-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986
சோஷலிசப் புரட்சிக்குப்பின் நாடு தொழிற்துறைமயப்
படுத்தப்பட்டு, விவசாயத் துறை கூட்டுறவுமயப்படுத்தப் பட்ட சூழ்நிலைகளில், விஞ்ஞான அடிப்படையில்
நடை பெறும் இயந்திரமயப்படுத்தப்பட்ட பெருவீத உற்பத்தி யின் தேவைகளுக்கேற்ற தேர்ச்சி
மிகு நிபுணர்களைப் பயிற்றுவிப்பது பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சோவியத் யூனியனில்
இக்கடமையை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. அதாவது ஜாரிச ருஷ்யா காலத் திலிருந்து
பெரும்பாலான மக்கள் கல்வியறிவற்றவர் களாக இருந்த நிலையை மிகக் குறுகிய காலகட்டத்தில்
மாற்ற வேண்டியிருந்தது. புரட்சிக்கு முன் ருஷ்ய மக்களில் 9 -49 வயதுப் பிரிவினரில்
கிட்டத்தட்ட முக்கால் பகுதியினருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. மிகப் பெரும்பாலான
மக்களுக்கு பள்ளி செல்லும் வாய்ப்பே இருக்கவில்லை.
சோவியத் ஆட்சி மக்கள் மத்தியிலிருந்த சமூகப் பிரிவுகளை
அகற்றி, சமூக நிலை, தேசிய இனம், மத நம்பிக்கை, பால் ஆகியவை எப்படி யிருந்தாலும் எல்லா
உழைப்பாளிகளுக்கும் பள்ளிக் கதவுகளைத் திறந்து விட்டது. மக்கள் கல்விக்காக அரசு மேற்கொண்ட
நடவடிக்கைகளின் பயனாய் 20 ஆண்டு களில் கிட்டத்தட்ட 60 மில்லியன் மக்கள் கல்வியறிவு
பெற்றனர், கல்வியறிவற்றவர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சமாக்கப்பட்டது, பின்னர் கல்வியறிவின்மை
எல்லா இடங்களிலும் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட் டது. ஆனால் வி. இ. லெனின் கூறியபடி
“கல்வியறிவை மட்டும் வைத்துக் கொண்டு நீண்ட தூரம் செல்ல முடியாது. நாம் நமது கலாசாரத்தைப்
பெருமளவு உயர்த்த வேண்டும்''.( V. I. Lenin, Collected Works, Vol. 33, p. 74.) நாட்டில்
பல உயர் மற்றும் தொழில் கல்விக் கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தொழிலாளர் கல்வி வகுப்புகள்
என்றழைக்கப்பட்டவை முக்கியப் பங்காற்றின; இவ்வகுப்புகளை முடித்தால் பொது செகன்டரி கல்வி
கிட்டியதோடு, உயர் கல்விக் கூடத்தில் சேரும் உரிமையும் வழங்கப்பட்டது.
1939ஆம் ஆண்டி லேயே (அதாவது சோஷலிசப் புரட்சி நடைபெற்று
22 ஆண்டுகள் கழித்து) தேசியப் பொருளாதாரத்தில் பணியாற்றிய ஒவ்வொரு 1,000 நபர்களிலும்
123 பேர்கள் உயர் மற்றும் செகன்டரி (முழு மற்றும் முழுமையடை யாத) கல்வி கற்றிருந்தார்கள்.
இப்போது இப்புள்ளி விவரங்கள் சாதாரணமானவையாகத் தோன்றலாம். 1982ஆம் ஆண்டின் இறுதியில்
சோவியத் நாட்டில் வேலை செய்த மக்களில் கிட்டத்தட்ட 85 சதவிகிதத்தினர் செகன்டரி (முழு
மற்றும் முழுமையடையாத) மற்றும் உயர் கல்வி கற்றவர்களாயிருந்தனர். ஜாரிச ருஷ்யாவின்
முந்தைய பின்தங்கிய தேசிய வட்டங்களில் - கிழக்கிலிருந்த சோவியத் குடியரசுகள் உட்பட
- குறிப்பாக மக்களின் கல்வித் தரம் வேகமாக அதிகரித்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
உதாரணமாக, உஸ்பெக் சோவியத் சோஷ லிசக் குடியரசில் 10, அதற்கு மேற்பட்ட வயதுடையவர் கள்
மத்தியில் 1,000 நபர்களில் உயர் மற்றும் செகன்டரி கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை
1939 முதல் 1982 வரை 12 மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது; இக்குறியீடு தாஜிக் சோவியத்
சோஷலிசக் குடியரசில் 15.5 மடங்கு அதிகரித்தது.
பல்வேறு விஞ்ஞான, தொழில் நுட்பத் துறைகளில் உயர்
கல்வி பெற்றவர்கள் உண்மையான மக்கள் அறிவுத்துறையினரின் அடிப்படையை ஏற்படுத்தினார்கள்.
இந்த மக்கள் அறிவுத் துறையினர் தோன்றியதானது லெனி னுடைய சோஷலிசக் கட்டுமானத் திட்டத்தின்படி
சோவி யத் நாட்டில் நடந்தேறிய கலாசாரப் புரட்சியின் பயன் மிகு முடிவுகளில் ஒன்றாகும்.
இது உண்மையான புரட்சி கர நிகழ்ச்சிப் போக்காக இருந்தது. மக்களை கலாசார சிகரத்திற்கு
இட்டுச் செல்வது, கலாசாரச் சாதனைகள் பரவலான மக்கள் திரளினருக்கு கிட்டும்படி செய்வது,
முன்னணி சோஷலிசக் கலாசாரச் சாதனைகளால் உலக நாகரிகத்தை செழுமைப்படுத்துவது ஆகியவைதான்
இதன் நோக்கங்களாகும்.
நாட்டைத் தொழிற்துறைமயப்படுத்துவது, விவசாயத் துறையை
கூட்டுறவுமயப்படுத்துவது, கலாசாரப் புரட்சி ஆகியவற்றின் செயல்திட்டங்கள் வெற்றிகரமாக
நிறை வேற்றப்பட்டதன் பயனாய் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும்
மாறுநிலை கட்டத் தின் முரண்பாடுகள் அகற்றப்பட்டன, சோவியத் யூனியன் சோஷலிச வளர்ச்சிக்
கட்டத்தில் அடியெடுத்து வைத்தது. இவ்வாறாக மார்க்சிய ஆசான்களின் விஞ்ஞான கணிப்பு கள்
வரலாற்றிலேயே முதன்முதலாக நடைமுறையில் நிறைவேற்றப்பட்டன. மனித வரலாறு யதார்த்த சோஷ
லிசத்தின் அனுபவத்தால் செழுமையடைந்தது. இத்தோடு சேர்ந்து புதிய சமுதாய கட்டுமானப் பாதைகளைப்
பற்றிய அடிப்படை ஞானத்தின் அஸ்திவாரம் என்ற வகையில் பொருளாதாரத் தத்துவமும் வளர்ந்தது.
இதன் ஒரு சில அடிப்படை கருத்துநிலைகளைப் பார்ப்போம்.
No comments:
Post a Comment