Thursday, 30 May 2019

5. சோஷலிசத்தின் புறவய வளர்ச்சி விதி


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

சோஷலிச நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் உற்பத்திச் சாதனங்களின் மீதான சமூக உடைமையால் ஒன்றிணைக்கப்பட்ட ஒரே பொருளாதார அமைப்பின் ஒரு அங்கமாகும். இவை அனைத்தும் மக்கள் எனும் ஒரே எஜமானனுக்குச் சொந்தமானவை. எங்கே ஒரே எஜமானன் இருக்கிறானோ அங்கே பொது நோக்கமும் செயற்பாட்டிற்கு உரிய ஒரே திட்டமும் பிறக்கின்றன.

திட்டமானது பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு இடையிலுள்ள நடவடிக்கைகளின் ஒத்திசைவிற்கு வழிகோலுகிறது. புதிய இரசாயனத் தொழிற்சாலை கட்டப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். கட்டிடத் துறையினர் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கையிலேயே நாடு முழுவதும் உள்ள இரசாயன இயந்திரக் கட்டுமானத் தொழிற்சாலைகள் தேவையான உப கரணங்களை உற்பத்தி செய்கின்றன; எண்ணெய் பதப்படுத் தும் தொழிற்சாலைகள் புதிய உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளை அளிக்கும் கட்டளையைப் பெறுகின்றன; மூலப் பொருளை உரிய நேரத்தில் தொழிற்சாலைக்கு எப்படிக் கொண்டு வந்து, தயாரான பொருட்களை வாடிக்கையாள ருக்கு எடுத்துச் செல்வது என்பதைப் பற்றி புகைவண்டித் துறையினர் தீர்மானிக்கின்றனர்; இரசாயனத் தொழில் நுணுக்கக் கல்லூரிகளில், யார் கட்டமைப்பாளர்களாக, பொறியியலர் க ளாக, நிபுணர்களாக மாற இருக்கின்றார் களோ அவர்களுக்கு இறுதி ஆண்டில் கூடுதல் விசேஷ பாடம் சொல்லித் தரப்படுகிறது; பள்ளிகளிலும் தனித் தேர்ச்சியளிக்கும் உயர் நிலை பள்ளிகளிலும் தொழிற்சாலையின் எதிர்காலத் தொழிலாளர்கள் நடைமுறைப் பயிற்சியையும் ஞானத்தையும் பெறுகின்றனர்.

திட்டம் என்பது தேசியப் பொருளாதாரத்தின் துறை களுக்கு இடையே சாதனங்களைப் பகிர்ந்தளித்து, உற்பத்தி வளர்ச்சி, உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தர உயர்வு, கலாச் சார வளர்ச்சி, உள் நாட்டு மற்றும் அயல் நாட்டு வர்த்தக அள வுகள், இன்னும் பல குறியீடுகள் ஆகியவற்றிற்கான கட்டளைகளை நிர்ணயிக்கக் கூடிய அரசு பத்திரம் ஆகும். - தேசியப் பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிடுவது என்பது முத லா ளித்து வத்தின் முன் சோஷலிசத்திற்கு உள்ள முக்கிய மேம்பாடுகளில் ஒன்றாகும். தனது ஆயிரமாண்டு வரலாற்றிலேயே சமுதாயம் முதன் முதலாக உற்பத்தியின் நிலைமைகளை ஆட்கொள்ளுகிறது, உணர்வு பூர்வமாக, சிந் தித்து இதை ஒழுங்கமைக்கிறது, இதன் மூலம் சமுதாய உழைப்பைக் கணிசமான அளவு சிக்கனப்படுத்துகிறது. இது போட்டி மற்றும் உற்பத்தியின் அராஜகத் தன்மையின் அழிவுத் தாக்கத்திலிருந்தும் பொருளாதார நெருக்கடிகளி லிருந்தும் என்றென்றைக்கு மாக விடுதலை பெறுகிறது.

நிச்சயமாக முந்தைய காலத்திலும் மனித நடவடிக் கையைத் திட்டமிட முயற்சிகள் செய்யப்பட்டன. தனிப் பட்ட பிரமுகர்கள், வர்க்கங்கள், ஸ்தாபனங்கள் தம் முன் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தை வைத்து இதை அடைவதற்கு மிக நம்பகமான, சுருக்கமான வழியை நிர்ணயிக்கவும் தமது நடவடிக்கைகளின் பயனாகத் தோன்றக் கூடிய விளைவுகளை முன்னறியவும் முயன்றன. அரசு- ஏகபோக முதலாளித்து வத் தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று பொருளாதாரத்திற் கான செயல் திட்டம் தீட்டுதல் என்று மேலே குறிப்பிடப் பட்டது.

