Friday, 18 January 2019

3) சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
******
சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?

சமுதாயத்தின் உற்பத்தி சக்திகளின் அடிப்படையின் மீது திட்டவட்டமான உற்பத்தி உறவுகள் தோன்றி வளருகின்றன. எந்த வகைப்பட்ட ஒரு மக்களின் உற்பத்தி உறவுகளும் வெற்றிடத்தில் தோன்றி வளராமல் சமுதாய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக் கட்டம் ஒன்றில் தோன்றி வளர்கின்றன.

இவ்வாறு உற்பத்தி உறவுகள் தோன்றி வளர்ந்த பிறகு, அவை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளில் பெரும் செல்வாக்குடையனவாக இருக்கின்றன.

மனித வரலாற்றில் சமுதாய உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடையும் ஒரு கட்டத்தில் தோன்றும் திட்டமான உற்பத்தி உறவுகள், சில காலத்திற்கு இவ்வுற்பத்தி சக்திகளை மேலும் முன்னேற்றும் திறன் பெற்றுள்ளன. ஆனால் உற்பத்தி சக்திகள் அவ்வுற்பத்தி உறவுகளின் எல்லையை மீறி வளர்ச்சி எய்துகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பழைய உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகளின் முன்னேற்றத்திற்கு வழிகோலும் புதிய உற்பத்தி உறவுகளுக்கு இடம் கொடுத்தாக வேண்டும். ஒருவகை உற்பத்தி உறவுகளிலிருந்து இன்னொரு வகைக்கு ஏற்படும் மாற்றம் சமூகப்புரட்சி ஒன்றால் விளைகிறது. சமூகப் புரட்சி பழைய உற்பத்தி உறவுகளை அகற்றி, உற்பத்தி சக்திகளின் அதிகரித்த வளர்ச்சி அளவிற்கு உகந்த சிறந்த உற்பத்தி உறவுகளைப் புதிதாகக் கொண்டுவர வழி வகுக்கிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment