Friday 31 May 2019

14. சோஷலிச சமூகத்தில் மூளையுழைப்பும் உடலுழைப்பும்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

வர்க்க சமுதாயத்தின் மிகப் பெரும் நியாயமின்மைகளில் ஒன்றிற்கு, அதாவது மக்களை மூளை யுழைப்பினராயும் உடலுழைப்பினராயும் பிரிப்ப தற்கு முடிவு கட்டுவதைப் பற்றி கற்பனாவாத சோஷலிஸ்டு களே கனவு கண்டனர்.

இத்துறையில் முன்பு நிலவிய எதிர்மறைக்கு சோஷலிசம் முடிவு கட்டிய து. மூளை யுழைப்பை வம்ச ரீதியாக அளிக்கும் சலுகை மாற்றப்பட்டது, அனை வருக்கும் கல்விக்கான வாயில் திறக்கப்பட்டது. சோவியத் அறிவுத் துறையினர் முழுக்க முழுக்க தொழிலாளி வர்க்கத்தையும் கூட்டுப்பண்ணை விவ சாயிகளையும் சேர்ந்த வர்கள், இவர்களின் நலன்களும் எதிர் காலமும் சமுதாயத்தில் உள்ள அடிப்படை வர்க்கங்களோடு ஒத்துப் போகின்றன. மறு புறம் விஞ்ஞானம், தொழில் நுட் பம், கலையில் ஈடுபட கலாச்சாரப் புரட்சி பரவலான மக்கள் திர ளினருக்கு வாய்ப்பளித்தது. லட்சக்கணக்கானோர் புதிது புனைகின்றனர், சிக்கன யோசனை களை முன் வைக்கின்றனர், அமெச்சூர் கலைக் குழுக்க ளில் பங்கேற்கின்றனர்; லட்சக் கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் ஓய்வு நேரத் தில் கல்வி பயிலுகின்றனர், படைப்பாற்றலில் ஈடுபடு கின்றனர் - இவர்கள் தான் மிக உயர்வான பொருளில் கூறும்படி அறிவுஜீவிகள்.

ஆனால் இவையனைத்தும், மக்களை மூளை யுழைப்புத் துறை யினராயும் உடலுழைப்புத் துறையினராயும் பிரிப்பது இன்ன மும் சமுதாயத்தில் உள்ள து என்பதை மாற்றுவதில்லை. இந்தப் பிரிவை இறுதியாக அகற்ற முடியுமா? இதை எப்படிச் செய்வது? இதற்கான தீர்வுகளில் ஒன்று- இதை கற்பனாவாத சோஷலிஸ்டுகளே கூறியுள்ளனர்- மூளை யுழைப் பையும் உடலுழைப்பையும் மாற்றி மாற்றி செய்வது.

இது இப்போதே பல மனிதர்களின் நடவடிக்கைகளில் உள்ளது. உதாரணமாய், தனது உழைப்புக் கடமையை முடித்த தொழிலாளி படிக்க அமருகிறான் அல்லது தொழில் நுட்ப மேம்பாட்டை வகுக்கிறான்; நாள் முழுவதையும் தத்துவச்சிக்கல்களில் செலவிட்ட கணித நிபுணன் ஓய்வு நேரத் தில் தோட்ட வேலை செய்கிறான். இங்கே வேலை மாற்றம் ஓய்வு நேரத்தில் நடைபெறுகிறது, மனிதனுடைய முக்கிய வேலை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது, அதில் முன் போன்று மூளையுழைப்போ அல்லது உடலுழைப்போ தான் மேலோங்கி யுள்ளது .
வேலை நேரம் குறைந்து வருகையில் உழைப்பை மாற்றி மாற்றி செய்வது மேலும் வளர்ச்சியுறும். இது சமுதாயத்திற் கும் மனிதனுக்கும் நல்லது. ஆனால் நவீன உற்பத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் மக்களின் தனித்துறைப்பாடு தேவைப் படுகிறது. நாம் எந்த வேலையை மேற்கொண்டாலும்-அட் ஜஸ்டர், விவசாய நிபுணன், ஆசிரியன் யாராயிருந்தாலும் ஞானம், அனு பவம், தேர்ச்சி ஆகியவை தேவை. திறமை யைப் பெற மனி தன் பெரும்பாலும் ஏதாவது ஒரு துறைக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும், தேர்ந்தெடுத்த விஷயத்தை நன் கு பயில வேண்டும்.

