Friday 18 January 2019

18) நெருக்கடிகளினால் ஏற்படும் தீமை என்ன? – எல்.லியான்டியாவ்


நெருக்கடியின் போது தொழிலாளர் தமது மிக அத்தியாவசியத் தேவைகளைத் திருப்தி செய்ய முடியாது போகிறது, அதே சமயத்தில் முதலாளிகள் உற்பத்தியான பண்டங்களின் பெரும்பகுதியை அழிப்பதன் மூலம், உயர்ந்த விலைகளை நிலைக்கச் செய்ய முற்படு கிறார்கள். பயனுள்ள பண்டங்கள் மக்களின் குறைந்த வாங்கும் சக்தியால் விற்கப்பட முடியாது போகும்போது எரிக்கப்படுகின்றன; கடலில் எறியப்படுகின்றன, பண்டகசாலைகளில் உளுத்துப் போகின்றன அல்லது குப்பையாக மாறுகிறது.

1929-1933ஆம் ஆண்டின் நெருக்கடி கால அமெரிக்காவில் கோதுமையும், சோளமும் நிலக்கரிக்குப் பதிலாக எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன, பல இலட்சம் பன்றிகள் கொல்லப்பட்டன. பருத்தியின் பெரும்பகுதி பொறுக்கப்படாமலே வயலில் விடப் பட்டது. பிரேசில் நாட்டில் பல இலட்சம் சாக்கு காப்பிக்கொட்டை, கடலில் எறியப்பட்டன. டென்மார்க்கில் ஏராளமான மாடுகள் கொல்லப்பட்டன. பிரான்சிலும், இத்தாலியிலும் ஆயிரக்கணக்கான டன் நிறையுள்ள பழங்கள் அழிக்கப்பட்டன. நெருக்கடிகள் பொருளாதாரத்தில் பெரும் நாசத்தை விளைவிக்கின்றன. பல இலட்சம் மக்களின் ஆர்வமிக்க உழைப்பினால் விளைந்தவற்றை ஒன்றுமற்ற தாகச் செய்கிறது.
|சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் நெருக்கடி காலங்களில் அறிவில்லாமல் அழிக்கப்படு கின்றன. இயந்திரங்கள் ஓடாமல் துருப்பிடிக்கின்றன. தொழிற்சாலைக் கட்டிடங்கள் பழுதடைகின்றன. பல இலட்சம் மக்கள் நீண்ட நாட்க ளுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். 1929லிருந்து 1933 வரையிலுள்ள நான்கு நெருக்கடி ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு 1914லிருந்து 1918 வரை நடந்த உலகயுத்த நாசத்துக்கு ஒப்பானதாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஓர் அமெரிக்கப் பத்திரிகை கீழ்க்காணும் கணக்கீட்டை வெளி யிட்டது. "1929-33 ஆண்டின் மோசமான நெருக்கடிக் காலத்திற்குப் பின்புள்ள 1934ஆம் ஆண்டில் மாத்திரம் முதலாளித்துவ நாடுகளில் 2 கோடி 40 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள். அதே ஆண்டில் 10 லட்சம் காரில் ஏற்றிச் செல்லும் பாரம் அளவு தானியமும், 2,67,000 “கார் ப்பார அளவு காப்பியும், 2, 58,000 டன் சர்க்கரையும் 25,000 டன் அரிசியும், 25,000 டன் இறைச்சியும், இன்னும் ஏராளமான அளவில் பல பொருள்களும் அழிக்கப்பட்டன."

பூர்ஷ வாப் பொருளாதார அறிஞர்கள் நெருக்கடிகளின் உண்மை யான தன்மையையும், காரணங்களையும் ஒளித்து வைக்க முயல் கிறார்கள். முதலாளித்து வத்தின் கீழ் நெருக்கடிகள் தவிர்க்க முடியாதவை என்பதை மறைக்கும் முயற்சியில், அவர்கள் இந்த நெருக்கடிகள் ஏதோ ஒரு காரணத்தால் விளைந்தது என்றும் முதலாளித்துவ அமைப்பில் அவை நீக்கப்பட முடியும் என்றும் கூறுகிறார்கள். பொருளாதாரத்தின் பிரிவுகளுக்கிடையே ஏற்படும் விகிதாச்சார மாற்றங்களால் ஏற்படுவதே நெருக்கடி என்றும், "குறை நுகர்ச்சியே" இதன் அடிப்படைக் காரணமென்றும் கூறுகிறார்கள். இவ்வித நெருக்கடிகளுக்கு எதிரான நிவாரணிகளாக யுத்தத்தளவாடப் பெருக்கம், யுத்தம் போன்றவற்றை அவர்கள் கூறுகிறார்கள்.

உண்மையில் உற்பத்தியின் விகிதாச்சார மாற்றங்களும் “குறை நுகர்ச்சியும் எப்படியோ திடீர் என்று ஏற்படுபவையல்ல. முதலாளித்துவ அமைப்பில் காணப்படும் அடிப்படையான தீமைகளின் விளைவாகத் தவிர்க்க முடியாதபடி நிகழும் நிகழ்ச்சிகளே யாகும்.

நெருக்கடிகளுக்கு இடையேயுள்ள காலத்தில் பூர்ஷ வாக்களின் ஆதரவாளர்கள் மிகவும் பிரச்சார முக்கியம் வாய்ந்த அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். நெருக்கடிக்கு முடிவைக் கண்டுவிட்டதாக அவர்கள் கூறுவது வழக்கம். மேலும் முதலாளித்துவம் நெருக்கடி இல்லாத வளர்ச்சிப் பாதைக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுவதுண்டு. ஆனால் இவ்வாறான அறிக்கைகளை வாழ்க்கை பொய்ப்பித்து விடுகின்றது. முதலாளித்துவத்தின் நெருக்கடிகளை நீக்க சொல்லப் படும் அரை வேக்காட்டு வைத்தியங்களையும் வாழ்க்கை சுக்கலாக்கிப் போடுகிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)



No comments:

Post a Comment