Tuesday 21 May 2019

சோஷலிச சமூக உற்பத்தியின் திட்டமிட்ட ஒழுங்கு முறை


 -– எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ்

சமூக உற்பத்தியின் ஒழுங்கு முறையானது சமூக உற் பத்தியின் திட்டமிட்ட, விகிதாச்சார வளர்ச்சி விதியின் மிக முக்கியமான செயல்பாடாகும். இத்தகைய ஒழுங்கு முறை ஒரே பொருளாதார மையத்திலிருந்து, உற்பத்தியின் நிர் வாகத்தையும், முழு தேசிய பொருளாதார அளவில் அத னுடைய பங்கேற்போரின் நடவடிக்கைகளையும் ஒத்திசைப் படுத்துவதைக் குறிக்கிறது. உற்பத்தியின் திட்டமிட்ட ஒழுங்கு முறையான து சமுதாயத்தின் பொருளாயத நிதி வளங்கள், மனித சக்திகள் ஆகியவற்றின் கணக்கெடுப்பதுட னும், தொழில் மற்றும் பிற சமூக தேவைகளின் கட்டமைப்பு, அளவு ஆகியவற்றின் கணக்கெடுப்பதுடனும் தொடங்கு கிறது. சமுதாயத்தின் வளங்கள், சமூக தேவைக ளின்படி உற்பத்தியை ஒழுங்கமைக்கும் நோக்கத்துடன், தேசியப் பொருளாதாரத்தின் வட்டாரங்கள், துறைகள், நாட்டின் வெவ்வேறு பகுதிகள், பலவித தொழில் நிலையங்கள் ஆகிய வற்றிற்கு இடையே வினியோகிக்கப்படுகின்றன. இப்படி யாக சமூக உற்பத்தியின் எல்லா அம்சங்களுக்கும் கண்டிப் பான விகிதாச்சாரமும் சமநிலையும் நிறுவப்படுகின்றன.

திட்டமிட்ட, விகிதாச்சார வளர்ச்சியின் விதியானது சமூக உற்பத்தியை ஒரு ஒழுங்குப்படுத்தும் கருவியாக மற்ற பொருளாதார விதிகளுடன், முக்கிய மாக சோஷலிசத்தின் பிரதான பொருளாதார விதியுடன் பரஸ்பரமாகச் செயல் படுகிறது. தேசியப் பொருளாதாரத்தின் உள்ளடக்கம், குண இயல்பு ஆகியவற்றை பிரதான விதி தீர்மானிக்கிறது.

உற்பத்தியின் திட்டமிட்ட ஒழுங்கு முறை ஓர் உணர்வு பூர்வமான, விஞ்ஞான ரீதியில் நிறுவப்பட்ட சமூக நட வடிக்கையாக, தேசியப் பொருளாதாரத்தில் செயல்படும் பொருளாதார விதிகளை ஆராய்ந்து பயன்படுத்துவதன் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

திட்டமிட்ட ஒழுங்கு முறையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி, சமுதாயத்தின் தேவைகள், சமுதாய வளர்ச்சியால் தீர்மானிக்கப்படும் உற்பத்தியின் கட்டமைப்பு, வீச்சு ஆகிய வற்றில் எதிர்பார்க்கும் மாற்றங்களின் விஞ்ஞான ரீதியான ஒரு முன்னுணர்வு (முன் அறிவிப்பு) ஆகும். இப்படியாக சமுதாயம் நடப்புக் காலத்திற்கு மட்டுமல்லாது நீண்ட காலத்திற்காகவும் அதனுடைய நடவடிக்கைகளை கணக் கிட்டு, ஒத்திசைப்படுத்துகிறது.

நேரடி ஆணைகள், இலாப நஷ்ட கணக்கு, விலைகள், கடன், தொழில் நிலையங்களின் இலாபம் இன்னோரன்ன தூண்டு கோல்களுடன் இணைத்து சோஷலிச அரசு திட்டமிட்ட ஒழுங்கு முறையை நடத்துகிறது. இந்நிகழ்ச்சிப் போக்கில் உழைக்கும் மக்கள் பங்கு பெறுகிறார்கள்; அவர்களின் முன்முயற்சிகள் கவனிக்கப்படுகின்றன.

சோஷலிசத்தின் கீழ் சமூக உற்பத்தியின் திட்டமிட்ட தன்மை , அரசின் தன்னிச்சையான தலையீடு தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது பூர்ஷ்வா அறிவாளிகளால் கூறப் படுவது மிகப் பிழையானது என்று இந்த விஷயத்தில் குறிப் பிடுவது தகுதியுடையதாகும். இடதுசாரி திருத்தல்வாதிகளும் திட்டமிட்ட வளர்ச்சியை அதே வழியில் விளக்கிப் பொருள் கூறுகின்றனர்.

வலதுசாரி திருத்தல் வாதிகளும் சோஷலிசத்தினை, அத னுடைய மையப்படுத்தப்பட்ட அரசு திட்டமிட்ட சமூக உற்பத்தியின் ஒழுங்கு முறை இல்லாமல் தவறாக வர்ணிக் கிறார்கள். உற்பத்தியானது மார்க்கெட் நிலைமையாலும் 4) திப்பு விதியின் தன்னியல்பான செயலாலும் ஒழுங்கு படுத்தப்படுகிறது என்று அவர்கள் கருதுகின்றனர். இப்படி யாக சோஷலிசத்தின் கீழான சமூக உற்பத்தியின் திட்ட மிட்ட, விகிதாச்சார வளர்ச்சி விதியின் செயலை மறுத்து, தன்னியல்பான வளர்ச்சி. போட்டி ஆகியவற்றின் மேன் மையைப் பிரச்சாரம் செய்கின்றனர்.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்- முன்னேற்றப் பதிப்பகம்- 1982-
பக்கம் 340 - 342)

No comments:

Post a Comment