பிரச்சினைக்கான தீர்வுகளை எங்கே தேடுவது?

உடலுழைப்பின் உள்ளடக்கத்தின் எந்த மாற்றம் அதை மூளை யுழைப்புடன் நெருங்கி வரச் செய்யுமோ அத்தகைய மாற்றத்தில் தான் அநேகமாக இவற்றைக் காணலாம். வேறு விதமாகச் சொல்வதெனில் உற்பத்தியே அதன் வேலையாட்களுக்கு உயர்வான மூளையுழைப்பை அவசியமாக்க வேண்டும், படைப்பாற்றலுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

விஞ்ஞான - தொழில் நுட்பப் புரட்சி இதற்குத்தான் இட்டுச் செல்கிறது. முதலாவதாக கடினமான உடலுழைப்பு மறைந்து வருகிறது. எல்லா இடங்களிலும் இயந்திரங்கள் மனிதர்களின் உதவிக்கு வருகின்றன; கடந்த 20-30 ஆண்டு களில் மட்டும், மிகக் கடுமையான உடலுழைப்பு தேவைப் பட்ட, மக்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவித்த, இவர் களின் வாழ் நாளைக் குறைத்த நூற்றுக்கணக்கான வேலைகள் என்றென்றைக்கு மாக மறைந்தன.

இயந்திரங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சிக்கலானவையாக உள்ளனவோ, அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக இவற்றை இயக்கும் தொழிலாளி பல்வேறு விஞ்ஞானங்களின் அடிப் படைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், உற்பத்தியின் தொழில் நுணுக்கத்தை ஆழமாகப் புரிந்திருக்க வேண்டும். ஒரு முறை கற்றதை இயந்திரகதியாக திரும்பத் திரும்பச் செய்வதோடு அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, இடையறாது அவன் தன் ஞானத்தைப் பயன் படுத்த வேண்டும், இதை தன் உழைப்பில் ஈடுபடுத்த வேண் டும். மக்களின் உற்பத்தி நடவடிக்கையில் மூளையுழைப்பையும் உடலுழைப்பையும் அங்கக ரீதியாக இணைப்பதற்கான நிலைமை கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

இந்தப் புறவய ரீதியான நிலைமைகளோடு கூட சமுதாய உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பன்முக வளர்ச்சிக்கும் துணை புரியத் தக்க வகையில் பொதுக் கல்வி முறையும் ஒழுங்க மைக்கப்படுகிறது. ஒவ்வொரு வனும் தேர்ந்தெடுத்த துறையை ஆழப் பயிலு வான், நவீன விஞ்ஞானத்தின் அடிப் படைகளை அறிவான், உற்பத்தி உழைப்பில் நேரடியாகப் பங்கேற்பதற்கான பயிற்சியைப் பெறுவான்.

கடுமையான உடலுழைப்பை ஒழிப்பது கண்ணுக்கு எட்டிய எதிர் காலத்தில் நிறைவேற்றப்படும் என்றால் மூளை யுழைப்பையும் உடலுழைப்பையும் அங்கக ரீதியாக இணைப் பது பன் மடங்கு சிக்கலான கடமையாகும்: தானியங்கி மயப் படுத்தப்பட்ட கம்யூனிச உற்பத்தியில் தான் இது முற்றிலு மாகத் தீர்க்கப்படும்.

தானியங்கி மயமாக்கப்பட்ட உற்பத்தியில் மனிதனின் பங்கு என்ன என்ற இயற்கையான வினா எழுகிறது. படம்

தானியங்கி இயந்திரங்களை வடிவமைப்பதும் தயாரிப்ப தும் மட்டுமின்றி--இது மிகவும் கவர்ச்சிகரமான து-தானி யங்கி அமைப்புகளுக்குத் தேவையான கட்டளைகளை உரு வாக்குவதும் மனிதனின் பங்காக இருக்கும். மிக ' 'மூளை யுள் '' இயந்திரம் கூட மனிதனால் மிகச் சிக்கலான கட்டளை மூலம் ''இயக்கி வைக்கப்பட்டால் தான் ' ' ஒரு குறிப்பிட்ட வரையளவிற்குள் மட்டுமே சிந்திக்க வல்லது.

எதிர்காலத்தில் உற்பத்தி உழைப்பு மிகக் கடினமான தாகவோ அல்லது ஒரே மாதிரியான தாகவோ இருக்காது . திரும்பத் திரும்பச் செய்யப்படும் ஒரே மாதிரியான வேலை களை மனிதன் இயந்திரங்களுக்கு அளித்து விட்டு தான் இவற் றின் இயக்கத்தைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துபவனாக இருப்பான். இது பொறியியல் - தொழில் நுட்ப நடவடிக்கை யின் ஒரு வகையாக இருக்கும்.

எனவே கம்யூனிசம் கட்டப்பட்டதும் பெரும்பான்மை மக்களைக் கடின மான , ஊக்கமற்ற வேலையைச் செய்யும் படி நிர்பந்தித்த பழைய உழைப்புப் பிரிவினை இறுதியாக உதிர்ந்து மறைகிறது. ஒவ்வொரு வேலையும் படைப்பாற்றல் தன்மையை உடையதாக இருக்கும், இதற்குத் தனித்துறைப்பாட்டின் உயர்ந்த தரத்தோடு கூட பரவலான விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப அறிவும் தேவை. மூளை யுழைப்பையும் உடலுழைப்பையும் சீரிசைவாக இணைத்தால் இது எந்தவித உழைப்பையும் மகிழ்ச்சிகரமான தாகவும் உற்சாகமான தாகவும் மாற்றும். உழைப்பு சோம்பேறித்தனமான பொழுது போக்காக மாறும் என்று நிச்சயமாக இதற்குப் பொருள் இல்லை. எப்போதும் உழைப்பிற்கு மனிதனின் ஆன்மீக மற்றும் உடல் சக்தியும் பெரும் ஆற்றலும் தேவை.

 சரியாகக் கூறின், இப்போது அறுவை சிகிச்சை மருத்து வர் ஒரே நேரத்தில் கைகளால் வேலை செய்து கொண்டே மூளையாலும் சிந்திப்பதைப் போன்றே எதிர்காலத்தில் மக்கள் தமது நடவடிக்கையில் எது-உடலுழைப்பா அல்லது மூளை யுழைப்பா - மேலோங்கியுள்ளது என்று சிந்திப்பதையே நிறுத்துவார்கள்.

அதே நேரத்தில் எல்லா மக்களின் நடவடிக்கையிலும் மூளை யுழைப்பும் உடலுழைப்பும் முற்றிலும் ஒரே மாதிரியாக “அளவிடப்படும்'' என்று கருதக் கூடாது. வெவ்வேறு வேலை களுக்கு எப்போதுமே வெவ்வேறு அளவுகளில் மூளையுழைப்பும் உடலுழைப்பும் தேவைப்படும். உதாரணமாக, புவியி யல் நிபுணரை எடுத்துக் கொண்டால் சில உடலுழைப்புத் துறையினரைவிட இவரது உழைப்பிற்கு அதிகத் தசைச் சக்தி தேவைப்படும்.

இவ்வாறாக, காலப் போக்கில் மக்களை உடலுழைப்புத் துறையின ராயும் மூளை யுழைப்புத் துறையினராயும் பிரிப்பது மறையும்; அறிவு ஜீவிகள் விசேஷப் பிரிவினராய் இருப்பதும் மறையும்.

உற்பத்திச் சாதனங்களின் மீதான ஒரே கம்யூனிசச் சொத்துடைமையை உருவாக்குதல், நகரத்திற்கும் கிராமத் திற்கும் இடையிலுள்ள சமூக வேறுபாடுகளை அகற்றுதல், மக்களின் உற்பத்தி நடவடிக்கையில் உடலுழைப்பையும் மூளை யுழைப்பையும் அங்கக ரீதியாக இணைத்தல்- இவை யனைத்தும் இறுதியில் கம்யூனிச சமுதாய உறவுகளை நிலை நாட்டு வதற்கு இட்டுச் செல்லும் புறவய ரீதியான சமுதாய நிகழ்ச்சிப் போக்குகளாகும்.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment