Thursday 30 May 2019

6. சோஷலிசத்தில் திட்டத்தின் பிறப்பு


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

சோஷலிச நிலைமைகளில் திட்டங் கள் தேசியப் பொருளாதாரத்தின் திட்டமிட்ட, விகிதப்படியான வளர்ச்சி பற்றிய புறவய விதியைப் பிரதிபலிக்க வேண்டும். இந்த விதியைப் புரிந்து கொண்டு, அதைப் பயன்படுத்தக் கற்று, இதன் கோரிக்கைகளுக்கேற்ற திட்டங்களைத் தீட்டு வதில் தான் அரசு அமைப்புகளின் கடமை அடங்கியுள்ளது.

திட்டமிடுதல் உடனடித் திட்டமாக அல்ல து எதிர்காலத் திட்டமாக, அதாவது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்கூட்டியே தீட்டப்படும் திட்டமாக இருக்கலாம். எதிர்காலத் திட்டங் களுக்கு முக்கியப் பாத்திரம் உண்டு. திட்டங்களில் உற்பத்தி வளர்ச்சியின் வேகங்களும் விகிதங்களும் நிர்ணயிக்கப்படு கின்றன, பல்வேறு துறைகள், குடியரசுகள், பொருளாதாரப் பிரதேசங்களில் செய்யப்படும் முதலீட்டின் அளவு முடிவு செய்யப்படுகிறது, புதிய தொழில் துறை மையங்கள், பெரும் தொழிற்சாலைகள், போக்கு வரத்து வழிகள் ஆகியவற்றின் தோற்றமும் பல்வேறு துறைகளைத் தொழில் நுட்ப ரீதியாகப் புனரமைப்பதை நிறைவேற்றுவதும் பல்வேறு சமூக நட வடிக்கைகளும் (வாழ்க்கைத் தர உயர்வு, வீட்டு வசதிகள் மற்றும் மருத்துவச் சேவையின் மேம்பாடு, பொதுக் கல்வி வளர்ச்சி போன்றவை) தீட்டப்படுகின்றன.

பொருளாதார, சமூகக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றவும் நவீன சூழ்நிலைகளில் விஞ்ஞான - தொழில் நுட்ப முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தவும் உடனடி மற்றும் எதிர்காலத் திட்டங்களின் பரஸ்பர இணைப்பு முறை துணை புரிகிறது. இம்முறை விஞ்ஞான- தொழில் நுட்ப முன்னேற்றத்தின் கூட்டுச் செயல் திட்டத்தையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கியத் திசைகளையும் பொருளாதார, சமூக வளர்ச்சித் திட்டத்தையும் (ஆண்டுவாரியாக) ஆண்டுத் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது. சோவியத் யூனியனில் ஒவ்வொரு ஆண்டிற்குமென கட்டளைகளைக் கொண்ட ஐந் தாண்டுத் திட்டம் இம்முறையில் மைய இடத்தை வகிக் கிறது. இது தான் அமைச்சகங்கள், நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்களின் பொருளாதார நடவடிக்கையின் அடிப் படையாக மாறி வருகிறது.

ஐந்து, பத்து, இருபது ஆண்டுகள் கழித்து நாட்டின் மக்கள் தொகை எவ்வளவாயிருக்கும்? வாங்கும் சக்தி எந்த அள வில் இருக்கும், ஒவ்வொரு குறிப்பிட்ட துறைக்கும் எவ் வளவு வேலையாட்கள் தேவைப்படுவார்கள்? இந்தக் கேள்வி களுக்கும் இதைப் போன்ற நூற்றுக்கணக்கான கேள்வி களுக்கும் தரப்படும் பதில் சக்திகளையும் சாதனங்களையும் சரிவரப் பகிர்ந்தளிக்க உதவும். தகவல்களைச் சேகரித்துப் பகுப்பாய்வு செய்யும் நவீன முறைகளும் கணக்கீட்டு தொழில் நுட்பமும் எதிர்காலத்தைக் கணிப்பதையும் எனவே இதன் அடிப்படையில் நீண்ட காலத் திட்டமிடுதலையும் சாத்திய மாக்கியுள்ளன.

சோவியத் யூனியனில் ஐந்தாண்டுத் திட்டங்கள், கம்யூ னிஸ்டுக் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட கட்டளைகளின் அடிப் படையில் தீட்டப்படுகின்றன. சோவியத் யூனியன் கம் யூ னிஸ்டுக் கட்சியின் 26 வது காங்கிரஸ் 1981-1985ம் ஆண்டு களுக்கான மற்றும் 1990ம் ஆண்டு வரைக்கும் சோவியத் யூனியனின் பொருளாதார, சமூக வளர்ச்சியின் முக்கியப் போக்குகளை ஆமோ தித்தது.

திட்டமிடும் நிகழ்ச்சிப் போக்கிற்குக் கீழிருந்து மேல் நோக்கியும் மேலிருந்து கீழ் நோக்கியும் இரு எதிரெதிரான திசைகள் உண்டு. ஒவ்வொரு நிறுவனத்தின் திட்டமிடும் பிரிவும் உழைப்புக் கூட்டும் குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலை அல் லது ஆலையில் உற்பத்தியின் வளர்ச்சித் திட்டத்தைத் தீட்டி அதை அமைச்சகத்திற்கு அல்லது இலாக்காவிற்கு அளிக்கின்றன. தனிப்பட்ட அமைச்சகங்கள், இலாக்காக் களின் திட்டங்கள் ஒன்றாகச் சேர்க்கப்படுகின்றன; ஓர் அரசு திட்டம் தீட்டப்படுகிறது. இதில் பொருளாதாரத்தின் ஒவ் வொரு துறைக்கும் இதன் தனிப்பட்ட பிரிவுகளுக்குமான திட்டவட்டமான கடமைகள் அடங்கியிருக்கும். இவ்வாறாக உழைப்புக் கூட்டுகளின் முன் முயற்சிகளுக்கும் பொது மக்கள் சித்தத்திற்கும் இடையே அங்கக ரீதியான ஒத்திசைவு அடையப்படுகிறது.

இருப்புகளை ஏற்படுத்துவது திட்டக் கட்டளைகளை ஆதாரப் படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. இருப்பு எனும் கருதுகோள் சமநிலைப்படுத்தல் எனும் வார்த்தையின் பொருள் (ளுக்கு நேரடியாக ஒத்ததாக உள்ளது.

எந்த ஒரு இருப்பிலும் இரு பிரிவுகள் - வரவு , செலவு-உண்டு. வரவில் எல்லா மூலாதாரங்களும் செல வில் திட்டக் காலத்து செலவுகள் அனைத்தும் சேர்த்துக் கொள்ளப்படும்.

இருப்புகள் பொருளாயத, நிதி மற்றும் உழைப்புச் சக்தி இருப்பு என்று பிரிக்கப்படுகின்றன. பொருளாயத இருப்பு கள் தனிப்பட்ட முக்கியமான தொழில் துறை, விவசாயப் பொருட்களின் விஷயத்தில் பொருட்களின் அளவில் (டன் கள், எண்ணிக்கை முதலியன) உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, நிலக்கரி இருப்பு, தானியப் பொருட்கள் இருப்பு, மின்சக்தி இருப்பு, எஃகு இருப்பு முதலியவை. ஒரே மாதிரியான பொருட்களை ஒன்று சேர்த்தும் எரிபொருள் இருப்பு, உபகரணங்கள் இருப்பு முதலியவை இருப்புகள் உருவாக்கப்படுகின்றன.

பொருளாயத இருப்புகள் ஒரே விதமான விகிதத்தை மட்டுமே தனிப்பட்ட பண்டங்களின் உற்பத்திக்கும் நுகர் விற்கும் இடையிலான விகிதம்-பிரதிபலிக்கின்றன. ஆனால் மொத்தமாக பொருளாதாரத்தைச் சம நிலைப்படுத்த இன் னும் சில விகிதங்களை நிலை நாட்ட வேண்டும். உதாரண மாக, மக்க ளின் வருமானங்களுக்கும் ஊதியம், கூட்டுப் பண்ணை உறுப்பினர்களின் வருமானம், ஓய்வு ஊதியம், உதவிப் பணம் முதலியவை கடைகளில் பண்டங்களை வாங்கு தல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, பொழுது போக்கு, உண வு முதலிய வசதிகளுக்காக செலவழித்தலுக்கும் இடை யில் உள்ள விகிதத்தை நிலை நாட்ட வேண்டும்.

எல்லா இருப்புகளும் அமைக்கப்பட்டு ஒத்திசைக்கப் பட்டதும் திட்டத்தின் இறுதி வடிவம் சோஷலிச அரசின் உயர் மட்ட நிர்வாக மற்றும் சட்டமியற்றும் அமைப்புகளால் அங்கீகரிக்கப்படுகிறது. இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டதும் திட்டம் சட்டமாகிறது, இதை நிறைவேற்ற அனைவரும் கடமைப்பட்டவர்களாகின்றனர். ஏதாவது ஒரு துறையில் திட்டம் மீறப்பட்டாலோ அல்லது நிறைவேற்றப்படாதிருந். தாலோ அது தேசியப் பொருளாதாரம் முழுவதையும் பாதிக் கிறது , உற்பத்தியின் மற்ற துறைகளில், போக்குவரத்து , வர்த்த கம், நிதி முதலியவற்றில் பிரதிபலிக்கிறது.

பொருளாதாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சி இதன் உயர் வான வளர்ச்சி வேகங்களுக்கு வகை செய்கிறது, நாட்டின் சமூகச் செல்வத்தைப் பெருக்கவும் மக்களது பொருளா யத, ஆன் மீக வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவுகிறது.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment