முதலாளித்துவம் வளர்ச்சியடைவதற்கு முந்திய நிலப்பிரபுத்துவ
சப்தத்தில் உழவர்களும், கைத்தொழில் புரிபவர்களும் உற்பத்தியைக் தானித்துக்கொண்டார்கள்.
விவசாயம்தான் பிரதான தொழிலாக பிருந்தது. நிலமே பிரதான உற்பத்திச்சாதனமாக இருந்தது.
உழவர்கள் தியமத்தை ஒட்டி வாழ்ந்தார்கள். அவர்கள் நிலச் சொந்தக்காரர்களால் சுரண்டப்பட்டனர்,
கலப்பை , அரிவாள், சில கால்நடைகள்- இவை களே உழவர்களின் சொத்தாக இருந்தது. சிறு உற்பத்தியாளர்களைச்
சுரண்டுவதாகக் கொண்டதே நிலப்பிரபுத்துவமாகும். இவர்கள் சார்புடையவர்கள் எனினும் இவர்களுக்கு
உற்பத்திச்சாதனங்கள் பெருந்தன. நிலத்தின் மீது பரம்பரை வாரிசாக உழவர்களுக்கு ரிமையிருந்தது.
கூலிபெறும் உழைப்பாளராக இந்த உற்பத்தியாளர் மாறுவதற்கு முதலில் அவரது நேரடியான நபர்ச்
சார்பிலிருந்து விடுவிக்கப் பெறவேண்டும். முதலாளித்துவத் தளையில் சிக்குவதற்கு அவர்கள்
முதலில் நிலப்பிரபுத்துவத் தளையிலிருந்து விடுதலை பெற்றாக வேண்டும்.
சில பொருளாதார அறிஞர்கள் பொதுவாக இந்த ஒரு அம்சத்தைப்
பற்றி மாத்திரம் குறிப்பிடுகிறார்கள். நிலப்பிரபுத்துவ அடிமைத் 45 4னத்தை முதலாளித்து
வம் அழித்து விட்டதால் அதை அவர்கள் புகழ்கிறார்கள். மேலும் பூர்ஷுவா அமைப்பை விடுதலையின்
பாஜ்ஜியமென்றும், நீதியின் ராஜ்ஜியமென்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே
இன்னொரு அம்சத்தைப் பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறார்கள், உற்பத்தியாளர் ஒருவர் உற்பத்திக்கு
வேண்டிய எல்லா தேவைகளிலிருந்தும் விடுதலை பெறும் போதுதான் கூலிபெறும் உழைப்பாளராகிறார்.
சுதந்திரமாக உழைப்பதற்குரிய வாய்ப்பு ஏதும் நிராகரிக்கப்படும்போது அவர் கூலி பெறும்
உழைப்பாளராகிறார். நிலப்பிரபுத்துவத்தின் கீழ் உற்பத்தியாளருக்கிருந்த உற்பத்திச் சாதனங்களை
அகற்றிப்போடுவதை அடிப்படையாகக் கொண்டது முதலாளித்துவம்.
உற்பத்திச் சாதனங்களை நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து
அகற்றிப் போடுவதும், உழவர்களிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளுவதும் புராதனச்
சேர்க்கைக்கு அடிப்படையாக இருந்தன, நிலப்பிரபுத்துவம் சீர்குலைவுற்றபோது, நில அடிமைமுறை
நாடு நாடாக நீக்கப்பட்டு வந்தது. நிலப்பிரபுத்துவ சார்பிலிருந்து மாத்திரம் அவர்கள்
விடுதலையடையவில்லை. அதைவிட முக்கியத்துவம் குன்றாத வேறொரு விடுதலையும் கிடைத்தது. அவர்கள்
வாழ்ந்து, உழுது பயிரிட்டு வந்த நிலத்திலிருந்து "விடுதலை" பெற்றனர். அவர்கள்
உயிர்வாழ்வதற்கு வேண்டிய நிலத்தை மாத்திரம் அவர்கள் பெற்ற மீட்சிக்கு ஈடாக விட்டு வைத்தார்கள்,
"உபரியாகப் போன உழவர்கள் கிராமப் புறங்களை விட்டு வெளியேறினார்கள். இவர்கள் தான்
முதலாளிகளுக்கு வேண்டிய கூலிபெறும் உழைப்பாளர்களாக ஏராளமாகக் கிடைத்தனர்.
இந்த விதமான பொதுவானதொரு வளர்ச்சி முறை தான் ஆரம்ப
நிலையில் இருந்த முதலாளித்துவத்திற்கு, இலவசமான உழைப்பாளர் களைத் தந்தது, பல்வேறு நாடுகளில்
இது வெவ்வேறு வழிகளில் நடைபெற்றது. ஆனால் அதன் போக்கும் தன்மையும் எல்லா இடங்களிலும்
ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. - பலவந்தமாகப் பிடுங்குவது, கொள்ளையடிப்பது ஆகிய முறைகள்
தான் உழவர்களை நிலம் இழந்தவர்களாகவும், வீடிழந்தவர்களாகவும் ஆக்கி, கூலிக்காரர்களாக
ஆக்கியது மட்டுமல்லாமல் ஒரு சிறு மக்கள் கூட்டத்திடம் ஏராளமான நிலங்களைக் குவியச் செய்தது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)
No comments:
Post a Comment