சமுதாய வளர்ச்சியை ஆட்சி செய்யும் பொருளாதார விதிகளை
வெளியிடுவது பொருளாதார இயலின் பிரதான பணியாகும்.
விஞ்ஞானங்களின் துணைகொண்டு மக்கள் தங்களைச் சுற்றியுள்ள
உலகத்தை அறிந்து கொள்கிறார்கள். சமூக வாழ்க்கை, இயற்கை ஆகிய இரண்டையும் ஒன்றாக வுடையதே
இவ் வுலகமாகும். இவை இரண்டில் ஏதாவது ஒரு துறையைப் பற்றி ஓர் இயல் அறிந்துகொள்ள முற்படுமாயின்
அது அத்துறையில் இயங்கி வரும் விதிகளை அறிந்து கொள்ள முற்படுகிறது என்று பொருளாகும்.
விஞ்ஞானத்திற்கு விதி என்பது தோற்றங்களின் உள் தொடர்புகள், அதாவது அவைகளின் சாரம்,
ஆகும். புற உலகத்தைப் பற்றிய மனிதனின் அறிவு இவ்வுலகம் முழுவதையும், அதன் பாகங்களையும்
ஆண்டு வரும் விதிகளை மென்மேலும் பூரணமாகவும், முழுமையாகவும் வெளிப்படுத்துகிறது. இயற்கையின்
விதிகளைப் பற்றிய அறிவு மனிதனுக்கு இயற்கையின் குருட்டுப் போக்கான சக்திகளை அடக்கவும்,
அவற்றைத் தன் நலனுக்காகப் பயன்படுத்தவும் ஒரு பலமான கருவியைத் தருகின்றது. சமூக வாழ்க்கையை
இயக்கும் விதிகளைப் பற்றிய அறிவு மக்களின் நடைமுறை நடவடிக்கைகளுக்குரிய அடிப்படையைத்
தருகிறது, அவை இவ்விதிகளைப் பற்றிய அறிவை ஆதாரமாகக் கொண்டுள்ளன.
பொருளாதார இயக்கப் போக்குகள் தோற்றங்கள் ஆகியவற்றின்
சாராம்சமான உள்தொடர்பே பொருளாதார விதியாகும். பொருளாதா இய லால் நிரு வப்படும் விதிகள்
பொருளாதார வாழ்க்கைத் தோற்றங்களின் உள்தொடர்பையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் காணப்படும்
பரஸ்பரத் தொடர்பையும் பிரதிபலிக்கின்றன.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)
No comments:
Post a Comment