சோஷலிசத்தில் மட்டும்தான் சமுதாயம் தனது வாழ்க் கையின் நிலைமைகளை ஆட்கொள்ளுகிறது என்று கருத ஆதாரம் அளிக்கக் கூடிய சோஷலிசத் திட்டமிடுதலின் கோட்பாட்டு ரீதியான பண்பு வேறுபாடு பின் வருபனவற்றில் அடங்கியுள்ளது. முதலாவதாக, திட்டமிட்ட ஒழுங்கமைப் பிற்கு ஏதோ தனிப்பட்ட துறைகள் மட்டும் உட்படுத்தப் படவில்லை, மாறாக தேசியப் பொருளாதாரம் முழுவதும் ஒட்டு மொத்தமாக சமுதாய வளர்ச்சி முழுவது மே திட்ட மிடப்படுகின்றன. இரண்டா வதாக, இத்தகைய ஒழுங்க மைப்பு ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமோ, ஏதோ தனிப் பட்ட நோக்கங்களுக்காகவோ நிறைவேற்றப்படுவதில்லை, மாறாக நிரந்தரமாக நடத்தப்படுகிறது.

சோஷலிசத்தில் மட்டுமே நிலவக் கூடிய புறவய நிலை மைகள் இதற்கு அவசியமானவை என்பது புரியக் கூடியதே. இவற்றில் ஒன்று, பொருளாதாரம், நாட்டுப் பரப்பில் நிலவும் சமுதாய உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை ஆகிய வற்றின் எல்லா அங்கங்களையும் உள்ளடக்கியுள்ள ஒரே தேசியப் பொருளாதாரக் கூட்டமைப்பாகும். இதிலிருந்து தான் சர் வா ம்ச திட்டமிடுதலின் வாய்ப்பு தோன்றுகிறது. இன்னொரு நிபந்தனை மக்கள் சமுதாய வளர்ச்சி விதிகளைப் புரிந்து கொள்வதும் ஓரளவு சரியாக எதிர்காலத்தை முன் னறிந்து இதற்கேற்றவாறு நோக்கங்களையும் இவற்றை அடையும் சாதனங்களையும் சரியாக நிர்ணயிக்கும் 10 திறமை யுமா கும். இத்தகைய ஞானத்தை மார்க்சியம்-லெனினி யம், விஞ்ஞானக் கம்யூனிசத் தத்துவம் அளிக்கின்றன.

ஆனால் தேசியப் பொருளாதாரத்தை உணர்வு பூர்வமாக நிர்வகிப்பதற்கு, திட்டங்கள் தன்னிச்சையாகத் தீட்டப்படும் கின்றன என்று பொருளல்ல. உதாரணமாக, போதுமான அளவு மூலப்பொருட்களின் அடித்தளமின்றி புதிய தொழிற் சாலைகளின் கட்டுமானத்தைத் திட்டமிட முடியாது என்பது முற்றிலும் புரியக் கூடியதே. காலணிகளின் உற்பத்தியைப் பத்து மடங்கு அதிகப்படுத்த வேண்டுமென ஓர் ஆண்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது, ஏனெனில் இதற்கான மூலப் பொருளை ஒரே நேரத்தில் பெற முடியாது, இந்தியாதி.

இந்த எடுத்துக்காட்டுகள் நம்மை முக்கிய முடிவிற்கு இட்டுச் செல்கின்றன. திட்டமிடுதலில் சோஷலிசத்தின் புற வ ய பொருளாதார விதிகளில் ஒன்றின் தேசியப் பொரு ளாதாரத்தின் திட்டமிட்ட, விகிதப்படியான வளர்ச்சி விதி செயல்பாடு வெளிப்படுகிறது. திட்டமிடும் வாய்ப்பை ஏற் படுத்தக் கூடிய விதி, பொருளாதாரத்தின் பல்வேறு துறை களுக்கு இடையே திட்டவட்டமான அளவுப் பொருத்தத் தைக் (விகிதத்தை) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனக் கோருகிறது.

சோஷலிச அரசின் பொருளாதார வளர்ச்சியில் பின் வரும் முக்கிய விகிதங்கள் உள்ளன:

-உற்பத்திச் சாதனங்களின் உற்பத்திக்கும் நுகர்வுப் பொருட்களின் உற்பத்திக்கும் இடையிலான விகிதம்;

-தொழில் துறை வளர்ச்சிக்கும் விவசாயத் துறை வளர்ச்சிக்கும் இடையிலான விகிதம்; - -தொழில் துறை, விவசாயத் துறை, கட்டுமானம், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவற்றின் தனிப் பட்ட துறைகளின் வளர்ச்சிக்கு இடையிலான விகிதம்;

-உற்பத்திக்கும் நுகர்விற்கும் இடையிலான விகிதம்; சேகரிப்பிற்கும் நுகர்விற்கும் இடையிலான விகிதம்;

-உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சிக்கும் ஊதிய உயர்விற்கும் இடையிலான விகிதம்;

-மக்களின் வளர்ந்து வரும் வருமானத்திற்கும் பண்டப் புழக்கத்தின் வளர்ச்சிக்கும் இடையிலான விகிதம்;

--உழைப்பு மூலாதாரங்களுக்கும் பல்வேறு துறைகளில் இவற்றின் தேவைக்கும் இடையிலான விகிதம்;

-நாட்டின் பொருளாதாரப் பிரதேசங்களின் வளர்ச் சிக்கு இடையிலான விகிதம்;

-உற்பத்தி மற்றும் உற்பத்தியில்லாத நடவடிக்கைத் துறைகளுக்கு இடையிலான விகிதம்.

திட்டமிட்ட, விகிதப்படியான வளர்ச்சி விதியைப் பயன் படுத்தி அரசு உணர்வு பூர்வமாகத் தேசியப் பொருளாதார விகிதங்களை நிலை நாட்டி, பாதுகாக்கிறது. ஆனால் இது தனிப் பட்ட விகிதக் குலைவுகள் தோன்றும் வாய்ப்புகளைத் தவிர்க்க வில்லை. இந்த விகிதக் குலைவுகளுக்கான முக்கியக் காரணம் திட்டமிடுதலில் நேர்ந்த தவறுதல்களும் ஒழுங்கமைப்பு வேலை யின் குறைகளுமாகும். பொருட்களை உற்பத்தி செய்யும் திட்டங்கள் பொருளாய த-தொழில் நுட்ப சப்ளை மற்றும் கூட்டுறவு சப்ளை திட்டங்களுடனும் கட்டுமானத் திட்டங்கள் நிதி ஒதுக்கீடுகள், பொருளா யா த நிதிகள், திட்டம் அமைக் கும் கால வரம்புகள், உபகரண சப்ளைகள் ஆகியவற்றுடனும் எப்போதும் பொருந்தி வருவதில்லை; இது உற்பத்தியின் சாதாரணப் போக்கைக் குலைக்கிறது. நடைமுறையில் பின் வருவதைப் போன்ற நிகழ்ச்சிகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டிருக்கும், ஆனால் தேவை யான உபகரணங்களில் ஒரு பகுதிக்கு உரிய நேரத்தில் ஆர்டர் செய்யப்பட்டிருக்காது அல்லது திட்ட அள வு குறைக்கப் பட்டிருக்கும், வளர்ச்சியின் உண்மையான வாய்ப்புகள் கணக் கில் கொள்ளப்பட்டிருக்காது, இந்தியாதி.

இயற்கைச் சக்திகளின் தாக்கத்தாலும் ஒரு சில விகி தக் குலைவுகள் ஏற்படலாம். சாதகமான பருவ நிலை நிலவா திருந் தால் ஒரு சில பயிர்களின் சாகுபடி குறையும். இதனால் இந்தப் பயிர்களோடு சம்பந்தப்பட்ட தொழில் துறைகளுக்குத் தேவையான அளவு மூலப்பொருள் கிடைக்காது போகும்.

இவ்வாறாக முதலாளித்துவத்தில் ஏற்படுவதைப் போன்று பொருளாதார அமைப்பால் சோஷலிசத்தில் விகிதக் குலைவு கள் தோன்றுவதில்லை; இவை மனிதர்களுடைய தவறுகளின் பயனாய், இயற்கைச் சீற்றங்களின் விளைவாய் தோன்று கின்றன, இவை தற்காலிகத் தனிப்பட்ட தன்மையை உடை யவை, உற்பத்திச் சக்திகளின் அழிவிற்கோ, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கோ, பொருளாதார நெருக்கடிகளுக்கோ இட்டுச் செல்வதில்லை.

அவ்வப்போது தோன்றக் கூடிய தனிப்பட்ட விகிதக் குலைவுகளுக்கு எதிரான போராட்டச் சாதன மாக அரசுக் கையிருப்புக்கள் பயன்படுகின்றன. உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் மீறல்களையும் தோல்விகளையும் அனு மதிக்காது இருக்கவும் முக்கியமாக எதிர் பாராத இயற்கைச் சீற்றங் களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும் சோஷ லிசச் சமுதாயம் மூலப்பொருள், எரிபொருள், நுகர்வுப் பொருட்கள், நிதி ஆகியவற்றிற்கான கையிருப்புக்களைத் தோற்றுவிக்கிறது.

சோவியத் யூனியனின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி சம்பந்தமான அரசுத் திட்டங்கள் கம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கையை தம்முள் அடக்கியுள்ளன, இதை நிறைவேற்றும் முக்கியச் சாதனமாகத் திகழ்கின்றன.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment