சோஷலிசப்
பொருளாதாரத்தின் பண்டம்-பணம் ஆகிய உறவுகளின் நவீனத் தன்மை, அவை வெளிப்படுத்தும் சோஷலிச உற்பத்தி உறவுகளில் அடங்கியிருக்கிறது. திட்டமிடப்பட்ட வழிகளில் அமைக்கப் பட்டுள்ள சோஷலிச உற்பத்தி உறவு கள் இவைதான், சோஷலிச சமுதாயத்தில் மதிப்பு விதியானது அதன் உள் அடக்கத்திலும் படிவத்திலும் முதலாளித்துவத்தின் கீழ் அந்த விதி பெற் றிருந்ததைவிட முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகும்.
சோஷலிசத்தின் கீழ் ஒவ்வொரு உழைக்கும் மனிதனும் சமூகத் தேவைகளை திருப்தி செய்யும் பங்குபோக அவன் சமு தாயத்திற்கு எவ்வளவு தருகிறானோ அவ்வளவு சமுதாயத்திட மிருந்து பெற்றுக் கொள்கிறான். அவன் சமுதாயத்திற்கு ஒரு வகையில் கொடுக்கும் உழைப்பின் அளவு, இன்னொரு வகையில் அவனுக்குத் திரும்பக் கொடுக்கப் படுகிறது, இது தனி உழைப் பாளருக்கு மாத்திரமல்லாமல் கூட்டுப் பணணைகள், நிறுவனங்கள், கிளைகள் ஆகிய அனைத்திற்கும் பொருத்தமுள்ளதாகும்.
ஏனெ னில் ஒரு நிறுவனம் அல்லது கிளை இயற்கையாக வளர்ச்சியடை வதற்கு அதன் செலவீடு திரும்பக் கொடுக்கப்பட்டாக வேண்டும். உதாரணமாக வேளாண்மையின் செலவு திரும்பக் கொடுக்கப் படாவிட்டால் அது முன்னேற முடியாது, உற்பத்தியின் பொருள் சார் தூண்டுகோல் செலவீடு திரும்பக் கொடுக்கப் படுவதன் மீது சார்ந்துள்ளது.
சோஷலிச பண்ட உற்பத்தியின் அடிப்படையான அம்சங் களையும், மதிப்பு விதியின் அம்சங்களையும், சோஷலிசத்தின் கீழ் அந்த விதியோடு தொடர்புடைய மற்ற எல்லா இனங்களின் அம்சங்களையும் இது நிர்ணயம் செய்கிறது.
முதலாவதாக,
சோஷலிசப் பொருளாதாரத்தில் மதிப்பு விதியானது முடிவில்லாத விலை ஏற்ற இறக்கங்களின் மூலமாக தாமாகவே இயங்கும் ஒரு சக்தியாக இருக்கவில்லை. சோஷலிச மதிப்பு விதி உற்பத்தி அராஜகத்துக்கும், அழிவுண்டாக்கும் நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்லாது.
இரண்டாவதாக,
மனிதனை மனிதன் சுரண்டுவது என்பது ஒழிக்கப்பட்டதோடு, உழைப்பு ஒரு பண்டமாக விளங்குவது நின்று விடுகிறது. வாங்கி விற்கும் ஒரு பண்டமாக விளங்குவது நின்றுவிடு கிறது. வேளாண்மை சோஷலிசப் புனரமைப்பிற்குள்ளாவதோடு, நிலமும், வாங்கி விற்கப்படும் ஒரு பண்டமாக விளங்குவது நிறுத்தப் படுகிறது. எனவே, சோஷலிசத்தின் கீழ் மதிப்பு விதி தனியார் சொத்து ஆதிக்கம் செலுத்தும்போது தவிர்க்க முடியாதபடி கொண்டிருந்த விளைவுகளைக் கொண்டிருக்கவில்லை. அது முத லாளித்துவ உறவுகளை, அவைகளில் உள்ள எல்லா முரண்பாடு களோடும் தோற்றுவிக்காது. ஏனெனில் சோஷலிச சமுதாயத்தில் உற்பத்தி சாதனங்கள், மூலதனமாகவும், சுரண்டுதலின் மூலங் களாகவும் மாற முடியாது. நுகர்வுப் பண்டங்கள் மட்டுமே வாங்கப் பெற்று, சொந்தச் சொத்தாக மாற்றப்பட முடியும்.
இந்த வழியில் சோஷலிச சமுதாயத்தில் மதிப்பு விதியும், அதன் மீது சார்ந்துள்ள இனங்களும் - விலை, கூலிகள், இலாபம் முதலியன புதியதோர் பொருளடக்கத்தைப் பெறுகின்றன. அவை திட்டமிடப்பட்ட சோஷலிசப் பொருளாதாரத்தின் பொரு ளாதார இனங்களாகும். மனிதனை மனிதன் சுரண்டுதல், உற் பத்தியில் அராஜகம் முதலியன நீக்கப்பட்ட இனங்களாகும்.
