Friday 18 January 2019

1) சமுதாய வாழ்க்கையில் உற்பத்தி எந்த இடம் வகிக்கிறது? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
 ******
1) சமுதாய வாழ்க்கையில் உற்பத்தி எந்த இடம் வகிக்கிறது?

உணவு, உடை, உறையுள் இன்னும் இதர அவசியப் பொருள்கள் மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாதனவாகும். இவ்வகைப் பொருள்சார் நலன்களெல்லாம் வானத்திலிருந்து வழங்கிய தெய்வப்பிரசாதம் போல வருவதில்லை. மக்கள் தமது சொந்த உழைப்பினால் இவற்றை உற்பத்தி செய்கிறார்கள். தமது வாழ்விற்கு அத்தியாவசியமான பௌதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாட்டங்கொண்ட மக்களின் உழைப்பு நடவடிக்கையையே உற்பத்தி என்கிறோம்.

உற்பத்தி இன்றியமையாத ஒன்றாகும், இதில்லாமல் சமுதாயம் இருக்க முடியாது. விஞ்ஞானம், கலை, அல்லது அரசியலில் மக்கள் ஈடுபடுமுன் தம்முடைய ஜீவாதாரத் தேவைகளை திருப்தி செய்து கொண்டாக வேண்டும், இந்த முதன் முக்கியமான தேவைப் பொருட்கள் உற்பத்தி செய்யப் பெறவேண்டும். மனித இன வரலாறு முழுவதிலும் சமுதாய அமைப்பின் சில வடிவங்கள் போய் வேறு வடிவங்களுக்கு இடங்கொடுத்தன. மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறின, எனினும் உற்பத்தியானது சமுதாய வாழ்நிலைக்கு அடிப்படையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment