கேள்விக்கு விடையாகப் பின்வரும் கட்டுக்கதையைச் சில பொருளாதார அறிஞர்கள் பரப்பி வருகின்றனர். வெகுகாலத்திற்கு முன்பு பல்வேறு தன்மைகளையுடைய மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்தார்களாம். அவர்களில் சிலர் முயற்சியும் சிக்கனமும் 483டயவர்கள். வேறு சிலர் சோம்பேறித்தனமும், விரையமாக்கும் தன்மையும் உடையவர்கள். முதலில் சொல்லப்பட்டவர்கள் படிப்படி (Tக செல்வத்தைத் திரட்டினார்கள். இரண்டாவதாகச் சொல்லப் பட்டவர்கள் சொத்து ஏதுமின்றி இருந்தார்கள். இவ்வாறுதான் சமுதாய மானது பணக்காரர் ஏழை என்றும் முதலாளிகள், தொழிலாளிகள் என்று தோன்றியதாக அவர்கள் சொல்லுகிறார்கள்.

இவ்வித கட்டுக்கதைக ளுக் கும், உண்மை வரலாற்றுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. உண்மையில் பார்க்கப் போனால் முதலாளித்துவம் அதற்கு முன்னர் இருந்த சுரண்டல் அமைப்பாகிய சிலப்பிரபுத்துவத்தை நீக்கிவிட்டு வந்ததாகும். சிறு பொருள் உற்பத்தி அதனுள் காணப்படும் போட்டி யின் விளைவாகச் சிலரை ப புடிகளாக்குவதும், சிலரைச் செல்வம் படைத்தவர்களாக்குவதும், முதலாளித்துவ வளர்ச்சியின் துவக்க நிலையாகும்.

தங்களது உழைப்பின் பொருள்களை மாற்றுச் செய்யும் சிறு உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் எளிமையான பண்ட உற்பத்தி 7ன்றழைக்கப்படு கிறது, முதலாளித்து வத்தோடு இதற்கு ஒரு முக்கியமான பொதுப் பண்பு உண்டு. அதாவது முதலாளித்துவத்தில் உள்ளது போல உற்பத்திச் சாதனங்கள் தனியார் உடைமை என்னும் பகடிப்படையைச் சேர்ந்தது. அதனால்தான் அது தவிர்க்க முடியாத படி முதலாளித்துவத்தைத் தோற்றுவிக்கிறது.

அதே சமயத்தில் எளிமையான பண்ட உற்பத்தி முதலாளித்துவ உற்பத்தியினின்று முக்கியமானதொரு விஷயத்தில் வேறுபடுகின்றது. எளிமையான பண்ட உற்பத்தியானது எளிய உற்பத்தி மூலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள சிறு பண்ட உற்பத்தியாளர்களின் சொந்த உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் முதலாளித்துவம் கூலி பெறும் தொழிலாளர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தொழிலாளர்களுக்கு உற்பத்திச் சாதனங்கள் ஏதுமிருப்பதில்லை, இவ்வுற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரர் களான முதலாளிகளால் சுரண்டவும் படுகிறார்கள். முதலாளித்துவம் வளர வளர எளிமையான பண்ட உற்பத்தியாளர்கள் நீக்கப்பட்டு அவர்கள் கூலிபெறும் தொழிலாளர்களாக ஆக்கப்படுகிறார்கள். முதலாளித்து வத்தின் வரலாற்றில் சுரண்டுபவர்களின் அரசாங்கம், அதாவது சுரண்டப்படும் மக்கள் மீது ஆளும் வர்க்கம் செலுத்தும் ஆதிக்கத்தின் உறுப்பு முக்கியமானதொரு பங்கை வகிக்கிறது, பகிரங்கமான கொள்ளைகள், ஆக்கிரமிப்பு, அடிமைப்படுத்தல், ஏமாற்று, மோசடி ஆகியவைகளின் சாத்தியமான ஒவ்வொருமுறை, போன்ற வழிகளில்தான் நிலப்பிரபுத்துவமுறை சீரழிந்த காலத்தில் முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவைகளுக்கான நிலைமை ஏற்படுத்தப்பட்டது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


7) பொருளாதார விதிகளின் தன்மை என்ன? – எல்.லியான்டியாவ்


பொருளாதாரவிதிகள் புற நிலையான தன்மை பெற்றவையாகும். அதாவது மக்களின் சித்தம் உணர்வு ஆகிய வற்றினின்றும் சுயேச்சையாக அவை இருக்கின்றன என்பது இதன் பொருளாகும். மேலும் மக்களின் சித்தம், உணர்வு, நோக்கம், ஆகியவற்றின் மீது சார்ந்து இராதிருப்பதோடல்லாமல் அவர்களது சித்தம், உணர்வு, நோக்கம் ஆகியவற்றையே நிர்ணயிக்கவும் செய்கின்றன.

பொருளாதார விதிகள் வரலாற்றுப் பண்புடையவையாகும். அதாவது என்றைக்கும் மாறிக் கொண்டே இருக்கும் பொருள் பற்றி ஆராய்வதே பொருளாதாரம் ஆகும். சாராம்சத்தில் அது ஒரு வரலாற்று இயல் ஆகையால் உற்பத்தி முறை ஒவ்வொன்றின் குறிப்பிட்ட விதிகளை அது முதலில் ஆராய்கிறது. அதே சமயத்தில் உற்பத்தி முறைகள் எல்லாவற்றிலும் செயல்படுகிற பொதுவான விதிகளையும் இது ஆராய்கிறது. இதன் விளைவாக, சமுதாய வளர்ச்சியை ஆளும் திட்டவட்டமான பொதுப் பொருளாதார விதிகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்வதற்கும், எந்த ஒரு சமுதாயத்தின் முதலாளித்துவ விதிகளும் அழியாதவை, மாறாதவை என்று கூறும் விஞ்ஞானத்திற்கு விரோதமான வியாக்கியானத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.

திட்டவட்டமான சமூக பொருளாதார அமைப்புகளைச் சேர்ந்த பொருளாதார விதிகள் வரலாற்று தற்காலிக இயல்புடையவை. குப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் அவை இயங்குகின்றன. அதன் பிறகு அவை வேறு விதிகளால் மாற்றப் பெறுகின்றன. வளர்ச்சியின் புறநிலையான இயக்கப் போக்கின் விளைவாக ஒரு வகை விதிகள் மாறி வேறு விதிகள் அவற்றைத்  தொடருகின்றன. பொருளாதார நிலைமை மாறும் போது பழைய விதிகள் பின்னுக்குப் போய் விடுகின்றன. புதிய பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார விதிகள் எழுகின்றன.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


6) பொருளாதார விதி என்றால் என்ன? – எல்.லியான்டியாவ்


சமுதாய வளர்ச்சியை ஆட்சி செய்யும் பொருளாதார விதிகளை வெளியிடுவது பொருளாதார இயலின் பிரதான பணியாகும்.

விஞ்ஞானங்களின் துணைகொண்டு மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அறிந்து கொள்கிறார்கள். சமூக வாழ்க்கை, இயற்கை ஆகிய இரண்டையும் ஒன்றாக வுடையதே இவ் வுலகமாகும். இவை இரண்டில் ஏதாவது ஒரு துறையைப் பற்றி ஓர் இயல் அறிந்துகொள்ள முற்படுமாயின் அது அத்துறையில் இயங்கி வரும் விதிகளை அறிந்து கொள்ள முற்படுகிறது என்று பொருளாகும். விஞ்ஞானத்திற்கு விதி என்பது தோற்றங்களின் உள் தொடர்புகள், அதாவது அவைகளின் சாரம், ஆகும். புற உலகத்தைப் பற்றிய மனிதனின் அறிவு இவ்வுலகம் முழுவதையும், அதன் பாகங்களையும் ஆண்டு வரும் விதிகளை மென்மேலும் பூரணமாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்துகிறது. இயற்கையின் விதிகளைப் பற்றிய அறிவு மனிதனுக்கு இயற்கையின் குருட்டுப் போக்கான சக்திகளை அடக்கவும், அவற்றைத் தன் நலனுக்காகப் பயன்படுத்தவும் ஒரு பலமான கருவியைத் தருகின்றது. சமூக வாழ்க்கையை இயக்கும் விதிகளைப் பற்றிய அறிவு மக்களின் நடைமுறை நடவடிக்கைகளுக்குரிய அடிப்படையைத் தருகிறது, அவை இவ்விதிகளைப் பற்றிய அறிவை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

