Wednesday 22 May 2019

சோஷலிசப் புரட்சிக்கான முன்தேவைகள் (புற-அக நிலைமைகள்)


எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ்


சோஷலிசப் புரட்சி என்பது சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு தவிர்க்க முடியாத விளைவாகும். இப்புரட்சி முதலாளித்துவத்தால் தயாரிக்கப்படுகிறது. சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான புறவய அகவய முன்தேவைகள் முதலாளித் துவத்தின் ஆழத்தில் பக்குவமடைகின்றன. முதலாளித் துவத்தின் கீழ் உற்பத்திச் சக்திகள் உயர் அளவான வளர்ச் சியை அடைகின்றன. உற்பத்தி ஒருமுனைப்படுத்தப்படுதல், சமூக உழைப்புப் பிரிவினையின் அதிகரிப்பு, உற்பத்தியின் தனி தன்மைப்படுதல், கூட்டுப்படுதல் ஆகியவற்றின் அதிகரிப்பு ஆகியவற்றால் உற்பத்திக்கு ஒரு சமூகக் குணாம்சம் கிடைக்கிறது; தொழில் துறைகள், தொழில் நிலையங்கள் ஆகியவை யும் எல்லா சமூக உற்பத்திப் பகுதிகளும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்குமாறு மாறியுள்ளன.

 உலக முதலாளித்துவப் பொருளாதாரம் உருவாக்கப்படுகிறது. உற்பத்திச் சக்திகளும் உற்பத்தியின் சமூகக் குணாம்சமும், பொருளாயத பொருள் களைத் தன துரிமையாக்குவதில் சரியான ஒரு சமூக முறையை யும், சோஷலிச உற்பத்தி உறவுகளையும் கோருகின்றன. சோ ஷலிசப் புரட்சிக்கு இந்த புறவய முன்தேவை, ஏகாதிபத்தி யத்தில் அதனுடைய உயர் அளவு பக்குவத்தை அடைகிறது . முக்கியமாக அரசு-ஏகபோக முதலாளித்துவத்தில் அடை கிறது. ஏனெனில் லெனின் கூறியது போல் இதற்கும், சோஷ லிசத்திற்கும் இடையில் எந்த இடைப்பட்ட படிகளும் இல்லை.

அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ சமுதாயத்தில் வளர்கிறது. அதிகமாக ஒருங்கமைக்கப்பட்டதாகவும் நன்றாக ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் மாறுகிறது. அது நகர்புற நாட்டுப்புற உழைக்கும் மக்களுடன் கூட்டணி சேர்ந்தும் அதனுடைய மார்க்சிய-லெனினியக் கட்சியின் வழி காட்டலின் கீழும் முதலாளிகளின் ஆட்சியை கவிழ்க்கக் கூடிய ஒரு வெல்ல முடியாத சமூக சக்தியாகும். இப்படித் தான் சோஷலிசப் புரட்சிக்கான அகவய முன் தேவை தோன்றி பக்குவமடைகிறது.

ஏகாதிபத்தியத்தின் உள், வெளி இரண்டிலுமான எல்லா முரண்பாடுகளின் அதிகரிப்பின் விளைவால், உலக ஏகாதிபத் தியச் சங்கிலித் தொடரின் பலவீனமான இடத்தில் குறிப் பிட்ட நேரத்தில் சோஷலிசப் புரட்சி ஏற்படுகிறது.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்- முன்னேற்றப் பதிப்பகம்- 1982-
பக்கம் 281 - 282)

 


No comments:

Post a Comment