Thursday, 30 May 2019

7. சோஷலிசத்தில் பண்ட உற்பத்தி ஏன் இருக்கிறது


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

ஊதியத்தைப் பெறும் மக்கள் தமக்கு அவசியமானவற்றை வாங்குகின்றனர். தொழிற்சாலையோ அல்லது ஆலையோ தமது பொருட்களை விற்கின்றன; பெறப்படும் பணம் அந்த நிறுவனத்தின் கணக்கில் வங்கியில் சேர்க்கப்படுகின்றது. கூட்டுப்பண்ணை அரசிடமிருந்து விவசாய இயந்திரங்களை வாங்குகிறது, தானியம், பால், இறைச்சி, காய்கறிகளை அதற்கு விற்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதெனில் உற்பத்திப் பொருட்கள் சோஷலிசத்திலும் பண்டங்களாக இருக்கின்றன , பண்ட உற்பத்தி நிலவுகிறது.

சமுதாய உழைப்புப் பிரிவினை தான் பண்ட உற்பத்தியின் தோற்றத்திற்கான காரண மாக இருந்தது. பண்ட உற்பத்தி யின் பொது அடிப்படையாகிய இது, பண்ட உற்பத்தி நில வும் வரை தன து முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொள் கிறது. சோஷலிசத்தில் உழைப்புப் பிரிவினை தொழில் துறைக்கும் விவசாயத்திற்கும் இடையில் , தொழில் துறை பிரிவு களுக்கும் விவசாயத் துறைகளுக்கும் இடையில், வெவ்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தனிப்பட்ட நிறுவனங் களுக்கு இடையில், வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ள வேலையாட்களுக்கு இடையில் நிலவுகிறது.

உழைப்புப் பிரிவினை பரிவர்த்தனையை முன்னனு மானிக் கிறது. ஆனால் இது கண்டிப்பாகக் கொள்வினை கொடுப்பினை வடிவத்தைப் பெற வேண்டுமா? முதலாளித்துவத்தில் பண்ட உற்பத்தியாளர்கள் தனியுடைமையாளர்களாக சந்தைக்கு வருவதால் பொருள் பண்டமாகிறது. சோஷலிசத்தில் தனியுடைமை இல்லை, பண்ட உற்பத்தியாளர்கள் சமூக உடைமை யாளன் சார்பில் செயல்படுகின்றனர்.

இருப்பினும் பண்ட உற்பத்திக்கான அவசியம் ஏன் உள்ளது?

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி போதுமான அளவு உயர்வான தாக இல்லாததால் தான் பண்ட உற்பத்தி நிலைத் திருக்கும் அவசியம் ஏற்படுகிறது. பொருட்களின் பரிவர்த் தனை பண்ட வடிவத்தை இழக்க வேண்டுமானால் பொருளா யத, ஆன் மீக நலன்களை மிதமிஞ்சி ஏற்படுத்த வேண்டும், எல்லா மக்களின் தேவைகளையும் இலவசமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். கம்யூனிசத்தில் இப்படித்தான் இருக்கும். சோஷலிசத்தில் மக்களது உழைப்பின் அளவிற்கும் தரத் திற்கும் ஏற்றவாறு பொருட்களைப் பகிர்ந்தளிக்குமாறு சமு தாயம் கட்டாயப்படுத்தப்படுகிறது. இங்கே உழைப்பின் அளவையும் நுகர்வின் அளவையும் கணக்கில் கொள்வது அவசியம். இத்தகைய கணக்கீட்டுக் கருவியாகத்தான் பணம் விளங்குகிறது. இதைக் கொண்டு ஒவ்வொரு வரும் தனக்கு வேண்டிய பண்டங்களைப் பெறலாம்.

பண்ட உற்பத்தி நிலைத்திருப்பதற்கு இன்னொரு காரணம் சோஷலிச உடைமையின் இரு வடிவங்கள் நிலவுவதாகும். இரு முக்கிய உடைமையாளர்களாகிய அரசிற்கும் கூட்டுப் பண்ணைகளுக்கும் இடையேயான பரிவர்த்தனை பண்ட வடி வத்தில் நடைபெறுகிறது: கூட்டுப்பண்ணைகள் தமது பொருட் களை அரசிற்கும் ஒரு பகுதியை கூட்டுப்பண்ணைச் சந்தை யிலும் விற்று அரசிடம் இயந்திரங்கள், உரங்கள், மற்ற பண் டங்களை வாங்குகின்றன.

சோஷலிசத்தில் நிலவும் பண்ட உற்பத்தி முதலாளித்து வத்தில் நிலவும் பண்ட உற்பத்தியிலிருந்து கோட்பாட்டு ரீதியாக மாறுபடுகிறது. சோஷலிசப் பண்ட உற்பத்தி என்பது தனிச்சொத்துடைமை இல்லாத, சிறிய, பெரிய முதலாளிகள் இல்லாத, மனிதனை மனிதன் சுரண்டுவது இல்லாத உற்பத்தியாகும்.

பண்டங்களின் உற்பத்தியும் வினியோகமும் பரிவர்த்தனை யும் தன்னிச்சையாக நடைபெறுவதில்லை, மாறாக ஒரே தேசியப் பொருளாதாரத் திட்டங்களின் அடிப்படையில் நடைபெறுகின்றன. பண்ட உற்பத்தியின் செயல்த் துறை மட்டான து : நிலம், அதன் செல்வம், காடுகள், ஆலைகள், தொழிற்சாலைகள், இருப்புப் பாதைகள், சமுதாயச் செல்வத்தின் மற்ற மிக முக்கிய அம்சங்கள் ஆகியவை பண்டப் புழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டவை, யாராலும் இவற்றை வாங்கவோ விற்கவோ இயலாது; உழைப்புச் சக்தியும் பண்டம் இல்லை.

பண்ட-பண உறவுகள் தாமாகவே தனிப்பட்ட சமுதாய அமைப்புகளின் சமூகத் தன்மையையும் சிறப்பு அம்சங்களை யும் வெளிப்படுத்துவதில்லை. மாறாக ஆதிக்கம் செலுத்தக் கூடிய உற்பத்தி முறைதான் பண்ட உற்பத்தியின் இயல்பை யும் தன்மையையும் நிர்ணயிக்கிறது.

உற்பத்திச் சாதனங்களின் மீதான சமூக உடைமை நிலை நாட்டப்பட்டதும் பண்ட-பண உறவுகள் அகற்றப்படும், சோஷலிசச் சமுதாயத்தில் பண்டமோ, மதிப்போ, பணமோ இருக்காது எனும் கருத்து ருஷ்யாவில் சோஷலிசப் புரட்சி நடைபெறுவதற்கு முன் மார்க்சியவாதிகளிடம் நிலவியது. சோவியத் ஆட்சியின் முதல் ஆண்டுகளில் ஒரு சில கூட்டுகள் ''கம்யூன்களை உருவாக்க முயற்சித்தன. இந்தக் : 'கம்யூன் களில் '' உழைப்பின் அளவு மற்றும் நுகர்வின் அளவு மீதான கண்காணிப்பு அகற்றப்பட்டது, வினியோகத்தைச் சமனாக் கும் கோட்பாடு அமல் படுத்தப்பட்டது. இந்தக் கம்யூன் வாதிகள் எவ்வளவு நல்ல எண்ணத்தோடு செயல் பட்டாலும் இவர்களது அனுபவம் தவிர்க்க இயலாது தோல்வியைத் தழுவியது. பண்ட-பண உறவுகள் நிலவு வ து வரலாற்று ரீதியாக மட்டான து என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது தான் என்றாலும் இதற்காகக் குறிப்பிட்ட சூழ் நிலைகள் முதிர்ச்சி யடைய வேண்டும். இது குறிப்பாக எப்போது நடைபெறும் என்ற வினாவிற்கான பதிலை அளிக்க போதுமான அடிப்படை களை நடைமுறை இதுவரை தரவில்லை. இரு உடைமை வடி வங்களும் ஒரே கம்யூனிச உடைமையாக எப்போது ஒன்றிணை கிறதோ, உழைப்பின் சமூக- பொருளாதார சமமின்மை எப் போது அகற்றப்படுகிறதோ, உழைப்பு எப்போது வாழ்க்கை யின் முதல் அவசியமாக மாறி இதைப் பொருளா ய த ரீதியாக ஊக்குவிக்கும் அவசியம் மறைகிறதோ, உற்பத்திச் சக்திகளுடைய உயர்வான வளர்ச்சியின் அடிப்படையில் எப்போது சமுதாயத்தின் வசம் பொருளாயத நலன்கள் மிதமிஞ்சி இருந்து , இவை சமுதாய உறுப்பினர்களின் மத்தி யில் தேவைகளுக்கேற்றபடி பகிர்ந்தளிக்கப்படுமோ அப் போ து பண்ட உற்பத்தியும் உதிரும் என்னும் பொதுக் கோட்பாடு மட்டுமே இப்போது தெளிவானது.

சோஷலிசப் பண்ட உற்பத்திக்கும் முதலாளித்துவப் பண்ட உற்பத்திக்கும் இடையிலுள்ள வேறுபாடு மதிப்பு விதியின் செயல்பாடு மாறுவதில் கண் கூடாகத் தென்படு கிறது.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment