Thursday, 30 May 2019

8. சோஷலிசத்தில் நிலவும் மதிப்பு விதி


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

எங்கே பண்ட உற்பத்தி உள்ளதோ அங்கே மதிப்பு விதியும் இயங்குகிறது: சமுதாய ரீதியாக அவசியமான உழைப்புச் செலவுகளுக்கு ஏற்ற வாறு பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டு பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பண்டங்களுக்கான விலைகளை நிர்ணயிக் கும் போது அரசால் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் தனிப் பட்ட செலவுகளை ஆதாரமாகக் கொள்ள இயலாது. உற் பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட கட்டத் தில், தொழில் நுட்பத்தின் குறிப்பிட்ட மட்டத்தில், நில வக் கூடிய உழைப்பின் திறமை மற்றும் தீவிரத் தன்மையின் சராசரி மட்டத்தில் எவ்வளவு செலவுகள் தேவைப்படுமோ அவற்றைத்தான் அரசு ஆதாரமாகக் கொள்கிறது.

முதலாளித்துவப் பொருளாதாரத்தில் விலைகள் சந்தை யில் தன்னிச்சையாக உருவாகின்றன. சோஷலிசத்தில் திட்ட விலைகள் (கூட்டுப்பண்ணைச் சந்தையின் விலை களைத் தவிர- கூட்டுப்பண்ணைச் சந்தையின் விலைகள் அரசால் நேரடி யாகத் திட்டமிடப்படுவதில்லை, தேவை மற்றும் சப்ளை யின் தாக்கத்தால் இவை உருவாகின்றன. அதே நேரத்தில், பண்டங்களில் பெரும் பகுதி அரசு வர்த்தக அமைப்பில் கறாரான, திட்ட விலைகளுக்கு விற்கப்படுவதன் மூலம் தான் சோஷலிச அரசு கூட்டுப்பண்ணைச் சந்தையின் விலைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.) நிலை நாட்டப்படுகின்றன. பல்வேறு பொருளாதார, அரசியல் காரணிகளைக் கணக்கில் கொள்ளும் அரசு, உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களின் மதிப்பை முதலாவதாக எடுத்துக் கொள்கிறது.

சாதாரணமாக பண்டத்தின் விலை அதன் மதிப்பிற்கு, அதாவது அதன் உற்பத்திக்காகச் செலவிடப்பட்ட உழைப் பிற்கு அதிக பட்சம் நெருக்கமாக இருக்கும். பண்டத்தின் விலை அதன் மதிப்பை எவ்வளவுக்கெவ் வளவு சரியாகப் பிரதிபலிக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு எளிதாக ஒரு குறிப்பிட்ட உபகரணம், மூலப் பொருள், உற்பத்தியின் தொழில் நுணுக்கம் ஆகியவை எவ் வ ள வு லாபகரமானது என்று நிர்ண யிக்கலாம்.

ஒரு இயந்திரப் பகுதி “A” என்ற பொரு ளில் இருந்தோ அல்ல து "B" என்ற பொருளில் இருந்தோ தயாரிக்கப்பட லாம் என்று வைத்துக் கொள்வோம். ''A' பொரு ளின் மதிப்பு 1 ரூபிள் 50 கோப்பெக்குகள், “B” பொருளின் மதிப்பு 4 ரூபிள்கள். "B" பொரு ளில் இருந்து தயாரிக்கப் பட்ட இயந்திரப் பகுதி 5 ஆண்டுகளுக்கும் ''A' பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயந்திரப் பகுதி ஓராண்டும் சேவை புரியும். எனவே "B" பொருளிலிருந்து இயந்திரப் பகுதிகளைத் தயாரிப்பது லாபகரமானது என்பது தெளிவு. ஆனால் 'A' பொருளின் விலை அதன் மதிப்பைவிடக் குறை வாயும் (1 ரூபிள் என்று வைத்துக் கொள்வோம்) "B" பொரு ளின் விலை மதிப்பைவிட அதிகமா யும் (4 ரூபிள்கள் அல்லாமல் 6 ரூபிள்கள்) இருந்தால், ''A' பொருளைப் பயன் படுத்து வது லாபகரமாயிருக்கும் என்று தோன்றக் கூடும். தொழிற்சாலையின் தலைமை தவறான முடிவை எடுக்கலாம், இதனால் உற்பத்தியின் நலன்களுக்கு இழப்பு நேரிடும்.

மதிப்பு விதியைப் பயன்படுத்துவதானது புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்துவதைப் பொருளாயத ரீதியாக ஊக்கு விக்கவும் உற்பத்தியின் ஒழுங்கமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் பயனாய் உழைப்பின் உற்பத்தித் திறன் உயருகிறது, பொருள் அலகின் மதிப்பு குறைகிறது.) - அதே நேரத்தில் சமுதாய உற்பத்தியின் நலன்களும் பொது மக்களின் நலன்களும் கோரும் பட்சத்தில் சோஷலிச அரசு உணர்வு பூர்வமாக மதிப்பிற்கும் விலைக்கும் இடை யிலான வேறுபாட்டை அனு மதிக்கிறது. உதாரணமாக, ஒரு சில துறைகளில் கிடைக்கும் வருமானங்களில் ஒரு பகுதியை, பெரும் தேசியப் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்ற துறைகளின் துரித வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண் டிய அவசியம் தோன்றும் போது இவ்வாறு செய்யப்படும் கிறது. மக்களது தேவைகளை, எனவே நுகர்வின் தன்மையை ஒழுங்கமைக்கும் நோக்கத்துடனும் இவ்வாறு செய்யப்படு கிறது. உதாரணமாக, சோவியத் யூனியனில் குழந்தைகளுக் கான கடைகளில் அடிக்கடி பண்டங்களின் விலைகள் அவற்றின் மதிப்பைவிடக் குறைவானவை, ஆனால் அதே நேரத்தில் மதிப்பைவிட அதிக விலையைக் கொண்ட பண்டங்களும் (புகையிலை, வோத்கா எனும் மதுபானம் முதலியவை) இருக்கின்றன.

தொகுத்துப் பார்க்கையில், முதலாளித்துவத்தில் மதிப்பு விதி தன்னிச்சையாக இயங்குகிறது, விலைகளுக்கும் மதிப்பிற்கும் இடையிலான வேறுபாடு முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகத் தன்மையின் விளைவு என்பது புரியும். இதற்கு நேர் மாறாக சோஷலிசப் பொருளாதாரத்தில் மதிப்பிற்கும் விலைகளுக்கும் இடையிலான வேறுபாடு சமுதாயத்தின் நலன் களுக்காக உணர்வு பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment