Friday 31 May 2019

13. சோஷலிச சமூகத்தில் நகரமும் கிராமமும்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையில், நிலவும் சமூக வேறுபாடுகளை அகற்றும் நிகழ்ச்சிப் போக்கு கம்யூனிசச் சொத்துடைமை உருவாக்கப் படுவதுடன் தொடர்புடைய து; வர்க்கங்களற்ற சமுதா யத்தைத் தோற்றுவிப்பதில் இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையில் உள்ள சமூக வேறுபாடுகளை முற்றிலுமாக வர்க்க வேறுபாடுகளுடன் சமப்படுத்துவது கூடாது என்பது முக்கியம். ஏனெனில் கிராமங் ளில் கூட்டுப்பண்ணை விவசாயிகள் மட்டும் வாழவில்லை, இங்கே அரசுப் பண்ணைத் தொழிலாளர்களும் ஏராள மான கிராம அறிவுத் துறையினரும் உள்ளனர்.மறு புறத்தில் இன்ன மும் நிலவும் வேறுபாடுகளின் காரணம் வர்க்கங்க ளிடையே முன்பு நிலவிய பகை முரண்பாட்டில் மட்டுமின்றி சமுதாய வளர்ச்சியின் வரலாற்று நிலைமைகளிலும் அடங்கியுள்ளது. தொழில் துறை குவிப்பிற்கான இடமாயிருந்ததால் நகரங் கள் நீண்ட காலமாகவே உழைப்பு மற்றும் வாழ்க்கை வசதி ளின் அதிக உயர்வான கலாச்சார தரத்தைப் பெற்றிருந் தன; சுரண்டும் வர்க்கங்கள் கிராமங்கள் பின்தங்கிய நிலை யிலேயே இருக்குமாறு செய்ய முயன்றன.

சமுதாய உற்பத்தியின் எல்லாத் துறைகளிலும் சோஷ லிச உறவுகளின் வெற்றி இந்த எதிர் மறை மறைவதற்கு இட்டுச் சென்றது. நகரத்திற்கு மூலப்பொருட்களைச் சப்ளை செய்யும் இடமாகக் கிராமம் இருந்த நிலை மாறி இது சோஷ லிசத்தின் சமூக அமைப்பின் சம உரிமையுள்ள ஒரு அங்கமாக வளர்ந்தது .

பொருளாதார வளர்ச்சியோடு கூட கிராமத்தின் தன் மையைக் கலாச்சாரப் புரட்சி மாற்றியது. சோஷலிச நாடு ளில் கிராமங்களில் உயர் மற்றும் செகண்டரிக் கல்வி பயின்ற லட்சக்கணக்கான தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் விவசாய நிபுணர்கள், கால் நடைத் துறை வல்லுநர்கள், மருத்துவர்கள், பொறியியலர்கள், ஆசிரியர்கள் பணி புரி கின்றனர். லட்சக்கணக்கான கிராமவாசிகள் பல்வேறு இயந் திரங்களை இயக்கும் தொழில் களைக் கற்றுள்ளனர். பள்ளிகள், நர்சரிகள், தோட்டப்பள்ளிகள், மருத்துவ மனைகள், கலாச் சார மா ளிகைகள், நூலகங்கள், திரைப்படக் கருவிகள், வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகள், அமெச்சூர் குழுக்கள், விளை யாட்டு ஸ்தாபனங்கள் ஆகியன இல்லாமல் சோஷலிச நாட்டின் நவீன கிராமத்தைக் கற்பனை செய்து பார்ப்ப து கடினம்.

