Monday 27 May 2019

7. சோஷலிசத்தின் முக்கிய அடிப்படை


-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986

உற்பத்திச் சாதனங்களின் மீதான பொதுச் சொத் துடைமைதான் சோஷலிச அமைப்பின் அடிப்படையாகும். இதுதான் சோஷலிசத்தின் முக்கியக் காரணி, இதன் அடித்தளம், இதன் முன்னேற்றத்தின் முக்கிய மூல ஊற்று.

பொதுச் சொத்துடைமை என்றால் உற்பத்தியில் பங்கேற்பவர்கள் ஒன்றுசேர்ந்து, கூட்டாக உற்பத்திச் சாதனங்களைத் தம் கரங்களில் வைத்திருக்கின்றார்கள் என்று பொருள். இது சோஷலிச சமுதாயத்தில் உற் பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றின் முறை முழுவதையும் நிர்ணயிக்கிறது. - முதலாவதாக, பொதுச் சொத்துடைமையானது உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட நபர்களின் சொத்துக் களாக மாற்றப்படுவதையும் இதன் மூலம் சமுதாயத்தின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியினரைச் சுரண்டும் வாய்ப்பையும் தவிர்க்கிறது.

இரண்டாவதாக, இது சமுதாயத்தில் உற்பத்திச் சாதனங்களின் பால் மக்களின் உண்மையான சமத்துவம் ஏற்படுவதற்கான அடிப்படையாகத் திகழுகிறது, உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களை தோழமை ரீதியான ஒத்து ழைப்பு, பரஸ்பர உதவி எனும் உறவுகளால் இணைக் கிறது, தனிப்பட்ட முறையில் சிறந்த உழைப்பை வெளிப்படுத்த தார்மீக ரீதியாகவும் பொருளாயத ரீதி யாகவும் ஊக்கம் அளிக்கிறது.

மூன்றாவதாக, இதனால் உழைப்பாளிகளின் இடையில் ஏற்பட்டுள்ள உறவுகள் இவர்களிடையேயான தீய போட்டிகளை (இதனால் ஏற்படும் மோசமான பின் விளைவுகளையும்) அகற்றுகின்றன; தம் சமுதாயக் கடமையைப் பற்றிய உயர்வான சுய உணர்வின் வெளிப்பாடாக ஆக்கபூர்வமான போட்டி வளருகிறது.

நான்காவதாக, உற்பத்திச் சாதனங்களின் மீதான பொதுச் சொத்துடைமை நிலவும் சூழ்நிலையில், பொரு ளாதாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கான தேவை உருவாகிறது. இதற்கான எல்லா நிலைமைகளும் தோற்று விக்கப்படுகின்றன, நாட்டின் தேசியப் பொருளாதாரம் முழுவதும் ஒரே திட்டத்திற்கு உட்படுத்தப்படுகிறது.
எனவேதான் சோஷலிசத்தின் விரோதிகள் பொதுச் சொத்துடைமையை முக்கியமாகத் தாக்குகின்றனர். இவர்களுடைய கருத்தின்படி இச்சொத்துடைமைக்கு எவ்வித உண்மையான பொருளாதார உட்பொருளும் இல்லை, ஏனெனில் இது ஏதோ அதிகார சடங்கு முறையிலான மத்தியத்துவத்திற்குக் கீழ்ப்படிகிறதாம், பொரு ளாதாரம் முழுவதும் அரசாட்சியின் கட்டளைகளுக்கு உட்படுகிறதாம். ஆனால் சோஷலிசப் பொதுச் சொத் துடைமைதான் சோஷலிச அரசு முறைக்கு, இதன் உண்மையான ஜனநாயகத்திற்கான அடிப்படை எனும் அம்சத்தைப் பற்றி ஏனோ மறந்து விடுகின்றனர்.

No comments:

Post a Comment