-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் சமுதாயத்தால் தோற்று
விக்கப்பட்டவை எல்லாம் சேர்ந்து சமூக உற்பத்திப் பொருளை உருவாக்குகின்றன. இது எப்படி
வினியோகிக்கப் படுகிறது? முதலில், பொருட்களின் உற்பத்திக்காக சமுதாயம் செலவழித்ததெல்லாம்
ஈடுகட்டப்படுகிறது. மூலப்பொருட்கள், எரிபொருள், மற்ற வகையான பொருட்களின் மதிப்பு, வேலையின்
போது தயாரான பொருள் மீது இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவை மாற்றிய மதிப்பு ஆகியவை
இதிலடங்கும். இவையெல்லாம் சேர்ந்து ஈடுகட்டும் நிதியை உருவாக்குகின்றன. சமூக உற்பத்திப்
பொருளின் மதிப்பிலிருந்து இதைக் கழித்தால் தேசிய வருமானம், அதாவது புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட
மதிப்பு எஞ்சும்.
தேசிய வருமானம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
முதல் பகுதி சேமிப்பு நிதி ஆகும். இது உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக சமுதாயம் ஒதுக்க
வேண்டிய சாதனங்களாகும். வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், நாடக அரங்குகள் போன்ற கல்வி,
சமூக-கலாசார அமைப்புகளைக் கட்டத் தேவையான சாதனங்களும் இவற்றில் அடங்கும். சேமிப்பு
நிதியைக் கொண்டுதான் சேம் இருப்பு மற்றும் இன்ஷூரன்ஸ் நிதி களும் தோற்றுவிக்கப்படுகின்றன.
இரண்டாவது பகுதி நுகர்வு நிதி ஆகும். சோஷலிச சமுதாயத்தில் இது மேன் மேலும் அதிகரித்து
வரும் கணிசமான பகுதி. சோவியத் யூனியனில் நுகர்வு நிதி தேசிய வருமானத்தில் முக்கால்
பங்கிற்கும் மேலானது.
தேசியப் பொருளாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளைச்
சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், விஞ்ஞான, கல்வி, மருத்துவ நிறுவனங்களைப் பராமரிக்க
ஆகும் செலவு ஆகியவை இதிலடங்கும். குழந்தை வளர்ப்பு, பள்ளிக் கல்வி, வயதானவர்கள், உடல்
ஊனமடைந்தவர்கள், வேலை செய்ய இயலாதவர்கள் ஆகியோரைப் பராமரிக்கும் செலவும் இதிலடங்கும்.
நுகர்வு நிதியின் ஒரு பகுதி அரசு நிர்வாக அமைப்பைப் பராமரிக்கவும் நாட்டுப் பாதுகாப்பிற்கும்
செல்கிறது. பாதுகாப்பிற்கான செலவுகள் ஒப்பீட்டளவில் குறை வானவை, மொத்தத்தில் நிலையானவை.
சோஷலிசத்தின் கீழ் சமூக உற்பத்திப் பொருளும் தேசிய
வருமானமும் வினியோகிக்கப்படும் கோட்பாடு களைப் பற்றிய சுருக்கமான விளக்கத்திலிருந்தே,
மக் களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக நேரடி யாக ஒதுக்கப்படும் நிதியின் அளவு,
உற்பத்தியின் பொது அளவையும், ஈடுகட்டுதல் மற்றும் சேமிப்பிற்கான நிதிகள் எவ்வளவு சிறப்பாகப்
பயன்படுத்தப்படுகின்றன என்பதை யும் பொறுத்தது என்பது தெளிவாகிறது. எனவேதான் உற்பத்தியின்
அளவைப் பெருக்குவதில் மட்டுமின்றி உற்பத்தியின் பயன் தன்மையைக் கூட்டுவதிலும் சமுதாயம்
முழுவதும் அக்கறை கொண்டுள்ளது.
உற்பத்தியின் அளவுகளை அதிகரிக்கும் போது, மேன்மேலும்
அதிகமான உற்பத்தி மூலாதாரங்களை இதில் ஈடுபடுத்தும் போது இது குறிப்பாக முக்கியமானது.
1940 -1982 இல் சோவியத் யூனியனில் தேசிய வருமானம் நபர் ஒருவருக்கான கணக் கில் 10.6
மடங்கும் உண்மையான வருமானங்கள் 6 மடங் கும் அதிகரித்துள்ளன.
உற்பத்தியின் செயல்வன்மையை உயர்த்துவது என்பது ஒரு
பன்முக நிகழ்ச்சிப் போக்காகும். இதில் பின்வரும் முக்கியமான அம்சங்கள் அடங்கியுள்ளன:
முதலில், உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குகளை இயந்திரமயப்படுத்துதல், தானியங்கி
முறைப் படுத்துதல் மூலமும் உழைப்பாளிகளின் தேர்ச்சியையும் திறமையையும் வளர்ப்பதன் மூலமும்
இதை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்தி,
உழைப்பின் ஒழுங்கமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இயந்திரங்கள், உபகரணங்களைப் பயன்படுத்துவதை
மேம்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக, தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மூலப்பொருட்கள்,
எரிபொருள், மற்ற வகையான பொருட்களைச் சிக்கனப்படுத்த வேண்டும், உற்பத்திப் பொருட்களின்
தரத்தை உயர்த்த வேண்டும்.
இவையெல்லாம் ஒன்றுசேர்ந்துதான் உற்பத்தியைத் தீவிரமயப்படுத்துதல்
எனும் கருத்தை ஏற்பத்துகின்றன. இது சோஷலிசப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் புதிய கட்டத்தைக்
குறிக்கிறது.
சோஷலிச சமுதாயத்தைக் கட்டத் துவங்கிய போது சோஷலிசத்
தொழிற்துறைமயப்படுத்தல் எவ்வளவு முக் கியமானதாயிருந்ததோ அதே போல் வளர்ச்சியடைந்த சோஷலிசக்
கட்டத்தில் உற்பத்தியைத் தீவிரமயப்படுத்து வது முக்கியமானது. இது கோட்பாட்டளவில் புதிய,
உயர் செயல்வன்மை மிக்க புனருற்பத்தி வகையாகும்.
உழைப்பாளிகள் உற்பத்திச் சாதனங்களைத் தம் கரங் களில்
எடுத்துக்கொண்டு திட்டமிட்ட வகையில் தம் பொது தேசியப் பொருளாதாரத்தை வழிநடத்தும் போது,
இவர்கள் தனியுடைமையாளர்களை விட அதிக பொறுப்பானவர்கள், சிக்கனமானவர்கள் என்பது சோஷ லிசத்தின்
சந்தேகத்திற்கிடமற்ற மேம்பாடாகும். இதை தீவிர பொருளாதார வளர்ச்சி தெட்டத் தெளிவாக மெய்ப்பிக்கிறது.
ஒன்றுபட்ட உழைப்புக் கூட்டு மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது எல்லா
வற்றிற்கும் மேலாக முக்கிய உற்பத்திச் சக்தியாகிய உழைக்கும் மனிதனை விவேகமாகப் பயன்படுத்துவதன்
மீது அக்கறை காட்டுகிறது.
உழைப்பின் விளைபயன்கள் விரயமாக்கப்படாமல், அதிகபட்சம்
உற்பத்தியிலும் நுகர் விலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதன் மீதும் இது அக்கறை செலுத்துகிறது.
சமுதாய உறுப்பினர்கள் அனை வரும் இதை உடனடியாக உணருவதில்லை, பொதுச் சொத்தை தன் சொத்தாக
மதிக்க மக்கள் கற்றுக்கொள்ள பெரும் வரலாற்றுக் காலகட்டம் தேவைப் படுகிறது. ஆனால் இந்த
உணர்வு கண்டிப்பாக வரும், மேன்மேலும் அதிகமான உழைப்பாளிகள் சமுதாயத்தின் முன், தம்
சகதோழர்கள் முன் உயர்வான பொறுப் புணர்வை, கடமையுணர்வைப் பெறுகின்றனர்.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும் மக்களின்
வாழ்க்கைத் தரத்தை இடையறாது உயர்த்துவது எனும் உயர் லட்சியத்தை அடையவும் அவசியமான பரவலான
வாய்ப்புகளை அளிக்கும் கோட்பாட்டு ரீதியாகப் புதிய உற்பத்தி உறவுகளின் அடிப்படையில்
சோஷலிசம் வளர்ந்து வலுப்படுகிறது என்பதை மேற்கூறியவை காட்டுகின்றன. மனித சமுதாயத்தின்
பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்கு அவசியமான, உண்மையிலேயே எல்லையற்ற வாய்ப்புகளை சோஷலிசம்
ஏற்படுத்துகிறது என்று இதற்குப் பொருள்.
இப்பாதையில் வெற்றிகரமாக நடைபோட சோஷலிசத்தின் அரசியல்
பொருளாதாரம் நம்பகரமான வழிகாட்டியாக விளங்குகிறது.
No comments:
Post a Comment