பொருளாதாரவிதிகள் புற நிலையான தன்மை பெற்றவையாகும்.
அதாவது மக்களின் சித்தம் உணர்வு ஆகிய வற்றினின்றும் சுயேச்சையாக அவை இருக்கின்றன என்பது
இதன் பொருளாகும். மேலும் மக்களின் சித்தம், உணர்வு, நோக்கம், ஆகியவற்றின் மீது சார்ந்து
இராதிருப்பதோடல்லாமல் அவர்களது சித்தம், உணர்வு, நோக்கம் ஆகியவற்றையே நிர்ணயிக்கவும்
செய்கின்றன.
பொருளாதார விதிகள் வரலாற்றுப் பண்புடையவையாகும்.
அதாவது என்றைக்கும் மாறிக் கொண்டே இருக்கும் பொருள் பற்றி ஆராய்வதே பொருளாதாரம் ஆகும்.
சாராம்சத்தில் அது ஒரு வரலாற்று இயல் ஆகையால் உற்பத்தி முறை ஒவ்வொன்றின் குறிப்பிட்ட
விதிகளை அது முதலில் ஆராய்கிறது. அதே சமயத்தில் உற்பத்தி முறைகள் எல்லாவற்றிலும் செயல்படுகிற
பொதுவான விதிகளையும் இது ஆராய்கிறது. இதன் விளைவாக, சமுதாய வளர்ச்சியை ஆளும் திட்டவட்டமான
பொதுப் பொருளாதார விதிகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்வதற்கும், எந்த ஒரு சமுதாயத்தின்
முதலாளித்துவ விதிகளும் அழியாதவை, மாறாதவை என்று கூறும் விஞ்ஞானத்திற்கு விரோதமான வியாக்கியானத்திற்கும்
ஒரு சம்பந்தமும் கிடையாது.
திட்டவட்டமான சமூக பொருளாதார அமைப்புகளைச் சேர்ந்த
பொருளாதார விதிகள் வரலாற்று தற்காலிக இயல்புடையவை. குப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில்
அவை இயங்குகின்றன. அதன் பிறகு அவை வேறு விதிகளால் மாற்றப் பெறுகின்றன. வளர்ச்சியின்
புறநிலையான இயக்கப் போக்கின் விளைவாக ஒரு வகை விதிகள் மாறி வேறு விதிகள் அவற்றைத் தொடருகின்றன. பொருளாதார நிலைமை மாறும் போது பழைய
விதிகள் பின்னுக்குப் போய் விடுகின்றன. புதிய பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதிய
பொருளாதார விதிகள் எழுகின்றன.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)
No comments:
Post a Comment