பொருளாதார இயக்கப் போக்குகள் தோற்றங்கள் ஆகியவற்றின் சாராம்சமான உள்தொடர்பே பொருளாதார விதியாகும். பொருளாதா இய லால் நிரு வப்படும் விதிகள் பொருளாதார வாழ்க்கைத் தோற்றங்களின் உள்தொடர்பையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் காணப்படும் பரஸ்பரத் தொடர்பையும் பிரதிபலிக்கின்றன.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


5) நமது சகாப்தத்திற்குப் பொருளாதாரம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
********
நமது சகாப்தத்திற்குப் பொருளாதாரம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது?

முதலாளித்துவத்தின் பொருளாதார விதிகளை வெளியிட்டு, பொருளாதாரம் அதன் சமுதாய நிலைமையை ஆராய்வதோடல்லாமல் அதன் வளர்ச்சியையும் ஆராய்கிறது. அதன் மூலமாக பூர்ஷுவா சமுதாயத்திலுள்ள வர்க்கப் போராட்டத்தின் உண்மையான அடிப்படைகளை அரசியல் பொருளாதாரம் வெளிப்படுத்துகிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு சோஷலிசப் பாதையையும் அது சுட்டிக் காட்டுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிற விதிகளைக் கண்டு பிடித்ததினால் அது விஞ்ஞான ரீதியாகவும் மிக ஆழ்ந்த ஞானத்தோடும் முதலாளித்துவம் வீழ்ச்சியுறுவது வரலாற்றில் தவிர்க்க முடியாது என்பதையும் சோஷலிசம் வெற்றியடையும் என்பதையும் அது காட்டுகிறது.

சமுதாயம் மேலும் வளர்ச்சியடைவதற்கு முதலாளித்துவம் தடையாக இருக்கிறது என்பதை அரசியல் பொருளாதாரம் காட்டுகிறது. இன்றைக்குக் காணப்படும் ஏகபோக முதலாளித்துவம் பூர்ஷுவா முறையின் முரண்பாடுகளை அதன் உச்ச அளவிற்குத் தீவிரப்படுத்துகிறது.

அதே சமயத்தில் முதலாளித்துவத்தை விட உயர்ந்த அமைப்பாகிய சோஷலிசம் பயனற்ற முதலாளித்துவத்தின் இடத்தை எடுத்துக் கொண்டு வருகிறது என்பதை அரசியல் பொருளாதாரம் காட்டுகிறது. சமுக வளர்ச்சியின் புறநிலையான பொருளாதார விதிகள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் சோஷலிசத்தின் வெற்றியையும் நிர்ணயிக்கின்றன.

சோஷலிசம் முதலாளித்துவத்தைவிட நிர்ணயமாக உயர்வானது என்பது பொருளாதார விதிகளால் முன் முடிவு செய்யப்பட்டவை என்று அரசியல் பொருளாதாரம் காட்டுகின்றது. முதலாளித்துவப் பொருளாதார விதிகளின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் பொருளாதாரம் ஆராய்ந்து பூர்ஷவா முறையின் வீழ்ச்சியையும் சோஷலிச முறை தவிர்க்க முடியாதபடி அவ்விடத்தை பெறும் என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. சோஷலிசப் பொருளாதார விதிகளின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் நிலை நாட்டுவதன் மூலம் அரசியல் பொருளாதாரம் வரலாற்று விதியால் ஆளப்படும் இயக்கப் போக்கையும் முதலாளித்துவத்தோடு உள்ள பொருளாதாரப் போட்டியில் சோஷலிசம் வெற்றியடைவது தவிர்க்க முடியாதது என்பதையும் நிரூபணம் செய்கிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


4) அரசியல் பொருளாதாரத்தின் பொருளடக்கம் என்ன? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
****
அரசியல் பொருளாதாரத்தின் பொருளடக்கம் என்ன?

ஏற்கனவே குறிப்பிட்டபடி, பொருளாதாரம் உற்பத்தியின் சமுக அமைப்பைப் பயில்கிறது. இப்பொழுது இவ்வியலின் பொருளடக்கத்தைத் திட்டமாகக் கூற முடியும். அதாவது, சமுதாய வளச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கிடையே தோன்றுகின்ற உற்பத்தி உறவுகளின் ஒட்டு மொத்தமே சமூக உற்பத்தி முறையாகும்.

பொருளாதாரம் மக்களின் உற்பத்தி உறவுகளைப் பற்றியது என்று கூறினால் உற்பத்திச் சக்திகளைப் பற்றி அதற்கு அக்கரை இல்லை என்று பொருளல்ல. இவை உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியிலும் மாற்றத்திலும் மகத்தான பங்கு வகிக்கின்றன. ஒன்றை மாற்றி ஒன்று வரும் உற்பத்தி உறவுகளில் இவை பங்கு வகிக்கின்றன. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு உற்பத்தி உறவுகளின் முறையும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் மகத்தான செல்வாக்கு செலுத்துகின்றன.

உற்பத்தி உறவுகளைத் தோற்றுவித்து அவைகளது எல்லைக்குள் வளர்சியடைந்த உற்பத்திச் சக்திகளின் தன்மையிலிருந்து நம்மைப் பிரித்துக்கொண்டால் உற்பத்தி உறவுகளின் சாரத்தை, திருப்திகரமாகப் புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக முதலாளித்துவத்தில் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை நாம் கவனியாது விட்டு விட்டால் முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் பற்றி நாம் உண்மையிலே புரிந்து கொள்ள முடியாது. அதே போன்று சோஷலிச் சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியுறும் இயக்கப் போக்கில் அதன் உற்பத்தி உறவுகள் வகிக்கும் பாத்திரத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டாள் சோஷலிசத்தின் உற்பத்தி உறவுகள் பற்றிய தெளிவான கருத்து நமக்குக் கிடைக்காது. எனவே பொருளாதாரமானது உற்பத்தி உறவுகளைப் பற்றியும் அவற்றோடு பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கும் உற்பத்திச் சக்திகளைப் பற்றியும் ஆராய்கிறது.

பொருளாதாரம் சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களின் பெளதீகச் செல்வத்தின் உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் விதிகளை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் மனித சமுதாய வரலாற்றின் பன்முனை இயக்கப் போக்கு முழுவதையும் அறிந்து கொள்ளத் துணைபுரிகிறது.

முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தின் மிகச் சூடான பிரச்சினைகளை பொருளாதாரம் எடுத்துப்பேசுகிறது. பல்வேறு வர்க்கங்களின் பெளதீக நிலைமைகளோடு நேரடியான தொடர்புடைய விவகாரங்களை அது ஆராய்கிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் அடிப்படை வர்க்கங்களின் ஜீவாதார நலன்களை அது பாதிக்கிறது. மேலும் இச்சமுதாயம் இருப்பதா? வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பி அதற்குத் தீர்வு காண்கிறது.

எனவேதான் பொருளாதாரம் ஒரு வர்க்கச் சார்புடைய இயலாகும். உழைக்கும் வர்க்கத்தின் நிலையிலிருந்து பொருளாதார வாழ்க்கையின் நியதிகளை அதன் சிக்கலான தன்மை பல்வேறு முறையமைப்பு ஆகியவை உட்பட அனைத்திற்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் தருகிறது மார்க்சியப் பொருளாதாரம், சமுதாயத்தின் முற்போக்கான வளர்ச்சி நலன்களோடு பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் இணைந்திருக்கின்றன. அதனால்தான் சமூக வளர்ச்சி பற்றிய விதிகளைத் துல்லியமாகவும் முழுவதாகவும் பெற்றுக் கொள்வதில் அச்சம் ஏதுமின்றி அதற்கு மாறாகப் பாட்டாளி வர்க்கம் அப்படிப்பட்ட அறிவில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது.

மார்க்சீயம் பொருளாதாரத்தில் அடிப்படையானதொரு புரட்சியை உண்டாக்கியது. இவ்வியலை அதன் அடிப்படைகளிலேயே மாற்றிப் போட்டது. அதாவது அதன் பொருளடக்கத்தைப் புரிந்து கொள்ளும் நிலையிலேயே இம்மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதாரத்தில் மார்க்சீயத்திற்கு முன்பிருந்தவர்கள் பண்டம், பணம், முதல், இலாபம் போன்ற பொருளாதார நியதிகளைப் பொருள்களின் உறவுகள் என்றும், பொருள்களின் பண்புகள் என்றும் கருதினார்கள். இந்த நோக்கத்தின் தவற்றை மார்க்சியம் நிரூபித்தது. பாரு (குக்கிடையேயுள்ள உறவுகளை பூர்ஷ்வா பொருளாதாரதிகள் கண்டனர். ஆனால் மார்க்ஸ் மக்களுக்கிடையேயுள்ள உறவுகளைக் காட்டினார். பொருளாதாரத்தால் ஆராயப் பெறும் பொருளாதார நியதிகளின் தன்மை மக்களுக்கிடையேயுள்ள உற்பத்தி உறவுகளில் அடங்கியுள்ளது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


3) சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
******
சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளின் அடிப்படையின் மீது திட்டவட்டமான உற்பத்தி உறவுகள் தோன்றி வளருகின்றன. எந்த வகைப்பட்ட ஒரு மக்களின் உற்பத்தி உறவுகளும் வெற்றிடத்தில் தோன்றி வளராமல் சமுதாய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக் கட்டம் ஒன்றில் தோன்றி வளர்கின்றன.

இவ்வாறு உற்பத்தி உறவுகள் தோன்றி வளர்ந்த பிறகு, அவை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளில் பெரும் செல்வாக்குடையனவாக இருக்கின்றன.

மனித வரலாற்றில் சமுதாய உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடையும் ஒரு கட்டத்தில் தோன்றும் திட்டமான உற்பத்தி உறவுகள், சில காலத்திற்கு இவ்வுற்பத்தி சக்திகளை மேலும் முன்னேற்றும் திறன் பெற்றுள்ளன. ஆனால் உற்பத்தி சக்திகள் அவ்வுற்பத்தி உறவுகளின் எல்லையை மீறி வளர்ச்சி எய்துகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பழைய உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகளின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் புதிய உற்பத்தி உறவுகளுக்கு இடம் கொடுத்தாக வேண்டும். ஒருவகை உற்பத்தி உறவுகளிலிருந்து இன்னொரு வகைக்கு ஏற்படும் மாற்றம் சமூகப்புரட்சி ஒன்றால் விளைகிறது. சமூகப் புரட்சி பழைய உற்பத்தி உறவுகளை அகற்றி, உற்பத்தி சக்திகளின் அதிகரித்த வளர்ச்சி அளவிற்கு உகந்த சிறந்த உற்பத்தி உறவுகளைப் புதிதாகக் கொண்டுவர வழி வகுக்கிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


2) உழைப்புப் பிரிவினை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
*******
உழைப்புப் பிரிவினை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது?

சமுதாய வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களில் மனிதனது உற்பத்தித் திறன் மிகக் குறைவாக இருந்தது. கருவிகளும் புராதனமானவையாக இருந்தன. இருப்பினும் உழைப்புப் பிரிவினையின் ஆரம்ப அம்சங்கள் காணப்பட்டன. பால், வயது முதலியனவற்றிற்கேற்ப உழைப்புப் பிரிவினை அப்பொழுதிருந்தது. ஆண்கள் வேட்டையில் ஈடுபட்டார்கள். பெண்கள் உண்ணக்கூடிய கிழங்கு கீரைகளைச் சேகரித்தார்கள். குழந்தைகள் தங்கள் சக்திக்குத் தகுந்த படி உதவினார்கள்.

உற்பத்தி வளர்ச்சியடைந்த போது சமூக உழைப்புப் பிரிவினை தோன்றிற்று. மக்களின் உழைப்பு நடவடிக்கைகள் தனித்தனி வகைகளாக அல்லது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பயிர் சாகுபடி செய்வதற்கு வசதியாக உள்ள பிரதேசங்களில் குடிகள் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள், மற்ற இடங்களில் கால்நடைகள் வளர்ப்பதில்  தேர்ச்சி அடைந்தனர். கைத்தொழில்களின் தோற்றம், உழைப்புப் பிரிவினைக்கு ஒரு பலமான வேகத்தைத் தந்தது, கைத்தொழிலாளிகள் பானைகள் செய்யவும், உலோகங்களைக் கொண்டு வேலைகள் செய்யவும், ஆயுதங்கள் செய்யவும், மாவு அரைக்கவும் தொடங்கி தேர்ச்சி பெற்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் உற்பத்தி சாதனங்களின் பெருக்கத்தினாலும், சமூக உழைப்புப் பிரிவினை பெரிதும் விரிவடைந்தது. தொழில் விவசாயத்தினின்றும் பிரிந்து சென்றது. தொழிலிலும் கூட புதிய பிரிவுகள் தோன்றின. ஏற்கனவே ஒன்றாக இணைக்கப்பட்டிருந்த வழிமுறைகளைப் பிரிப்பதின் மூலம் இது. முதலில் நேரிட்டது. உதாரணமாக இயந்திரங்கள் தோன்றியபோது அவற்றை ஆக்குவது ஒரு பிரிவாக இருந்தது. ஒரே தொழில் நிறுவனத்தில் பல வகையான இயந்திரங்கள் செய்யப்பட்டன. இயந்திரங்கள் பெருக ஆரம்பித்தபோது ஒன்றாக இருந்த பொறியியல் தொழில் பல தனிப்பட்ட பிரிவுகளாகப் பிரிந்தன. பொறிக் கருவிகள், உபகரணங்கள், சக்தி, உலோகங்கள், துணிகள், செருப்பு, உணவு, விவசாயம், ஏனைய கருவிகள் ஆகியவற்றின் உற்பத்தி என்று தனித்தனியாகப் பிரிந்தது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


1) சமுதாய வாழ்க்கையில் உற்பத்தி எந்த இடம் வகிக்கிறது? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
 ******
1) சமுதாய வாழ்க்கையில் உற்பத்தி எந்த இடம் வகிக்கிறது?

உணவு, உடை, உறையுள் இன்னும் இதர அவசியப் பொருள்கள் மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாதனவாகும். இவ்வகைப் பொருள்சார் நலன்களெல்லாம் வானத்திலிருந்து வழங்கிய தெய்வப்பிரசாதம் போல வருவதில்லை. மக்கள் தமது சொந்த உழைப்பினால் இவற்றை உற்பத்தி செய்கிறார்கள். தமது வாழ்விற்கு அத்தியாவசியமான பௌதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாட்டங்கொண்ட மக்களின் உழைப்பு நடவடிக்கையையே உற்பத்தி என்கிறோம்.

உற்பத்தி இன்றியமையாத ஒன்றாகும், இதில்லாமல் சமுதாயம் இருக்க முடியாது. விஞ்ஞானம், கலை, அல்லது அரசியலில் மக்கள் ஈடுபடுமுன் தம்முடைய ஜீவாதாரத் தேவைகளை திருப்தி செய்து கொண்டாக வேண்டும், இந்த முதன் முக்கியமான தேவைப் பொருட்கள் உற்பத்தி செய்யப் பெறவேண்டும். மனித இன வரலாறு முழுவதிலும் சமுதாய அமைப்பின் சில வடிவங்கள் போய் வேறு வடிவங்களுக்கு இடங்கொடுத்தன. மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறின, எனினும் உற்பத்தியானது சமுதாய வாழ்நிலைக்கு அடிப்படையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)