சோஷலிசப்
பொருளாதார அமைப்பில் மதிப்பு விதி பொரு ளாதாரத்தின் திட்டமிடப்பட்ட விகிதாச்சார வளர்ச்சிக்கு புறம் பானதல்லாமல் அத்தோடு பிரிக்க முடியாதபடி இணைக்கப் பட் டுள்ளது. மதிப்பு விதி சோஷலிசத்தின் பாரபட்சமற்ற பொருளா தார விதிகளின் முழு அமைப்பின் பிரிக்க முடியாத ஒரு பாக மாகிறது. விஞ்ஞான ரீதியான திட்டமிடுதல் இந்த விதிகளை மேலும் சிறப்பாகப் புரிந்து கொள்வதிலும், பிரயோகிப்பதிலும் அடங்கியுள்ளது.
இவ் விதிகளின் ஒருமைப்பாடு, அவைகளின் பிரிக்கப்பட முடியாத இணைப்பு, தொடர்புச் செயல்பாடு, மையப்படுத் தப்பட்ட திட்டமிடப்பட்ட பொருளாதார மேலாண்மை யின் பாரபட்சமற்ற அவசியத்தை உருவாக்குகின்றன. பரந்த செயல் அளவோடும், சோஷலிச நிறுவனங்களின் அடிப்படைக் கூறுகளின் பொருளாதாரச் சுதந்திரத்தோடும் கலந்து இதை உருவாக்குகின்றன. திட்டமிடப்பட்ட மேலாண்மையின் பொருளா தார வழிமுறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அவை வலுவாக்கப் படுதல் ஆகியவற்றை எதிர் நோக்குகிறது. விலை, இலாபம், கூலிகள், போனஸ்கள், கடன், வட்டி, வியாபாரம், நிதி போன்ற சோஷலிச மதிப்பு இனங்களின் அமைப்பின் உதவியோடு இது எதிர் நோக்கப் பெறுகிறது.
மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள் கைகளில் நிறுவப் பெற்ற சோஷலிசக் கட்டுமானத்தின் அனுபவ மும், பொது மக்கள் கூட்டத்தின் ஆக்கபூர்வ அனுபவமும், ஒரு பொருளாதார வழிமுறைகளின் அமைப்பை உருவாக்கியுள்ளது , இது மொத்தத்தில் பகுத்தறிவுக்கேற்ற செயல் திறமுள்ள மேலாண்மையை ஊர்ஜிதப் படுத்தப் பயன்படுத்த முடியும், இம் முறைகள் திட்டமிடப்பட்ட பொருளாதார மேலாண்மை யோடு மதிப்பு விதியின் ஆக்க பூர்வப் பயன்பாட்டை ஒரே கலவை யாக்கியதன் அடிப்படையில் எழுந்தவை ஆகும்.
சோஷலிசப்
பண்ட உற்பத்தியின் மதிப்பு இனங்கள் நிறு வனங்கள், அவைகளின் பணியாளர்கள், ஒவ்வொரு தனித்தனி - தொழிலாளி ஆகியோரின் பணியை மதிப்பிடுவதற்குரிய பாரபட்சமற்ற அடிப்படைகள் ஆகும். பொருளாதாரக் கழகங்களையும், தொழில், வேளாண்மை நிறுவனங்களையும், அவைகளின் சங்கங் களையும், கட்டுமான, வரை பிரிவு அமைப்புகளையும் அடிக்கடி எதிர் நோக்குகின்ற பொருளாதார, தொழில் நுட்பச் சிக்கல்களை அறுப்பதற்கு அவை உதவுகின்றன. தொழில், வேளாண்மைத் துறைகளுக்கிடையேயுள்ள
உறவுகளையும், பொருளாதாரக் கிளைகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவுகளை யும், மிகச் சிறந்த முறையில் பொருளாதார வழிமுறைகள் ஒழுங்குறுத்துகின்றன.
சமூக அத்தியாவசியச் செலவீட்டை திரும்பக் கிடைக்கப் பண்ணுவதையும் இவை ஊர்ஜிதப் படுத்து கின்றன. உழைப்புக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தை அதன் அளவு, பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் கொடுப்பதையும் அவை ஊர்ஜிதம் செய்கின்றன.
சோஷலிச மதிப்பு இனங்களையும், பொருளாதாரத் தூண்டு கோல்களையும் மிகப் பரந்த அளவில் பயன்படுத்துவது, நாட்டின் பொருளாதாரத் திட்டமிடுதலை மேம்படுத்துவதற்குரிய அடிப் படை நிபந்தனையாகும். பொருளாதாரத் திட்டங்களின் சமநிலை யையும், பயனுறுதியையும் ஊர்ஜிதப் படுத்துகின்றன. உற்பத்தி, நுகர்ச்சி, திரட்சி, பொருளாதாரத்தில் சரியான விகிதங்கள் ஆகியவற்றுக்கிடையில்
தொடர்பையும் ஊர்ஜிதப்படுத்துகின்றன.
(அரசியல் பொருளாதாரச் சுருக்கம்-
எல்.லியோன்டியெவ்- என்சிபிஎச் 1075 – தமிழாக்கம்:தா.செல்லப்பா- பக்கம் 369-372)
No comments:
Post a Comment