இக்கேள்விக்கு விடையாகப் பின்வரும் கட்டுக்கதையைச்
சில பொருளாதார அறிஞர்கள் பரப்பி வருகின்றனர். வெகுகாலத்திற்கு முன்பு பல்வேறு தன்மைகளையுடைய
மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்தார்களாம். அவர்களில் சிலர் முயற்சியும் சிக்கனமும்
483டயவர்கள். வேறு சிலர் சோம்பேறித்தனமும், விரையமாக்கும் தன்மையும் உடையவர்கள். முதலில்
சொல்லப்பட்டவர்கள் படிப்படி (Tக செல்வத்தைத் திரட்டினார்கள். இரண்டாவதாகச் சொல்லப்
பட்டவர்கள் சொத்து ஏதுமின்றி இருந்தார்கள். இவ்வாறுதான் சமுதாய மானது பணக்காரர் ஏழை
என்றும் முதலாளிகள், தொழிலாளிகள் என்று தோன்றியதாக அவர்கள் சொல்லுகிறார்கள்.
இவ்வித கட்டுக்கதைக ளுக் கும், உண்மை வரலாற்றுக்கும்
எவ்வித சம்பந்தமும் கிடையாது. உண்மையில் பார்க்கப் போனால் முதலாளித்துவம் அதற்கு முன்னர்
இருந்த சுரண்டல் அமைப்பாகிய சிலப்பிரபுத்துவத்தை நீக்கிவிட்டு வந்ததாகும். சிறு பொருள்
உற்பத்தி அதனுள் காணப்படும் போட்டி யின் விளைவாகச் சிலரை ப புடிகளாக்குவதும், சிலரைச்
செல்வம் படைத்தவர்களாக்குவதும், முதலாளித்துவ வளர்ச்சியின் துவக்க நிலையாகும்.
தங்களது உழைப்பின் பொருள்களை மாற்றுச் செய்யும்
சிறு உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் எளிமையான பண்ட உற்பத்தி 7ன்றழைக்கப்படு கிறது,
முதலாளித்து வத்தோடு இதற்கு ஒரு முக்கியமான பொதுப் பண்பு உண்டு. அதாவது முதலாளித்துவத்தில்
உள்ளது போல உற்பத்திச் சாதனங்கள் தனியார் உடைமை என்னும் பகடிப்படையைச் சேர்ந்தது. அதனால்தான்
அது தவிர்க்க முடியாத படி முதலாளித்துவத்தைத் தோற்றுவிக்கிறது.
அதே சமயத்தில் எளிமையான பண்ட உற்பத்தி முதலாளித்துவ
உற்பத்தியினின்று முக்கியமானதொரு விஷயத்தில் வேறுபடுகின்றது. எளிமையான பண்ட உற்பத்தியானது
எளிய உற்பத்தி மூலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள சிறு பண்ட உற்பத்தியாளர்களின் சொந்த
உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் முதலாளித்துவம் கூலி பெறும் தொழிலாளர்களின் உழைப்பை
அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தொழிலாளர்களுக்கு உற்பத்திச் சாதனங்கள் ஏதுமிருப்பதில்லை,
இவ்வுற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரர் களான முதலாளிகளால் சுரண்டவும் படுகிறார்கள்.
முதலாளித்துவம் வளர வளர எளிமையான பண்ட உற்பத்தியாளர்கள் நீக்கப்பட்டு அவர்கள் கூலிபெறும்
தொழிலாளர்களாக ஆக்கப்படுகிறார்கள். முதலாளித்து வத்தின் வரலாற்றில் சுரண்டுபவர்களின்
அரசாங்கம், அதாவது சுரண்டப்படும் மக்கள் மீது ஆளும் வர்க்கம் செலுத்தும் ஆதிக்கத்தின்
உறுப்பு முக்கியமானதொரு பங்கை வகிக்கிறது, பகிரங்கமான கொள்ளைகள், ஆக்கிரமிப்பு, அடிமைப்படுத்தல்,
ஏமாற்று, மோசடி ஆகியவைகளின் சாத்தியமான ஒவ்வொருமுறை, போன்ற வழிகளில்தான் நிலப்பிரபுத்துவமுறை
சீரழிந்த காலத்தில் முதலாளித்துவத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவைகளுக்கான நிலைமை ஏற்படுத்தப்பட்டது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)
No comments:
Post a Comment