முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாற்றம் ஏற்பட்டவுடன், சோஷலிசத்தின் பொருளாதார விதிகள் முதலாளித்துவப் பொருளாதார விதிகளை நீக்கிவிட்டு அவ்விடத்தில் அவை செயல்படுகின்றன.
மற்றெல்லாச் சமுதாயங்களின் பொருளாதார விதிகளைப் போலவே, சோஷலிசப் பொருளாதார விதிகளுக்கும் பாரபட்ச மற்ற தன்மையுண்டு. இயற்கை நிகழ்ச்சிகளின் உள்ளார்ந்த தொடர்புகளை அவைகள் வெளிப்படுத்துகின்றன
என்று இதற்குப் பொருளாகும். இவை மக்களின் விருப்பாற்றல், உணர்வு ஆகிய வற்றோடு தொடர்பில்லாமலேயே இருக்க முடியும். ஆனால் அதே சமயத்தில், சோஷலிசப் பொருளாதார விதிகள் அதற்கு முந்தைய எல்லாச் சமுதாயப் படிவங்களின் விதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டனவாக இருக்கின்றன.
அவைகள் இரண்டிற்குமுள்ள வேற்றுமை, அழிக்கும் சக்தி யாகிய மின்னலுக்கும் தந்திக் கம்பியிலோ அல்லது தீபத்திலோ அடக்கமாக எரியும் மின்சாரத்துக்கும் உள்ளது போன்றது ஆகும், காட்டுத் தீர்க்கும், மனிதனுக்கு நன்மை பயக்கும் நெருப்புக்கும் உள்ள வேற்றுமையே என்று எங்கெல்ஸ் எழுதினார். இந்த ஒப்பீடு மிக அழகாக இந்த வேற்றுமையை விளக்கிக் காட்டு கிறது. மின்னலும், விளக்கை எரியச் செய்யும் மின்சாரமும் ஒரே தன்மையான இயற்கைச் சக்தியால் ஆக்கப் படுகின்றன. ஆனால் மின்னல் தானாகவே வெட்டியடிக்கிறது. மனிதனால் அதை அடக்க முடிவதில்லை . அதற்கு மாறாக, மின்சார விளக்கில் இயங்கும் இயற்கை சக்தியாகிய மின்சக்தியைப் புரிந்து கொண்டு, மனிதன் அதை அடக்கி ஆள்கிறான். அதை அவன் தனக்கென்று வேண்டுமென்றே பயன்படுத்துகிறான்.
முதலாளித்துவத்திலும், இன்னும் அதற்கு முந்தைய சமூக அமைப்புகள் அனைத்திலும் பொருளாதார விதிகள் தாமே இயங் கும் தன்மை உடையன, மின்னல் சக்தியைப் போன்று. அவைகள் மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாகும். மின்னலின் தன்மையை விஞ்ஞானிகள் விளக்கிக் காட்டிய போதும் அது ஒரு விரோதச் சக்தியாகவே இருக்கிறது. முதலாளித்து வத்தின் பொருளாதார விதிகளுக்கும் இதுவே பொருந்தும். உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமை என்பதன் கீழ், சமூக வளர்ச்சியின் பொருளாதார விதிகளை உணர்ச்சி பூர்வமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு மக்களுக்கு நிராகரிக்கப் பட்டுள்ளது. அவைகள து தன்மை வெளிப்படுத்தப்பட்ட பிறகும், அடக்கவிய லாத இயற்கை சக்தியைப் போன்று, இவ்விதிகள் குருட்டாட்ட மாயும், வன்முறையிலும், அறிவுறுத்தும் வகையிலும் இயங்கு கின்றன.
உற்பத்தி
சாதனங்கள் (பொது உடைமை என்ற அடிப்படை யில் எழும் சோஷலிசம், நாட்டுப் பொருளாதாரத்தை ஒரே சீராக இணைத்து விடுகிறது, நாட்டுப் பொருளாதார வளர்ச்சி என்பது உணர்ச்சி பூர்வமானதும், ஆக்க பூர்வமானதுமான நட வடிக்கை ஆக விளங்குகிறது. ஒரு நிறுவனத்தில் உள்ள மனித உழைப்பிற்கு எவ்விதத்திலும் குறைவின்றி அதைப் போன்றே விளங்குகிறது.
பாரபட்சமற்ற பொருளாதார விதிகளைச் சோஷலிசத்தின் கீழ் மக்கள் புரிந்து கொள்ளவும், அவற்றை அடக்கி ஆளவும், சமுதாயம் முழுவதும் பயன்பெறத்தக்க வகையில் அவற்றைப் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபடுத்தவும் தெரிந்து கொள்கிறார் கள். சோஷலிச அரசு பிரதிநிதித்துவப் படுத்தும் சமுதாயம் சோஷலிசப் பொருளாதார விதிகளை விஞ்ஞான ரீதியில் பயன் படுத்துகிறது. மின்சார விளக்கிலுள்ள மின்சக்தி அடக்கப்பட் டுள்ளதைப் போன்று அவைகளை அடக்கி ஆள்கின்றது.
சோஷலிசக்
கட்டுமானத்தின் போது, பொருளாதார விதி களைப்பற்றிய இன்னும் ஆழமான அறிவைச் சமுதாயம் பெறுகிறது , அந்த அமைப்பின் விதிகளைப் பற்றி அறிந்து, மேலும் வெற்றிகர மாக இவைகளைச் சமாளிக்கிறது. இந்தப் பணியானது கம்யூ னிஸ்ட் கட்சியால் நிறைவேற்றப் பெறுகிறது,
இக்கட்சி
மார்க்சிய-லெனினிசச் சித்தாந்தத்தை தனது கருவி யாகக் கொண்டுள்ளது, நடைமுறைப் பணிகளைச் செயலாற்றும் அதே சமயத்தில் மார்க்சிய-லெனினிசக் கட்சி புரட்சிகரமான சித்தாந்தத்தையும் உருவாக்குகிறது.
சோஷலிசப்
பொருளாதாரத்தை ஒரு விஞ்ஞான அடித் தளத்தின் மீது அமைப்பது என்றால், விஞ்ஞானத்தால் வெளிப் படுத்தப்பட்டுள்ள பாரபட்சமற்ற பொருளாதார விதிகளின் அடிப்படையாக அதை அமைப்பது என்று கம்யூனிஸ்ட் கட்சி அனுமானித்துக் கொள்கிறது. மேலும், புற நிகழ்ச்சியின் பகுத் தறிவு விளக்கத்தின் அடிப்படையிலும், ஒரு மனிதன் தனது அனுபவத்துக்கேற்ப அறிவு பெறுவது, மற்றவர்களின் அனுபவத்தி லிருந்து அறிந்து கொள்வது, பொருளாதார மேலாண்மை வழி முறைகளையும் ஆதாரங்களையும் மேம்படுத்துவது போன்ற அடித் தளத்தின் மேல் அதைக் கட்டுவது என்ற அனுமானத்தைக் கம்யூ னிஸ்ட் கட்சி கைக்கொள்கிறது.
பட்டறிவின்
திரட்சியும், அதிலிருந்து பெறப்பட்டுள்ள விஞ்ஞான ரீதியான பொதுமைகளும், சோஷலிசத்தின் பொருளா தார விதிகளை இன்னும் அதிகப் பயனுள்ள வழியில் ஈடுபடுத்து வதைச் சாத்தியப்படுத்துகிறது. இந்த விதிகள் சரியானபடி பிரயோகிக்கப் படுவது. நடைமுறைப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை ஊர்ஜிதப் படுத்துகிறது. இவற்றை மீறினால் இந்தப் பணிகள் நிறைவேற்றப் பெறுவது தடைப்படுகிறது.
சமூக வளர்ச்சியின் பொருளாதார விதிகள் இயங்குவதன் விளை வாகச் சோஷலிசமும், கம்யூனிசமும் தோன்றி, வளர்ச்சி அடைகின்றது. இவை மக்களின் விருப்பாற்றல், உயர்வு ஆகிய வற்றிற்கு அப்பாற்பட்டு நிலைத்து இருக்கின்றன. அதே சமயத் தில் லட்சக் கணக்கான உழைக்கும் மக்களின் உணர்ச்சி பூர்வ மான நடவடிக்கையின் விளைவாகச் சோஷலிசமும், கம்யூனிசமும் தோன்றி, வளர்ச்சி அடைகின்றன.
(அரசியல் பொருளாதாரச் சுருக்கம்-
எல்.லியோன்டியெவ்- என்சிபிஎச் 1075 – தமிழாக்கம்:தா.செல்லப்பா- பக்கம் 313-315)
"பாரபட்சமற்ற பொருளாதார விதிகளைச் சோஷலிசத்தின் கீழ் மக்கள் புரிந்து கொள்ளவும், அவற்றை அடக்கி ஆளவும், சமுதாயம் முழுவதும் பயன்பெறத்தக்க வகையில் அவற்றைப் பொருளாதார வளர்ச்சியில் ஈடுபடுத்தவும் தெரிந்து கொள்கிறார் கள். சோஷலிச அரசு பிரதிநிதித்துவப் படுத்தும் சமுதாயம் சோஷலிசப் பொருளாதார விதிகளை விஞ்ஞான ரீதியில் பயன் படுத்துகிறது. மின்சார விளக்கிலுள்ள மின்சக்தி அடக்கப்பட் டுள்ளதைப் போன்று அவைகளை அடக்கி ஆள்கின்றது."
ReplyDeleteஇந்த விதி சரியானதுதான் என்றால் அணு ஆற்றலுக்கும் பொருந்தக்கூடியதுதானே.சோசலிச பொருளாதார கட்டுமானத்தை அடுத்தக்கட்ட ஆற்றல் சக்தியான அணு ஆற்றலைக் கொண்டு பாட்டாளி வர்க்கம் கட்டமைக்க வேண்டும் என்பதும் சரியானதுதானே.
செர்னோபில் அணு உலை விபத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
Deleteஇயற்கையையும் மனித குலத்தையும் மீட்கவல்ல ஒரே விஞ்ஞான தத்துவம் மார்க்சிய லெனினியம் என்பதில் தங்களுக்கு மாற்று கருத்து இல்லையென்று நினைக்கிறேன்.மக்களின் பாதுகாப்பை மட்டுமல்ல இயற்கையையும் பாழாக்காமல் முன்னேற வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .உம்(நெருப்பு)
ReplyDelete