Friday 18 January 2019

11) உழைப்புச் சக்தி ஏன் ஒரு பண்டமாகிறது? – எல்.லியான்டியாவ்


உழைப்பாளரிடம் இருக்கக் கூடியதும், விற்கக் கூடியதுமாகிய ஒரே பொருள் அவரது உழைப்புச் சக்தியே யாகும் இதைத்தான் முதலாளி தொழிலாளியை வேலைக்கு அமர்த்தும் போது வாங்குகிறார், எனவேதான் அவர் ஒரு திட்டமான பொருளை வாங்குகிறார் என்று சொல்லுகிறோம். இப்பண்டம் உழைப்பாளரின் உழைப்புச் சக்தியாகும்.

எவ்விதச் சமூக அமைப்பிலும் மனிதன் உழைப்புச் சக்தி உடையவனாக இருக்கிறான். ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் மட்டுமே உழைப்புச் சக்தி விற்கப்படும், வாங்கப்படும் ஒரு பண்டமாகிறது, முதலாளித்துவம் என்பது பண்ட உற்பத்தியின் உச்சகட்ட வளர்ச்சி நிலையானதால், உழைப்புச் சக்தியும் ஒரு பண்டமாகிறது.

உழைப்புச் சக்தி பண்டமாவதற்குச் சில நிச்சயமான நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். உற்பத்திச் சாதனங்கள் பிடுங்கப் பெற்ற ஒரு வர்க்கமும், இவற்றை உடைமையாக்கிக் கொண்ட ஒரு வர்க்கமும் இருக்கவேண்டும். முதலாளித்துவப் பிறப்போடு இந்த நிபந்தனை களும் நிறைவேறுகின்றன. அதன் அழிவோடு இந்த நிபந்தனைகளும் அழிக்கப்படுகின்றன.

முதலாளித்துவத்தில் உழைப்பாளரின் ஒரே உடைமை அவர்களது உழைப்புச் சக்தியாகும். ஆனால் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் முதலாளிகள் கைகளில் இருக்குமானால், உழைப்புச் சக்தியை எங்குப் பயன்படுத்துவது? முதலாளிகளுக்குத் தங்கள் உழைப்புச் சக்தியை விற்பது ஒன்றுதான் அவர்களுக்குரிய ஒரே வழியாக இருக்கிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment