Tuesday 21 May 2019

சோஷலிச சமூக உற்பத்தியின் திட்டமிட்ட விகிதாச்சார வளர்ச்சியின் விதி



 -– எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ்

    சமூக
உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் பொருளாதாரப் பிணைப்புகளின் குணாம்சம், உற்பத்திச் சாதனங்களின் உடைமை உறவுகளாலும், அதனுடைய உடன டி நோக்கத் தாலும் தீர்மானிக்கப்படுகிறது. சோஷலிசத்தில் உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையின் ஆதிக்கம் இருக்கிறது. பொது அரசுடைமையான து, முன்னணியானதும் தீர் மானிக்கக் கூடியதுமான பங்காற்றுகிறது. அது தேசிய பொரு ளாதாரத்தை ஒரே உற்பத்தி அமைப்பாக, ஒரே பிரமாண்ட மான தொழில் நிறுவன மாக மாற்றிவிடுகிறது. உற்பத்தி யானது தேசிய பொருளாதாரம் முழுமைக்குமான அளவில் சமூகமயமாக்கப்படுகிறது.

   சோஷலிசத்தின்
கீழ் உழைக்கும் மக்கள் தங்களுக்காகவும், தங்களுடைய சமுதாயத்திற்காக வும் உழைக்கிறார்கள். சோஷலிச உற்பத்தியின் குறிக்கோளை அடைவதன் தொடர்புடன் அவர்களுடைய பொருளாதார ஆர்வங்களின் ஒற்றுமையானது, அவர்களுடைய உற்பத்தி நடவடிக்கைகளின் ஒற்றுமையைத் தீர்மானிக்கிறது. இவை எல்லாம், தேசிய பொருளாதார அளவில் சமூக உற்பத்தி யின் திட்டமிட்ட விகிதாச்சார வளர்ச்சிக்கான புறவயத் தேவையை ஏற்பாடு செய்கின்றன. திட்டமிட்ட வளர்ச்சி யான து சமூக உற்பத்தியினது வளர்ச்சியின் சர்வவியாபக வடிவ மாக மாறுகிறது. பொரு ளாயத பொருள்கள், சேவை கள் ஆகியவற்றின் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றையும் அது தழுவுகிறது. சோஷலிச உற் பத்தி உறவுகளின் இயல்புகளைக் குணாம்சப்படுத்திக் கொண் டிருப்பதால் சமூக உற்பத்தியின் திட்டமிட்ட விகிதாச்சார வளர்ச்சி சோஷலிசத்தின் ஒரு பொருளாதார விதி யாக மாறுகிறது.

இவ்விதியின் செயலானது பொருளாயதம், நிதி, மனித சக்தி ஆகியவற்றின் மூல வளங்களை பகுத்தறிவுடன் பயன் படுத்தத் தேவையான நிலைமைகளை உருவாக்கி, அவற்றை தேசிய பொருளாதார வளர்ச்சியின் தீர்மானமான வட் டாரங்களில் ஒருமுனைப்படுத்துவதை சாத்தியமாக்குகிறது. விஞ்ஞான - தொழில் நுணுக்க முன்னேற்றத்தில் அது ஒரு சக்தி வாய்ந்த காரணியாகும். நடப்பிலுள்ள விஞ்ஞான - தொழில் நுணுக்கப் புரட்சியின் போது அது தனிச்சிறப்புடைய முக்கிய மானது. வேலை செய்யும் நேரத்தை மீதப்படுத்தவும் சமூக உற்பத்தியை அதிக பயனுள்ளதாக்கவும் அது உதவு கிறது. இவ்வாறாக, குறுக்கீடு இல்லாத சமூக உற்பத்தியின் இயக்காற்றல் வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. இப்படி யாக முதலாளித்துவத்தினை விட சோஷலிசம் மறுக்க முடி யாத அளவிற்கு உயர்வானது என்பதை அது விளக்குகிறது.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்- முன்னேற்றப் பதிப்பகம்- 1982-
பக்கம் 339 - 340)

No comments:

Post a Comment