Monday 27 May 2019

2. சோஷலிச சமுதாயத்தை நோக்கிய பாதையில் மாறுநிலைக் கட்டம்


-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986

முதலாளித்துவ உறவுகளின் வரம்புகளுக்குள் சோஷலிசம் தோன்ற முடியாது. சோஷலிசத்திற்குத் தேவையான பொருளாயத முன்நிபந்தனைகளும் இந்தச் சுரண்டல் அமைப்பைத் தூக்கியெறிய வல்ல சக்தியும் மட்டுமே இவ்வரம்புகளுக்குள் முதிர்ச்சியடைகின்றன. எல்லா உழைப்பாளிகளுக்கும் தலைமை தாங்கி முன் சென்று, சோஷலிசக் கட்டுமானத்திற்கான பாதையைத் திறந்து விடும் புரட்சிகர. மாற்றத்தை நிறைவேற்றும் தொழிலாளி வர்க்கம்தான் இச்சக்தியாகும். முதலாளித்துவ அமைப் பினுள், சோஷலிச அமைப்பிற்குத் தேவையான பொரு ளாயத முன்நிபந்தனைகள் (பொருளாதாரத்தின் எல்லா துறைகளிலும் பெருவீத இயந்திர உற்பத்தி), அதாவது நாட்டின் பொருளாதார எழுச்சிக்குப் பயன்பட வல்ல உற்பத்திச் சக்திகளும் முதிர்ச்சியடைகின்றன.

குறிப்பிட்ட வரலாற்று சூழ்நிலைகளில் சில நாடுகள் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தைத் தவிர்த்து சோஷ லிச மாற்றங்களுக்கு நேரடியாக வர முடியும் என்பதை இது மறுக்கவில்லை. இந்த நாடுகள், சோஷலிசம் வெற்றியடைந்த நாடுகளை ஆதாரமாகக் கொண்டு ஏகாதிபத்தியத்திடமிருந்து அரசியல் மற்றும் பொரு ளாதார விடுதலையைப் பெறும் நிலைமை வரும் போது மேற்கூறியதற்கான வாய்ப்புகள் வரலாற்று ரீதியாக உருவாகும்.

ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சோஷலிசம் தயாரான வடிவில் திடீரென தோன்றாது. ஓரளவு நீண்ட வரலாற்றுக் காலகட்டம் இதற்குத் தேவை. இக் காலகட்டத்தில் பழைய அமைப்பின் மிச்ச சொச்சங்கள் (பெரும்பாலும் கடும் வர்க்கப் போராட்டத்தின் மூலம்) அகற்றப்படுகின்றன, புதிய சோஷலிச சமுதாயத்தின் அடிப்படை உருவாக்கப்படுகிறது. இதுதான் முதலாளித் துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கிய மாறுநிலைக் கட்டம் எனப்படுகிறது. உழைப்பாளிகளின் அரசியல் ஆட்சி யை நிலைநாட்டுவதுதான் இதன் துவக்கத்தைப் பற்றி அறிவிக்கும் முதல் நடவடிக்கையாகும். மக்களின் உழைப் பால் தோற்றுவிக்கப்பட்டவை, சட்டபூர்வமாக எவை மக்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமோ அவை இதன் பயனாய் உழைப்பாளிகளின் கரங்களுக்கு வரு கின்றன.

ஏதோ சோஷலிசம் கொள்ளையடிப்பிலிருந்து துவங்குவதாக சோஷலிசத்தின் எதிரிகள் தீய பிரச்சாரம் செய்வது பொய்யானதாகும். பெரும் முதலாளித்துவ தனி யுடைமை ஒழிக்கப்படுவது ஒரு நீதியான நடவடிக்கை ஆகும், இதைத்தான் கா. மார்க்ஸ் , ''பறிமுதல்காரர்கள் பறிமுதல் செய்யப்படுவது” எனும் பிரபல சொற் றொடரால் குறிப்பிட்டார். சுரண்டலாளர்களின், குறிப் பாக அன்னிய மூலதனத்தின் பொருளாதார ஆதிக் கமானது கொள்ளை, பலாத்காரம், செல்வத்தை உண்மை யாகத் தோற்றுவிப்பவர்களின் வியர்வையையும் குருதி யையும் உறிஞ்சுவது ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலை பெற்ற மக்களுக்கு நிரூபிக்கத் தேவையில்லை. இவர்களுக்கு இது தம் நீண்ட வரலாற்று அனுபவத் திலிருந்தே தெரியும்.

தன் கரங்களில் அரசியல் ஆட்சியதிகாரத்தை ஒன்று திரட்டி, பொருளாதாரத்தின் முக்கிய துறைகளைக் கண்காணித்து வரும் தொழிலாளி வர்க்கம் எல்லா உழைப்பாளிகளுக்கும் தலைமை தாங்கி சோஷலிச மாற் றங்களை நிறைவேற்றுவதில் இறங்குகிறது. இந்த மாறு நிலைக் கட்டத்தில் பொருளாதாரம் பல அமைப்புகளை உடையதாக உள்ளது. இதில் பின்வரும் மூன்று முக்கிய பொருளாதார அமைப்புகள் இருக்கின்றன: விரைவாக வளர்ந்து வரும் சோஷலிச அமைப்பு (இதை தொழிலாளி வர்க்கம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது); சிறு பண்ட அமைப்பு (இதை விவசாயிகள், கைத் தொழிலாளர்கள், குடிசைத் தொழில் புரிவோர் மற்றும் கூலியுழைப்பைப் பயன்படுத்தாத மற்ற சிறு உற்பத்தி யாளர்கள் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்); தனியுடைமை முதலாளித்துவம் (நகரங்களிலும் கிராமங் களிலும் உள்ள, கூலியுழைப்பைப் பயன்படுத்தும் முத லாளித்துவ தொழில் நிறுவனங்கள் இதை பிரதிநிதித்துவம் செய்கின்றன). வேறு விதமான அமைப்புகளும் இருக்கக் கூடும். உதாரணமாக, நாட்டில் குலமரபு, நிலப்பிரபுத்துவ உறவுகள் இருந்தால் தந்தைவழி அமைப்பு நிலவக் கூடும். இது தவிர அரசு முதலாளித்துவ அமைப்பும் (சோஷலிசப் பொதுவுடைமைக்கான நிலைமைகளைத் தயார்படுத்த அரசு இதைப் பயன்படுத்துகிறது) இருக்கக் கூடும்.

சோஷலிசத்தை நிர்மாணிக்க, இந்த பல்வேறு அமைப்புகளை அகற்றக் கூடிய பொருளாதார நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். நாடு தழுவிய அளவில் சோஷலிச உற்பத்தி உறவுகள் வெற்றி வாகை சூட இது அவசியம்.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் தாக்கத்தால் தகர்ந்து விழுந்த காலனியாதிக்க முறையின் இடிபாடு களின் மீது, சோஷலிசத் திசையமைவைக் கொண்ட நாடுகள் தோன்றி, வளர்ந்ததானது. சோஷலிசக் கட்டுமானத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்திய புதிய வரலாற்று அனுபவமாக விளங்கியது. சோஷலிசத் தை நெருங்கி வரும் போக்கில் இந்நாடுகளில் சில தேசிய-ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தைக் கடந்து கொண் டிருக்கின்றன, மற்றவை சமூக வளர்ச்சியின் உயர்வான கட்டத்தில் இருக்கின்றன, அதாவது சாராம்சத்தில் புரட்சிகர மாற்றங்கள் சமுதாய வாழ்வின் எல்லா துறை களையும் ஆட்கொள்கின்றன.

சோஷலிசத் திசையமைவு நாடுகளில் ஏகாதிபத்திய ஏகபோகங்கள், ஸ்தல பெரும் முதலாளி வர்க்கம் மற்றும் நிலப்பிரபுக்கள் ஆகியோரின் நிலைகள் தாக்கு தலுக்கு ஆளாகின்றன; பொருளாதாரத்தில் அரசுத் துறையை அரசு வளர்க்கிறது, அன்னிய மூலதனத்தின் நடவடிக்கையைக் கவனமாக மேற்பார்வையிடுகிறது, திட்ட அடிப்படைகளைப் புகுத்துகிறது, விவசாய சீர் திருத்தங்களைச் செய்கிறது, கிராமத்தில் கூட்டுறவு இயக்கத்தை ஊக்குவிக்கிறது, உழைப்பாளிகளின் நலன்களுக்காக மற்ற முற்போக்கு நடவடிக்கைகளை மேற் கொள்கிறது.

இந்த சமூக-பொருளாதார மாற்றங்களின் வேகங்களும் ஆழமும் வெவ்வேறு நாடுகளில் வெவ் வேறானவை. ஆனால் இவற்றின் முக்கியப் போக்குகள் ஒரே மாதிரியானவை. இவையெல்லாம் முதலாளித்துவ மற்ற வளர்ச்சிக் கட்டத்தில், சோஷலிச சமுதாய அடிப் படைகளை உருவாக்கத் தேவையான சித்தாந்த, அரசியல், பொருளாதார, சமூக முன்நிபந்தனைகளை ஏற்படுத்தும் காலகட்டத்தில் இருக்கின்றன.

மாறுநிலைக் கட்டத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று வர்க்கப் போராட்டம் வலுப்பதாகும். இதற்குச் சில காரணங்கள் உண்டு. சமூக-அரசியல் மற்றும் பொரு ளாதார மாற்றங்கள் ஆழமடைய ஆழமடைய சுரண்டும் வர்க்கங்களின் சலுகைகள் மேன்மேலும் குறைகின்றன, இவற்றின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன. உள் நாட்டு பிற்போக்கின் எதிர்ப்பிற்கு வெளியிலிருந்து ஏகாதிபத்திய மற்றும் நவீன காலனியாதிக்கச் சக்திகள் (இவை இந் நாடுகளை மீண்டும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர முயலுகின்றன) தீவிர ஆதரவளிக்கின்றன.

தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் விவசாயி களின் மேன்மேலும் வலுப்பட்டு வரும் ஒத்துழைப்பு இத் தகை முயற்சிகளுக்கு எதிராய் நிற்கிறது. மக்கள் தொகை யில் மிகப் பெரும்பான்மையினராய் உள்ள அவர்கள் மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழித்துக் கட்டுவதிலும், உண்மையான ஜன நாயகத்தை நிலை நாட்டுவதிலும், சோஷலிசக் கட்டுமானத்திற்கு மாறிச் செல்வதற்கான முன் நிபந்தனைகளைத் தோற்றுவிப்பதிலும் அக்கறை கொண்டுள்ளனர். எந்த நாடுகளில் எல்லாம் மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக் கொண்ட உழைப்பாளர் கட்சிகள் தலைமையிடத்தில் உள்ளனவோ அவையெல்லாம் சோஷலிச வளர்ச்சிப் பாதையில் விரைந்து நடைபோடுகின்றன.

No comments:

Post a Comment