Tuesday 21 May 2019

2. சோஷலிசத்தின்கீழ் மதிப்பு உறவுகளின் அமைப்பு - எல்.லியோன்டியெவ்


சோஷலிசப் பொருளாதாரம் இயற்கையாக இயங்குவதற்கு மதிப்பு உறவுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள திட்ட மானதோர் அமைப்பு இருக்க வேண்டியது அவசியமாகும். விலை, இலாபம், கூலிகள், போனஸ்கள், வியாபாரம், நிதிகள், கடன், பேதவாரம், வட்டி, வரிகள் முதலியனவற்றை உள்ளடக்கிய அமைப்பு இருக்க வேண்டியது அவசியமாகும், திட்டமிடப்பட்ட மேலாண்மையின் பொருளாதார வழிமுறைகள், மேலாண்மை யின் புதிய அமைப்பின் மிக முக்கிய அம்சம் இவற்றை வலுப்படுத்து தல் ஆகியவை மதிப்பு உறவுகளின் அமைப்பின் மீது சார்ந் துள்ளன. செலவுக் கணக்கீட்டை வலுப்படுத்தவும், வளர்ச்சி யடையச் செய்யவும் நோக்கங் கொண்டது பொருளாதார சீரமைப்பு உற்பத்தியின் பொருளாதாரத் தூண்டுகோல்களை அதி கரிப்பதும் இதன் நோக்கமாகும். சோஷலிசத்தின் மதிப்பு இனங் களது அமைப்பின் உதவி கொண்டு இவை செய்யப்படுகின்றன.

சோஷலிசத்தின் மதிப்பு இனங்கள் முதலாளித்துவத்தில் இதற்கொப்பானதைவிட முற்றிலும் வேறுபட்ட சமூகப் பொரு ளாதாரப் பொருளடக்கம் உடையதாகும்.

தனியார் சொத்து ஆதிக்கத்தின் கீழ், விலையானது மதிப்பு விதியின் ஒருவகைப் படிவமாகும். அராஜக உற்பத்திச் சூழ் நிலைகளிலும், அழிவுறுத்தும் போட்டிச் சூழ்நிலைகளிலும் மதிப்பு விதி தானாகவே இயங்குகிறது. சோஷலிசப் பொருளாதாரத்தில் விலையானது திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் மிக முக்கியமான மூலமாகும், உற்பத்தி சாதனங்கள் பொது உடைமையின் கீழ் மதிப்பு விதி இயக்கம் மேற்கொள்ளும் ஒரு படிவமே இது.

முதலாளித்துவத்தின் கீழ் கூலிகள் பாட்டாளி வர்க்கம் முதல் லாளிகளுக்கு விற்கும் உழைப்புச் சக்தியின் விலையாகும், சோஷலிசப் பொருளாதாரத்தில் கூலிகள் தொழிலாளர்களின் உழைப் புக்கு அளிக்கப்படும் ஊதியத்தின் ஒரு படிவமாகும். தொழி லாளர்கள் சுரண்டலில் இருந்து விடுதலை பெற்றவர்களும், சமூக உற்பத்தியில் ஈடுபட்டவர்களுமாவார்கள்.

முதலாளித்துவத்தின் கீழ், இலாபம் என்பது, உழைப்பு மூல தனத்தால் சுரண்டப் பட்டதன் பலன் ஆகும், தொழிலாளர்களின் ஊதியம் பெறாத உழைப்பு உண்டாக்கிய உபரி மதிப்பை அது உள்ளடக்கி இருக்கிறது, முதலாளித்துவச் சுரண்டல்காரர்களால் அது அபகரிக்கப் படுகிறது. சோஷலிசப் பொருளாதாரத்தில் இலாபம் என்பது, ஒவ்வொரு நிறுவனமும் சமூக உற்பத்தியின் வளர்ச்சிக்கும் சமூகச் செல்வப் பெருக்கத்துக்கும் அளிக்கும் உதவி களை நிர்ணயிக்கும் அளவுகோலாகும்.

மற்றெல்லா மதிப்பு இனங்களின் தன்மையும், பங்கும் இதே வழியில்தான் மாறுகின்றன. முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை வெளிப்படுத்தும் படிவங்களாக இராதபடிக்கு அவை சோஷலிச உற்பத்தி உறவுகளை வெளிப்படுத்தும் படிவங்களாக மாறுகிறது .

சோஷலிச மதிப்பு உறவுகளின் அமைப்பு, சோஷலிசப் பொருளாதாரத்தில் நடவடிக்கைகளின் பரிமாற்றத்தை ஒழுங் குறுத்துகின்றன. பொருளாதாரத் தூண்டுகோல் பயனுள்ளதாக இருக்க அது ஓர் அடிப்படையாய் பயன்படுகிறது. சோஷலிச சமுதாயத்தில் தனித்தனி உழைக்கும் மக்களின் நலன்களுக்கும், நிறுவனங்களின் அதிகாரிகளின் நலன்களுக்கும் இடையேயும், சமுதாயத்தின் நலன்களுக்கிடையிலும் முரண்பாடு தோன்றுவதற் குரிய புறநிலையான அடிப்படை அங்கில்லை. அப்படியே அவை எப்பொழுதாவது எழுந்தாலும் பொருளாதார தூண்டுகோலின் அமைப்பு தவறாக இருப்பதால் தான். எனவே சமுதாயத்திற்கு எது லாபகரமாக இருக்கிறதோ, அது நிறுவனங்களின் அதிகாரிகட்கும், ஒவ்வொரு தொழிலாளர்கட்கும் லாபகரமாக இருக்கும்படி சூழ் நிலைகளை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும்.
(அரசியல் பொருளாதாரச் சுருக்கம்- எல்.லியோன்டியெவ்- என்சிபிஎச்- 1075 – தமிழாக்கம்:தா.செல்லப்பா- பக்கம் 368-369)

No comments:

Post a Comment