Monday 27 May 2019

1. யதார்த்த சோஷலிசம்


-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986

சோஷலிசம் எனும் பெயர் கொண்ட ஒளிமயமான கட்டிடத்தின் முதல் செங்கற்கள் அமைக்கப்பட்ட போது, இக்கட்டிடத்தின் கதவுகள் எப்படி விரிந்து திறந்து உலகை இருகரம் நீட்டி வரவேற்கும், ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட எல்லா மக்களினத்தவருக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இது எப்படித் திகழும் என்றெல்லாம் சோவியத் மக்கள் தம் மனக் கண்ணில் பார்த்தார்கள். இக்கட்டிடத்தைத் திட்டமிட்டு கட்டிய இவர்கள், தம் கனவுகள் நனவுகளாவது வர லாற்று நியதிகளுக்கு, சமூக முன்னேற்றத்தின் விதிகளுக்கு முற்றிலும் ஏற்றது என்பதை - தெட்டத் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.

இதை ஒப்புக்கொள்ளாத நபர்களும் உலகில் இருக்கத் தான் செய்கின்றனர். வரலாற்று உண்மைகளுக்கு மாறாக இவர்கள், சோஷலிசம் என்பது மார்க்சிய தத்துவகர்த் தாக்களின் கற்பனை, உண்மையில் இதற்கு எவ்வித யதார்த்த அடிப்படையும் கிடையாது, எனவே எதிர் காலத்தை இதனுடன் தொடர்புபடுத்தக் கூடாது என் றெல்லாம் கூறுகின்றனர்.

யதார்த்தம் இக்கூற்றுகள் பொய்யானவை என்று தோலுரித்துக் காட்டுகிறது. யதார்த்த சோஷலிச சமுதாயம் நிலவுகிறது. இச்சமுதாயத்தில் பின்வருபவை சாதிக்கப் பட்டுள்ளன:

- வர்க்க மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை முழுமை யாக ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது;

- வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி, வறுமை, கல்வியறிவின்மை, நாளைய தினத்தில் நம்பிக்கையின்மை ஆகியவற்றிற்கு என்றென்றைக்குமாக முடிவு கட்டப்பட்டு விட்டது;

- உழைப்பு, ஓய்வு, கல்வி, உடல் நலப் பாதுகாப்பு, வீட்டு வசதி, அமைதியான, வசதியான முதுமைப் பருவம் ஆகியவற்றிற்கான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது;

- வாழ்க்கைத் தரம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது, தன் அறிவை வளர்த்துக் கொள்ளவும் உலக மற்றும் தாயக கலாசார பொக்கிஷங்களைப் பயன்படுத்தவும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது;

-தொழில் நிறுவன அளவிலும், மாவட்ட, குடியரசு மற்றும் நாடு தழுவிய அளவிலும் எல்லா பிரச்சினைகளின் விவாதத்திலும் தீர்விலும் பங்கேற்கும் உண்மையான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு;

 -உலகம் பூராவும் சமாதானத்தைப் பேணிக் காப் பதை நோக்கமாகக் கொண்டு அரசியலமைப்புச் சட் டத்தில் இடம் பெற்றுள்ள கொள்கை நெறி பிறழாது பின்பற்றப்படுகிறது.

இதுதான் யதார்த்த சோஷலிசமாகும்.

இந்த யதார்த்தத்தில் குறைகளையும் தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் பார்க்கலாம். அழகிய, தூய மேசை விரிப்பின் மீதுள்ள ஓரிரு கரும்புள்ளிகளை வைத்து இதன் உண்மை அழகை எப்படி குறைக்க முடியாதோ அதே போல் சோஷலிச அமைப்பு செயல் படுவதில் உள்ள குறைபாடுகளாலும் இதன் சாராம்சத் தையும் முதலாளித்துவத்திற்கு முன் இதற்குள்ள விவாதத் திற்கு அப்பாற்பட்ட மேம்பாடுகளையும் மறைக்க முடியாது.

சோவியத் மக்களுக்கும், ஒளிமயமான எதிர்காலத் திற்காக உணர்வு பூர்வமான போராட்டத்தில் இறங்கி யுள்ள எல்லோருக்கும் இது கம்யூனிச எதிர்காலத்துடன் தொடர்புடையது. சோஷலிசம் என்பது கம்யூனிச நாக ரிக வளர்ச்சியில் முதல் கட்டம் மட்டுமே. தற்செயலான சம்பவங்களும், விளக்கப்பட முடியாத சக்திகளின் தாக் கமும் இதன் வெற்றிக்கு இட்டுச் செல்லா, மனிதர்களின் உணர்வு பூர்வமான, செயல்முனைப்பான நடவடிக்கை தான் இதன் வெற்றிக்கு வழிகோலும்.

சோஷலிசப் பொருளாதார வளர்ச்சி விதிகளை அறிவது இந்நடவடிக்கையில் வழிகாட்டியாகத் திகழும். சோஷலிச அரசியல் பொருளாதாரம் இவ்விதிகளை அறிய உதவுகிறது.

எந்த நாட்டில் - சிறிய அல்லது பெரிய நாடாயிருந் தாலும் சரி, பொருளாதார ரீதியாக ஒப்பீட்டளவில் பின்தங்கிய அல்லது குறிப்பிட்ட தொழிற்துறை முதிர்ச்சியை அடைந்த நாடாக இருந்தாலும் சரி -புதிய சமுதாயம் கட்டப்பட்டாலும் அங்கு எல்லா நாடு களுக்கும் பொதுவான பொருளாதார விதிகள் உண்டு. நிச்சயமாக, சமூக-பொருளாதார மாறுபாடுகளை, அதுவும் முக்கியமானவற்றைக் கவனத்தில் கொள் ளாமல் இருக்க முடியாது. இவை அந்தந்த நாட்டின் விசேஷத் தன்மையை நிர்ணயிக்கும் வரலாற்று சிறப் பியல்புகள், இயற்கை, பருவநிலை சூழ்நிலைகள் போன்ற வற்றால் முடிவு செய்யப்படுகின்றன.

ஆனால் எவ்வளவு வித்தியாசங்கள் நிலவினாலும் சோஷலிசத்தை நோக்கிய சமுதாய இயக்கத்தில் அடிப்படையான, பொதுவான நியதிகள் உள்ளன. யதார்த்த சோஷலிசத்தின் எதிரிகள் பல்வேறு சோஷலிச ''மாடல்களை முன்மொழிகின்ற னர்; ஒன்றிலிருந்து ஒன்று பெரிதும் வேறுபடும் இவை ஏதோ அந்தந்த நாட்டுக்குப் பொருந்தக் கூடியவை என்று கூறப்படுகிறது.

உண்மையில் ''பல்வேறு மாடல்களின் போர்வையின் கீழ் இவற்றின் ஆசிரியர்கள், சோஷலிச நாடுகள் சோஷலிசத்திற்கு முந்தைய பழைய முறைகளுக்கு திரும்பு மாறு செய்ய முற்படுகின்றனர். ''மானுடத் தன்மை யுள்ள சோஷலிசம்'' என்ற கருத்து முன்வைக்கப் படுகிறது. சற்று ஆழமாக நோக்கினால், இது சுதந்திரம் மற்றும் ஜன நாயகம் பற்றிய பொய்யான கோஷங்களால் மூடிமறைக்கப்பட்ட சாதாரண முதலாளித்துவமே தவிர வேறில்லை என்பது தெரிகிறது.

சில நேரங்களில் ''சந்தை சோஷலிசம்” பற்றிய கருத்து முன்வைக்கப்படுகிறது. இங்கே பொருளாதார வாழ்க்கையைத் திட்டமிட்டு நிர்வகிப்பதற்குப் பதில் தன்னிச்சையான சந்தை வேண் டுமாம். அதாவது உழைப்பாளி மக்கள் திரளினருக்குச் சுமைகளைத் தரக் கூடிய குறைகளைக் கொண்ட முத லாளித்துவ முறைகளை மீண்டும் ஏற்படுத்துவதைப் பற்றி இங்கு பேசப்படுகிறது.

யதார்த்த சோஷலிசத்தை குலைப்பது, இதன் உட்பொருளை, சாரத்தை திரித்துரைப்பது என்பவைதான் இப்படிப்பட்ட சோஷலிச ''மாடல்களை'' கணித்துக் கூறுபவர்களின் பொதுவான உண்மை நோக்கங்களாகும். ''ஆப்பிரிக்க சோஷலிசம்'' என்றழைக்கப்படும் “மாடல் களும்'' முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இதன் ஆசிரி யர்களால் இதற்கும் மற்ற சோஷலிச ''மாடல்களுக்கும்” (உதாரணமாக, ''அரபு'' சோஷலிச மாடலுக்கும்) என்ன கோட்பாட்டு ரீதியான வேறுபாடு என்று விளக்க இயலவில்லை. ஏனெனில் ஆட்சி முறைகள் அல்லது மத நம்பிக்கைகளில் உள்ள வேறுபாடுகள், சோஷலிசப் புரட்சி நிறைவேற்றும் முக்கியக் கடமைகளை - அதாவது உழைப்பாளிகள் அரசியல் அதிகாரத்தைத் தம் கரங்களில் எடுத்துக் கொண்டு பொதுச் சொத்துடைமையை நிலைநாட்டுவதை - மாற்றுவதில்லை.

சோஷலிசத் திசையமைவைக் கொண்ட வளர்முக நாடுகளின் அனுபவம் இதை மெய்ப்பிக்கிறது. மக்களின் கரங்களுக்கு ஆட்சி வருவது, உற்பத்திச் சாதனங்களின் மீது அரசு சொத் துடைமையை நிலைநாட்டுவது, விவசாயத்துறையில் கூட்டுறவு அடிப்படைகளை வளர்ப்பது - இவையெல்லாம் சோஷலிச வளர்ச்சிப் பாதையைப் பறைசாற்றுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இப்பாதையில் முன்னேறுவதற்கு வேறுபாடான வேகங்கள் இருக்கலாம், பல முறைகள் பின்பற்றப்படலாம்; வெவ்வேறு சிக்கல்களும் முரண் பாடுகளும் இப்பாதையில் எதிர்ப்படலாம். சோஷலிச அரசியல் பொருளாதாரத்தால் கண்டுபிடிக்கப்பட்ட விதி களின் அடிப்படையில்தான் இந்நாடுகளில் பொருளா தாரக் கொள்கை பெரும்பாலும் அமைக்கப்படுகிறது. இவை சோஷலிச உலகில் பெரிதும் ஊர்ஜிதமாகியுள்ளன.




No comments:

Post a Comment