Friday, 18 January 2019

15) உபரி மதிப்புக் கோட்பாட்டின் முக்கியத்துவம் என்ன? – எல்.லியான்டியாவ்


முதலாளியினால் உழைப்பு சுரண்டப்படுவதின் சாரத்தை மார்க்சியம் வெளிப்படுத்தியது. மார்க்ஸால் ஆக்கப்பட்ட உபரி மதிப்புக் கோட்பாடு முதலாளித்துவ சுரண்டலின் ரகசியத்தை வெளிப் படுத்தியது.

உபரி மதிப்புக் கோட்பாட்டுக் கண்டுபிடிப்பானது தொடர்ச்சி கக் குறைந்து வரும் முக்கியமற்ற சிறுபான்மையினால் மிகப் பெரும்பான்மை மக்கள் சுரண்டப்படுவதற்கு வசதி செய்யும் பெரியதொரு நிறுவனமாக பூர்ஷுவா சமுதாயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. இது முதலாளித்துவத்தின் கீழ் நலன்களின் ஒருமைப் பாடு பற்றிய பசப்பு வார்த்தைகளையும், ஏய்க்கும் உருவெளித் தோற்றங்களையும் அழித்துப் போட்டது - சுரண்டும் வர்க்கங்களின் கைக்கூலிகள் இக்காலத்தில் பரப்பி வருகிற இவற்றிற்கு மரண அடி கொடுத்தது உபரி மதிப்புக் கோட்பாடு. பூர்ஷ்வா அமைப்பு முறை கூலி அடிமை முறை என்று மார்க்ஸ் நிரூபித்துக் காட்டினார். நபர் சார்ந்த முந்தைய அடிமைத் தளைகளுக்குப் பதிலாக, அதாவது அடிமைமுறை நிலப்பிரபுவின் வேலை யாள் ஆகியவற்றிற்குப் பதிலாகப் பொருளாதார அடிமைத்தளையை பூர்ஷ வா முறை ஏற்படுத்துகிறதென்று மார்க்ஸ் நிரூபித்துக் காட்டினார்.

உபரி மதிப்புக் கோட்பாடு முதலாளித்துவ நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கம், இதர உழைக்கும் மக்கள் ஆகியோரைத் தங்களது அடிமைத்தனம், வறுமை, சிரமமான வாழ்க்கை ஆகியவற்றில் ஆழ்த்தியிருக்கும் உண்மையான காரணங்களைக் காணும்படி செய்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் ஏழ்மையும் அடக்குமுறையும் தி டீ ரென்று நேர்ந்தவைகளாக அல்லாமல் அல்லது தனி முதலாளிகளின் எதேச்சதிகாரமான நடவடிக்கைகளால் அல்லாமலும், முதலாளித்துவ அமைப்பினாலும், முதலாளித்து வ உற்பத்தி உறவுகளாலும் ஏற்பட்டவை என்பதைக் காட்டுகிறது.

பாட்டாளி வர்க்கத்திற்கும் பூர்ஷுவா வர்க்கத்திற்கும் இடை யி வான வர்க்க விரோதத்தின் ஆழ்ந்த தன்மை யும் சமரசம்) காணமுடியாத நிலையையும் உபரி மதிப்புக் கோட்பாடு வெளிப் படுத்துகிறது. மேலும் இவ்விரோதம் அதிகரிக்கும் தவிர்க்க முடியாத தன்மையையும் நிரூபிக்கிறது. ஏனெனில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் அனைத்தும் இதற்குரிய காரணங்களாகும், இயற்கையின் மீது மனிதனின் ஆதிக்கம் அதிகப்படும் அதே நிலையில் பாட்டாளி மக்களின் இருப்பே பாதுகாப்பற்றதாகவும் மேலும் வறுமையுற்றதாகவும் ஆவது, முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத முரண்பாடாகும். வரலாற்று வளர்ச்சிப் போக்கு முதலாளித்துவத் திற்குப் பதிலாக சோஷலிசத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த முரண்பாட்டைத் தீர்க்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறுகிறது.
(மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்
-தமிழில் தா.பாண்டியன்)


No comments:

Post a Comment