– எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ்,
ஜி.என்.ஹீடக்கோர்மவ்
சோஷலிசத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விதிகள்
சோஷலிசத்தின் கீழ், எல்லா சமூக-பொருளாதார அமைப்புகளிலுள்ள சமூக உற்பத்தி வளர்ச்சியை தீர்மானிக்கும் ஒரு பொருளாதார விதி செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. உற்பத்திச் சக்திகளுக்கு ஒத்திசைவான உற்பத்தி உறவு களுக்கான ஒரு விதி அது. மதிப்புவிதி கூட செயல்படுகிறது. சோஷலிசத்தின் கீழ் பரிவர்த்தனைப்-பண உறவுகள் செயல் படுவ திலிருந்து அதனுடைய இருத்தல் தோன்றுகின்றது. விரிவுபடுத்தப்பட்ட மறுவுற்பத்தியின் விதியும் செயல்படுகிறது. அதாவது உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தியை நுகர்வுப் பொருள்களின் உற்பத்தியை விட வேகமாக உயர்த்துவதற்கான அவசியம்.
அதே நேரத்தில் சோஷலிசத்தின் கீழ் கம்யூனிச உற்பத்தி முறையின் உள்ளார்ந்த விதிகளான, பிரதான பொருளாதார விதி, தேசியப் பொருளாதாரத்தின் திட்டமிட்ட, விகிதாச்சார வளர்ச்சியின் விதி உழைப்பின் உற்பத்தித் திறனின் சீரான உயர்வின் விதி, திரட்சியின் விதி போன்ற விதிகள் செயல்பட ஆரம்பிக்கின்றன. சில பொருளாதார விதிகள், அதாவது செய்த வேலைக்கு ஏற்ற அளவு நுகர்வுப் பொருள்களை யும் சேவைகளையும் வினியோ கிக்கும் விதி, மதிப்பு விதி போன்றவை சோஷலிசக் கட்டத் திற்கு அப்பால் விரிவடையாது.
முந்திய
சமூக-பொருளாதார அமைப்புகளைப் போல், சோஷலிசத்தில் செயல் படும் பொருளாதார விதிகளும் புறவயமானவை. அவைகள் புதிதாகக் கண்டு பிடிக்கப்படும் பவையல்ல, அவைகள் அழிக்கப்படக் கூடியவை அல்ல, மற்றும் அவைகள் நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றப்படக் கூடியவை அல்ல. அவற்றின் செயல்பாடு, சமுதாயத்தில் நிலவிக் கொண்டிருக்கும் பொருளாதார நிலைமைகள், உற்பத்தி உறவுகளின் பேராதிக்கம் ஆகியவற்றிலிருந்து தோன்று கிறது. உற்பத்தி உறவுகளின் உள்ளடக்கத்தை அவை வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில் அவை சோஷலிசத் தில் செயல் படும் விதம் முதலாளித்துவத்தில் செயல்படும் விதத்தை விட மாறுபட்டது. சோஷலிச உற்பத்தி உறவுகளின் குண இயல்பு, சமூக உடைமையின் பேராதிக்கம் ஆகியவற்றால் அது தீர்மானிக்கப்படுகிறது.
பொருளாதார விதிகளின் அறிவும்
பயன்பாடும்
முதலாளித்துவத்தின் கீழ் தனியார் முதலாளித்துவ உடைமை பேராதிக்கம் செய்யும் பொழுது, உற்பத்தியாளர் கள் ஒருவரிடமிருந்து மற்றவர் பிரிக்கப்படும் பொழுது, பொருளாதார விதிகளான து, தன்னியல்பான தும் தற்செய லான து மான ஒரு சக்தியாக மக்களைக் கையாளுகின்றன.
சோஷலிசத்தின் கீழ், சமூக உற்பத்தி ஒரே ஒரு பொரு ளாதார அமைப்பாக ஆகிறது. அது உற்பத்திச் சாதனங் களின் சமூக உடைமையால் ஒன்று சேர்க்கப்படுகிறது. திட்டமிட்ட உற்பத்தியின் வளர்ச்சிக்கு அராஜகம் வழி விடு கிறது. பொருளாதார விதிகள், சோஷலிச உற்பத்தி உறவுகளின் உள்ளடக்கத்தை, அதாவது சுரண்டலிலிருந்து விடுதலைப் பெற்ற உழைக்கும் மக்களிடையே நட்புறவிலான ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி ஆகியவற்றை வெளிப்படுத்து கின்றன. இவை எல்லாம், பொருளாதார விதிகளைப் பற்றிய வர் அறிவையும் அவற்றை சமுதாய நலன்களுக்காக, அதா வ து உழைக்கும் மக்களுக்காகப் பயன்படுத்துவதையும் சாத் தியமாக்குவது, தேவையாக்குவது ஆகிய இரண்டையும் செய்கின்றன.
சோஷலிசத்தின் கீழ், சமுதாயத்திலுள்ள எல்லா உறுப்பினர்களும், சோஷலிச உற்பத்தி வளர்ச்சியிலும் கம்யூ னிசத்தைக் கூடிய விரைவில் கட்டுவதிலும் ஆர்வமுடைய வர்கள். பொருளாதார விதிகளைச் சிறப்பாகப் புரிந்து, அவற்றைப் பயன்படுத்தினால் தான் இந்தக் குறிக்கோளை விரைவில் அடைய முடியும் என்று எல்லோரும் அறிவார்கள். இக்காரணத்திற்காக சோஷலிச நாடுகளிலுள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகள் பொருளாதார விஞ்ஞானத்தை வளர்க்கவும் பொருளாதார அறிவை மக்களிடையே பரவ லாகப் பரப்பவும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கின் றன.
சோஷலிசப்
பொருளாதார விதிகளின் செயல் பாடு புற வயமான து. ஆகவே அது, சோஷலிசப் பொருளாதார விதி களுக்குத் தன்னிச்சையான விளக்கம் கொடுப்பதையோ, பொருளாதார நடைமுறையில் அவற்றின் உள்ளடக்கத்தை அலட்சியப்படுத்துவதையோ ஒத்துக் கொள்ளக் கூடியதல்ல. இத் தகையத் தன் விருப்பார்வ செயல் முறை மிக விரும்பத் தகாத விளைவுகளை கொண்டுவர முடியும்.
பொருளாதார
விதிகளுக்கு முன்னால் மக்கள் சக்தியற்றவர்கள் என்ற எந்த வித மூட நம்பிக்கையையும் ஏற்படுத்தக் கூடாது. சோஷ லிசத்தின் கீழ் மக்களால், பொருளாதார விதிகளின் உள்ளடக்கத்தைக் கற்றுக் கொள்ள மட்டுமல்ல, அவை சரியாகச் செயல் படுவதற்கான சிறந்த சாத்தியமான நிலைமைகளையும் ஏற்படுத்த முடியும். இப்படி அவற்றின் முழுமையான மிக வும் பயனுள்ள வெளிப்பாட்டுக்கும் ஒரு பரந்த வாய்ப்பை ஏற்படுத்த முடியும். சோஷலிசத்தின் கீழ், இந்தப் பொருளில் உழைக்கும் மக்கள் அவர்களுடைய சொந்த வரலாற்றை உண்மையாக உண்டாக்குகிறவர்களாகவும் புதிய சமுதாயத் தைச் சுறுசுறுப்பாகக் கட்டுகிறவர்களாகவும்
மாறுகிறார்கள்.
(அரசியல் பொருளாதாரத்தின்
அடிப்படைகள்- முன்னேற்றப் பதிப்பகம்- 1982-
பக்கம் 320 - 322)
No comments:
Post a Comment