முதலாளித்து
வச் சமுதாயத்தில், கூலி பெறும் தொழிலாளர் உண்மையில் கூலி அடிமைகளேயாவர். ரோமாபுரியின்
அடிமை அவன் வேலை செய்யவேண்டிய இடத்தில் சங்கிலியால் கட்டப்பட்டி ருந்தான். பட்டினியால்
மரணம், வறுமை ஆகிய கயிறுகளால் உற்பத்திச் சாதனங்களின் சொந்தக்காரரிடம் கட்டுப்பட்டிருக்கிறான்,
இன்றுள்ள கூலித் தொழிலாளி. மேற்பார்வையாளரின் சவுக்கடிக்குப் பதிலாக இன்று வேலை நீக்கம்
எனும் பயமுறுத்தல் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை யின் கொடூரமான விதிகள் தொழிலாளியை
முதல் என்னும் ரதத்தின் சக்கரங்களில் இறுக்கமாகப் பிணைத்து இருக்கிறது.
ஆனால்
முதலாளித்துவச் சுரண்டல் அதன் அடிப்படை அம்சங்களாலும், அதற்கு முந்தைய சுரண்டல் முறைகளின்றும்
உள்ள வேற்றுமைகளாலும் ஏற்பட்டுள்ள ஒரு வெளித் தோற்றத்தால் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
பூர்ஷ வாக்கள் இவ்வுருவெளித் தோற்றத்தை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தி அடிமை முறை,
நிலப்பிரபுத்துவ முறையின் கீழ் இருந்ததைவிட அதிக ஆர்வத்தோடு, தொழிலாளி தனது உடல், உள்ளம்
ஆகிய எல்லாச் சக்திகளையும் பயன்படுத்தி உழைக்குமாறு செய்து விடுகிறார்கள். பல தந்திரமான
வழிகளையும் முறைகளையும் முதலாளித்துவம் கண்டு பிடித்துள்ளது. "இலாபப் பங்கீடு"
"சமூகப் பங்கு போன்ற பல கண்டு பிடிப்புகள் கூலித் தொழிலாளரின் அடிமைத் தனத்தை
மூடி மறைக்க உதவுகின்றன. முதலாளித்துவத்தின் ஆதரவாளர்கள், முதலாளித்துவம் தனது தன்மையை
யும், சாரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டதாகக் கூறுகிறார்கள்.
"ஜனநாயகமாக்கப்பட்ட
முதல்” ஏற்பட்டு விட்டதாகவும், "பொது நல அரசு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்கள்,
உண்மையில்
உழைப்பு முதலினால் சுரண்டப்படுவதில் அடிப்படையான மாற்றம் ஏதும் இல்லாமலே தான் இருக்கிறது.
லகத்தில் பல விஷயங்களில் மாறுதல்கள் தோன்று விட்டன. முதலாளித்துவ நாடுகளிலும் கூட இவ்வித
மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. எனினும் உழைப்பு சுரண்டப்படுவது அப்படியே தான் இருக்கிறது.
பாட்டாளி வர்க்கத்தின் இன்றியமையாத நலன்களுக்காக நடந்த இடையறாத தன்னலமற்ற போராட்டம்
வீணாகப் போய் விட வில்லை. இங்கொன்றும் அங் கொன்றுமாக முதலாளிகள் தொழிலாளருக்குச் சலுகைகள்
சிலவற்றைக் காட்ட வேண்டி நேரிட்டுள்ளது. மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள முதலாளித்துவ
/ATடுகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்று வேலை நாள் 12 மணி நேரமாக இராமல்,
பெரும்பாலானவற்றில் 8 மணி நேரமாக உள்ளது.
பாட்டாளி
வர்க்கம் பூர்ஷ வாக்கள் அல்லது பலவந்தமாகப் பெற்ற இச்சலுகைகள் இருந்த போதிலும் முதலாளித்துவ
முறையின் சாரம் மாறிவிடவில்லை. உழைப்பை முதல் சுரண்டுவதை அடிப்படை பாகக் கொண்டது இந்த
முறை. முதலாளியையும் தொழிலாளியையும் 1 Wரிக்கும் பிளவு மறைவதற்குப் பதிலாக அதிக ஆழமாகவே
வளர்ந்திருக்கிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி பூர்ஷ்வாக்கள் W/டங்கிய சிறு தொகுதி
செல்வந்தர்கள் ஆவதற்கு வழி வகுத்துள்ளது. அதே சமயத்தில் மக்கள் தொகையின் பெருபான்மையினர்
சிரமப்பட்டு தழைக்க வேண்டிய கூலிகளாக்கப்பட்டுள்ளனர். அதாவது தங்களது 11ழைப்புச் சக்தியை
விற்றுப் பிழைக்க வேண்டிய உடைமையில்லா மக்களாக்கப்பட்டுள்ளனர்.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)
No comments:
Post a Comment