Thursday, 30 May 2019

2. சோஷலிச உடைமையின் இரு வடிவங்கள்


- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

சோஷலிச நாடுகளில் உற்பத்திச் சாதனங்களில் பெரும் பகுதி அரசிற்குச் சொந்தம். இத்தோடு கூட உற்பத்திச் சாதனங்கள், மற்ற பொரு ளாய தச் செல்வங்களில் ஒரு பகுதி (எனவே இதன் மேலான சொத்துரிமையும்). விவசாயிகளின் உழைப்பு இணைப்புக்களான கூட்டுப்பண்ணைகளுக்கும் மற்ற கூட்டுறவு அமைப்புகளுக்கும் சொந்தமாயுள்ளது, அதாவது இது கூட்டுப்பண்ணை -கூட்டுறவு உடைமையாக உள்ளது. அரசு மற்றும் கூட்டுப்பண்ணை - கூட்டுறவு உடைமைகள் தமது தன்மையில் ஒரே வகையானவை, இவை சோஷலிசச் சமுதாயத்தின் உற் பத்தி உறவுகளின் அடிப்படையாக விளங்கக் கூடிய சமூக, சோஷலிச உடைமையின் இரு வடிவங்களாகும்.

நவீன சமுதாயத்தின் பொருளாதாரத்தில் தொழில் துறை முக்கிய பங்காற்றுவதால் கூட்டுறவு உடைமையின் சமூக-பொருளாதார உள்ளடக்கம், தொழில் துறை நிறு வனங்கள், வங்கிகள், போக்குவரத்து , மற்ற முக்கிய உற்பத்திச் சாதனங்கள் யாருக்குச் சொந்தமாயுள்ளன என்பதை முற்றிலுமாகப் பொறுத்துள்ளது. முதலாளித்து வ நாடுகளில் தற்போது பல கூட்டுறவு ஸ்தாபனங்கள் உள்ளன, ஆனால் தனிச் சொத்துடைமை ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலைகளில் இவை உழைப்பாளிகள், விவசாயிகள், கை வினைஞர்களின் நிலைமைகளை எளிமையாக்கினாலும் சோஷலிச நிறுவனங்களாக மாறுவதில்லை. இத்தகைய கூட்டுறவு ஸ்தா பனங்கள் அடிக்கடி பெரும் முதலாளிகள் மற்றும் நிலச் சொந்தக்காரர்களின் போட்டியைச் சமாளிக்க இயலாது திவாலடைகின்றன, அல்லது ஒரு சில உறுப்பினர்கள் செல் வந்தர்களாகி கூட்டுறவு முழுவதையும் தன் கரங்களில் எடுத்துக் கொள்வதால் இவை சிதறுண்டு போகின்றன.

உற்பத்திச் சாதனங்களின் மீதான சமூக உடைமை ஆதிக்கம் செலுத்தும் போது , உழைப்பாளிகள் ஆட்சியில் இருக்கும் போது கூட்டுறவு உடைமை தி வாலடைதல், உழைப்புச் சுரண்டல் போன்றவற்றிற்கான வாய்ப்புகளை நீக்குவதோடு கூட இது புதிய சமுதாய உறவுகளுக்கான ஆதாரமாயும் மாறுகிறது. இதன் உள்ளடக்கம் முற்றிலும் சோஷலிசத் தன்மையை உடையது.

சோஷலிச உடைமையின் முக்கிய வடிவங்களோடு கூட தொழிற்சங்கங்கள், மற்ற சமூக ஸ்தாபனங்க ளின் சொத்துக் களும் உள்ளன; இவற்றின் விதிமுறைக் கடமைகளை நிறை வேற்ற இது அவசியம்.

சோஷலிச உடைமையின் வடிவங்களுக்கு இடையிலுள்ள முக்கிய வேறுபாடு உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடை மையாக்கப்பட்ட அளவில் அடங்கியுள்ளது. அரசு உடைமை உற்பத்திச் சாதனங்களை நாட்டின் அளவில் பொதுவுடை மையாக்கி அவற்றை மக்கள் அனை வருக்கும் கிட்டக் கூடிய தாகச் செய்கிறது. கூட்டுப்பண்ணை உடைமை தனிப்பட்ட விவசாய நிறுவனத்தின் அளவில் உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமையாக்கி அவற்றை மக்கள் குழுவின் சொத் தாக ஆக்குகிறது.

சோஷலிச உடைமை முறையில் அரசு உடைமை முக் கியப் பங்காற்றுகிறது. இது முக்கிய உற்பத்திச் சாதனங் கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது மட்டும் இதற்குக் காரணமல்ல. அரசு உடைமை தேசியப் பொருளாதாரத்தின் எல்லா அங்கங்களை யும் ஒரே முழுமையான தாக இணைக்கிறது, ஒரே திட்டத்தின்படி இதன் வளர்ச்சியை ஒழுங்கமைக்கும் வாய்ப்பைத் தருகிறது, பொதுமக்கள் நலன்களின் வழி நடக்கும்படி மக்களைத் தூண்டுகிறது, அரசு அளவில் சிந் திக்க அவர்களுக்குக் கற்பிக்கிறது.

கூட்டுப்பண்ணை உடைமையுடன் எந்த மக்களின் உழைப்பு தொடர்பு கொண்டுள்ளதோ, அவர்கள் ஒடுக்கப்பட்ட நிலை யில் இருக்கின்றார்கள் என இதற்குப் பொரு ளல்ல: மக்க ளில் ஒரு பகுதி என்ற முறையில் இவர்களும் அரசு உடைமையின் கூட்டுச் சொந்தக்காரர்களாவர். கூட்டுப்பண்ணை உடை மையின் வடிவம் சோவியத் கிராமத்தில் உள்ள உற்பத்திச் சக்திகளின் நவீன வளர்ச்சித் தரத்திற்கு ஏற்றதாயுள் ளது , இது உற்பத்தியை மேற்கொண்டு உயர்த்துவதற்கான சூழ் நிலைகளைத் தோற்றுவிக்கிறது.

உழைப்பிற்காக வழங்கப்படும் ஊதியத்திலுள்ள ஒரு சில வேறுபாடுகள் சோஷலிச உடைமையின் இரு வடிவங் களோடு தொடர்புடையவை. அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு ஊதியம் பண மாக வழங்கப்படுகிறது. கூட்டுப்பண்ணை உறுப்பினர்களின் உழைப்பிற்கான ஊதியம், சமுதாயப் பொருளாதாரத்தில் அவர்களது பங்கிற்கேற்பவும் கூட்டுப்பண்ணையின் வருமானங் களைப் பொறுத்தும் பண மாகவும் பொருட்களாகவும் வழங்கப்படுகிறது. சொந்த தோட்டத்தில் நாம் கூட்டுப் பண்ணை உறுப்பினர்களின் உழைப்பு இவர்களது கூடுதல் வரு மானத்திற்கு வழிகோலுகிறது.

சோவியத் யூனியனில் கூட்டுப்பண்ணை உறுப்பினர்களின் உழைப்பிற்கு உத்திரவாதமுள்ள மாத ஊதியம் வழங்கப் படுகிறது. இந்த நடவடிக்கை விவசாயத் துறையில் உழைப் பிற்கான ஊதிய வடிவங்களைத் தொழில் துறையில் நிலவும் ஊ தியத்துடன் நெருங்கி வரச் செய்கிறது. - சோவியத் யூனியனில் கூட்டுப்பண்ணை உறுப்பினர்களின் ஊதியம் நுகர்வு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. கூட்டுப் பண்ணை யினுடைய வருமானத்தின் இன்னொரு பகுதி நிலை யான நிதிக்குச் செல்கிறது.

உற்பத்திச் சாதனங்கள், விவசாய இயந்திரங்கள், கருவி கள், கூட்டுப்பண்ணை மின்சார நிலையங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், உற்பத்தி மற்றும் கலாச்சாரக் கட்டிடங் கள், வீடுகள், வேலைக்கான மற்றும் உற்பத்தித் திறனுள்ள கால் நடைகள், கூட்டுப்பண்ணை உற்பத்தியை அதிகரிப்பதற்கான பொருட்கள் மற்றும் நிதிச் சாதனங்கள் ஆகியவை நிலை யான நிதியில் அடங்கும். குறிப்பிட்ட கூட்டுப்பண்ணையின் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக இதை மாற்றக் கூடாது, கூட்டுப்பண்ணையை விட்டு வெளியேறினால் இதைப் பிரித்தளிக்கவோ, கூட்டுப்பண்ணை உறுப்பினர்களுக்கு அளிக் கவோ இயலாது.

நிலையான நிதிகள் சோவியத் மக்கள் அனைவரின் உதவி யோடு கூட்டுப்பண்ணை உறுப்பினர்களின் உழைப்பால் தோற்றுவிக்கப்பட்டன. முதன்முதலில் கூட்டுப்பண்ணை உடை மை குதிரைகள், கலப்பைகள், பரம்புகள் மற்ற விவசாயக் *கருவிகள் போன்ற விவசாயிகளின் பொதுவுடைமையாக்கப் பட்ட உற்பத்திச் சாதனங்களால் ஆனதாக இருந்தது. கூட்டுப் பண்ணைகளின் நவீன நிதிகளில் பெரும்பாலும் டிராக் டர்கள், அறுவடை இயந்திரங்கள், லாரிகள், தொழிலாளர் கள் மற்றும் பொறியியலர்களின் உழைப்பால் சோஷ லிசத் தொழில் துறை நிறுவனங்களில் தோற்றுவிக்கப்படும் மற்ற தொழில் நுட்பம் ஆகியவை அடங்கும். நடப்பு ஆண்டின் வருமானங்களிலிருந்து அளிக்கப்படும் ஒதுக்கீட் டால் நிலையான நிதிகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.

இரு வகையான சோஷலிச நிறுவனங்கள் நிர்வகிப்பு வடிவங்களிலும் வேறுபடுகின்றன.

அரசு நிறுவனத்தின் தலைவர் அரசால் நியமிக்கப்படு கிறார். இவர் நிறுவனத்தின் நடவடிக்கை முழுவதற்கும் அதன் முன் பதில் சொல்கிறார். கூட்டுப்பண்ணையில் உயர் அமைப்பு, கூட்டுப்பண்ணையின் நிர்வாகத்தையும் தலை வரை யும் தேர்ந்தெடுக்கக் கூடிய கூட்டுப்பண்ணை உறுப்பினர் களின் பொதுக் கூட்டம் ஆகும். கூட்டுப்பண்ணையினர் நில வும் சட்டங்களின் அடிப்படையிலும் கூட்டுப்பண்ணை விதி முறையின் அடிப்படையிலும் கூட்டுப்பண்ணையை ஒழுங் கமைத்து நிர்வகிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கின்றனர், கூட்டுப்பண்ணையின் நலன்களையும் அரசின் நலன்களையும் கணக்கில் கொண்டு திட்டங்களை ஏற்கின்றனர், அறிக்கை களை ஆமோதிக்கின்றனர், வருமானங்களைப் பகிர்ந்தளிக் கும் முறையை நிர்ணயிக்கின் றனர், இத்தியாதி.

சோஷலிச அரசு கூட்டுப்பண்ணைகளுடன் நெருக்கமான பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. அரசு இவற்றிற்கு விவசாய இயந்திரங்கள், உரங்கள், தரமான வித்துக்கள் ஆகியவற்றை அளிக்கிறது, விவசாயத் துறைக்கான தலைமை ஊழியர்கள் மற்றும் நிபுணர்களின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறது, கால்நடை வைத்தியத்திற்குரிய கண் காணிப்பை நிறைவேற்றுகிறது, முற்போக்கு அனுபவங்களை உற்பத்தியில் பயன்படுத்திப் பரப்ப உதவுகிறது, கூட்டுப் பண்ணைகளுக்குக் கடன் வழங்குகிறது, கூட்டுப்பண்ணை உற் பத்தி செய்யும் பொருட்களைக் கொள்முதல் செய்கிறது.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்- 1985”

No comments:

Post a Comment