Friday, 18 January 2019

16) முதலாளித்துவத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏன் தவிர்க்க முடியாதவை? – எல்.லியான்டியாவ்


முதலாளித்துவம் என்பது திட்டமில்லாத அதனால் அராஜக உற்பத்தி முறையை உடைய ஒரு சமூக அமைப்பாகும். ஒவ்வொரு தொழிலிலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளரை முதலாளித்துவம் வேலைக்கமர்த்துகிறது. ஆனால் தனியார் உடைமை என்னும் தான்தோன்றித் தனமான விதி சமூக உற்பத்தியில் நிலவுகிறது. திட்டமற்ற தன்மையும், குழப்பமும் வளர்ந்து வலிமை பெறுகிறது. எல்லா முதலாளிகளும் பெரிய இலாபமடைவதில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்குள் தீவிரமான போட்டி ஏற்படுகிறது. இவ்விதப் போட்டியில் ஒவ்வொரு வரும் அகப்பட்ட அளவு கைப்படுத்தப் பார்க்கின்றனர். தனது போட்டியாளர்களை நசுக்கிப்பிழிய முடியுமானால் நசுக்கிப் போட அவர் முயலுகிறார். ஓநாய்க் கூட்டத்தில் வலியற்றதை வீழ்த்திப் போகும் வலிமையுள்ள ஓநாய்தான் பிழைத்திருக்க முடியும். இதே போன்று வலிமையற்றவர்களை வீழ்த்தி அதன் மீது தமது ஆதிக்கத்தை சிறுவக்கூடிய வலிமைமிக்கவர்கள்தான் பிழைத்திருக்க முடிகிறது. கடற்பத்தியில் அராஜகம் முதலாளித்துவத்தின் விதியாகும்.

உற்பத்தியின் இரு அடிப்படைக் காரணங்களுக்கு இடையே ஏற்படும் பிளவும் முதலாளித்துவத்தின் ஓர் அம்சமாகும்; சில முதலாளி களின் கைகளில் குவிந்து இருக்கும் உற்பத்திச் சாதனங்களுக்கும், தங்களது உழைப்பு சக்தியைத் தவிர ஏனையவற்றையெல்லாம் பிடுங்கக் கொடுத்து நிற்கும் உழைப்பாளருக்கும் இடையேயுள்ள பிளவுதான் இது. மிகை உற்பத்தி நெருக்கடி சமயத்தில் ஒரு நச்சுச்சுழல் தோன்றும்போது இப்பிளவு மிகவும் துல்லியமாகத் தெரிகிறது. ஒரு புறத்தில் உற்பத்திச் சாதனங்களும், பண்டங்களும் இருக்கின்றன. இன்னொரு புறத்தில் உபரியான உழைப்புச் சக்தியும், பண்டங்களை வாங்கும் சக்தியற்ற ஏராளமான வேலையற்றோரும் இருக்கின்றனர்.

முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகமும், முதலாளிகள் தொழிலாளரைச் சுரண்டுதலும் மிகை உற்பத்தி நெருக்கடியைத் தவிர்க்க முடியாது ஆக்குகிறது. இந்த நெருக்கடிகள் முதலாளித்துவ காடுகளை அடிக்கடி தாக்குகின்றன.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment