- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின்,
யூ.கிராஸின், வி.சுகதேயெவ்
சோஷலிசத்தில் சமூக உடைமையோடு கூட சொந்தச் சொத்தும்
நிலவுகிறது. அன்றாடப் புழக்கத்திற் கும் தனிப்பட்ட உபயோகத்திற்கு மான பொருட்கள், பொழுது
போக்கு வசதிக்கான பொருட்கள், வீட்டுப் பொருட் கள், வீடு, உழைத்து சேமித்த பணம் ஆகியவை
இதில் அடங் கும். சோவியத் யூனியனின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி சொந்த உபயோகத்திற்காகவும்
(கால் நடைகள், பறவை கள் வளர்ப்பைச் சேர்த்து) தோட்டத்திற்காகவும் தனிப் பட்ட வீடு கட்டுமானத்திற்காகவும்
நிலம் குடிமக்கள் வசம் இருக்கலாம். குடிமக்கள் தமது நிலத்தைப் பயனுள்ள வகை யில் பயன்படுத்த
வேண்டும், அரசும் கூட்டுப்பண்ணை களும் இதில் இவர்களுக்கு உதவி புரியும்.
சோஷலிசத்தில் நிலவும் சொந்தச் சொத்திற்கும் முத
லாளித்துவத்தில் உள்ள தனிச்சொத்துடைமைக்கும் பொது வானது எதுவுமேயில்லை. சோஷலிசத்தில்
உழைத்து சம் பாதித்த பணம் தான் சொந்தச் சொத்தின் அடிப்படையாகும், சமுதாய நலன் களுக்குக்
கேடிழைக்கும் முறையிலோ, சட்ட விரோதமாக செல்வம் பெறுவதற்கோ இது பயன்படுத்தப் படக் கூடாது.
சொந்தச் சொத்தில் ஒரு சில பொருட்கள் மட்டுமே சுய
நல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். உதா ரண மாக, சொந்த வீட்டை அதிக வாடகைக்கு
வேறொரு வருக்கு அளித்தல், சொந்தக் காரில் மற்றவர்களை ஏற்றிச் சென்று அதற்காகப் பணம்
வாங்குதல் ஆகியவற்றைக் குறிப் பிடலாம். இத்தகைய நடவடிக்கைகள் சோஷலிசச் சமு தாயத்தில்
மனக் கொதிப்பை ஏற்படுத்துகின்றன. எளிதாக ஆதாயம் தேட விரும்புபவர்களுக்கு எதிராக அரசு
சட்ட முறைகளைக் கொண்டு போரிட்டு வருகிறது , அதா வது சட்டப் படி இவர்களைக் தண்டிக்கிறது.
காலப் போக்கில் சொந்தச் சொத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு பொருளாதார
ரீதியாக ஒழிக்கப்படும்: உதாரணமாக, போதுமான அளவு வீடுகள் (அரசு ஓய்வு குடியிருப்புக்கள்
உட்பட) கட்டப்பட்டதும் அதிக விலை கொடுத்து வீடுகளில்
குடியிருக்கும்
எல்லாத் தேவையும் மறைந்து விடும்.
சமுதாயச் செல்வம் அதிகமாகி வருகையில் சமுதாய உற்பத்தியின்
பொருட்களில் மேன்மேலும் அதிகமான அளவு உழைப்பாளிகளின் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்
வதற்காகப் பயன்படத் துவங்குகின்றது. இது சொந்தச் சொத்தின் வளர்ச்சிக்கு அடிகோலும்.
இவ்வளர்ச்சி உழைப் பின் அளவு மற்றும் தரத்திற்கேற்றபடி வழங்கப்படும் ஊதிய முறையாலும்
நுகர்வுப் பண்டங்களின் மீதான விலைக் கொள் கையாலும் சமுதாய நுகர்வு நிதிகளின் வளர்ச்சியாலும்
(இதைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்) ஒழுங்குப் படுத்தப்படுகிறது .
சொந்தச் சொத்துரிமைக்கும் அதன் வம்ச வழி உரிமைக்
கும் அரசு உத்திரவாதமளிக்கிறது (அதாவது இதற்கு வகை செய்து பாதுகாக்கிறது).
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்-
1985”
No comments:
Post a Comment