Friday, 31 May 2019

15. விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டம்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

உலகக் கண்ணோட்டம் இல்லாத மனிதனால் சுற்றியுள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வாழ்க்கையில் தனது இடத்தை நிர்ணயிக்க முடியாது. அவனுக்குத் தெளிவான லட்சியங்களும் நோக்கங் களும் இருக்காது, அவன் சந்தர்ப்ப சூழ் நிலைகளின் அடிமை யாக இருப்பான்.

சரியாகக் கூறினால் உலகைப் பற்றியும் வாழ்க்கையின் உட்பொருளைப் பற்றியும் முற்றிலும் கருத்து இல்லாத மக்களே கிடையாது எனலாம். ஆனால் இந்தக் கண்ணோட்டங் கள் விஞ்ஞான பூர்வமற்றவையாக, தவறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தால் இவை மனி தனுக்குச் சரியான வாழ்க்கை நிலையைத் தேர்ந்தெடுக்க உதவாததோடு கூட, மாறாக இவனைத் தவறான, சில சமயங் களில் திருத்த முடியாத நடவடிக்கைகளுக்குத் தள்ளும். மார்க்சிய-லெனினியத் தத்துவஞானத்தின் அடிப்படையி லான விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டம் சமுதாய மற்றும் தனி வாழ்வின் சிக்கலான நிகழ்ச்சிகளை எளிதாக அறிந்துணரவும் புலப்பாடுகளின் வெளிப்படையான, பல நேரங்களில் ஏமாற்றத் தக்க தோற்றத்தை வைத்து இவற்றின் உட்பொருளைப் பற்றி முடிவெடுக்காது சாரத்தினுள் புகவும் உதவுகிறது.

இத்தகையதொரு உலகக் கண்ணோட்டத்திற்கு வர்க்கத் தன்மை உண்டு, ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தின் சித் தாந்தம் இதன் அடித்தளமாகத் திகழ்கிறது . ''என்றென் றைக்கு மான' ' தத்துவஞானப் பிரச்சினைகளின் (பருப்பொருள் என்பது என்ன, உலகை அறிய இயலுமா, வாழ்க்கையின் உட் பொருள் என்ன முதலியவை) தீர்விற்கு மட்டுமின்றி சமு தாயம் மற்றும் அரசின் காரியங்களிலும் அரசியலிலும் உணர்வு பூர்வமாகப் பங்கேற்பதற்கும் இது சரியான வழிகாட்டுதலைத் தருகிறது.

''அரசியல்'' எனும் சொல்லுக்கு நவீன விஞ்ஞானம் விரிவான பொருளைத் தருகிறது. சமுதாய வர்க்கங்களின் நோக்கங்கள் மற்றும் போராட்டத்துடனும் இவற்றால் தோற்று விக்கப்படும் கட்சிகள், அரசுகளின் நடவடிக்கைகளுடனும் சர்வதேச அரங்கில் இவற்றிற்கு இடையேயான உறவு களுடனும் தொடர்புடைய அனைத்தும் தான் அரசியல் ஆகும். அரசியல் உறவுமுறைகளின் தன்மையையும் இவற்றின் நட வடிக்கையின் போக்குகளையும் (பொருளாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, மொத்தமாக உள் நாட்டுக் கொள்கை, வெளி நாட்டுக் கொள்கை முதலியவை) புரிந்து கொள்வதற்கு இவை எந்த வர்க்கத்திற்குச் சேவை புரிகின்றன, எந்த வர்க் கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கின்றன என்பதை நிர்ணயிப் பது அவசியம். மேலும் அரசியல் அணுகுமுறை இல்லாமல் கலை அல்லது குடும்பம் போன்ற வேறு சமுதாயப் புலப்பாடுகளின் தன்மையையும் புரிந்து கொள்ள இயலாது: நேரடி யாக அரசியல் உறவுகளின் முறையைச் சார்ந்திராவிட்டா லும் சமுதாய வாழ் நிலை மற்றும் உணர்வின் சகல துறைகளும் ஏதோ ஒரு விதத்தில் அரசியலோடு தொடர்புடையவை. மார்க்சிய-லெனினிய உலகக் கண்ணோட்டமும் அரசியல் அணுகுமுறையைக் கொண்டுதான் - தொழிலாளி வர்க்கம், உழைப்பாளிகளின் நிலையிலிருந்து-ஆயுதந் தரித்துள்ளது .

இன்று சர்வதேச அரங்கில் கடும் சித்தாந்தப் போராட் டம் நடைபெறும் இத்தருணத்தில் திட்டவட்டமான வர்க்கத் திசை யமைவு மிக அவசியம். துரோக நோக்கோடு நுட்ப மாக இயங்கும் பூர்ஷ்வாப் பிரச்சாரம் சோஷலிச நாடுகளில் உள்ள மக்களின் உணர்வை எப்படியாவது சிதறடிக்கவும் கொச்சையான வாழ்க்கை வரையளவுகளையும் சுவைகளையும் இவர்கள் மீது திணிக்கவும் பாடுபடுகிறது. சித்தாந்த உறுதி யுள்ள மனிதனின் வர்க்க உணர்வை ஒருபோதும் மழுங் கடிக்கச் செய்ய முடியாது, இவனை அரசியல் அக்கறை யின்மை எனும் பள்ளத்தில் தள்ள முடியாது. - விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டம் மூட நம்பிக் கைகளை மறுத்தல், இயற்கை மற்றும் சமுதாய வாழ்வின் புலப்பாடுகளைப் பொருள்முதல்வாத நிலையில் அணுகுதல் ஆகிய அம்சங்களை அங்கக ரீதியாக உள்ளடக்கியுள்ளது . விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டத்திற்கு முதலாவதாக ஞானம் தேவையென்றாலும், இது மட்டும் போதாது. தொழிலாளர்கள், விவசாயிகளுடனான கூட்டு உழைப்பில் மட்டுமே உண்மையான கம்யூனிஸ்டுகளாக மாற முடியும்; ஒவ்வொரு மனிதனின் நடத்தையிலும் கருத்துக்கள் சோஷ லிசத்தின் வெற்றிற்குத் துணை புரியும் செயல் களுடனும், சிந்தனை நடவடிக்கையுடனும், தத்துவம் நடைமுறையுடனும் அங்கக ரீதியாக இணைந்திருப்பது அவசியம்.

விஞ்ஞான பூர்வமான உலகக் கண்ணோட்டம் உருவாகு தல் என்பது தீவிர நிகழ்ச்சிப் போக்காகும்; இதற்குப் பெரும் உழைப்புத் தேவை. பள்ளிப் படிப்பின் முடிவிற்குப் பின் கிடைக்கும் சான்றிதழ் அல்லது உயர் கல்வியை அடுத்து கிடைக்கும் பட்டத்தை வைத்து அடையப்பட்ட ஞானத் தைக் கொண்டு திருப்தி அடையக் கூடாது. விஞ்ஞானத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்குகளை இடையறாது கவனிக்க வேண்டும், புதிய கண்டுபிடிப்புக்களின் உட்பொருளைக் கிரகிக்க முயல வேண்டும், விஞ்ஞானத்தின் பல்வேறு துறை க ளில் எந்தப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றார்களோ அவற்றைப் பற்றி (பொது வாகவாவது) அறிந்திருக்க வேண்டும். தொழில் நுட்பத்திலும் தொழில் நுணுக்கத்திலும் மிக முக்கியக் கண்டுபிடிப்புக் கள், புதினங்களைப் பற்றியாவது தெரிந்து கொள்ள இதே ஆர்வம் நமக்கு உதவ வேண்டும் என்பது தெளிவு.

சுய கல்வியைப் பற்றிய பிரச்சினை இத்தோடு தொடர் புடையது. இது தான் மார்க்சிய-லெனினியத் தத்துவத்தையும் அரசியல் ஞானங்களையும் கிரகிப்பதற்கான மிகப் பயனுள்ள முறையாகும், ஏனெனில் இது சுய சிந்தனைக்கு உதவுகிறது. அரசு என்ற விரிவுரையில் வி.இ.லெனின் பின்வருமாறு கூறினார்: “இந்தப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் சுயமாக ஆராயக் கற்றுக் கொண்டால் தான் உங்கள் கருத்துக்களில் போ துமான அளவு உறுதியுள்ளவர்களாக உங்களை நீங்கள் கருதலாம், யார் முன் வேண்டுமானாலும் எப்போது வேண்டு மானாலும் போதுமான அளவு வெற்றிகரமாக இவற்றை நிரூபிக்கலாம்''.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment