Friday, 18 January 2019

5) நமது சகாப்தத்திற்குப் பொருளாதாரம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது? – எல்.லியான்டியாவ்


மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288
********
நமது சகாப்தத்திற்குப் பொருளாதாரம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது?

முதலாளித்துவத்தின் பொருளாதார விதிகளை வெளியிட்டு, பொருளாதாரம் அதன் சமுதாய நிலைமையை ஆராய்வதோடல்லாமல் அதன் வளர்ச்சியையும் ஆராய்கிறது. அதன் மூலமாக பூர்ஷுவா சமுதாயத்திலுள்ள வர்க்கப் போராட்டத்தின் உண்மையான அடிப்படைகளை அரசியல் பொருளாதாரம் வெளிப்படுத்துகிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு சோஷலிசப் பாதையையும் அது சுட்டிக் காட்டுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிற விதிகளைக் கண்டு பிடித்ததினால் அது விஞ்ஞான ரீதியாகவும் மிக ஆழ்ந்த ஞானத்தோடும் முதலாளித்துவம் வீழ்ச்சியுறுவது வரலாற்றில் தவிர்க்க முடியாது என்பதையும் சோஷலிசம் வெற்றியடையும் என்பதையும் அது காட்டுகிறது.

சமுதாயம் மேலும் வளர்ச்சியடைவதற்கு முதலாளித்துவம் தடையாக இருக்கிறது என்பதை அரசியல் பொருளாதாரம் காட்டுகிறது. இன்றைக்குக் காணப்படும் ஏகபோக முதலாளித்துவம் பூர்ஷுவா முறையின் முரண்பாடுகளை அதன் உச்ச அளவிற்குத் தீவிரப்படுத்துகிறது.

அதே சமயத்தில் முதலாளித்துவத்தை விட உயர்ந்த அமைப்பாகிய சோஷலிசம் பயனற்ற முதலாளித்துவத்தின் இடத்தை எடுத்துக் கொண்டு வருகிறது என்பதை அரசியல் பொருளாதாரம் காட்டுகிறது. சமுக வளர்ச்சியின் புறநிலையான பொருளாதார விதிகள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் சோஷலிசத்தின் வெற்றியையும் நிர்ணயிக்கின்றன.

சோஷலிசம் முதலாளித்துவத்தைவிட நிர்ணயமாக உயர்வானது என்பது பொருளாதார விதிகளால் முன் முடிவு செய்யப்பட்டவை என்று அரசியல் பொருளாதாரம் காட்டுகின்றது. முதலாளித்துவப் பொருளாதார விதிகளின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் பொருளாதாரம் ஆராய்ந்து பூர்ஷவா முறையின் வீழ்ச்சியையும் சோஷலிச முறை தவிர்க்க முடியாதபடி அவ்விடத்தை பெறும் என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. சோஷலிசப் பொருளாதார விதிகளின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் நிலை நாட்டுவதன் மூலம் அரசியல் பொருளாதாரம் வரலாற்று விதியால் ஆளப்படும் இயக்கப் போக்கையும் முதலாளித்துவத்தோடு உள்ள பொருளாதாரப் போட்டியில் சோஷலிசம் வெற்றியடைவது தவிர்க்க முடியாதது என்பதையும் நிரூபணம் செய்கிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment