Monday, 27 May 2019

11. பொருளாதார உந்துகோல்கள்


-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986

சோஷலிசப் பொருளாதாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக் கான வாய்ப்பும் அவசியமும் தானாகவே நிறைவேறி விடுவதில்லை. திட்டங்களைத் தீட்டி, நிறைவேற்றுவதில் நேரடியாகப் பங்கேற்கும் உழைப்பாளி மக்கள் திரளி னரின், அரசின் சுறுசுறுப்பான, செயல்முனைப்பான நட வடிக்கை இதைத்தான் நோக்கமாகக் கொண்டது. அதாவது ஜனநாயக மத்தியத்துவம் பற்றிய லெனினுடைய கோட்பாடு அமல்படுத்தப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதலில் அரசு பொருளாதார இயந்திரம் முழு வதும், வி. இ. லெனினின் வார்த்தைகளில் சொன்னால் ''ஒரே ஒரு பெரிய இயந்திரமாக, ஒரே ஒரு திட்டம் வழிகாட்ட லட்சோபலட்சம் மக்கள் வேலை செய்யும் ஒரு பொருளாதார அமைப்பாக” (வி. இ. லெனின், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 7, 1981, பக்கம் 218.) மாறுகிறது. அதே நேரத்தில் திட்டங்களை நிறைவேற்றவும் இவற்றை விஞ்சவும் உதவும் உழைப்பாளிகளின் முன்முயற்சிகள், துணிவான துவக்கங்கள், புதிது புனைதல் முதலியன பெரும் வளர்ச்சியைப் பெறுகின்றன.

முன்முயற்சிகள், துவக்கங்களைப் பொறுத்த மட்டில் லாப வேட்டை, போட்டி எனும் குறுகிய பாதையில் தள்ளப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தை விட சோஷலிசப் பொருளாதாரம் அளவிடற்கரிய பெரும் சுதந் திரத்தை அளிக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட, திட்டமிட்ட வகையில் வளரும் சமுதாயம் என்ற முறையில் சோஷலிசத்திற்கு என்று தனியான நிர்வாக முறைகள் உள்ளன. இங்கே பொரு ளாதார இயந்திரம், சோஷலிச அடிப்படைப் பொரு ளாதார விதியால் நிர்ணயிக்கப்படும் ஒரே லட்சியத்தை அடைவதற்கு கட்டுப்பட்டது, சோஷலிசத்தின் திட்டமிட்ட, சீரிசைவான வளர்ச்சி விதி, மற்ற பொருளாதார விதி களுக்கு ஏற்ப இது உருவாக்கப்படுகிறது. குறைந்தபட்ச செலவில் அதிகபட்ச பயன்களை அடைவதில் சோஷலிச சமுதாயம் முழுவதும் நேரடியாக அக்கறை கொண்டுள்ள தால் இது பொருளாதார நிர்வாகத்தின் மாற்ற இயலாத விதியாகிறது. பொருளாதார நிர்வகிப்பு முறையின் எல்லா அம்சங்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளா தார சுய கணக்கீட்டு முறையைப் பயன்படுத்துவது இதைத் தான் நோக்கமாகக் கொண்டது. மொத்தத்தில் சமுதா யத்தின், இதன் பொருளாதார அங்கங்கள், தேசியப் பொருளாதாரத்தின் எல்லா தொழில் நிறுவனங்கள், கூட்டமைப்புகளின் பரஸ்பர உறவு இந்த பொருளாதார சுய கணக்கீட்டு முறையின் அடிப்படையில்தான் அமை கிறது.

பொருளாதார சுய கணக்கீட்டு முறைக்கு பல்வேறு சோஷலிச நாடுகளில் பல வடிவங்கள் இருந்தாலும், இதன் முக்கியக் கோட்பாடுகள் பின்வருமாறு:

- தொழில் நிறுவனத்தின் பொருளாதார அன்றாட நடவடிக்கை சுதந்திரம்;

- பண வடிவத்தில் தொழில் நிறுவனத்தின் செலவு களையும் விளைபயன்களையும் ஒப்பிடுதல், லாபம், ஆதாயத்திற்கு வகை செய்தல்;

- தொழில் நிறுவனத்தின் பொருளாதார நடவடிக் கையில் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் உழைப்புக் கூட்டிற் கும் உள்ள பொருளாயத அக்கறையும் பொறுப்புணர்வும்;

- லாப நஷ்டத்திற்குத் தொழில் நிறுவனமே பதில் சொல்லுதல்.

மொத்தத்தில் பொருளாதார சுய கணக்கீட்டு முறை என்பது சோஷலிசப் பொருளாதார நிர்வகிப்பு முறை யாகும். இது திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற வும் தொழில் நிறுவனத்தின் வசமுள்ள பொருளாயத, உழைப்பு, நிதி மூலாதாரங்களை விவேகமாகப் பயன்படுத்தவும் லாபகரமாக, ஆதாயத்தோடு தொழில் நிறுவனம் இயங்கவும் வகை செய்கிறது.

பொருளாதார சுய கணக்கீட்டுச் சூழ்நிலைகளில் தொழில் நிறுவனம் அரசு நலன்களைக் கவனத்தில் கொண்டு, தனக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி நிதிகளைப் பயன்படுத்துகிறது, அதிகபட்ச பலனை அடைய பாடுபடு கிறது. இது உற்பத்தியை விவேகமாக ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது, தன் வசமுள்ள மூல இருப்புகளைத் திறமையாக உபயோகிக்கிறது. இன்று. சோவியத் யூனியனிலும் மற்ற சில சோஷலிச நாடுகளிலும் உற்பத்தி, பொருளாதார நடவடிக்கையில் தொழில் நிறுவனங்கள், கூட்டமைப்புகளின் உரிமைகள் விரிவுபடுத் தப்படுகின்றன. அதே நேரத்தில், மைய ரீதியில் நிலை நாட்டப்படும் அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் தம் சக நிறுவனங்களுக்கு உற்பத்திப் பொருட்களின் சப்ளை சம்பந்தமாக ஏற்ற உறுதிமொழிகளை நிறை வேற்றுவதிலும் தொழில் நிறுவனங்களின் பொறுப்பு அதிகரிக்கப்படுகிறது.

உழைப்புக் கூட்டுகள் மற்றும் ஒவ்வொரு உழைப்பாளியின் பொருளாயத அக்கறையை உயர்த்த பொருளாதார ஊக்குவிப்பு முறைகள் மேன் மேலும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான நிதிகள் அத்தொழில் நிறுவனத்தின் லாபத்திலிருந்து தோற்றுவிக்கப் படுகின்றன. சோவியத் நாட்டில் இதற்காக, உற்பத்தி வளர்ச்சி நிதி, பொருளாயத ஊக்குவிப்பு நிதி, சமூக கலாசார நடவடிக்கைகள் மற்றும் வீடு கட்டுமான நிதி எனும் மூன்று நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந் நிதிகளைச் செலவழிப்பது பற்றி உழைப்புக் கூட்டுகளின் கூட்டங்களில் முடிவு செய்யப்படுகின்றது, இது தொழிற் சங்கங்களின் பங்கேற்போடு, இவற்றின் கண்காணிப்பின் கீழ் நடக்கிறது எனும் அம்சம் குறிப்பிடத் தக்கது.

தொழில் நிறுவனம் லாபகரமாக இயங்க, சமுதாயம் முழுவதற்கும் குறிப்பிட்ட உழைப்புக் கூட்டிற்கும் அவசி யமான சேமிப்புகளை ஏற்படுத்த, இது லாபத்தைப் பெற வேண்டும்.

ஒரே பொது திட்டத்தின்படி வளரும் சோஷலிச பொருளாதாரத்தில் தேசியப் பொருளாதாரம் முழுவதி லும் செலவுகளையும் விளைபயன்களையும் மிகவும் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். இது பொருளாதார, சமூக வளர்ச்சியின் கடமைகளை வெற்றிகரமாக நிறை வேற்ற எல்லா உற்பத்தி மூல ஊற்றுகளையும் முழுமை யாக, விவேகமாகப் பயன்படுத்த வழிகோலும்.

சோஷலிசத்தில், திட்டமிட்ட பொருளாதார வரம்பு களுக்குள் செயல்படும் பொருளாதார ஊக்குவிப்புகளைப் பயன்படுத்துவதானது இதற்கு துணை புரிகிறது. இவற்றில் விலைகள் முறை முக்கியப் பங்காற்றுகிறது. தொழிற்துறைப் பொருட்களுக்கான அரசு விலைகள், விவசாயப் பொருட்களுக்கான கொள்முதல் விலைகள், நுகர்வுப் பண்டங்களின் சில்லறை விலைகள் மற்றும் சேவை கட் டணங்கள் இவற்றிலடங்கும். இவ்விலைகள் எல்லாம் மைய ரீதியில் நிலை நாட்டப்படுகின்றன, பொருட்களை உற்பத்தி செய்து, விற்பதுடன் தொடர்புடைய செலவு களையும் தேவையான சேமிப்புகளை ஏற்படுத்துவதையும் இவை நோக்கமாகக் கொண்டுள்ளன. இவை தவிர சோவியத் நாட்டில், தேவை, சப்ளை விகிதத்தை குறிப் பிட்ட அளவு சார்ந்திருக்கும் விலைகளும் உள்ளன. இவைதான் கூட்டுப் பண்ணைச் சந்தை விலைகள் எனப் படுகின்றன. தனியார் தோட்டங்களில் தோற்றுவிக்கப் பட்ட உணவுப் பண்டங்கள் இச்சந்தைகளில் விற்கப்படு கின்றன.

கடன், மற்ற வங்கி நடவடிக்கைகள், உற்பத்தி மூல ஊற்றுகளைப் பயன்படுத்துவதற்காக தொழில் நிறுவனங் கள் வழங்கும் கட்டணங்கள் போன்றவையும் பொரு ளாதார உந்துகோல்களாகும்.

இப்படிப்பட்ட பொருளாதார ஊக்குவிப்புச் சாதனங் களைப் பயன்படுத்துவதால் சோஷலிசப் பொருளாதாரம் ஏதோ முதலாளித்துவப் பொருளாதாரத்திலிருந்து, சந்தைப் பொருளாதாரம் என்றழைக்கப்படுவதிலிருந்து அதிகம் மாறுபடவில்லையென பூர்ஷ்வா சித்தாந்தவாதிகள் கூறுகின்றனர். ஆனால் விஷயம், இந்தச் சாதனங்களின் பெயர்களில் இல்லை, இவற்றின் சாரத்திலும், இவை யாருக்குப் பயன்படுகின்றன, பொருளாதார வாழ்வில் இவை எந்த பங்காற்றுகின்றன என்பதிலும்தான் விஷயம் உள்ளது. சோஷலிச சமுதாயம் பயன்படுத்தும் பொரு ளாதார உந்துகோல்கள் தம் தன்மையிலும் நோக்கத்தி லும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் பண்ட-பண அம்சங்களிலிருந்து, முதலாளித்துவத்தில் உழைப்பாளி களுக்கு தவிர்க்க இயலாது ஏழ்மையை ஏற்படுத்தும் சந்தை தான்தோன்றித்தனத்திலிருந்து (இதை எந்த ஒரு முதலாளித்துவ அரசாலும் சமாளிக்க முடிவதில்லை) அடிப்படையிலேயே மாறுபடுகின்றன.

பொருளாதார நிர்வகிப்பு முறையை எடுத்துக் கொண்டால் ஒரு பிரம்மாண்டமான இயந்திரத்தை நிர்வகிக்கும் உணர்வு ஏற்படுகிறது. இந்த இயந்திரத்தின் எல்லா பகுதிகளும் ஒரே சீரிசைவான தொனியில் இயங்க வேண்டும். நன்கு நிர்வகிக்க, இந்த இயந்திரத்தின் அமைப்பு, இதன் பகுதிகளின் பரஸ்பர செயலாக்கத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

புறவய பொருளாதார விதிகளை அறிந்து, இவற்றைப் பயன்படுத்தும் கோட்பாடுகளை நிர்ணயிப்பது என்பது விஞ்ஞானத்தின் கடமை மட்டுமின்றி சோஷலிசப் பொரு ளாதார நிர்வகிப்பு நடைமுறையின் கடமையுமாகும். லட்சோபலட்சம் மக்களின் நடவடிக்கைகள்தான் இந் நடைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சோஷ லிசத்தில் இந்நடவடிக்கைகளில்தான் பொருளாதாரம் “நடந்து கொள்ளும் முறை'' வெளிப்படுகிறது. சோஷ லிசப் பொருளாதாரத்தில் மக்கள் திரளினர் தீவிர மாகப் பங்கேற்காவிடில் 'அதி உன்னத'' இயந்திரங்களின் அடிப்படையிலான எந்த ஒரு கறாரான மையப்படுத் தலாலும் தேசியப் பொருளாதாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகோல முடியாது. பொருளாதார வாழ்க் கையின் நடைமுறையில் உழைப்பாளிகள் பொருளாதார வளர்ச்சி விதிகளை அறிகின்றனர், சமுதாயம் முழுவதன் நலன்களுக்காக, சமுதாய உறுப்பினர் ஒவ்வொருவரின் நலன்களுக்காக இவற்றை மேன்மேலும் முழுமையாகப் பயன்படுத்த முயலுகின்றனர்.

No comments:

Post a Comment