ஆனால் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே அன்றாட வாழ்க்கையில் இன்னமும் கணிசமான வேறுபாடுகள் நிலவு கின் றன. வீட்டு நிலைமைகள், அன்றாட வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றில் கிராமம் நகரத்தைவிட இன்ன மும் பெரிதும் பின் தங்கியுள்ளது; கலாச்சார வளர்ச்சியிலும் இது பின் தங்கியுள்ளது. முன்பு நிலவிய சமூகச் சமமின்மையின் மிச்சங் கள் இதில் தான் வெளிப்படுகின்றன; கம்யூனிசக் கட்டுமான நிகழ்ச்சிப் போக்கில் இவை இறுதியாக மறையும்.
கலாச்சார- வாழ்க்கை வசதிகளில் கிராமங்களின் பின் தங்கிய நிலையை அகற்றுவதற்காகப் பல நடவடிக்கைகள் அடங்கிய முழு முறையையே சோஷலிச நாடுகளின் ஆளும் கட்சிகள் நிறைவேற்றுகின்றன. நவீன வீட்டு சேவை தரத் திற்கேற்ற வசதிகளைக் கிராமங்கள் பெறுகின்றன. பொதுக் கல்வி முறையும் கலாச்சார நிறுவனங்களும் வளர்ச்சி யடைந்து வருகின்றன. கிராமக் கட்டுமானங்களின் கட்டிடக் கலை யும் வீடுகளின் உள்ளமைப்பும் மேன்மையடைந்து வரும் கின்றன. மையப்படுத்தப்பட்ட தண்ணீர் சப்ளை, எரியாவி, மின் சாரச் சப்ளை ஆகியவை ஒழுங்கமைக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் பயனாய் நகரவாசிகளுக்குச் சமமாகக் கிராம மக்களும் பொருளாய மற்றும் ஆன்மீக நலன்களைப் பயன் படுத்துவார்கள்.

கிராமத்தில் வாழ்ந்து சகலவித வசதிகளையும் சேவைகளை யும் அனுபவிக்கும் கிராமவாசி நகரவாசியின் முன் ஏதாவது ஒரு விதத்தில் குறைவானவனாகத் தன்னைக் கருதுவானா? நிச்சய மாக கருதமாட்டான். ஏனெனில் மற்ற எல்லா நிபந்தனை களும் ஒரே விதமாக இருக்கையில் கிராம வாழ்க்கைக்கு ஒரு சில மேம்பாடுகள் உண்டு: சுத்தமான காற்று, நிசப்தம், இயற்கைச் சூழலின் ஆனந்தம் ஆகியன கிராமத்தில் மட்டுமே உண்டு.

இவ்வாறாக இங்கே நேர் எதிரான பிரச்சினை-நகரத் தைத் தூய்மைப்படுத்தும் பிரச்சினை-தோன்றுகிறது. இது வும் தீர்க்கப்பட்டு வருகிறது. இப்போதே நகரங்களில் சத்தத் திற்கு எதிராகவும் கார்களின் புகையாலும் தொழிற்சாலை களின் கழிவுப் பொருட்களாலும் காற்று அசுத்தமடைவதற்கு எதிராயும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பெரிய தொழில் துறை மையங்களைச் சுற்றி துணை நகரங்கள் அமைக்கப் படுகின்றன; இவை நகர மற்றும் கிராம வாழ்க்கையின் தலைசிறந்த அம்சங்களை தம்முள் அடக்கியுள் ளன. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் வாழ்க்கை வசதிகளிலும் கலாச்சாரத்திலும் கிராமம் நகரத்தின் மட்டத்திற்கு உயர்ந்து வரு வதைப் போன்றே உடல் நலத்திற்கேற்ற சூழ்நிலைகளிலும் இயற்கைச் சூழலிலும் நகரம் கிராமத்தை நெருங்கி வரு கிறது.

இத்தோடு மகத்தான போக்குவரத்துச் சாதனங்களை எடுத்துக் கொள்வோம்; இவற்றின் பயனாய் ' 'ஒதுங்கியிருக் கும்'' உணர்விற்கே இடமில்லாத நிலை ஏற்படுகிறது. நவீன விமானங்களும் ஹெலிகாப்டர்களும் கிராமவாசியை ஒரு மணிக்குக் குறைவான நேரத்தில் நகரத்திற்குக் கொண்டு வருகின்றன; சில நேரங்களில் நகரத்தின் எல்லையில் வசிக் கும் ஒருவன் நகரத்தின் மையம் வரை செல்ல இதே நேரம் தான் ஆகும். இன்னும் அதிக மேம்பாடடைந்த போக்கு வரத்து சாதனங்களும் அமைக்கப்படும். சுருங்கக் கூறின் வேலை நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக் காகவோ குறிப்பிட்ட மையங்களுக்குச் செல்வது பக்கத்துக் கிராமத்தில் உள்ள உறவினரைப் பார்க்கப் போவதைவிட எளிதாக இருக்கும்.

இப்போதுள்ளதைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்த வானொலி, தொலைக்காட்சிக் கருவிகள், புத்தம்புதிய பத்திரிகைகள், தொலைபேசித் தொடர்பு ஆகியன மக்கள் எங்கு வாழ்ந்தாலும் உடனடிச் செய்திகளைப் பெறவும் நடை பெறும் நிகழ்ச்சிகளை உடனுக்குடனே அறியவும் உதவும்.

இவையனைத்தும் இன்று கிராமம் என்ற சொல்லுக்குரியப் பொருளையே மாற்றி விடும். விவேகமான முறையில் அமைக்கப்பட்ட, மிதமிஞ்சிய மக்கள் தொகையிலிருந்து விடுவிக்கப்பட்ட, கரியிலிருந்தும் புகையிலிருந்தும் தூய்மைப் படுத்தப்பட்ட நகரங்கள் நல்ல வசதிகளை யுடைய கிராமப் புறப் பகுதிகளுடன் ஒன்றிணையும்.

இறுதியாக இது மிக முக்கியமான து-விவசாய உற் பத்தியை இயந்திரமயமாக்கலாலும் (பின்னர் தானியங்கி மயப்படுத்தலாலும்) பயிர்த்தொழிலிலும் கால் நடைத் துறை யிலும் விஞ்ஞானத்தைப் புகுத்துவதாலும் விவசாய உழைப்பு தொழில்துறை உழைப்பின் ஒரு வகையாக மாறுகிறது.

விவசாய உழைப்பு நவீன தொழில் நுட்பத்தின் அடிப் படைக்கு மாற்றப்படுவதற்கு உழைப்பாளிகளின் பன்மடங்கு உயர்வான தேர்ச்சியும் பொதுக் கலாச்சாரமும் தேவைப் படுகின்றன. கால் நடைத் துறையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்த உயிரியல், கால்நடை மருத்துவம் முதலிய விஞ்ஞான ங்களின் குறிப்பிட்ட பிரிவுகளில் விசேஷ ஞானம் அவசியம். மிகுந்த விவேகமான முறையில் பொருளாதாரத்தை வழிநடத்து வதற்கான தேட்டங்களுக்கும் பரிசோதனை செய்து பார்க்க வும் படைப்பாற்றலுக்கும் எல்லையற்ற வாய்ப்புகள் தோன்று கின்றன.

இதில் இடர்ப்பாடுகளும் எதிர்ப்படும் என்பதைக் கவனத் தில் கொள்ள வேண்டும். தனது சிறப்பியல் பின்படி விவசாய உழைப்பைத் தானியங்கி மயமாக்குவது சிக்கலானது; ஏனெ னில் பயிர்த்தொழிலிலும் கால்நடைத் துறையிலும் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குகள் தொடர்ச்சியாக நடைபெறுவதில்லை; இவற்றில் மனிதனை யும் தொழில் நுட்பத்தையும் தவிர இயற் கையும் பங்கேற்கிறது, இதன் படிதான் பயிர்கள் முதிர்ச்சி யடையும், கால்நடைகள் வளரும். ஆனால் இப்போதே ஒரு சில உழைப்பு நிகழ்ச்சிப் போக்குகளைத் தானியங்கி மயமாக்க இது ஒரு சிறிதும் இடையூறாய் இருப்பதில்லை; எதிர் காலத் தில் பெரும்பான்மையான விவசாய வேலைகளைக் கூட்டாகத் தானியங்கி மயமாக்குவது சாத்தியமாகும்.

விவசாய உழைப்பைத் தொழில் துறை உழைப்பின் ஒரு வகையாக மாற்றுவதானது, தொழில் துறை உழைப்பாளி களைப் போன்றே விவசாயத் துறை உழைப்பாளிகளும் தமது நடவடிக்கையில் மூளை யுழைப்பையும் உடலுழைப்பையும் ஒன்றிணைப்பதற்கான நிலைமைகளை த் தோற்றுவிக்கிறது.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment