Friday, 18 January 2019

4) அரசியல் பொருளாதாரத்தின் பொருளடக்கம் என்ன? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
****
அரசியல் பொருளாதாரத்தின் பொருளடக்கம் என்ன?

ஏற்கனவே குறிப்பிட்டபடி, பொருளாதாரம் உற்பத்தியின் சமுக அமைப்பைப் பயில்கிறது. இப்பொழுது இவ்வியலின் பொருளடக்கத்தைத் திட்டமாகக் கூற முடியும். அதாவது, சமுதாய வளச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கிடையே தோன்றுகின்ற உற்பத்தி உறவுகளின் ஒட்டு மொத்தமே சமூக உற்பத்தி முறையாகும்.

பொருளாதாரம் மக்களின் உற்பத்தி உறவுகளைப் பற்றியது என்று கூறினால் உற்பத்திச் சக்திகளைப் பற்றி அதற்கு அக்கரை இல்லை என்று பொருளல்ல. இவை உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியிலும் மாற்றத்திலும் மகத்தான பங்கு வகிக்கின்றன. ஒன்றை மாற்றி ஒன்று வரும் உற்பத்தி உறவுகளில் இவை பங்கு வகிக்கின்றன. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு உற்பத்தி உறவுகளின் முறையும் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் மகத்தான செல்வாக்கு செலுத்துகின்றன.

உற்பத்தி உறவுகளைத் தோற்றுவித்து அவைகளது எல்லைக்குள் வளர்சியடைந்த உற்பத்திச் சக்திகளின் தன்மையிலிருந்து நம்மைப் பிரித்துக்கொண்டால் உற்பத்தி உறவுகளின் சாரத்தை, திருப்திகரமாகப் புரிந்துகொள்ள முடியாது. உதாரணமாக முதலாளித்துவத்தில் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை நாம் கவனியாது விட்டு விட்டால் முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் பற்றி நாம் உண்மையிலே புரிந்து கொள்ள முடியாது. அதே போன்று சோஷலிச் சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியுறும் இயக்கப் போக்கில் அதன் உற்பத்தி உறவுகள் வகிக்கும் பாத்திரத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டாள் சோஷலிசத்தின் உற்பத்தி உறவுகள் பற்றிய தெளிவான கருத்து நமக்குக் கிடைக்காது. எனவே பொருளாதாரமானது உற்பத்தி உறவுகளைப் பற்றியும் அவற்றோடு பிரிக்கமுடியாதபடி இணைந்திருக்கும் உற்பத்திச் சக்திகளைப் பற்றியும் ஆராய்கிறது.

பொருளாதாரம் சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களின் பெளதீகச் செல்வத்தின் உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் விதிகளை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் மனித சமுதாய வரலாற்றின் பன்முனை இயக்கப் போக்கு முழுவதையும் அறிந்து கொள்ளத் துணைபுரிகிறது.

முதலாளித்துவ சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தின் மிகச் சூடான பிரச்சினைகளை பொருளாதாரம் எடுத்துப்பேசுகிறது. பல்வேறு வர்க்கங்களின் பெளதீக நிலைமைகளோடு நேரடியான தொடர்புடைய விவகாரங்களை அது ஆராய்கிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் அடிப்படை வர்க்கங்களின் ஜீவாதார நலன்களை அது பாதிக்கிறது. மேலும் இச்சமுதாயம் இருப்பதா? வேண்டாமா? என்ற கேள்வியை எழுப்பி அதற்குத் தீர்வு காண்கிறது.

எனவேதான் பொருளாதாரம் ஒரு வர்க்கச் சார்புடைய இயலாகும். உழைக்கும் வர்க்கத்தின் நிலையிலிருந்து பொருளாதார வாழ்க்கையின் நியதிகளை அதன் சிக்கலான தன்மை பல்வேறு முறையமைப்பு ஆகியவை உட்பட அனைத்திற்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் தருகிறது மார்க்சியப் பொருளாதாரம், சமுதாயத்தின் முற்போக்கான வளர்ச்சி நலன்களோடு பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் இணைந்திருக்கின்றன. அதனால்தான் சமூக வளர்ச்சி பற்றிய விதிகளைத் துல்லியமாகவும் முழுவதாகவும் பெற்றுக் கொள்வதில் அச்சம் ஏதுமின்றி அதற்கு மாறாகப் பாட்டாளி வர்க்கம் அப்படிப்பட்ட அறிவில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது.

மார்க்சீயம் பொருளாதாரத்தில் அடிப்படையானதொரு புரட்சியை உண்டாக்கியது. இவ்வியலை அதன் அடிப்படைகளிலேயே மாற்றிப் போட்டது. அதாவது அதன் பொருளடக்கத்தைப் புரிந்து கொள்ளும் நிலையிலேயே இம்மாற்றத்தை ஏற்படுத்தியது. பொருளாதாரத்தில் மார்க்சீயத்திற்கு முன்பிருந்தவர்கள் பண்டம், பணம், முதல், இலாபம் போன்ற பொருளாதார நியதிகளைப் பொருள்களின் உறவுகள் என்றும், பொருள்களின் பண்புகள் என்றும் கருதினார்கள். இந்த நோக்கத்தின் தவற்றை மார்க்சியம் நிரூபித்தது. பாரு (குக்கிடையேயுள்ள உறவுகளை பூர்ஷ்வா பொருளாதாரதிகள் கண்டனர். ஆனால் மார்க்ஸ் மக்களுக்கிடையேயுள்ள உறவுகளைக் காட்டினார். பொருளாதாரத்தால் ஆராயப் பெறும் பொருளாதார நியதிகளின் தன்மை மக்களுக்கிடையேயுள்ள உற்பத்தி உறவுகளில் அடங்கியுள்ளது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment